எம்.எல்.ஏ.வி.அ.த.கலிவரதன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எம்.எல்.ஏ.வி.அ.த.கலிவரதன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

முன்னாள் பா.ம.க. எம்.எல்.ஏ, கலிவரதன் வெளியிட்டுள்ள அறிக்கை

          கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் அரசியலில் காணாமல் போய்விடுவார்கள் என்று பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. கலிவரதன் கூறினார்.

முகையூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பா.ம.க. மாவட்ட செயலாளருமான வி.ஏ.டி.கலிவரதன்  கூறியது:

             தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்த பாடுபட்டு வருகின்றது. அல்லல்படும் அடித்தட்டு மக்களை சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தில் டாக்டர் ராமதாஸ் அல்லும் பகலும் அரும்பாடு பட்டு வருகின்றார். வரும் காலங்களில் தமிழகம் எப்படி இருக்க வேண்டும், எதிர் கால இளைஞர் சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியே சிந்தித்து அதற்கான திட்டங்களை தயாரித்து அதனை செயல் படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பட்டி தொட்டியில் கிடக்கும் கடைகோடி தமிழனையும் சந்தித்து பேசியதன் பயனாக இன்று பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தின் மிகப்பெரிய கட்சிகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது.

          இந்த வளர்ச்சி டாக்டர் ராமதாசின் கொள்கைக்கும், அவர் வழிதோன்றலான டாக்டர் அன்புமணி ராமதாசின் உழைப்பிற்கும் கிடைத்திட்ட பரிசே ஆகும். ஆனால் சிலர் ஏதோ தன்னால்தான் இந்த பா.ம.க. வளர்ந்து விட்டது போல் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். அதே போல் இடஒதுக்கீட்டுக்கு டாக்டர் ராமதாஸ் தியாகம் வரலாற்றில் பொன்னேட்டில் பதிக்கும் நிலையில் உள்ளது. இதன் மூலம் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் உரிய இட ஒதுக்கீட்டை பெற்ற பாட்டாளி சமுதாயம் டாக்டர் ராமதாசை மதித்து வருகின்றனர். நிலைமை இப்படி இருக்க டாக்டர் ராமதாசால் பதவி சுகம் அனுபவித்து விட்டு தற்போது பதவி இல்லை என்றதும், கட்சி தலைமைக்கு எதிராக செயல்படுவது துரோகம் ஆகும். இதுபோன்ற துரோகிகளை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

            இதுவரை இந்த கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் எவரும் தமிழக அரசியலில் நிலைக்க முடியவில்லை. இதுதான் வரலாற்று உண்மை என்றார்.

பாமக பேனர் கிழிப்பு: கலிவரதன் எம்.எல்.ஏ. தலைமையில் மறியல்

திருக்கோவிலூர்:

               மணம் பூண்டிக்கு வருகைதர இருக்கும் பாமக நிறுவனர் ராமதாசை வரவேற்று கலிவரதன் எம்.எல்.ஏ. பல்வேறு பகுதிகளில் பேனர் வைத்திருந்தார். நேற்று நள்ளிரவு சில மர்ம மனிதர்கள் 4 பேனர்களை கிழித்து விட்டு ஓடி விட்டனர். இன்று காலை இதைப் பார்த்து கலிவரதன் எம்.எல்.ஏ. அதிர்ச்சி அடைந்தார்.

           பேனர்களை கிழித்தவர்களை கைது செய்யக்கோரி மணம்பூண்டி கூட்டு ரோட்டில் காலை 8.10 மணிக்கு தொண்டர்களுடன் அவர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார். மறியலில் முகையூர் ஒன்றிய குழு தலைவர் செந்தில்குமார், மாவட்ட துணை செயலாளர் பாலசக்தி, சீனு கவுண்டர், தலைமை செயற் குழு உறுப்பினர் டி.எஸ். ராஜேந்திரன் ஒன்றிய செயலாளர்கள் வெங்க டேசன், சுப்பிரமணி, பழனிசாமி, சிவலிங்கம், நகர செயலாளர் குப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

              தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன், இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் அங்கு விரைந்து சென்று சமரசம் பேசினார்கள். பேனர்களை கிழித்தவர்களை உடனடி யாக கைது செய்கிறோம் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து கலிவரதன் எம்.எல்.ஏ. போராட்டத்தை கைவிட்டார்.

108 ஆம்புலன்ஸ் சேவை என் கனவுத் திட்டம்: அன்புமணி ராமதாஸ்

விழுப்புரம்:

              இன்று செயல்படுத்தப்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் சேவை என் கனவுத் திட்டமாக நிறைவேற்றப்பட்டது. அதற்கு இன்று யார் வேண்டுமானாலும் சொந்தம் கொண்டாடலாம் என்று விழுப்புரத்தில் நடைபெற்ற பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

விழுப்புரத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

            இன்று 14 மாநிலங்களில் செயல்பட்டுவரும் 108 ஆம்புலன்ஸ் சேவை, நான் அமைச்சராக இருந்தபோது ஒரு ஆண்டுகாலம் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது. இதற்காக அமெரிக்க பல்கலைக்கழகத்திலிருந்து ஆள்களை வரவழைத்து ஆய்வுகள் நடத்தி செயல்படுத்தினோம். அதேபோல் அந்த காலகட்டத்தில் தமிழகத்திற்கு ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்தேன். புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு மட்டும் ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டு சர்வதேச தரத்துடன் செயல்பட்டு வருகிறது. அந்த மருத்துவமனையை இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

              பாமக உதவி இல்லாமல் தமிழகத்தை இனி யாராலும் ஆளமுடியாது. ஒரு காலத்தில் பாமக தமிழகத்தை ஆளும். இது காலத்தின் கட்டாயம் என்றார். கூட்டத்தில் பாமக மாநிலத் தலைவர் கோ.க.மணி சிறப்புரையாற்றினார். மாநில துணைப்பொதுச் செயலர் பா. செந்தமிழ்செல்வன், எம்எல்ஏ வி.அ.த.கலிவரதன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் வ.சு.வசுந்தராதேவி, மாநில துணைப்பொதுச் செயலர் எம்.அன்பழகன், மாநில துணைத் தலைவர்கள் ந.ம.கருணாநிதி, தங்க.ஜோதி, சி.அன்புமணி, மாவட்டச் செயலர்கள் ச.இ.ஏழுமலை (கிழக்கு), க.மணிமாறன் (வடக்கு), இராம.ரவி அலெக்ஸ் (நகரம்), கே.பி.பாண்டியன் (கள்ளக்குறிச்சி) உள்ளிட்டோர் பேசினர்.