மனிதசங்கிலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனிதசங்கிலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திருச்சியில் பசுமைத் தாயகம் சார்பில் சாலை விபத்து தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி

 http://mmimages.mmnews.in/Articles/2011/Jul/c37ecdfe-f8fd-4ee8-8c2d-69995585b762_S_secvpf.gif

 
 
திருச்சி:

             இந்தியாவில் தான் உலக அளவில் அதிகம் சாலை விபத்துகளில் உயிர்ப்பலி ஏற்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் எய்ட்ஸ், புற்றுநோயை விட விபத்தில் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

          எனவே விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க கோரி பா.ம.க.வின் பசுமை தாயகம் அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தி ஆண்டு தோறும் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தனர்.   இந்த ஆண்டு பசுமை தயாகம் அமைப்பினர் திங்கட் கிழமை திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே மனித சங்கிலி போராட்டம் செய்தனர்.

           சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அணி வகுத்து நின்றனர். நிர்வாகி அறிவுசெல்வன் தலைமையில் கண்ணதாசன், உமாநாத், திலீப்சேகர், சிவக்குமார், தங்கராஜ், அரசுரவி, கிள்ளி வளவன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கடலூரில் பசுமைத் தாயகம் சார்பில் சாலை விபத்து தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி

கடலூர்:

           பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் கடலூரில் மனிதச்சங்கிலி போராட்டம்  திங்கள்கிழமை நடந்தது. 

             சாலை விபத்துக்களில் உலகில் ஆண்டுக்கு 13 லட்சம் பேர் இறக்கிறார்கள். சாலை விபத்துக்களில் உயிரிழப்போர் எண்ணிக்கை உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம். 2009-ம் ஆண்டில் இந்தியாவில் 1,26,896 பேர் சாலை விபத்துக்களில் இறந்துள்ளனர்.  மக்கள் தொகை அடிப்படையில் 1,000 இந்தியர்களில் தமிழர்கள் 57 பேர். ஆனால் சாலை விபத்துக்களில் உயிரிழக்கும் இந்தியர்கள் 1,000 பேரில் தமிழ்நாட்டினர் 108 பேர். 

              இதனால், தமிழகத்தில் சாலை விபத்துக்களைத் தடுக்க ஒருங்கிணைந்த தெளிவான கொள்கையும் சட்டமும், விதிமுறைகளும் தேவை. விதிமுறைகள் முழுமையாக கண்டிப்புடன் செயல்படுத்தப்பட வேண்டும் என்று பசுமைத் தாயகம் கோரிக்கை விடுத்துள்ளது.  குறிப்பாக குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தடுக்க வேண்டும். தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும். வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். வாகனங்களிóல் பயணிப்போர் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில்  கடலூரில் மனிதச்சங்கிலிப் போராட்டம் நடந்தது. 

              திருப்பாப்புலியூர் உழவர் சந்தை அருகில் நடந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்துக்கு, கடலூர் மாவட்ட பா.ம.க. செயலாளர் பஞ்சமூர்த்தி தலைமை தாங்கினார். பசுமைத் தாயகம் மாவட்ட அமைப்பாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். பா.ம.க. மாவட்டச் செயலாளர்கள் செல்வராஜ், வேணு புவனேசுவரன், தர்மலிங்கம், மாவட்டத் துணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் திருமூர்த்தி, ஒன்றியச் செயலாளர் தட்சிணாமூர்த்தி, நகரச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட பலரும் சாலையோரம் கைகோர்த்து நின்று, மனிதச் சங்கிலியில் பங்கேற்றனர்.

திருப்பூரில் பசுமைத் தாயகம் சார்பில் சாலை விபத்து தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி

திருப்பூர்:

            சாலை விபத்துகளை தடுக்க வலியுறுத்தி திருப்பூரில் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப்பட்டது.  

             பாட்டாளி மக்கள் கட்சி, பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே திங்கள்கிழமை நடந்த இந்தப் போராட்டத்துக்கு, கட்சியின் மாநில துணைச் செயலர் சி.வடிவேல் கவுண்டர் தலைமை வகித்தார். சிஸ்மா பொதுச்செயலர் கே.எஸ்.பாபுஜி, கட்சி நிர்வாகிகிள் ராஜேந்திரன், மு.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி ஜே.பி.ராஜேந்திரன் வரவேற்றார்.  

              சாலை விபத்துகளைத் தடுக்க தெளிவான கொள்கை வகுக்க வேண்டும், போக்குவரத்து விதிமுறைகள், சட்டங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும், மது அருந்தவிட்டு வாகனங்களை ஓட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.  கட்சி நிர்வாகிகள் வி.எஸ்.கோவிந்தராஜ், கொ.கண்ணன், கே.அ.கண்ணன், வழக்கறிஞர் ஜெ.குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


விழுப்புரம் மாவட்டத்தில்ல பசுமைத் தாயகம் சார்பில் சாலை விபத்து தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி

 விழுப்புரம்:

            விழுப்புரம் மாவட்ட பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் சாலை விபத்துகளைத் தடுக்க விழிப்புணர்வு மனித சங்கிலி விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் முன்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

             உலகில் சாலை விபத்துகள் அதிகம் இந்தியாவில் நடக்கிறது, இதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. எனவே சாலை விபத்துகளைத் தடுக்க குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தடுப்பது, கட்டாயம் தலைக்கவசம் அணிவது, வேகத்தைக் கட்டுப்படுத்துவது, கட்டாய வார்ப்பட்டை அணிவது ஆகியவற்றை வலியுறுத்தி இந்த மனித சங்கிலி நடைபெற்றது.

             இந்நிகழ்ச்சிக்கு, பாமக மாநில துணைப் பொதுச் செயலர் செந்தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். மாநில கொள்கை விளக்க அணிச் செயலர் வியன்ன அரசு சிறப்புரையாற்றினார். இதில்  மாநில துணைத் தலைவர் தங்க.ஜோதி, மாவட்டச் செயலர்கள் பழனிவேலு, மணிமாறன், மாவட்ட இணைச் செயலர் சிவக்குமார், ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் துரைமுருகன், நகரச் செயலர் தமிழ்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்டத்தில் பசுமைத் தாயகம் சார்பில் சாலை விபத்து தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி

வேலூர்:

              வேலூர் மாவட்டத்தில் பசுமை தாயகம் அமைப்பு சார்பில் சாலை விபத்துகளைத் தடுக்க வலியுறுத்தி மனிதச் சங்கிலிப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 

             வேலூரில் காந்தி சிலை அருகே நடைபெற்ற இந்த மனிதச் சங்கிலியில் பாமக மத்திய மாவட்டச் செயலர் வெங்கடேசன், முன்னாள் மத்திய அமைச்சர் என்.டி. சண்முகம், பாமக மகளிர் அணி வரலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர் .சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பசுமை தாயகம் அமைப்பினர் பொதுமக்களுக்கு வழங்கினர். 

அரக்கோணம்

           அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் நடைபெற்ற மனித சங்கிலி நிகழ்ச்சிக்கு வேலூர் கிழக்கு மாவட்ட பாமக தலைவர் அ.ம.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் க.சரவணன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து சாலையில் சென்ற அனைத்து வாகனங்களுக்கும் முகப்பு விளக்கில் கறுப்பு வர்ணங்களை பூசினர். இரு சக்கர வாகனங்களில் செல்வோரிடம் துண்டு பிரசுரங்கள் அளித்து, தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள், செல்பேசியில் பேசிக்கொண்டு செல்லாதீர்கள் என்பது போன்ற அறிவுரைகளை வழங்கினர். 

               மாநில வன்னியர் சங்க துணை பொதுச் செயலர் ந.ரமணி, பாமக மாவட்ட துணைச் செயலர் அ.மு.வேணுகோபால், மாவட்ட இளைஞர் அணி தலைவர் பொன்.வேலு, மாவட்ட மாணவர் அணி செயலர் கோ.ஏழுமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வாலாஜாபேட்டை

              வாலாஜாபேட்டையில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் இருந்து இந்தியன் வங்கி வரையிலும் பசுமை தாயக நிர்வாகிகள் விழிப்புணர்வு மனித சங்கலி நடத்தினர். நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலர் நந்தகுமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏ கே.எல். இளவழகன் தொடங்கி வைத்தார். நிர்வாகிகள் எம்.கே.முரளி, கதிர், எம்.தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருவண்ணாமலையில் பசுமைத் தாயகம் சார்பில் சாலை விபத்து தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி

திருவண்ணாமலை:

              சாலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒருங்கிணைந்த மாவட்ட பசுமை தாயகம் சார்பில் திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் அருகே திங்கள்கிழமை மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

              அதிக வேகமாகவோ, மது அருந்திவிட்டோ வாகனங்களை ஓட்டக்கூடாது. தலைக்கவசம் அணிய வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் ரவுண்டானா அமைக்க வேண்டும். சாலையை கடக்கும் இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும். ஐ.நா. செயல்திட்டத்தின்படி தமிழகத்தில் முழுமையாக சாலை பாதுகாப்புத் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்த மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது

               பா.ம.க. மாநில துணைப் பொதுச் செயலர் கோ.எதிரொலிமணியன் தலைமை தாங்கினார். வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர்கள் இரா.காளிதாஸ், சு.மன்னப்பன், மாவட்டச் செயலர்கள் அ.வேலாயுதம், இல.பாண்டியன், இரா.ஜானகிராமன், பசுமை தாயகம் வெங்கடேசன், வே.பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூரில் பசுமைத் தாயகம் சார்பில் சாலை விபத்து தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி

திருவள்ளூர்:

         பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் சாலை விபத்துக்களை தடுக்கக் கோரி மனித சங்கிலி விழிப்புணர்வு போராட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் பாலயோகி தலைமையில் திருவள்ளூரில் நடைபெற்றது. 

              திருவள்ளூர்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நடைபெற்ற மனிதச் சங்கிலியில் மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் தினேஷ், வடக்கு மாவட்டச் செயலாளர் ரமேஷ் அம்பத்தூர் நகர்மன்றத் தலைவர் கே.என். சேகர், கிழக்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்எல்ஏ ரவிராஜ் பங்கேற்று போராட்டத்தை துவக்கி வைத்தார். 

              இந்நிகழ்ச்சியில், சாலை விபத்துக்களில் உலகில் ஆண்டுக்கு 13 லட்சம் பேர் பலியாகின்றனர். ஆண்டுக்கு 5 கோடி பேர் சாலை விபத்தில் காயமடைகின்றனர். 2010-ம் ஆண்டில் தமிழகத்தில் மட்டும் 64 ஆயிரத்து 996 சாலை விபத்துக்கள் நடைபெற்றுள்ள. அதில் 15 ஆயிரத்து 409 பேர் இறந்துள்ளனர். இதற்கு காரணம் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் முறையாக சாலை விதிகளை மதிக்காமல் செல்வதேயாகும். 

             அதேபோல் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதாலும் ஏராளமான விபத்துக்கள் நடைபெறுகிறது. எனவே பொதுமக்களிடம் சாலை விதிகளை கடைபிடிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படவேண்டும். அதன் மூலம் விபத்துக்கள் குறைய வேண்டும் என வலியுறுத்தி பேசினர். இதில் பசுமைத் தாயகம் மற்றும் பாமக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். 

உடுமலையில் பசுமைத் தாயகம் சார்பில் சாலை விபத்து தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி

உடுமலை:

            சாலை விபத்துகளை தடுக்க வலியுறுத்தி உடுமலையில் திங்கள்கிழமை மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது . 

              பாட்டாளி மக்கள் கட்சியின் பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் உடுமலை மத்திய பஸ் நிலையம் எதிரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மாநில துணைப் பொதுச் செயலர் பாலசுந்தரி தலைமை வகித்தார். நகரச் செயலர் காந்தி செல்வம் முன்னிலை வகித்தார்.   சாலை பாதுகாப்பை வலியுறுத்தியும், போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்கக் கோரியும் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப்பட்டது. மேலும், துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.   திருப்பூர் மாவட்டத் தலைவர் புருஷோத்தமன், மாவட்டச் செயலர் பழனிசாமி, நிர்வாகிகள் குணசேகரன், கணக்கன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரியலூரில் பசுமைத் தாயகம் சார்பில் சாலை விபத்து தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி

அரியலூர்:

             சாலை விபத்துகளைத் தடுக்கக் கோரி, அரியலூரில் பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் திங்கள்கிழமை மனிதச் சங்கிலி நடைபெற்றது.   

            அரியலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயலர் க. வைத்தி தலைமையில், அரியலூர் அண்ணா சிலையிலிருந்து, அரசு மேல்நிலைப் பள்ளி வரை நடைபெற்ற இந்த மனிதச் சங்கிலியில் மாநிலத் துணைப் பொதுச் செயலர் இரா. பாலு, மாநிலத் துணைத் தலைவர்கள் உலக. சாமித்துரை, கி. கோபி, பெரம்பலூர் மாவட்டச் செயலர் க. செந்தில்குமார், வேப்பூர் ஒன்றியக் குழுத் தலைவர் நீலமேகம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

பசுமைத்தாயகம் சார்பில் மெரினாவில் சாலை விபத்து தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி

http://www.dinakaran.com/data1/Newsimages/Tamil-Daily-News_Paper_92630732060.jpg

           சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு குழு அமைக்க கோரி முதல் அமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பேச இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

            சாலை விபத்து தடுப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி பசுமைத்தாயகம் சார்பில் சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே மனித சங்கிலி நடைபெற்றது. இதில் தனியார் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு, நீண்ட சங்கிலி போல் கைகோர்த்து நின்றனர். அவர்கள்  விபத்தை தடுப்போம்...உயிரை காப்போம்' என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய சிறிய பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர்.

இந்த மனிதசங்கிலி விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்த முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில்,

             பசுமைத்தாயகம் கடந்த 17 ஆண்டுகளாக பொது பிரச்சினைகளுக்காக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகிறோம். தமிழகம் முழுவதும் 20 லட்சம் மரக்கன்றுகளை நட்டு இருக்கிறோம். குளங்களை தூர்வாரி வருகிறோம். சுற்றுச்சூழலை வலியுறுத்தி பிரசாரம் செய்து வருகிறோம்.

            உலகத்திலேயே அதிகளவில் சாலை விபத்துக்கள் நடப்பது இந்தியாவில் தான். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தான் அதிகளவில் சாலை விபத்துக்கள் நடக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் சாலை விபத்தில் 15 ஆயிரம் பேர் இறந்து உள்ளனர். இதில் பெரும்பாலானோர் இளைஞர்கள் தான்.

              40 சதவீத சாலை விபத்துக்களுக்கு குடி போதையும் ஒரு காரணம் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. எனவே மது குடித்துக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சீட் பெல்ட் அணிவது, ஹெல்மட் அணிவது ஆகியவற்றை கட்டாயமாக்க வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக்குவது போன்றவற்றை தமிழக அரசு செய்ய வேண்டும்.

            சாலை விபத்துக்களை தடுப்பது தொடர்பாக தமிழக அரசு ஒரு குழு அமைக்க வேண்டும். இதன் மூலம் சாலை விபத்துக்களை குறைப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இது சம்பந்தமாக தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவிற்கு கடிதம் எழுத இருக்கிறோம். தேவைப்பட்டால் அவரை நேரில் சந்தித்து இது குறித்து வலியுறுத்துவோம் என்றார்.