வன்னியர் கல்வி அறக்கட்டளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வன்னியர் கல்வி அறக்கட்டளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கடலூர் தெற்கு மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு ரூ.5 லட்சம் நிதி அறிவிப்பு

சிதம்பரம்:

            கடலூர் தெற்கு மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கான நிதியளிப்பு விழா சிதம்பரத்தை அடுத்த சிலம்பிமங்கலம் சிவகோபாலன் திருமண மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.

             பாமக மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் வேணு.புவனேஸ்வரன் தலைமை வகித்தார். வன்னியர் சங்க மாவட்டச் செயலாளர் செல்வ.மகேஷ் வரவேற்றார். சிதம்பரம் நகரச் செயலர் முத்து.குமார் முன்னிலை வகித்தார். விழாவில் மாநில வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு எம்எல்ஏ சிறப்புரையாற்றினார். வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு ரூ.5 லட்சம் நிதி, மாநிலத் தலைவர் ஜெ.குருவிடம் வழங்கப்பட்டது.

            இந்த நிகழ்ச்சியில் மாநில துணைப் பொதுச்செயலாளர் பா.சண்முகம், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் கி.தேவதாஸ் படையாண்டவர், மாநில துணைத்தலைவர் ரா.செல்வகுமார், இ.கே.பி.மணிகண்டன், செ.வெற்றிவேல், எஸ்.ஆர்.நாகவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கடலூர் மாவட்டத்தில் வன்னியர் கல்வி விழா

கடலூர்:

             சமூக முன்னேற்றச் சங்கம் சார்பில் கடலூர் மாவட்டப் பொதுக்குழு, வன்னியர் கல்வி விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது.  கடலூர் மாவட்டத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் முதல் 3 இடங்கள் பெறும், வன்னியர் சமூக மாணவ, மாணவிகள் சுமார் 1,000 பேருக்கு ஆங்கிலம்- தமிழ் அகராதிகள் வழங்கப்பட்டன. 

            பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் வகிக்கும் கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி மாணவி ரேவதிக்கு பரிசும் வழங்கப்பட்டது. அகராதி, பரிசுகளை சமூக முன்னேற்றச் சங்க மாநிலத் தலைவர் கோ.கோபால் வழங்கினார்.  நிகழ்ச்சிக்கு மாநில துணைத் தலைவர் சச்சிதானந்தம் தலைமை வகித்தார். மாநில இணைச் செயலாளர் பழனிவேல் வரவேற்றார்.  திரைப்பட இயக்குநர் கௌதமன், சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சிவப்பிரகாசம், இணைச் செயலாளர்கள் ராதாகிருஷ்ணன்,  விஜயராவ், மாநில துணைத் தலைவர் அசோக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு பேசினர்.

வன்னியர் கல்வி அறக்கட்டளையின் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி தொடக்கம்


சரசுவதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்றுகிறார் சரஸ்வதி ராமதாஸ். உடன், (இடமிருந்து) அக்கல்லூரியின் நிறுவனர் -

திண்டிவனம்:
 
                      தொழில்நுட்பத் துறையில் உலக அளவில் முன்னணி வகிக்கும் ஆற்றல் இந்தியாவுக்கு உள்ளது என்று தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா தெரிவித்தார். 
 
திண்டிவனத்தை அடுத்த கோனேரிக்குப்பத்தில் கட்டப்பட்டுள்ள சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா புதன்கிழமை தொடங்கி வைத்து பேசியது:
 
                      அனைத்துத் தரப்பினரையும் கல்வி சென்றடைய வேண்டும். மனித முன்னேற்றத்துக்கு கல்வி மிக அவசியம். உயர் கல்வியானது தனிமனிதனை மேம்படுத்துவதோடு, சமூகத்தையும் மேம்படுத்த வேண்டும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய அளவில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், இந்தத் துறையில் நிறைய சாதிக்க வேண்டியுள்ளது. கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில் தொழிற்சாலைகளையும், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களையும், கல்வி நிறுவனங்களையும் அந்தப் பகுதிகளில் உருவாக்க வேண்டும். இதன்மூலம் கிராமப்புறங்களுக்கும், நகர்ப்புறங்களுக்கும் உள்ள இடைவெளியை குறைக்க இது உதவும்.
 
                   நமது நாட்டில் இருந்த மத்திய அமைச்சர்களில் மது மற்றும் புகையிலை ஒழிப்புக்கு பெரிதும் பாடுபட்ட ஒரே அமைச்சர் அன்புமணி ராமதாஸ்தான். அதேபோல் ரயில்வேதுறை இணை அமைச்சராக இருந்த வேலு, பஞ்சாப் மாநிலத்தில் நிறைய ரயில் திட்டங்களை நிறைவேற்றினார். நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததன் முக்கியக் காரணம் ராமதாஸ் எனது தனிப்பட்ட நண்பர் என்பதால்தான் என்றார் பர்னாலா. 
 
வன்னியர் கல்வி அறக்கட்டளையின் நிறுவனரும், பாமக நிறுவனருமான டாக்டர் ராமதாஸ் பேசியது:
 
                      பணக்காரர்களுக்கு கிடைக்கிற கல்வி ஏழை மக்களுக்கும் கிடைக்க வேண்டுமென்பது தான் எனது லட்சியம். கட்டாயக் கல்வி, கட்டணம் இல்லா கல்வி, சுமை இல்லா கல்வி, விளையாட்டுடன் கூடிய கல்வி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டுமென்பது எனது ஆசை என்றார் ராமதாஸ். 
 
                     முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் வரவேற்றார். நாடாளுமன்ற உறுப்பினர் மு.கிருஷ்ணசாமி, முன்னாள் எம்.பி.க்கள் இரா.அன்பரசு, கோ.பூவராகவன்,முன்னாள் ரயில்வே துறை இணை அமைச்சர் இரா.வேலு, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் து.விசுவநாதன், தொழிலதிபர் எஸ்.அருணாசலம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். வன்னியர் கல்வி அறக்கட்டளையின் இயக்குநர் ஆ.அரிநாராயணன் நன்றி கூறினார்.