கடலூர் மாவட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடலூர் மாவட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மாற்று கட்சியில் இணையும் எண்ணம் இல்லை : தி.வேல்முருகன் அறிவிப்பு

             முறையான காரணம் இன்றி முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.   இந்த தகவல் வெளியானதை அடுத்து கடலூர், பண்ருட்டி, நெய்வேலி பகுதிகளில்  ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் கட்சி அலுவலகம், நெய்வேலியில் உள்ள பா.ம.க. தொழிற்சங்க அலுவலகம் சூறையாடப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ம.க. கொடிக்கம்பங்களை அகற்றினார்கள். இந்த நிலையில் பா.ம.க. வில் இருந்து நீக்கப்பட்ட வேல்முருகன் தி.மு.க.வில் சேரப்போவதாக கடலூர் பகுதியில் நேற்று தகவல் பரவியது. 

இதுபற்றி வேல்முருகன் கூறியது
 
            வேறு எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் எனக்கு இல்லை. இப்போதும் பா.ம.க. வில் தான் இருக்கிறேன். நான் நீக்கப்பட்டதாக கூறப்பட்டிருப்பது பற்றி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பா.ம.க. தொண்டர்களிடம் நீதி கேட்பேன். நான் நீக்கப்பட்டது சம்பந்தமாக இதுவரையிலும் எனக்கு எந்த தகவலும் முறைப்படி அனுப்பப்பட வில்லை. அப்படி ஒரு தகவல் வந்தால் அடுத்த கட்ட நடவடிக்கையை பின்னர் முடிவு செய்வேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

கடலூர் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கான தேர்தல்: பா.ம.க ஒரு இடத்தில் வெற்றி

கடலூர் :

          கடலூர் மாவட்டத்தில்  மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் பா.ம.க ஒரு இடத்தில் வெற்றி பெற்றார் .

பா.ம.க.,:  

வார்டு எண்: 26
வேட்பாளர் : கருணாகரன், 
ஓட்டுகள்: 8,676;  

ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்

குறிஞ்சிப்பாடி ஒன்றியம் 10வது வார்டில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளருக்கு வாய்ப்பு அளியுங்கள்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், 10வது வார்டில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராக போட்டியிடும் திருமதி.ஜெயக்கொடி விஜயகாந்தி அவர்களுக்கு மாங்கனி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.
Election Date: 19/11/2011

தேர்தல் நாள் : 19/11/2011

வடலூரில் உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களை ஆதரித்து ராமதாஸ் பிரசாரம்

வடலூர்:

வடலூரில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தேர்தல் பிரசாரம் செய்தார். 
 
அப்போது பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியது:-

          தமிழகத்தில் பா.ம.க. மட்டுமே வித்தியாசமான கட்சி ஆகும். இதுபோன்ற கட்சி தமிழகத்தில் இல்லை. அப்படிப்பட்ட கட்சி ஏதாவது இருந்தால் நானே அந்த கட்சியில் சேர்ந்துக்கொள்வேன். தமிழகம் முழுவதும் 12 மாவட்டங்களை சுற்றி வந்தேன். பா.ம.க.வுக்கு ஆதரவு பெருகி வருகிறது. திராவிடக்கட்சிகள் கொள்கை இல்லாத கட்சி. அந்த கட்சி மீண்டும் ஆண்டால் தமிழகம் மன்னிக்காது. இலவசங்களை கொடுத்து மக்களை முன்னேற்ற முடியாது. அப்படி முன்னேற்ற முடியும் என்று எந்த அறிஞர்களும் கூற வில்லை.

          இலவசமாக அரிசி, மிக்சி, கிரைண்டர் கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள். மக்களின் உழைப்பைத்தான் கெடுத்து விட்டார்கள். கிராமம் வளர்ச்சி அடைகிறது என்கிறார்கள். மக்கள் நகரங்களை நோக்கி செல்கிறார்கள். முன்பு கிராமத்தில் 80 சதவீதமாகவும், நகரம் 20 சதவீதமாகவும் இருந்தது. இன்றைக்கு இரண்டும் சமமாக ஆகிற வகையில் நகர்புற வளர்ச்சி அதிகமாக இருக்கிறது.  கிராமங்கள்தான் இந்தியாவின் முதுகெலும்பு என்பது மாறி இன்றைக்கு விளை நிலங்கள் பறிபோகிறது. எதிர்காலத்தில் இந்த நிலை மாற 2016ல் பா.ம.க. ஆட்சி அமைக்கும் வகையில் திட்டம் தீட்டி செயல்படுகிறோம். அதன் மூலம் தமிழகம் வளர்ச்சி பெறும். சாராயம் இல்லாத நகரம் கிராமம். அதன் மூலம் அமையும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார். 

சிதம்பரம் நகராட்சியில் பா.ம.க.வேட்பாளர் ஆ.ரமேஷ் 4-வது முறை போட்டி

சிதம்பரம்:

           சிதம்பரம் நகராட்சியில் 3 முறை தொடர்ந்து வெற்றிபெற்ற பாமக.வைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் ஆ.ரமேஷ்,   4-வது முறையாக மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

            சிதம்பரம் நகராட்சி 14-வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் பாமக.வைச் சேர்ந்த ஆ.ரமேஷ். இவர் 1996-2001, 2001-2006, 2006-2011 ஆகிய காலங்களில் 3 முறை நகர்மன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். இவற்றில் இரண்டு முறை கட்சி சார்பிலும், ஒரு முறை சுயேச்சையாகவும்  நின்று வெற்றி பெற்றார். அடிப்படை வசதிகளை நிறைவேற்றியதால் தொகுதி மக்களிடையே நன்கு அறிமுகமான இவர், இப்போது நடைபெறவுள்ள நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 14-வது வார்டில் பாமக சார்பில் மீண்டும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

கடலூர் தெற்கு மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு ரூ.5 லட்சம் நிதி அறிவிப்பு

சிதம்பரம்:

            கடலூர் தெற்கு மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கான நிதியளிப்பு விழா சிதம்பரத்தை அடுத்த சிலம்பிமங்கலம் சிவகோபாலன் திருமண மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.

             பாமக மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் வேணு.புவனேஸ்வரன் தலைமை வகித்தார். வன்னியர் சங்க மாவட்டச் செயலாளர் செல்வ.மகேஷ் வரவேற்றார். சிதம்பரம் நகரச் செயலர் முத்து.குமார் முன்னிலை வகித்தார். விழாவில் மாநில வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு எம்எல்ஏ சிறப்புரையாற்றினார். வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு ரூ.5 லட்சம் நிதி, மாநிலத் தலைவர் ஜெ.குருவிடம் வழங்கப்பட்டது.

            இந்த நிகழ்ச்சியில் மாநில துணைப் பொதுச்செயலாளர் பா.சண்முகம், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் கி.தேவதாஸ் படையாண்டவர், மாநில துணைத்தலைவர் ரா.செல்வகுமார், இ.கே.பி.மணிகண்டன், செ.வெற்றிவேல், எஸ்.ஆர்.நாகவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கடலூர் மேற்கு மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டம் : உள்ளாட்சி தேர்தலில் அனைத்து பதவிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்த தீர்மானம்

சேத்தியாத்தோப்பு : 

           உள்ளாட்சி தேர்தலில் அனைத்து பதவிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்த கடலூர் மேற்கு மாவட்ட பா.ம.க., செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

            கடலூர் மேற்கு மாவட்ட பா.ம.க., செயற்குழு கூட்டம் சேத்தியாத்தோப்பு நடராஜா திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்டத் தலைவர் ஆடியபாதம் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சித் தலைவர் சிலம்புச்செல்வி, மாநில துணை பொதுச்செயலர் சண்முகம், ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் தேவதாஸ் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் சின்னதுரை வரவேற்றார். மாநில இணை பொதுச் செயலர், முன்னாள் எம்.எல்.ஏ., வேல்முருகன், முன்னாள் மாவட்டச் செயலர் ராஜேந்திரன், விவசாய அணிச் செயலர் சேரலாதன், ராஜா சாமிநாதன், வேல்முருகன் உட்பட பலர் பேசினர்.
 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள்

  1.  உள்ளாட்சியில் அனைத்து பதவிகளுக்கும் பா.ம.க., வேட்பாளர்களை நிறுத்துவது. 
  2. கரும்பு டன்னுக்கு 3,000 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். 
  3. சேத்தியாத்தோப்பு பால் குளிரூட்டு நிலையத்தை நவீனப்படுத்த வேண்டும். 
  4. மாவட்டத்தில் கூடுதலான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் 

என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய செயலர்கள் இளையராஜா, சரவணன், ஒன்றிய விவசாய அணி செயலர் ராதாகிருஷ்ணன் பரமசிவம், பஞ்சநாதன், வீரப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புவனகிரி ஒன்றிய செயலர் செல்வராஜ் நன்றி கூறினார்.

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

கடலூர் மேற்கு மாவட்ட பா.ம.க, நிர்வாகிகள் நியமனம்

திட்டக்குடி : 

           கடலூர் மேற்கு மாவட்ட பா.ம.க., விற்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப் பட்டனர். புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட கடலூர் மாவட்டத்திற்கு (மேற்கு) புதிய நிர்வாகிகளை மாநிலத் தலைவர் மணி நியமித்துள்ளார். தலைவராக செம்பேரி ஆடியபாதம், மாவட்டச் செயலராக சேத்தியாத்தோப்பு சின்னதுரையும் நியமிக்கப்பட்டுள்ளனர்

உள்ளாட்சித் தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் போட்டியிட ஆர்வம்

கடலூர் : 

            உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பா.ம.க.,வினர் 350க்கும் மேற்பட்டோர்  விருப்ப மனு அளித்தனர். 

            உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ள கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி தொகுதிக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பா.ம.க., வினரிடம் கடலூர் கட்சி அலுவலகத்தில் நேற்று விருப்ப மனு பெறப்பட்டது. 

                மனுக்களை மாநிலத்துணை பொதுச் செயலர் ஈச்சங்காடு ப.சண்முகம் பெற்றுக் கொண்டார். மாவட்டச் செயலர் (கிழக்கு) தர்மலிங்கம், ஒன்றியச் செயலர் தட்சணாமூர்த்தி, முன்னாள் மாநில இளைஞரணி துணைபொதுச் செயலர் ஆறுமுகம் உட்பட பலர் உடனிருந்தனர். அதில் ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு சேடப்பாளையம் சகாதேவன் உட்பட 350க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு கொடுத்தனர்.

பாமக திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடாது: பாமக நிறுவனர் ராமதாஸ்

கடலூர்:

              திருச்சி மேற்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் பா.ம.க. போட்டியிடாது. எந்தக் கட்சிக்கும் ஆதரவும் அளிக்காது என்று பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.  

பா.ம.க. மாநில துணைத் தலைவர் ஈச்சங்காடு ப.சண்முகத்தின் மகன் முத்துக்கிருஷ்ணன்- உஷா நந்தினி திருமண விழாவில் கலந்துகொள்ள புதன்கிழமை கடலூர் வந்த பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாஸ் கூறியது:  

             திருச்சி மேற்கு சட்டப் பேரவை இடைத் தேர்தலில் பா.ம.க. போட்டியிடாது. அத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவும் அளிக்காது. புதுவை இந்திரா நகர் தொகுதி இடைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை பா.ம.க. ஆதரிக்கும். தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டியிடும். அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு திராவிடக் கட்சிகளுடனும் இனி கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம்.

திருமண விழாவில் ராமதாஸ் பேசியது:  

                வன்னியர்கள் அதிகம் நிறைந்த பழைய தென்னார்க்காடு, வடஆர்க்காடு மாவட்டங்களில் 1952ல் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார், மாணிக்கவேல் நாயக்கர் ஆகியோர் தலைமையில் தனித்துப் போட்டியிட்டு, 26 சட்டப் பேரவைத் தொகுதிகளையும் 7 எம்.பி. தொகுதிகளையும் பெற்றனர் வன்னியர் சமூகத்தினர். ஆனால் அதன் பிறகு 1989ல் பா.ம.க. தொடங்கப்பட்டு பல்வேறு கட்சிகளுடனும் கூட்டணி சேர்ந்து இன்று கிடைத்து இருக்கும் இடங்கள் 3 சட்டப் பேரவைத் தொகுதிகள்தான். இடையில் என்ன நிகழ்ந்தது? அந்த உணர்வு எங்கே போயிற்று?  தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் வன்னியர்களுக்கு ஆளும் உரிமை கிடைத்தும் ஆள விடவில்லை. வாழவும் விடவில்லை. சிலர் அமைச்சர் பதவிக்கும் சிலர் எம்.எல்.ஏ. பதவிக்கும் ஓடினர். நான் என்றும் கட்சித் தலைவர் உள்ளிட்ட எந்த பதவிக்கும் வரமாட்டேன். நான் என்றும் பா.ம.க.வின் நிறுவனர்தான். 

                நாம் சென்ற பாதை தவறு என்று மாற்றிக் கொண்டோம். 1952ல் இருந்த நிலை இப்போது உள்ளது. இனி எந்தக் கட்சியுடனும் கூட்டு இல்லை. தேவையும் இல்லை.  இனி வன்னியர்கள் வேறு அரசியல் கட்சிகளுக்குச் செல்லத் தேவையில்லை. அவர்களுக்கு எல்லா பதவிகளும் காத்திருக்கிறது. வன்னியர் கிராமங்களில் இனி பா.ம.க.வும் வன்னியர் சங்கமும்தான் இருக்க வேண்டும். வேறு கட்சிகளுக்கு அங்கு இடமில்லை. வேறு கட்சிக் கொடிகள் பறக்கத் தேவையில்லை. வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க. தவிர வேறு எந்தக் கட்சிக் கொடியும் உங்களை உயர்த்தாது.  எந்த இளைஞரைக் கேட்டாலும், நான் பா.ம.க., நான் வன்னியர் சங்கம் என்று சொல்லும் நிலை வரவேண்டும். திராவிடக் கட்சிகளால், திராவிட இயக்கங்களால் தமிழ்நாடு சீரழிந்து விட்டது என்றார் ராமதாஸ்.


பரங்கிப்பேட்டை ஒன்றியம் மற்றும் கிள்ளை பேரூராட்சி பா.ம.க.பொதுக்குழுக் கூட்டம்

கிள்ளை:

            பரங்கிப்பேட்டை ஒன்றியம் மற்றும் கிள்ளை பேரூராட்சி பா.ம.க., பொதுக்குழுக் கூட்டம் தில்லைவிடங்கனில் நடந்தது. 

               ஒன்றிய செயலர் ராஜா தலைமை தாங்கினார். நகர செயலர் ரமேஷ் வரவேற்றார். ஒன்றிய தலைவர் தமிழரசன், கிள்ளை நகர தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் இளங்கோவன், சங்கர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலர் வேணுபுவனேஸ்வரன், தலைவர் அன்பழகன், நிர்வாக குழு உறுப்பினர் அகிலாண்ட பிச்சாண்டி உட்பட பலர் பேசினர். ஒன்றிய துணைச் செயலர் சசிகுமார், அமைப்புச் செயலர் புஷ்பராஜ் மற்றும் நிர்வாகிகள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணி அமைப்பதில்லை உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளராக கடலூர் ப.சண்முகம் நியமனம்


கடலூர்:

          பா.ம.க. மாநில துணைப் பொதுச் செயலாளராக, கடலூர் ஈச்சங்காடு ப.சண்முகம்  நியமிக்கப்பட்டு உள்ளார்.  பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாஸ், மாநில இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ஆகியோர் ஒப்புதலுடன், இதற்கான அறிவிப்பை பா.ம.க. தலைவர் கோ.க. மணி வெளியிட்டு உள்ளார். ப. சண்முகம் ஏற்கனவே  பா.ம.க. மாநில துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு கட்சிப் பதவிகளில் இருந்துள்ளார். மாவட்ட ஊராட்சி உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளராக கடலூர் ப.சண்முகம் நியமனம்


கடலூர்:

          பா.ம.க. மாநில துணைப் பொதுச் செயலாளராக, கடலூர் ப.சண்முகம்  நியமிக்கப்பட்டு உள்ளார்.  பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாஸ், மாநில இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ஆகியோர் ஒப்புதலுடன், இதற்கான அறிவிப்பை பா.ம.க. தலைவர் கோ.க. மணி வெளியிட்டு உள்ளார். ப.சண்முகம் ஏற்கனவை பா.ம.க. மாநில துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு கட்சிப் பதவிகளில் இருந்துள்ளார். மாவட்ட ஊராட்சி உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

காட்டுமன்னார்கோவில் (மேற்கு) பா.ம.க.ஒன்றிய பொதுக்குழு கூட்டம்

ஸ்ரீமுஷ்ணம்:

            காட்டுமன்னார்கோவில் (மேற்கு) பா.ம.க., ஒன்றிய பொதுக்குழு கூட்டம் நாச்சியார்பேட்டையில் நடந்தது.

            ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் வரதராஜன் வரவேற்றார். மாவட்ட உழவர் பேரியக்க தலைவர் ராமமூர்த்தி, வன்னியர் சங்க தலைவர் சுப்ரமணியன், ஒன்றிய துணை தலைவர் ஜெயபால் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வேணு.புவனேஸ்வரன், மாவட்ட துணை தலைவர் வெற்றிவேல் சிறப்புரையாற்றினர்.

பொதுக்குழு கூட்ட த்தில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

             உள்ளாட்சி மன்ற தேர்தலில் பா.ம.க. சார்பில் அனைத்து பதவிகளுக்கும் தனித்து போட்டியிடுதல், 

              ஸ்ரீமுஷ்ணத்தை தனி தாலுகாவாக அறிவிக்க கோருதல்,

             ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் நடந்துவந்த இன்டேன் கேஸ் வினியோகத்தை ஜெயங்கொண்டம் பகுதிக்கு மாற்றிதை கண்டித்தல், 

            புதிய கேஸ் வினியோக மையத்ததை ஸ்ரீமுஷ்ணத்தில் அமைக்க கோருதல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

      ஒன்றிய துணை செயலாளர் விஜயரங்கன், ஒன்றிய துணை தலைவர் செல்வமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ரவி நன்றி கூறினார்.

காட்டுமன்னார்கோவில் ஒன்றிய பா.ம.க.செயற்குழுக் கூட்டம்: கடலூர் மாவட்ட செயலர் வேணு.புவனேஸ்வரன் சிறப்புரை

காட்டுமன்னார்கோவில் : 

             உள்ளாட்சித் தேர்தலில் திராவிட கட்சிகளின் உறவு இல்லாமல் தனித்து போட்டியிடுவது என காட்டுமன்னார்கோவிலில் நடந்த பா.ம.க., செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

              காட்டுமன்னார்கோவில் ஒன்றிய, நகர பா.ம.க., செயற்குழுக் கூட்டம் ஒன்றிய தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. நகர செயலர் மோகன் வரவேற்றார். ஒன்றிய செயலர் கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலர் வேணு புவனேஸ்வரன் சிறப்புரையாற்றினார். முன்னாள் மாவட்டச் செயலர் கண்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் வரதராசன், ஒன்றிய நகர நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் திராவிட கட்சிகளோடு ஒட்டு உறவு இல்லாமல் தனித்து போட்டியிடுவது, கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கடலூர் ஒன்றிய பா.ம.க.பொதுக்குழுக் கூட்டம்: மாநில துணை பொதுச் செயலர் திருமால்வளவன் சிறப்புரை

நெல்லிக்குப்பம் : 

            நடுவீரப்பட்டில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டுமென பா.ம.க. கோரிக்கை விடுத்துள்ளது. கடலூர் ஒன்றிய பா.ம.க., பொதுக்குழுக் கூட்டம் வெள்ளக்கரையில் நடந்தது. தணிகாசலம் தலைமை தாங்கினார். சிவகாசி முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலர் தட்சணாமூர்த்தி வரவேற்றார். மாநில துணை பொதுச் செயலர் திருமால்வளவன், சண்முகம், அமிர்தலிங்கம், பஞ்சமூர்த்தி சிறப்புரை ஆற்றினர். நடுவீரப்பட்டில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்குக் கடுமையாக உழைப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கடலூர் (தெற்கு) மாவட்ட வன்னியர் சங்க செயலராக செல்வ மகேஷ் நியமனம்

சிதம்பரம்:

          கடலூர் (தெற்கு) மாவட்ட வன்னியர் சங்கச் செயலாளராக சிதம்பரத்தைச் சேர்ந்த செல்வ மகேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  இவரை பாமக நிறுவனர் டாக்டர் ச.ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஒப்புதலின் பேரில் மாநில வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு எம்எல்ஏ நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பெண்ணாடத்தில் நல்லூர் ஒன்றிய பா.ம.க., பொதுக்குழு கூட்டம்

திட்டக்குடி : 

             இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக தர நடவடிக்கை வேண்டும் என பா.ம.க., வலியுறுத்தியுள்ளது. 

               பெண்ணாடத்தில் நல்லூர் ஒன்றிய பா.ம.க., பொதுக்குழு கூட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலர் திருமால்வளவன், தேர்தல் பணிக்குழு தலைவர் தனபால், வன்னியர் சங்க துணைத் தலைவர் மோகன், திருஞானம் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலர் தங்கவேல் வரவேற்றார். 

        கூட்டத்தில் அம்பிகா சர்க்கரை ஆலை 2011ம் ஆண்டில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகையை கால தாமதம் செய்யாமல் உடனே வழங்க கேட்டுக் கொள்வது, 

              நடப்பாண்டில் கரும்பு டன் ஒன்றுக்கு 3ஆயிரம் ரூபாய் வழங்க கேட்பது. 

           ராஜிவ் கொலை வழக்கில் இருபது ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோருவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

நெல்லிக்குப்பம் அருகே பா.ம.க.,கொடிக்கம்பத்தை சேதப்படுத்திய தே.மு.தி.க.பிரமுகர் மீது வழக்கு பதிவு

நெல்லிக்குப்பம் : 

          பா.ம.க., கொடிக்கம்பத்தை சேதபடுத்திய தே.மு.தி.க., பிரமுகரை போலீசார் தேடிவருகின்றனர். நெல்லிக்குப்பம் அடுத்த பில்லாலி தொட்டியை சேர்ந்த தே.மு.தி.க., பிரமுகர் பாண்டியன். இவர் இப்பகுதியில் எங்கள் கட்சி கொடிக்கம்பம் மட்டுமே இருக்க வேண்டும் எனக் கூறி அங்கிருந்த பா.ம.க., கொடிக் கம்பத்தை சேதபடுத்தினார். தடுக்க வந்த பா.ம.க., பிரமுகர் ஜெயராமனையும் தாக்கினார். இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து பாண்டியனை தேடிவருகின்றனர்.

மங்களூர் ஒன்றிய பா.ம.க. பொதுக் குழு கூட்டம் : கடலூர் பாராளுமன்ற தொகுதியில் அன்புமணி ராமதாஸ் போட்டியிட கோரிக்கை

          வருகிற தேர்தலில் கடலூர் பாராளுமன்ற தொகுதியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட வேண்டும் என்று ராமநத்தத்தில் நடந்த பா.ம.க பொதுக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

          மங்களூர் ஒன்றிய பா.ம.க. பொதுக் குழு கூட்டம் ராமநத்தத்தில் நடந்தது. மாநில சொத்து பாதுகாப்பு குழுதலைவர் கோவிந்தசாமி, மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் தனபால், துணை பொது செயலாளர் திருமால்வளவன், மாவட்ட செயலாளர் செல்வராசு, மாநில வன்னியர் சங்க துணைத் தலைவர் மோகன், மாவட்ட துணை செயலாளர் தங்ககொளஞ்சிநாதன், செயற்குழு உறுப்பினர் குழந்தைவேல், கொள்கை விளக்க செயலாளர் வேல்முருகன் உள்பட பலர் பேசினர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. 

அவை வருமாறு:

**கூட்டத்தில் மாநில இளைஞரணிதலைவர் டாக்டர் அன்புமணி ராம தாஸ் கடலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும். 

**திராவிட கட்சி களின் தலைமையில் இயங்குவதை விட்டுவிட்டு பா.ம.க. திராவிடக் கட்சிகளுக்கு மாற்று கட்சியாக செயல்படும் என்ற செயல்பாட்டிற்கு வரவேற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.