எம்.எல்.ஏ.கலிவரதன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எம்.எல்.ஏ.கலிவரதன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

முகையூர் ஒன்றிய பா.ம.க.பொதுக்குழுக் கூட்டம்

திருக்கோவிலூர்:

            முகையூர் ஒன்றிய பா.ம.க., பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. அரகண்டநல்லூரில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர்கள் ஆனந்தன், சேனாதிபதி தலைமை தாங்கினார். 

               ஒன்றிய செயலாளர்கள் சுப்ரமணி, வெங்கடேசன் வரவேற்றார். சேகர், ஞானவேல், ஆராமுது, பஞ்சமூர்த்தி, திருநாவுக்கரசு, முருகன், சங்கர் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொதுச்செயலாளர் கலிவரதன், மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், சேர்மன் செந்தில்குமார், மாவட்ட தலைவர் செழியன், பாலசக்தி, பொருளாளர் மஞ்சுளா சிறப்புரை நிகழ்த்தினர். ஒன்றிய கவுன்சிலர் ரமணி சிவக்குமார் நன்றி கூறினார்.

சங்கராபுரம் (தெற்கு) ஒன்றிய பா.ம.க. பொதுக் குழு கூட்டம்: ஒன்றிய செயலாளர் லோகநாதன் தலைமை தாங்கினார்

ங்கராபுரம் : 

            விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் பா.ம.க., தெற்கு ஒன்றிய பொதுக் குழு கூட்டம் நடந்தது. 

            ஒன்றிய செயலாளர் லோகநாதன் தலைமை தாங்கினார். சுரேஷ், ராஜா, அன்புமணி முன்னிலை வகித்தனர். மாநில துணை பொதுச் செயலாளர் கலிவரதன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் பாண்டியன், மாவட்ட தலைவர் அமுத மொழி, மாநில மகளிரணி செயலாளர் காசாம்பூ பூமாலை, ராமு பேசினர். 

சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு தகுதியான இடத்தை தேர்வு செய்து தரும்படி தமிழக அரசைக் கேட்டுக் கொள்வது,

மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு அரசு நிர்ணயித்த விலை கிடைக்க ஆவன செய்ய வேண்டும். 

நகரில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும். சங்கராபுரம் நகரில் பொது மக்களுக்கு நவீன கழிப்பிட வசதி செய்து தர வேண்டும்.
 
கள்ளக்குறிச்சி நகரை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமும், 

சங்கராபுரம் நகரை தலைமையிடமாக கொண்டு ஆர்.டி.ஓ., அலுவலகம் அமைக்க தமிழக அரசைக் கேட்டுக் கொள்ளுதல் 

உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய இளைஞரணி செயலாளர் சிலம்பரசன் நன்றி கூறினார்.

முன்னாள் பா.ம.க. எம்.எல்.ஏ, கலிவரதன் வெளியிட்டுள்ள அறிக்கை

          கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் அரசியலில் காணாமல் போய்விடுவார்கள் என்று பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. கலிவரதன் கூறினார்.

முகையூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பா.ம.க. மாவட்ட செயலாளருமான வி.ஏ.டி.கலிவரதன்  கூறியது:

             தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்த பாடுபட்டு வருகின்றது. அல்லல்படும் அடித்தட்டு மக்களை சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தில் டாக்டர் ராமதாஸ் அல்லும் பகலும் அரும்பாடு பட்டு வருகின்றார். வரும் காலங்களில் தமிழகம் எப்படி இருக்க வேண்டும், எதிர் கால இளைஞர் சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியே சிந்தித்து அதற்கான திட்டங்களை தயாரித்து அதனை செயல் படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பட்டி தொட்டியில் கிடக்கும் கடைகோடி தமிழனையும் சந்தித்து பேசியதன் பயனாக இன்று பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தின் மிகப்பெரிய கட்சிகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது.

          இந்த வளர்ச்சி டாக்டர் ராமதாசின் கொள்கைக்கும், அவர் வழிதோன்றலான டாக்டர் அன்புமணி ராமதாசின் உழைப்பிற்கும் கிடைத்திட்ட பரிசே ஆகும். ஆனால் சிலர் ஏதோ தன்னால்தான் இந்த பா.ம.க. வளர்ந்து விட்டது போல் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். அதே போல் இடஒதுக்கீட்டுக்கு டாக்டர் ராமதாஸ் தியாகம் வரலாற்றில் பொன்னேட்டில் பதிக்கும் நிலையில் உள்ளது. இதன் மூலம் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் உரிய இட ஒதுக்கீட்டை பெற்ற பாட்டாளி சமுதாயம் டாக்டர் ராமதாசை மதித்து வருகின்றனர். நிலைமை இப்படி இருக்க டாக்டர் ராமதாசால் பதவி சுகம் அனுபவித்து விட்டு தற்போது பதவி இல்லை என்றதும், கட்சி தலைமைக்கு எதிராக செயல்படுவது துரோகம் ஆகும். இதுபோன்ற துரோகிகளை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

            இதுவரை இந்த கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் எவரும் தமிழக அரசியலில் நிலைக்க முடியவில்லை. இதுதான் வரலாற்று உண்மை என்றார்.

முன்னாள் பா.ம.க. எம்.எல்.ஏ., கலிவரதன் இல்ல திருமண விழா: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பங்கேற்ப்பு

விழுப்புரம்
        சமச்சீர் கல்வி வராத வரை இந்த சமூகத்தில் முன்னேற்றம், மாற்றம் ஏற்படாது என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் முன்னாள்
பா.ம.க. எம்.எல்.ஏ., கலிவரதன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்

                நம் நாட்டில் ஏழை, பணக்காரர்கள், நடுத்தர வர்க்கத்தினர்களுக்கு என தனித்தனியாக படிப்புகள் உள்ளது. இதில் பணத்தை கொடுத்தால் தான், தரமான கல்வியை பெறமுடியும் என்ற நிலை நிலவுகிறது. பணக்காரர்கள் படிக்கும் சி.பி.எஸ்.சி., படிப்பு கிராமப்புறத்தில் உள்ள ஏழைகளுக்கும் கிடைக்க வேண்டும். அதே பள்ளியை அரசு சார்பில் கிராமத்தில் துவக்கி தரமான கல்வியை வழங்க வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமம். பணக்காரர்களுக்கு மட்டும் தேர்தலில் கூடுதலான ஓட்டுக்களா உள்ளது? அவர்களுக்கும் ஒரே ஓட்டு தான். அதுபோல் அனைவருக்கும் சமமான கல்வி கட்டாயம் வேண்டும். ராமதாஸ் மட்டும் தான் இதுபற்றி பேசிவருகிறான். குடிக்க கூடாது என கூறுபவனும் இந்த ராமதாஸ் மட்டும் தான். 


                  சமச்சீர் கல்வி என்றால், யார் என்ன படிக்க விரும்பினாலும் அவர்களுக்கு கட்டாயமாக அந்த கல்வியை கொடுக்க வேண்டும். தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். கட்டணம் இல்லாத கல்வி வேண்டும். இதனை செயல் படுத்த முடியும். அதற்கான திட்டம் எங்களிடம் உள்ளது. சமச்சீர் கல்வி வராத வரை இந்த சமூகத்தில் முன்னேற்றம், மாற்றம் ஏற்படாது என்றார்

பா.ம.க.வை கலைத்துவிடுவேன்: ராமதாஸ்


திருக்கோவிலூர்:
 
              பா.ம.க. கொள்கை போல வேறு எந்தக் கட்சியிலாவது உயர்ந்தக் கொள்கை இருக்கிறது என்று அறிஞர்கள் தீர்ப்பளித்தால் அக் கட்சியில் நான் முதலில் சேருவதுடன், பா.ம.க.வை கலைத்து விடுவதற்கு தயாராக உள்ளேன் என கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். முகையூர் பா.ம.க. எம்.எல்.ஏ. கலிவரதன் மகள் திருமணம் திருக்கோவிலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
 
இதில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது: 
 
                        பெரியாரின் புரட்சியால் நீதிக்கட்சி உருவான காலத்தில் வகுப்புவாரியாக பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டது. பின்பு, காமராஜரும், பெரியாரும் சேர்ந்து அடிதட்டில் வாழ்கிற மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டனர். பெரியாரின் இத்தகைய போராட்டத்தால் எல்லா சமுதாயத்தினருக்கும் இன்றைக்கு வேலை கிடைத்துள்ளது. இது போதாது.இங்கு நடைபெற்ற கலப்புத் திருமணத்தை நாங்கள் வரவேற்கிறோம். ஜாதியை நாங்கள் மறந்துவிட்டோம், எங்களுக்கு ஜாதி ஞாபகமே வரவில்லை என்ற நிலைமை வரும்பட்சத்தில், ஜாதியை முதலில் மறப்பவர்கள் வன்னியர்களாகத்தான் இருப்பார்கள். பா.ம.க. கொள்கை மாதிரி வேறு எந்தக் கட்சியிலாவது உயர்ந்தக் கொள்கை இருக்கிறது என்று அறிஞர்கள் தீர்ப்பளித்தால் அக் கட்சியில் நான் முதலில் சேருவதுடன், பா.ம.க.வை கலைத்து விடுவதற்கு தயாராக உள்ளேன்.சமூக நீதிக்காகவும், சமூக பொருளாதார மாற்றங்களுக்காகவும், அரசியல், பண்பாடு எல்லாவற்றுக்கும் உரக்க குரலெழுப்புவதற்கு பா.ம.க.வைவிட சிறந்த கட்சி வேறு எதுவும் இல்லை.இந்நிலையில் மொழியை, தமிழினத்தை உயர்த்திப் பிடிக்கிற, சமூக மாற்றத்துக்காக பா.ம.க. தமிழகத்தில் 14 மாவட்டங்களில் சமுதாய மத நல்லிணக்க மாநாட்டை நடத்தி உள்ளது என்றார் டாக்டர் ராமதாஸ்.இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி, மாநிலத் தலைவர் கோ.க.மணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.