அன்புமணி ராமதாஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அன்புமணி ராமதாஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சேலம் மாநகராட்சி பா.ம.க. மேயர் வேட்பாளர் இரா.அருளை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பிரசாரம்



 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/e6c046c6-8ea7-4864-960e-396bc791dfa1_S_secvpf.gif
 
சேலம்:

        சேலம் மாநகராட்சி மேயர் பா.ம.க. வேட்பாளராக மாநில இளைஞர் அணி செயலாளர் இரா.அருள் நிறுத்தப்பட்டு உள்ளார். இவரை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர்   டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று சேலம் வந்து பிரசாரம் செய்தார்.

அப்போது முன்னாள் மத்திய அமைச்சர்   டாக்டர் அன்புமணி ராமதாஸ்
பேசியது:-

         எங்களது வேட்பாளர்கள் சொன்னதை செய்து தருவார்கள். உங்களுக்காக உழைக்க மேயர் வேட்பாளரான இரா.அருளுக்கு வாக்களித்து அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள். மாறி மாறி திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போட்டீர்கள். அவர்கள் ஏதும் செய்து தரவில்லை. அவர்கள் ஏதும் சாதிக்கவில்லை. எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்.  நாங்கள் சாதித்து காட்டுகிறோம். அவர்கள் வசனம் மட்டும் பேசி சென்று விடுவார்கள். ஆனால் நாங்கள் சொன்னதை செய்து தந்து பாராட்டு பெறுவோம். சேலம் திருமணிமுத்தாற்றில் முன்பு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இதில் மக்கள் குளிப்பார்கள் என கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் இந்த ஆற்றின் இன்றைய நிலை என்ன? இதை நாங்கள் மாற்றி காட்டி பழைய நிலைக்கு கொண்டு வருவோம்.

             சுத்தம் சுகாதாரத்திற்கு முன்னுரிமை தருவோம்.சேலத்தை பசுமை நகராக்க ஒரு வாய்ப்பு தாருங்கள். கொசுவை முற்றிலும் ஒழிப்போம், இந்த ஒரு முறை பா.ம.க.விற்கு வாய்ப்பு தந்து ஓட்டு போடுங்கள். நாங்கள் நல்ல நல்ல திட்டங்களை கொண்டு வருவோம். முதலமைச்சர் ஜெயலலிதா மின்வெட்டு இல்லாமல் செய்வோம் என்றார். இப்போது மின் விட்டு இல்லாமலா? உள்ளது. நாங்கள் இதை சரிசெய்வோம். திராவிட கட்சிகள்ஏதும் மக்களுக்கு செய்யவில்லை. எங்களுக்கு நீங்கள் ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள். மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்து காட்டி சாதனை படைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

                இந்த சுற்றுப்பயணத்தின் போது மாநில துணை பொது செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான மு.கார்த்தி, பசுமை தாயகம் மாநில துணை செயலாளர் சத்ரியசேகர், மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் எம்.பி.சதாசிவம், சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் கதிர்ராசரத்தினம், பகுதி செயலாளர் அண்ணாமலை, பூபாலன், பெரியசாமி, பழஅன்பு, ராஜமாணிக்கம், வடக்கு மாவட்ட செயலாளர் சாம்ராஜ், மாநகர் மாவட்ட தலைவர் அன்புக்கரசு, கவுன்சிலர் அருள், எஸ்.பி. ஆறுமுகம், சாம், பழ அன்பு, ராஜமாணிக்கம், திரிசங்கு, பூபதி, மார்க்கெட் சண்முகம், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
 

புகைப் பழக்கத்தினால் ஆண்டுக்கு பத்து லட்சம் பேர் உயிர் இழக்கின்றனர்: அன்புமணி ராமதாஸ்

சென்னை:
 
முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்  டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

               புகை பிடித்தல் ஒரு கொடிய உயிர்க்கொல்லும் பழக்கம். இந்திய நாடு முழுவதும் ஆண்டுக்கு பத்து லட்சம் பேர் புகையிலைத் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு உரிய வயதாகும் முன்பே இறக்கின்றனர். அதாவது ஒவ் வொரு நாளும் 2500 பேருக்கு மேல் சாகிறார்கள். புகை பிடிக்கும் பழக்கத் தால் ஏராளமான இளைஞர் கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

             இந்நிலையில் இலவச பரிசுடன் சிகரெட் விற்பனை செய்யப்படும் அவலம் சென்னையில் நடக்கிறது. இந்த சட்ட விரோத செயலை உடனடியாக தடுத்து நிறுத்தி, குற்றவாளிகளை தமிழ்நாடு அரசு தண்டிக்க வேண்டும். சுதந்திர தினத்தினை முன்னிட்டு ரெட் அண்டு வொயிட்  பாக்கெட் சிகரெட் உடனும் ஒரு லைட்டர் இலவசமாகப் பெறுங்கள் எனும் விளம்பரம் சென்னை நகரம் முழுவதிலும் ஏராளமான கடைகளில் ஒட்டப்பட்டுள்ளது. ரெட் அண்டு வொயிட் சிகரெட் விற்கப்படும் கடைகள் அனைத்திலும் ரெட் அண்டு வொயிட் சிகரெட் பாக்கெட்டுடன், ஒரு சிகரெட் லைட்டரும் இலவச இணைப்பாக கொடுக் கப்படுகிறது. இதற்காக சிகரெட் பாக்கெட்டுடன் லைட்டர் கொண்ட சிறப்பு அன்பளிப்பு பாக்கெட் டினை வெளியிட்டு விற்று வருகின்றனர்.

                புகையிலை பொருள் நிறுவனங்கள் எதுவும் அவற்றுடன் இலவச இணைப்புகள் எதையும் அளிக்கக் கூடாது, அவ்வாறு இலவச இணைப்பு அளிப்பதாக விளம்பரமும் செய்யக்கூடாது என இந்திய புகையிலைக் கட்டுப்பாடு சட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல கடைகளில் இவ்வாறு சட்ட விரோத விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன. சிகரெட்டுடன் இலவச இணைப்பும் அளிக்கப்படுகிறது.

                இந்த குற்றங்களுக்கு 2 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை சிறைத் தண்டனை அளிக்க புகையிலைக் கட்டுப்பாடு சட்டத்தில் இடமிருந்தும் ஒருவர் மீது கூட அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தியாவின் சுதந்திர தினத்தை அவமதிப்பது இந்திய தேசிய நன்மதிப் பிற்கு இழுக்கு ஏற்படாமல் தடுக்கும் சட்டத்தின்படியும் தண்டனைக்குரிய குற்றமாகும்  இந்த சட்டத்திற்கு எதிராக இந்திய சுதந்திர நாளை இழிவுபடுத்தும் வகையில் இளைஞர்களை கொலை செய்யும் ஒரு பொருளை சுதந்திர தினம் அன்று முதல் சுதந்திரத்தின் சுவை என விளம்பரம் செய்கின்றனர்.

          இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாதமும் 850 கோடி சிகரெட்டுகள் விற்கப்படுவதாகவும், அதில் 84 கோடி சிகரெட்டுகள் தமிழ்நாட்டில் விற்கப்படு வதாகவும் சிகரெட் நிறு வனங்கள் கூறுகின்றன. ஆந்திர மாநிலத்துக்கு அடுத்த படியாக நாட்டிலேயே அதிக சிகரெட் விற்கும் 2-வது மாநிலம் என்கிற அவப்பெயரை தமிழ்நாடு பெற்றுள்ளது. இந்தியாவில் விற்கும் மொத்த சிகரெட்டில் 10 சதவீதம் தமிழ்நாட்டில் விற்பதாக கூறப்படுகிறது.

              இத்தகைய விளம்பரங்கள் அனைத்தையும் உடனடியாக அப்புறப்படுத்துவதுடன் இலவச இணைப்புடன் சிகரெட் விற்பனை தடுத்து நிறுத்த வேண்டும். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான தமிழ் நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தை காப்பாற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

தமிழக ஆளுநர் ரோசய்யாவுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

              அன்புமணி ராமதாஸ் நேற்று  தமிழக ஆளுநர் ரோசய்யாவை சந்தித்துப் பேசினார்.  இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று அன்புமணி ராமதாஸ் கூறினார். சென்னை ஓமந்தூரார் தோட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சி, பண விரயத்துக்கே வழிசெய்யும், அதை கைவிடவேண்டும் என்றார்.




 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மக்கள் பிரச்சனைகளை மறந்துவிட்டார்: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

        மக்கள் பிரச்சனைகளுக்காக போராடாமல் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் தூங்குகிறார் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக இளைஞர் அணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி

            சமச்சீர் கல்வி, சட்டப்பேரவை மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அதிமுக அரசு தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. இப்பிரச்சனையில் பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் செயல்படவில்லை. தூங்குகிறார் என்று நினைக்கிறேன். எதிர்க்கட்சித் தலைவராக வந்துவிட்டார். எந்த ஒரு கருத்தும் சொல்லமுடியாமல், போராட்டமும் நடத்தாமல் அந்த கட்சி தூங்கிக்கொண்டிருக்கிறது. எவ்வளவோ மக்கள் பிரச்சனைகள் இருக்கிறது. அறிக்கை விட்டாரா, போராடினாரா. அவரைப் பற்றி மக்கள் புரிந்துகொண்டார்கள் என்றார்.

பசுமைத்தாயகம் சார்பில் மெரினாவில் சாலை விபத்து தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி

http://www.dinakaran.com/data1/Newsimages/Tamil-Daily-News_Paper_92630732060.jpg

           சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு குழு அமைக்க கோரி முதல் அமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பேச இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

            சாலை விபத்து தடுப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி பசுமைத்தாயகம் சார்பில் சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே மனித சங்கிலி நடைபெற்றது. இதில் தனியார் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு, நீண்ட சங்கிலி போல் கைகோர்த்து நின்றனர். அவர்கள்  விபத்தை தடுப்போம்...உயிரை காப்போம்' என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய சிறிய பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர்.

இந்த மனிதசங்கிலி விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்த முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில்,

             பசுமைத்தாயகம் கடந்த 17 ஆண்டுகளாக பொது பிரச்சினைகளுக்காக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகிறோம். தமிழகம் முழுவதும் 20 லட்சம் மரக்கன்றுகளை நட்டு இருக்கிறோம். குளங்களை தூர்வாரி வருகிறோம். சுற்றுச்சூழலை வலியுறுத்தி பிரசாரம் செய்து வருகிறோம்.

            உலகத்திலேயே அதிகளவில் சாலை விபத்துக்கள் நடப்பது இந்தியாவில் தான். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தான் அதிகளவில் சாலை விபத்துக்கள் நடக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் சாலை விபத்தில் 15 ஆயிரம் பேர் இறந்து உள்ளனர். இதில் பெரும்பாலானோர் இளைஞர்கள் தான்.

              40 சதவீத சாலை விபத்துக்களுக்கு குடி போதையும் ஒரு காரணம் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. எனவே மது குடித்துக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சீட் பெல்ட் அணிவது, ஹெல்மட் அணிவது ஆகியவற்றை கட்டாயமாக்க வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக்குவது போன்றவற்றை தமிழக அரசு செய்ய வேண்டும்.

            சாலை விபத்துக்களை தடுப்பது தொடர்பாக தமிழக அரசு ஒரு குழு அமைக்க வேண்டும். இதன் மூலம் சாலை விபத்துக்களை குறைப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இது சம்பந்தமாக தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவிற்கு கடிதம் எழுத இருக்கிறோம். தேவைப்பட்டால் அவரை நேரில் சந்தித்து இது குறித்து வலியுறுத்துவோம் என்றார்.

புதிய தலைமை செயலகத்தில் குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனை அமைக்கலாம்: அன்புமணி ராமதாஸ் ஆலோசனை

சென்னை:

பா.ம.க. இளைஞர் அணி தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான அன்புமணி ராமதாஸ் கூறியது:-  

            தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் பா.ம.க. உறவு சுமூகமாக உள்ளது. நாங்களும் விடுதலை சிறுத்தைகளும் முதன்முறையாக இணைந்த தேர்தல் விடுதலை சிறுத்தைகள் இணைந்த சமூக மக்கள் விரும்பவில்லை என்று கூறுவது தவறு. வருங்காலங்களிலும் இந்த கூட்டணி தொடரும்.

             பா.ம.க.வை பொறுத்தவரை நல்ல எதிர்க்கட்சியாக செயல்படும். எதிரிகட்சியாக இருக்க மாட்டோம். அரசாங்கம் நல்ல திட்டங்கள் கொண்டு வந்தால் வரவேற்போம். மக்களுக்கு எதிரான திட்டங்கள் கொண்டு வந்தால் எதிர்த்து போராடுவோம்.  

           கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கலைஞர் காப்பீடு திட்டம் முழுமையும் காப்பீடு செய்யப்பட்டது. அதில் தனியார்களும், தனியார் மருத்துவமனைகளும் தான் லாபம் அடைந்தன. எங்களுடைய கருத்து அரசு மருத்துவமனைகளில் அதிகம் முதலீடு செய்ய வேண்டும். அதன் மூலம் மருத்துவமனைகள் தரத்தை உயர்ந்து நவீனபடுத்த வேண்டும். காப்பீடும் இருக்க வேண்டும்.

            மக்களை சோம்பேறிகளாக்கும் இலவச திட்டங்கள் வேண்டாம். இலவசங்களை நிறுத்தி விடுங்கள் என்று தொடர்ச்சியாக நாங்கள் சொல்லி வருகிறோம். தி.மு.க. அரசு புதிய சட்டமன்ற வளாகத்தை கட்டியது. கட்டியது சரி, ஆனால் கட்டிய இடம் சரியில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.  சென்னைக்கு வெளியே 1000 ஏக்கர் பரப்பளவில் ஒரு மினி டவுன்ஷிப் போல் கட்டியிருக்க வேண்டும். மக்களுக்கு இடையூறு இல்லாமல் ஒரு நகரத்தை உருவாக்கியிருக்க வேண்டும். அடுத்த 100 ஆண்டுகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

            புதிய தலைமை செயலகத்தை வீணடித்து விடக்கூடாது. அதில் ஒரு குழந்தைகள் மருத்துவமனை, மகப்பேறு மருத்துவமனையை கொண்டு வரலாம். இதனால் லட்சக்கணக்கான குழந்தைகளும், பெண்களும் பயன் அடைவார்கள். இது என்னுடைய தனிப்பட்ட எண்ணம்.  இவ்வாறு அவர் கூறினார்.
 

சென்னை மாவட்ட பா.ம.க. அமைப்பாளர் ஜெயராமன் இல்லத் திருமண விழா: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பங்கேற்ப்பு

சென்னை:
            சென்னை மாவட்ட பா.ம.க. அமைப்பாளர் ஜெயராமன் மகள் அனிதா -செந்தில்குமார் திருமணம் நேற்று  நடந்தது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திருமணத்தை நடத்தி வைத்தார். 
மணமக்களை வாழ்த்தி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியது:-


            எளிமை, மக்கள் சேவை உழைப்புக்கு எடுத்துக் காட்டாக விளங்கியவர் ஜெயராமன் இந்த தேர்தலில் உண்மை, உழைப்பு, எளிமை, தியாகம் தோற்றுப் போனது. ஏதோ ஒன்று வென்றது. மது பழக்கம் இல்லாத, வன்முறை இல்லாத, கல்வி அறிவு பெற்ற சமுதாயத்தை உருவாக்க நாம் பாடுபட்டு வருகிறோம்.  சிறு குழந்தைகள் முதல் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டுகின்றனர். நமது தேசிய விளையாட்டு ஆக்கி. பலருக்கு அது தெரிய வில்லை. எத்தனையோ விளையாட்டுகள் இருக்கும் போது கிரிக்கெட்டுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? எல்லா விளையாட்டுகளையும் பள்ளிகள் முதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.


            பெண்கள் உரிமைக்காக போராடுகிறார்கள். ஆனால் பெண்களை இழிவு படுத்தும் டி.வி.தொடர்களில் அவர்கள் மூழ்கி விடுகிறார்கள். பணக்காரர் வீட்டு குழந்தைகளும், ஏழை வீட்டு குழந்தைகளும் தரமான கல்வி கற்க வேண்டும் என்பதற்காக சமச்சீர் கல்வி வேண்டும் என்கிறோம்.  நிகர்நிலை பல்கலைக்கழ கங்களில் மாணவர்கள் இடையே போதை பழக்கம் அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் மது பழக்கத்துக்கு அடிமையாகி வருகிறார்கள். இந்த சமூக அவலங்களைகளைய வேண்டும். ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்துக்கு சொல்ல வேண்டிய கருத்துக்களை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருப்போம். மக்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.


விழாவில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியது:-


              தமிழக இளைஞர்களுக்கு இது சோதனை காலம். மது, புகை பழக்கங்களில் இருந்து இளைஞர்களை மீட்க வேண்டும். இது அரசியல் பிரச்சினை அல்ல. வாழ்க்கை பிரச்சினை, சமூக பிரச்சினை, மதுவை ஒழிக்க பாடுபடும் ஒரே கட்சி பா.ம.க. தான். இந்த தேர்தலில் பா.ம.க. தோல்வி அடையவில்லை. ஒரு சரிவு ஏற்பட்டுள்ளது. தேர்தலில் கிடைத்தது எங்களுக்கு எதிரான வாக்குகள் அல்ல. ஜி.கே.மணி குறிப்பிட்டது போல் ஒரு பெரிய சுனாமி வந்தது. அவ்வளவு தான். இதனால் எங்களுக்கு நஷ்டம் இல்லை மக்களுக்கு தான். இவ்வாறு அவர் பேசினார்.


            விழாவில் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, வேலு, குரு எம்.எல்.ஏ., திருக்கச்சூர் ஆறுமுகம், எஸ்.வி.சேகர், புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி உள்பட பலர் மணமக்களை வாழ்த்தினார்கள்.


பொது இடங்களில் புகைபிடிக்க தடை செய்யும் சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை

பொது இடங்களில் புகைபிடிக்க தடை செய்யும்

 

 சட்டத்தை தீவிரமாக்க வேண்டும்;

 

 டாக்டர் ராமதாஸ் கோரிக்கை

     
 
சென்னை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:-
              உலக புகையிலை எதிர்ப்பு நாளை கடைப்பிடிக்கப்படுகிறது. புகைப்பிடிப்பதாலும், புகையிலை பொருட்களை பயன் படுத்துவதாலும் அடுத்தவர் வெளியிடும் புகையை சுவாசிப்பதாலும் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 60 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இவர்களில் 10 லட்சம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். புகை தீமைக்குறித்து எத்தனையோ வழிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், விளக்கை தேடிச் செல்லும் விட்டில் பூச்சிகளை போல புகையிலை பொருட்களுக்கு அடிமையாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையும், வேதனையும் அளிக்கிறது.

                மருத்துவர் அன்புமணி ராமதாசு மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது புகையிலை நிறுவனங்களுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தி, புகையிலை பொருட்களின் உறைகளின் மீது எச்சரிக்கை படம் வெளியிடுவதற்கு ஏற்பாடு செய்தார். வரும் டிசம்பர் மாதம் முதல் அப்படங்கள் இன்னும் கடுமையாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது மருத்துவர் அன்புமணி ராமதாசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகும்.

          எச்சரிக்கை படங்களை வெளியிடுவதால் புகையிலை பொருட்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறையும் என்ற போதிலும் இதுமட்டுமே போதுமானதல்ல. மருத்துவர் அன்புமணி ராமதாசு முயற்சியால் 2008-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட, பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்யும் சட்டம் தொடக்கத்தில் தீவிரமாக செயல்படுத்தப்பட்ட போதிலும் காலப் போக்கில் அது கைவிடப்பட்டுவிட்டது. புகைப்போருக்கு இணையாக அவர்கள் விடும் புகையை சுவாசிப்பவர் களுக்கும் அதிக பாதிப்பு ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு, பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.

              பள்ளிகள் கல்லூரிகளிலிருந்து 100 மீட்டர் தூரத்துக்குள் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்ற விதியும் பெயரளவிலேயே உள்ளது. இதை மிகக் கடுமையாக செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புகையிலை பொருட்கள் தொடர்பான அனைத்து விளம்பரங்களையும் தடை செய்வதுடன், புகையிலை பொருட்கள் மீதான வரிகளையும் அதிகரிக்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக புகையிலை பொருட்களால் ஏற்படும் பாதிப்பு என்பது யாரோ சம்பந்தப்பட்ட விசயம் என்று எண்ணாமல், நம் அனைவரையும் பாதிக்கும் தீங்கு என்பதை உணர்ந்து சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் புகையிலைக்கு எதிராக போராட முன்வரவேண்டும்.  இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.


மதுபான விளம்பரங்களைத் தவிர்க்க வேண்டும் டோனிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனிக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பது:-


       மறைமுக மதுபான விளம்பரங்களில் நடிக்க வேண்டாம் என்று கிரிக்கெட் வீரர் தோனிக்கு முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

             இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கி, உலகக் கோப்பையை பெற்றுத்தந்த உங்களுக்கு எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய இளைஞர்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக திகழக்கூடிய நீங்கள், லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்வை பாழாக்கும் போதைப் பழக்கத்தை அவர்கள் மீது திணிக்காமல், மறைமுக மதுபான விளம்பரங்களில் இருந்து விலக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

               மதுபான விளம்பரங்கள் இந்திய நாட்டில் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளன. இதனால், சோடா, தண்ணீர், இசைத்தட்டு என இல்லாத பொருட்களின் பெயரில் மதுபான விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இத்தகைய மறைமுக மதுபான விளம்பரங்களில் நடிக்க முடியாது என சச்சின் டெண்டுல்கர் மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. அவருக்கு  ஒரு ஆண்டுக்கு ரூ. 20 கோடி வழங்க மதுபான நிறுவனங்கள் முன்வந்தன. ஆனால், அதை அவர் ஏற்க மறுத்துவிட்டார்.

                கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை கருதி, நீங்கள் மதுபான நிறுவனங்களின் சதிவலையில் சிக்காமல் மறைமுக மதுபான விளம்பரங்களை தவிர்க்க வேண்டும். தற்போது நீங்கள் இடம்பெற்றுள்ள அத்தகைய விளம்பரங்களில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார்.

திண்டிவனம்:

             பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 13.04.2011 காலை 10 மணிக்கு தனது மனைவி சரஸ்வதி அம்மாள், மகன் அன்புமணி ராமதாஸ், மருமகள் சவும்யா அன்புமணி, மருமகன் டாக்டர் பரசுராமன், மகள் ஸ்ரீகாந்தி பரசுராமன் ஆகியோருடன் திண்டிவனம் நேரு வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் பெண்கள் நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார்.

பின்னர் டாக்டர் ராமதாஸ் அளித்த   பேட்டி:
 
              எங்கள் கூட்டணி மகத்தான கூட்டணி. தி.மு.க. தலைமையிலான அரசு மீண்டும் அமையும். 6-வது முறையாக கலைஞர் முதல்வராவார். மக்களும் இதில் உறுதியாக உள்ளனர்.

 
முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் கூறியது:-


            சாதனைகள் தொடர வேண்டுமென மக்கள் விரும்புகிறார்கள். 6-வது முறையாக கலைஞர் முதல்-அமைச்சராக பதவி ஏற்பார்.


மயிலம் தொகுதி பா.ம.க வேட்பாளர் இ.ரா.பிரகாஷை ஆதரித்து வல்லத்தில்அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்


நலத்திட்டங்கள் தொடர  

கருணாநிதி மீண்டும் முதல்-அமைச்சராக வேண்டும்; 

முன்னாள் மத்திய மந்திரி அன்பு மணி பிரசாரம் 



மயிலம் :

      மயிலம் தொகுதி பா.ம.க வேட்பாளர் பிரகாசை ஆதரித்து வல்லத்தில் முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி பேசினார். 
அப்போது  அன்புமணி கூறியது:-



             கலைஞர், சோனியா காந்தி, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், ஆகியோரது கூட்டணி வெற்றி கூட்டணி. இந்த கூட்டணி சமூக நீதிக்காக ஏற்பட்ட கூட்டணி. இங்கே போட்டியிடும் வேட்பாளர் பிரகாஷ் இதே தொகுதியை சேர்ந்த கீழ்மாம்பட்டை சேர்ந்தவர். பிரகாஷ் வெற்றி பெற மாம்பழ சின்னத்திற்கு வாக்களியுங்கள்.


              கலைஞர் திட்டங்களான ஒரு ரூபாய்க்கு அரிசி, 108 ஆம்புலன்ஸ், கலைஞர் காப்பீட்டு திட்டம் உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் தொடரவேண்டுமானால் கலைஞர் 6-வது முறையாக மீண்டும் முதல் அமைச்சராக வேண்டும். எனவே இத்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பிரகாசை வெற்றிபெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.


             கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரிகள் செஞ்சி ராமச்சந்திரன், ஏ.கே.மூர்த்தி, மற்றும் கண்ணன் எம்எல்ஏ, விவசாய மைய மாநில தலைவர் சடகோபன், மாவட்ட செயலர் மணிமாறன், ஓன்றிய செயலாளர்கள் அண்ணா துரை, வேல்முருகன், மாவட்ட ஊராட்சி தலைவர் வசுந்தரா தேவி, சேட்டு, வக்கீல் ராஜேந்திரன், இளம் வழுதி, மாவட்ட இளைஞர் அணி சிட்டிபாபு, கன்னியப்பன், மாரி, தனஞ்செழியன், ஸ்ரீதர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்


கொளத்தூர் தொகுதியில் பிரசாரம்:

அதிக ஓட்டு வித்தியாசத்தில்

மு.க.ஸ்டாலின் வெற்றி பெறுவார்;

அன்புமணி பேச்சு


சென்னை:
           கொளத்தூர் சட்டமன்றத்  தொகுதியில் போட்டியிடும் துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆதரித்து முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி  பிரசாரம் செய்தார். 
 
பெரம்பூர் காந்தி சிலை  அருகே  திறந்து வேனில் நின்று பேசியது:-

                  தமிழ்நாட்டில்  உள்ள 234 தொகுதிகளில் கொளத்தூர் தொகுதிதான் முதன்மையானது. இந்த தொகுதி மக்கள் கொடுத்து வைத்தவர்கள் ஏற்கனவே, மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த  போது பல்வேறு திட்டப்பணிகளை நிறைவெற்றியுள்ளார். துணை முதல்-அமைச்சராக இருந்தும்  ஏராளமான பணிகளை  செய்திருக்கிறார்.

              இந்த கூட்டணி   சமூக சமத்துவ கூட்டணி. எதிர் கூட்டணி சினிமா கூட்டணி, அது உண்மையான கூட்டணி அல்ல.  பா.ம.க. வின் கொள்கை உண்ண  உணவு, உடுக்க   உடை தரமான மருத்துவ சேவை  அளிப்பதுதான். தி.மு.க. அரசு அதை நிறை வேற்றி   வருகிறது. 6-வது  முறையாக கலைஞர் முதல்- அமைச்சர் ஆவது உறுதி.  இந்த அரசு சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்து இருக்கிறது. தமிழகம் முழுவதும் இந்த கூட்டணிக்கு ஆதரவு அலை வீசுகிறது. இது  சுனாமியாக மாறி மாபெரும் வெற்றியை  தரும். ஆடு,  மாடுகளை தருவதாக அ.தி.மு.க.வினர் கூறுகிறார்கள்.  இன்னும் மக்களை  பின்  நோக்கி கொண்டு செல்லுகிறார்கள். இது மக்களை  ஏமாற்றும் கூட்டணி.

                 5 ஆண்டுக்கு ஒரு முறை தான் ஜெயலலிதா வெளியே வருவார். பின்னர் கொடநாடு சென்று  விடுவார். கொளத்தூர்  தொகுதி வி.ஐ.பி. தொகுதி மட்டுமல்ல வி.வி.ஐ.பி. தொகுதி ஆகும். முதல்வர் தொகுதி  என்று கூட சொல்லலாம். ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலின் அமோக வெற்றி பெறுவார். அதிக வாக்குகள் வித்தியாசத்தில்  வெற்றி பெறும் வேட்பாளர் அவர்தான்.  இவ்வாறு அன்புமணி பேசினார்.

              முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. மூர்த்தி, வட சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் வி.எஸ்.பாபு, பகுதி செயலாளர் வி.எஸ். ரவி, கு.க.செல்வம், பாண்டியன், சுரேஷ்,  கொளத்தூர் பகுதி பா.ம.க. அமைப்பு செயலாளர் வி.ஜெ.சுரேஷ் ஆகியோர் உடன் சென்றனர்.   கொளத்தூர் தொகுதியில்  போட்டியிடும்  துணை முதல்- அமைச்சர்  மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக அவரது மனைவி துர்கா  ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார்.

                 இன்று 51-வது வட்டம்  தில்லை நாயகம் தெருவில் முஸ்லிம் மகளிர் அமைப்பு பெண்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். மகளிர் அமைப்பை சேர்ந்த மொபினா ஹாஜி   மற்றும் அமான் ஆகியோரிடம் ஓட்டு சேகரித்தார். பின்னர் 50-வது வட்டம்  செல்லியம்மன்  நகர் பகுதியில்   ஆதரவு திரட்டினார். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வீடாக சென்று தன் கணவருக்காக  ஓட்டு கேட்டார். ராம்நகர், ஆர்த்தி  குடியிருப்பு பகுதிகளில் அவர் ஓட்டு வேட்டையாடினார். அவருடன்  முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, கவிஞர் தமிழச்சி தங்க பாண்டியன், கவிஞர் சல்மா, வக்கீல் கிரிராஜன், கவுன் சிலர் மாலினி ரமேஷ், பக்கிரி சாமி, செல்வம், அர்ச்சுனன், வக்கீல் சின்னராஜ்,  பாபு உள்பட பலர் சென்றனர்.

திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி தி.மு.க.வேட்பாளர் சிவாஜிக்கு அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரிப்பு

திருவள்ளூர் : 

          ""தி.மு.க., கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும், பா.ம.க.,வின் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம்,'' என, கட்சியின் மாநில இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறினார். திருவள்ளூர் தொகுதி தி.மு.க., வேட்பாளர் சிவாஜிக்கு ஆதரவு தெரிவித்து நேற்று முன்தினம் இரவு மணவாளநகரில் திறந்த ஜீப்பில் அன்புமணி பிரசாரம் செய்தார்.

பா.ம.க.  மாநில இளைஞரணித் தலைவர் அன்புமணி பேசியதாவது: 

             தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலும் பா.ம.க.,வின் கொள்கையான மதுக்கடைகளை ஒழித்தல், வேளாண்மைக்கு முதன்மை போன்ற கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம். வன்னியர் சமுதாயத்துக்கு 21 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுத் தந்த ராமதாசை கொச்சைப்படுத்தும் விஜயகாந்த் உள்ள அ.தி.மு.க., கூட்டணியை தோற்கடிக்க வேண்டும். தி.மு.க., கூட்டணி மக்கள் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட கூட்டணி. அ.தி.மு.க., கூட்டணி நடிகர், நடிகைகள் கூட்டணி. இவர்கள் மக்கள் பிரச்னைக்கு தீர்வு காண மாட்டார்கள்.

              பசுமை தாயகத்தை கொச்சைப்படுத்தி நடிகர் விஜயகாந்த் பேசி வருகிறார். 125க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர் சமூக சிந்தனை, பசுமை தாயகம், வேளாண்மை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்துள்ளாரா? தன்னைத்தானே கறுப்பு எம்.ஜி.ஆர்., என, கூறிக்கொள்ளும் அவரை அ.தி.மு.க.,வினர் எப்படி பொறுத்துக்கொள்கின்றனர்.

           குடிபோதையில் கட்சியின் வேட்பாளரையே மறந்துவிட்ட அவர், கட்சியின் எம்.எல்.ஏ.,வாக வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும் அவரிடம் மரியாதை இருக்காது. எனவே, தி.மு.க.,வின் வளர்ச்சி திட்ட பணிகள் மீண்டும் தொடர தி.மு.க.,வுக்கு ஓட்டு போடுங்கள். இவ்வாறு அன்புமணி பேசினார்.

பாமக நிறுவனர் ராமதாசின் பேரன் ப.சுகந்தன் - டீனா திருமணம்: புகைப்படங்கள்









 

சென்னை:

           முதல்வர் கருணாநிதி சென்னை மேயர் இராமநாதன் செட்டியார் மண்டபத்தில் நடைபெற்ற பாமக நிறுவனர் ராமதாசின் பேரன் ப.சுகந்தன் - டீனா ஆகியோரது திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். இந்த விழாவில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், பொன்முடி, பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் கோ.க.மணி, நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

டாக்டர் ராமதாசுக்கு எதிரான கொலை வழக்கு: போலீஸ் டி.எஸ்.பி. விசாரணைக்கு தடை

சென்னை:

                 கடந்த 2006 சட்டசபை தேர்தலின்போது திண்டிவனம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் சி.வி.சண்முகம் மீது தாக்குதல் நடந்தது.   இதில் சி.வி.சண்முகத்தின் உதவியாளர் முருகானந்தம் கொலை செய்யப்பட்டார். சி.வி.சண்முகம் எம்.எல்.ஏ.வின் புகாரின் அடிப்படையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி, பரசுராமன், பிரிதீபன் உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் இருந்து டாக்டர் ராமதாஸ், அன்புமணி உள்பட சிலர் விடுவிக்கப்பட்டனர்.

                 இதை எதிர்த்து சி.வி. சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து போலீசார் பதிவு செய்த குற்றப்பத்திரிகையை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது. திண்டிவனம் போலீஸ் டி.எஸ்.பி. மேலும் புலன் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகையை புதிதாக பதிவு செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தர விட்டார்.

                  இதையடுத்து, திண்டிவனம் கோட்டக்குப்பம் போலீஸ் டி.எஸ்.பி. அந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வந்தார். இதை எதிர்த்து சி.வி.சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதில், “கோட்டக்குப்பம் பகுதியில்தான் டாக்டர் ராமதாசும் அவரது குடும்பத்தினரும் வசிக்கிறார்கள். எனவே கோட்டக்குப்பம் போலீஸ் டி.எஸ்.பி. இந்த வழக்கை விசாரிக்க கூடாது. சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி இருந்தார். 
 
                 இந்த மனு நீதிபதி ஜோதி மணி முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கோட்டக்குப்பம் போலீஸ் டி.எஸ்.பி. இந்த வழக்கை விசாரிக்க தடை விதித்து உத்தரவிட்டார். வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. போலீஸ் தரப்பில் மனுதாக்கல் செய்யவும் நீதி பதி உத்தரவிட்டார்.

பா.ம.க.வின் பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் 20 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளோம்: அன்புமணி ராமதாஸ்

மாமல்லபுரம்:

          பசுமையான தமிழகத்தை உருவாக்க இதுவரை 20 லட்சம் மரக்கன்றுகள் நட்டுள்ளோம் என, முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

மாமல்லபுரத்தில் நடந்த பாமக பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய பாமக இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ்,


               இளைஞர்கள் மது, புகையிலை போன்ற போதைப்பழக்கத்தினால் தவறான பாதையில் சென்று சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். எனவே தான் மதுவை ஒழிக்க வேண்டும் என்று பா.ம.க. போராடி வருகிறது. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மதுவை ஒழிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி வருகிறார். பசுமையான, தூய்மையான தமிழகத்தை உருவாக்க பா.ம.க.வின் பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் இதுவரை 20 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளோம். நீர் ஆதாரங்களை பெருக்க 500 ஏரிகளை தூர்வாரி உள்ளோம். ஏரியில் உள்ள நீரை சேமிக்க 70 தடுப்பணைகளை கட்டி உள்ளோம். இவை போன்ற சமூக சேவையில் பா.ம.க. தன்னை ஈடுபடுத்தி கொண்டு வருகிறது என்றார்.

அன்புமணி ராமதாஸ் - மு.க.அழகிரி சந்திப்பு


 
 சென்னை:

           மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி மற்றும் வேல்முருகன் எம்.எல்.ஏ சந்தித்து சென்னையில் பிப்ரவரி 28-ம் தேதி நடைபெற உள்ள தனது சகோதரி மகன் திருமண விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினார்.

6 மாதங்களுக்கு முன்பே நாங்கள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டோம்: அன்புமணி ராமதாஸ்



 

             சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்றும், முதல்வர் கருணாநிதி 6வது முறையாக மீண்டும் முதல்வர் ஆவார் என்றும், பாமக இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கூறினார்.  முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில், அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். அப்போது அவரது சகோதரி மகன் திருமண விழாவுக்கான அழைப்பிதழை கொடுத்தார்.

பின்னர்  பேசிய அன்புமணி ராமதாஸ்,

                முதல் அமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். எனது சகோதரி மகன் திருமண அழைப்பிதழை குடும்பத்தினருடன் சென்று கொடுத்து திருமண விழாவுக்கு அழைத்தேன்.   காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ள தி.மு.க. கூட்டணி, மெகா கூட்டணி. இது சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெறும். முதல்வர் கருணாநிதி 6வது முறையாக மீண்டும் முதல்வர் ஆவார்.


               இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. 6 மாதங்களுக்கு முன்பே நாங்கள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டோம். சட்டசபை தேர்தலின் போது, டாக்டர் ராமதாசும், நானும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பிரசாரம் செய்வோம். தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து, தி.மு.க. கிளை ஒன்றிய நிர்வாகிகளுடன் நல்லிணக்க கூட்டங்கள் நடத்தப்படும். இதன் மூலம் தேர்தலில் சிறப்பாக பணி புரிய வாய்ப்பு ஏற்படும் என்றார்.

சோனியாகாந்தியுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

 டெல்லி:

         காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் பாமக இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் சந்தித்துப் பேசினார்.

             டெல்லியில் 17.02.2011 அன்று காலை டாக்டர் அன்புமணி ராமதாஸ், சோனியா காந்தி வீட்டுக்கு காலை 11.30 மணிக்குச் சென்றார். அங்கு, அவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமூகமாக இருந்தது என்றும், இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்கள் என்றும் தெரிகிறது. தனது அக்காள் மகன் திருமண அழைப்பிதழை நேரில் சென்று கொடுப்பதற்காகவே டாக்டர் அன்புமணி ராமதாஸ் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார் 

             டெல்லியல் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு, காங்கிரஸ் திமுக கூட்டணியில் பாமவை வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார். சோனியா காந்தியை அன்புமணி ராமதாஸ் சந்தித்ததற்கும், தங்கபாலு பாமகவை வரவேற்கிறோம் என்று கூறியதும், திமுக காங்கிரஸ் கூட்டணியில் பாமக இணைவது உறுதியாகிவிட்டது.