ஜி.கே.மணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜி.கே.மணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மக்களுக்கு நேர்மையாக சேவை செய்ய உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.மக. வேட்பாளர்களுக்கு ஒரு வாய்ப்பு அளியுங்கள்: ஜி.கே.மணி வேண்டுகோள்

சேலம்:

        உள்ளாட்சியில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் நேர்மையாக சேவை செய்ய பயிற்சியளித்து அனுப்புவோம். உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க.வுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று மாநில தலைவர் ஜி.கே.மணி வேண்டுகோள் விடுத்து உள்ளார். 
இது தொடர்பாக மாநில தலைவர் ஜி.கே.மணி  வெளியிட்டு உள்ள அறிக்கை:

           தற்போது நடைபெற உள்ள
தேர்தல் நாடாளுமன்ற, சட்டமன்ற பொது தேர்தல் அல்ல. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான தேர்தலும் அல்ல. பொதுமக்களின் அடிப்படை தேவைகளை, அன்றாட பிரச்சினைகளை நிறைவேறுவதற்கு உரிய தேர்தல். மத்திய ஆட்சி, மாநில ஆட்சி ஆகியவற்றை போல் உள்ளாட்சி ஒரு அரசாங்க தகுதியுடன் கூடுதல் அதிகாரம், தேவையான நிதி ஆதாரங்களுடன் செயல்படும் நிர்வாக அமைப்பாக இருக்க வேண்டும். 
            மத்திய அரசு ஒரு அடுக்கு, மாநில அரசு ஒரு அடுக்கு, உள்ளாட்சி அரசு ஒரு அடுக்கு என்ற மூன்று அடுக்கு அரசு என்ற நிலை உருவானால்தான் உள்ளாட்சியை நல்லாட்சியாக அதிக அதிகாரங்களுடன் போதுமான அளவு நிதி ஆதாரங்களுடன் நிர்வாகம் செய்ய முடியும். அதற்காக குரல் கொடுத்து போராடி வரும் கட்சிதான் பாட்டாளி மக்கள் கட்சி. உள்ளாட்சியில் வெற்றி பெறும் பா.ம.க. பிரதிநிதிகளுக்கு தைலாபுரம் தோட்டம் பா.ம.க. அரசியல் பயிலரங்கத்தில் தலைமைப்பண்புகள், ஆளுமை பண்புகள், குழு இயக்கவியல், சாதனையாளர் என்பது போன்ற தலைப்புகளில் பயிற்சி கொடுக்கப்படும். 
           சுருக்கமாக சொன்னால் இது என் நாடு, என் நாட்டு மக்கள், என் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் என்னால் இயன்ற அளவு சேவை நோக்கத்துடன், அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என்று பயிற்சி கொடுத்து பொறுப்பேற்க செய்வோம்.   பா.ம.க. உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்காமல் உண்மையாகவும், நேர்மையாகவும் சேவை செய்யவும் பயிற்சியளித்து அனுப்புவோம். எனவே கட்சி வித்தியாசம் பாராமல், உள்ளாட்சி தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு வாய்ப்பினை தாருங்கள்.
             ஒரு மாற்றத்தை கொடுங்கள்.  விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், வியாபாரிகள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள், படித்தவர்கள், பண்பாளர்கள், தொழில்முனைவோர் என எல்லா தரப்பினரும் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் அனைத்து பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கொடுங்கள்.

          மாம்பழம் சின்னத்தில் வாக்களியுங்கள். வெற்றி பெற செய்யுங்கள். உள்ளாட்சியில் பா.ம.க.வுக்கு ஒரு வாய்ப்பினை தாருங்கள் என அனைத்து வாக்காளர்களையும் பணிவுடன் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அவர் கூறி உள்ளார்.   

பா.ம.க. நிர்வாகிகள் சென்னை கொளத்தூர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி மகளிரணி சாந்தி பொன்னுரங்கம் நீக்கம்

சென்னை:

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிவிப்பில், `
 
              `பா.ம.க.வின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்த சென்னை கொளத்தூர் பகுதி ஜி.ஆர்.ரவிச்சந்திரன், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதி மகளிரணி சாந்தி பொன்னுரங்கம் ஆகிய இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பு களிலிருந்தும் நீக்கப்படுகிறார்கள்'' என்று கூறியுள்ளார்.

உள்ளாட்சி மன்ற தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் : பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மதுரையில் பேட்டி

 http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/41d3211b-2d8e-4fa7-a4fa-60e506cfaaf7_S_secvpf.gif
 
மதுரை:

            உள்ளாட்சி மன்ற தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடும் என்றும், தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.   பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று  மதுரை சென்றார் .
 
 
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அளித்த பேட்டி  
 
            தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி இரவு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியிட்டதை பார்க்கும்போது அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வெளியிடப்பட்டதாக தெரிகிறது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் முழுமையான பட்டியல் வெளியிடாத நிலையில் இன்று வேட்பு மனுதாக்கல் செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. அறிவிப்பு வந்து 14 மணி நேரத்தில் வேட்பு மனுதாக்கல் செய்யசொல்வது தமிழகத்தில் இதுதான் முதல் முறையாகவும்.

             இடஒதுக்கீடு பட்டியலை முன்கூட்டியே அ.தி.மு.க.வுக்கு கொடுத்து விட்டு அத்தனை இடங்ளிலும் வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க. அறிவித்தபிறகு தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது.   தேர்தல் தேதி அறிவித்த பிறகு ஒரு வாரத்திற்கு பிறகுதான் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று இருக்கிறது. ஆனால் இப்போது அறிவித்து இருப்பது தேர்தல் ஜனநாயகத்துக்கு எதிரானது ஆகும். இதன் மூலம் தேர்தல் எந்த அளவுக்கு நியாயமாக நடக்கும் என்பது தெரியவில்லை இந்த உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும். வேட்பு மனு தாக்கலை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும். அப்போதுதான் அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டி யலை தயாரிக்க நேரம் கிடைக்கும்.

              தமிழ்நாட்டில் அரசியல் தலையீடு காரணமாக காவல்துறை பெரும்பான்மையை இழந்து வருகிறது. இந்த துறை அரசியல் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக செயல்படக் கூடிய அமைப்பாக திகழ வேண்டும். சில போலீஸ் அதிகாரிகள் பொறுப்பற்ற நடவடிக்கையால்தான் பரமக்குடி துப்பாக்கி சூட்டில் 7 பேர் பலியானார்கள். நீதி விசாரணை என்ற பெயரால் துப்பாக்கி சூட்டிற்கு காரணமான அதிகாரிகளை பணி நீக்கம் செய்து அவர்கள் மீது கடுமையான வழக்குப்போட அரசு தயங்கக்கூடாது. பரமக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். அங்கு போடப்பட்டுள்ள பொய் வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற வேண்டும். இப்படிப்பட்ட அடக்குமுறையை போலீசார் கைவிட வேண்டும்.

               கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடவலியுறுத்தி அப்பகுதி மக்கள் 11 நாட்கள் உண்ணாவிரம் நடத்தியதில் முதல்கட்ட வெற்றிகிடைத்துள்ளது. அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என்பது பா.ம.க.வின் கொள்கையாகும். தமிழ் நாட்டில் ஆசிரியர் இட மாறுதல் கவுன்சிலிங்கில் குளறுபடிகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 
 
            பெரியாறு அணை பிரச்சினையில் அ.தி.மு.க. வின் நிலை என்ன? உச்சநீதி மன்றம் என்ன கூறி இருக்கிறது என்பதை விளக்க வேண்டும்.   வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடும். யாருடனும் கூட்டணி இல்லை. ஒரு வாரத்தில் பா.ம.க. முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தி.மு.க. கூட்டணியில் நாங்கள் இருந்தபோது குறைகளை சுட்டிக்காட்டியதால் வெளியேற்றப்பட்டோம். தமிழ் நாட்டில் மக்கள் பிரச்சினைக்காக பா.ம.க.வும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் சேர்ந்து போராடும். இவ்வாறு அவர் கூறி னார்.

             பேட்டியின்போது கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், துணைப்பொதுச்செயலாளர்கள் ரமேஷ், செந்தில்வேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி செப்டம்பர் 19ல் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம்

சென்னை:

பாமக தலைவர் கோ. க. மணி வெளியிட்ட அறிக்கை:

            கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி 127 பேர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும். இதை வலியுறுத்தி பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் செப்டம்பர் 19-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.

கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி சென்னையில் மிகப்பெரிய போராட்டம்: ஜி.கே.மணி



http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/a1d4c7fa-bd0d-473b-a234-cedabe57de5f_S_secvpf.gif             
 
 
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணு உலையை கண்டித்தும், அதனால் கடற்கரையோர கிராம மக்களுக்கு பாதிப்பு இருக்கிறது என்று கூறியும் 20 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இடிந்தகரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் பாதிரியார், கன்னியாஸ்திரிகள் உள்பட 127 பேர் மற்றும் மைக்கேல் ராயப்பன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.


             போராட்டத்துக்கு அனைத்து கட்சியினர், வியாபாரிகள் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். உண்ணாவிரத போராட்டம் 6 வது நாளாக நேற்றும் நீடித்தது. இதில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

நேற்று நடந்த உண்ணாவிரத போராட்டத்தின்போது பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு, கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி பேசினார். 

அப்போது பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி பேசியது:

              1988 ம் ஆண்டு கடற்கரையோர கிராமங்களில் அணு உலை வேண்டாம் என்று பாட்டாளி மக்கள் கட்சிதான் போராட்டம் நடத்தியது. அன்று இந்த பகுதி மக்களிடையே விழிப்புணர்வு இல்லை. இன்று விழிப்புணர்வு ஏற்பட்டு போராட்டம் நடத்துகிறார்கள். நீங்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டு விட்டு, வாருங்கள், பெரிய அளவிலான போராட்டங்களை நடத்துவோம். இங்கு கூடியிருக்கிறவர்களில் அதிகமானவர்கள் பெண்கள் உள்ளனர். பெண்கள் சக்தி மிகப்பெரிய சக்தி. எனவே இந்த போராட்டம் வெற்றி பெற்று விடும்.


              மாணவர்கள் நடத்திய போராட்டம் தோல்வியில் முடிந்ததாக வரலாறு இல்லை. உங்களது போராட்டத்தை மாணவர் போராட்டமாக மாற்றுங்கள். சென்னைக்கு சென்ற பிறகு அய்யா மருத்துவரிடம் பேசி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அணு உலையை மூட வலியுறுத்தி சென்னையில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம். இவ்வாறு ஜி.கே.மணி பேசினார்.

செப்டம்பர் 17 வன்னிய இட ஒதுக்கீடு தியாகிகள் தினம்: மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்த ஜி.கே.மணி வேண்டுகோள்

பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

                  இடஒதுக்கீடு கோரி ஒருநாள் சாலை மறியல் போராட்டம், ஒருநாள் இரயில் மறியல் போராட்டம், நூற்றுக்கும் மேற்பட்ட மாநாடுகள், பேரணிகள், பொதுக்கூட்டங்கள் போன்றவை நடத்தப்பட்டன. அதன் நிறைவாக 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி தந்தை பெரியாரின் பிறந்த நாளில் தொடங்கி ஒருவாரத்திற்கு தொடர் சாலை மறியல்  போராட்டம் நடத்தப்பட்டது.

              அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற 21 பேரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர். ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட் டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வாறு 7 நாள் சாலை மறியல் போராட்டத்தில் 21 உயிர்களை பலி கொடுத்து ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்டோர் சிறை கொடுமைகளை அனுபவித்து 107 சமுதாயத்தினருக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீடு பெறப்பட்டது தமிழக வரலாற்றில் மிகப்பெரிய சகாப்தம்.

             தமிழக வரலாற்றில் மறக்க முடியாத இந்த இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர்நீத்த 21 தியாகிகளின் நினைவு நாள் நாளை மறுநாள் செப்டம்பர் 17ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.  இடஒதுக்கீட்டு போராட்ட தியாகிகளின் நினைவு நாளை தமிழகம் முழுவதும் உள்ள நமது இயக்கத்தைச் சேர்ந்த அனைவரும் தங்களது வீடுகளில் கடைப்பிடிக்க வேண்டும். மெழுகுவர்த்தி ஏற்றி தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்த வேண்டும். ஆங்காங்கே மெழுகுவர்த்தி ஊர்வலங்களும், பிற நிகழ்ச்சிகளும் நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜி.கே.மணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

சேலத்தில் பா.ம.க. சார்பில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

சேலம்:

           ராஜீவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 3 பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி பாமக சார்பில் சேலத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

           சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி தலைமை வகித்தார்.

போராட்டத்தில் தலைவர் ஜி.கே.மணி பேசும்போது, 

             3 பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள், கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பல்வேறு அமைப்புகள், மாணவர்கள், வழக்குரைஞர்கள் என பலதரப்பட்டவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மூவருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை உயர் நீதிமன்றம் 8 வாரத்துக்கு தடை செய்துள்ளது. இதன் பிறகு என்ன ஆகும் என்று தெரியவில்லை. ஒருவேளை மீண்டும் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டால் அதை எதிர்த்து மீண்டும் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். 

           இதற்கிடையே வரும் 14-ம் தேதி திருச்சியில் தமிழ் அமைப்புகளின் சார்பில் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி மாநாடு நடத்த உள்ளோம். இதில் ராமதாஸ்  கலந்து கொள்ள உள்ளனர் என்றார்.  போராட்டத்தில் மூவரின் தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

காஞ்சிபுரத்தில் செங்கொடியின் இறுதிநிகழ்வு - வீடியோ காட்சிகள்

தஞ்சை மத்திய மாவட்ட பா.ம.க.,தலைவர் தமிழ்நேசன் நீக்கம்: ஜி.கே.மணிஅறிவிப்பு

பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கை:

             பா.ம.க.,வின் தஞ்சை மத்திய மாவட்ட தலைவர் தமிழ்நேசன், கட்சி கொள்கைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி, சுயநல நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார். இதன் காரணமாக அவர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து இன்று (நேற்று) முதல் நீக்கப்படுகிறார். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோரின் ஒப்புதலுடன் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்ட பா.ம.க.பொதுக்குழு கூட்டம்

திருவண்ணாமலை:

          ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலையில் இன்று நடந்தது. மாநில துணை பொதுச்செயலாளர் எதிரொலி மணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாண்டியன், ஜானகிராமன், முன்னிலை வகித்தனர். 
 
இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியது:-

           தமிழகம் முழுவதும் பா.ம.க. சார்பில் டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கும் போராட்டம் வெகு விரைவில் அறிவிக்கப்படும்.   திருவண்ணாமலை நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. வருகிற உள்ளாட்சி தேர்தலில் இங்கு பா.ம.க. தனித்து போட்டியிடும். இதற்காக ஒரு குழு அமைக்கப்படும். குழு தேர்ந்தெடுப்பவர்கள் போட்டியிடுவார்கள் அவர்களை நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். வருங்காலத்தில் பா.ம.க. தனி பெரும் கட்சியாக வளர்ச்சி பெறும்.  இவ்வாறு அவர் கூறினார். பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரிகள் பொன்னுசாமி, வேலு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பாமக சார்பில் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தக் கோரி அகஸ்ட் 2ம் தேதி ஆர்ப்பாட்டம்

பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
             தமிழ்நாட்டில் சமச்சீர்க் கல்வித் திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டும் என்று முதன் முதலில் குரல் கொடுத்ததும் போராடியதும் பாமகதான். பாமகவின் முயற்சியால்தான் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு சமச்சீர்க் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. நடப்பாண்டில் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை சமச்சீர்க் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பெற்றோரும் மாணவர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
            ஆனால், புதிய அரசு பொறுப்பேற்றவுடன் சமச்சீர்க் கல்வியை நடைமுறைப்படுத்தாததுடன் புத்தகங்களும் வழங்கப்படாததால் கடந்த 2 மாதங்களாக வகுப்பறைகளில் பாடங்கள் நடத்தப்படவில்லை. பருவத்தேர்வும் நடைபெறவில்லை. அடுத்த ஒரு மாதத்தில் காலாண்டு தேர்வு நடத்தப்படவேண்டும். ஆனால், பாடங்கள் நடத்தப்படாததால் மாணவ, மாணவியர் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
            ஆசிரியர்களிடையேயும் பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. பெற்றோர்கள் மிகுந்த மனவேதனைக்குள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் கல்வித்துறையில் இப்படிப்பட்டதொருநிலை இதுவரை ஏற்பட்டதில்லை. தமிழகம் முழுவதும் மாணவர்களும், பெற்றோர்களும் ஆங்காங்கே போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
 
           எனவே தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் சமச்சீர்க் கல்வித் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாமக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலங்கள் முன்பாகவும், வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாகவும் வரும் 2.8.2011 செவ்வாய்க்கிழமை அன்று காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்ட அறப்போராட்டம் நடைபெறவுள்ளது. இவ்வாறு ஜி.கே.மணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் கோ.க. மணி தலைமையில் நடைபெற்றது

       http://www.nakkheeeran.com/UltimateEditorInclude/UserFiles/a/pmk.jpg


http://www.dinamani.com/Images/article/2011/7/28/ramadoss.jpg
 
          
 http://www.makkalmurasu.com/wp-content/uploads/2011/07/ramadoss1.jpg

 http://www.dailythanthi.com/images/news/20110728/First28.jpg

        பாமக பொதுக்குழுக் கூட்டம் பாமக தலைவர் கோ.க. மணி தலைமையில் சென்னையில் நேற்று (ஜுலை 27) நடைபெற்றது. இதில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முன்னிலை விகித்தார். சின்ன அய்யா  மருத்துவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வன்னியர் சங்கத் தலைவரும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினருமான மாவீரன் செ.குரு மற்றும்  மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

பெருந்தலைவர் காமராஜர் 109-வதுபிறந்தநாள்: பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

 http://www.dailythanthi.com/images/news/20110716/all.jpg


            

             காமராஜர் பிறந்தநாளையொட்டி அண்ணாசாலை ஜிம்கானா கிளப் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு   பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி  மாலை அணிவித்தார்.

       சத்திய மூர்த்தி பவனில் காமராஜர் உருவப்படத்துக்கு தங்கபாலு தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து 100 ஏழைகளுக்கு இலவச வேட்டி- சேலை வழங்கப்பட்டது. இதில் வேலுத்தேவர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
 
            பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, ஏ.கே. மூர்த்தி, மண்டல தலைவர் ஜெயராமன், பா.ஜனதா பொதுச்செயலாளர் தமிழிசை சவுந்தரராஜன், மாவட்டத் தலைவர் ஜெய்சங்கர், பொதுச்செயலாளர் சிவனேசன் தொகுதி தலைவர் சக்திவேல், வேளச் சேரி தொகுதி தலைவர் ஆறுமுகராஜ், தொகுதி செயலாளர் ஸ்கேன் சவுந்த், தென் சென்னை மாவட்ட செயலாளர் திருப்புகழ் மூவேந்தர் முன்னணி கழக பொதுச்செயலாளர் இசக்கி முத்து, பிரபு, திருநாவுக்கரசு, வீரபாண்டியன், பழனியப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் உஞ்சை அரசன், இரா. செல்வம், சைதை பாலாஜி, இளவழகன், பார்வேந்தன், எஸ்.எஸ். பாலாஜி, நாகராஜ், அம்பேத் மோகன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், ஆர்.டி. சேதுராமன், ரவிக் குமார், ராஜாராம், திராவிடர் கழக பொருளாளர் கோ. சாமி துரை, கவிபூங்குன்றன், பார்வதி, தங்கமணி, மனோ ரஞ்சிதம், வெற்றி செல்வி, தலித் மக்கள் முன்னணி தலைவர் குமரி அருண் உள்பட பல்வேறு கட்சி பிரமுகர்கள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

சூலை 27ல் பா.ம.க.பொதுக்குழுக் கூட்டம்

             சட்டசபை தேர்தலுக்கு பின், பா.ம.க.,வின் முதல் பொதுக்குழுக் கூட்டம் வரும் 27ம் தேதி சென்னையில் கூடுகிறது.

பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி வெளியிட்ட அறிக்கை:

            பா.ம.க., பொதுக்குழுக் கூட்டம், வரும் 27ம் தேதி காலை 10 மணிக்கு சென்னையில் நடக்கிறது. நிறுவனர் ராமதாஸ் முன்னிலை வகிக்கிறார். அன்புமணி சிறப்புரை ஆற்றுகிறார். சட்டசபை தேர்தலுக்கு பின் நடைபெறும் முதல் பொதுக்குழுக் கூட்டம். இதற்கு முன், பா.ம.க., மாநில நிர்வாகக் குழுக் கூட்டம், மாநில நிர்வாகிகள் கூட்டம், சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது. தற்போது பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி விடுத்துள்ள அறிக்கை: சே.கு. சண்முகம், அந்தியூர் த. பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கம்

சென்னை:

பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பது:-

          பா.ம.க. கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு அவப்பெயரும், களங்கமும் ஏற்படுத்தும் வகையிலும், கட்சி விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வரும் ஈரோடு மாவட்டத்துக்குட்பட்ட பவானி வடக்கு ஒன்றிய செயலாளர் சே.கு. சண்முகம், அந்தியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் த. பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ஆகியோரின் ஆலோசனைப்படி கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் செய்யப்படுகிறார்கள். நமது இயக்கத்தை சேர்ந்தவர்கள் எவரும் இவர்களோடு எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி பேட்டி



பா.ம.க. தலைவர் மணி பேட்டி
  
           தி.மு.க.,வுடன் சுமுகமான நிலை இருந்து வருகிறது. எந்த அரசியல் கட்சியோடும், மோதும் போக்கையோ, தேவையில்லாமல் எதிர்க்கும் நிலைப்பாட்டையோ பா.ம.க., கடைபிடிப்பதில்லை. தமிழகத்தின் பிரச்னைகளின் அடிப்படையில், குரல் கொடுத்துப் போராடுவது தான் பா.ம.க.,வின் நிலை.

சென்னை மாவட்ட பா.ம.க. அமைப்பாளர் ஜெயராமன் இல்லத் திருமண விழா: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பங்கேற்ப்பு

சென்னை:
            சென்னை மாவட்ட பா.ம.க. அமைப்பாளர் ஜெயராமன் மகள் அனிதா -செந்தில்குமார் திருமணம் நேற்று  நடந்தது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திருமணத்தை நடத்தி வைத்தார். 
மணமக்களை வாழ்த்தி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியது:-


            எளிமை, மக்கள் சேவை உழைப்புக்கு எடுத்துக் காட்டாக விளங்கியவர் ஜெயராமன் இந்த தேர்தலில் உண்மை, உழைப்பு, எளிமை, தியாகம் தோற்றுப் போனது. ஏதோ ஒன்று வென்றது. மது பழக்கம் இல்லாத, வன்முறை இல்லாத, கல்வி அறிவு பெற்ற சமுதாயத்தை உருவாக்க நாம் பாடுபட்டு வருகிறோம்.  சிறு குழந்தைகள் முதல் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டுகின்றனர். நமது தேசிய விளையாட்டு ஆக்கி. பலருக்கு அது தெரிய வில்லை. எத்தனையோ விளையாட்டுகள் இருக்கும் போது கிரிக்கெட்டுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? எல்லா விளையாட்டுகளையும் பள்ளிகள் முதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.


            பெண்கள் உரிமைக்காக போராடுகிறார்கள். ஆனால் பெண்களை இழிவு படுத்தும் டி.வி.தொடர்களில் அவர்கள் மூழ்கி விடுகிறார்கள். பணக்காரர் வீட்டு குழந்தைகளும், ஏழை வீட்டு குழந்தைகளும் தரமான கல்வி கற்க வேண்டும் என்பதற்காக சமச்சீர் கல்வி வேண்டும் என்கிறோம்.  நிகர்நிலை பல்கலைக்கழ கங்களில் மாணவர்கள் இடையே போதை பழக்கம் அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் மது பழக்கத்துக்கு அடிமையாகி வருகிறார்கள். இந்த சமூக அவலங்களைகளைய வேண்டும். ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்துக்கு சொல்ல வேண்டிய கருத்துக்களை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருப்போம். மக்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.


விழாவில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியது:-


              தமிழக இளைஞர்களுக்கு இது சோதனை காலம். மது, புகை பழக்கங்களில் இருந்து இளைஞர்களை மீட்க வேண்டும். இது அரசியல் பிரச்சினை அல்ல. வாழ்க்கை பிரச்சினை, சமூக பிரச்சினை, மதுவை ஒழிக்க பாடுபடும் ஒரே கட்சி பா.ம.க. தான். இந்த தேர்தலில் பா.ம.க. தோல்வி அடையவில்லை. ஒரு சரிவு ஏற்பட்டுள்ளது. தேர்தலில் கிடைத்தது எங்களுக்கு எதிரான வாக்குகள் அல்ல. ஜி.கே.மணி குறிப்பிட்டது போல் ஒரு பெரிய சுனாமி வந்தது. அவ்வளவு தான். இதனால் எங்களுக்கு நஷ்டம் இல்லை மக்களுக்கு தான். இவ்வாறு அவர் பேசினார்.


            விழாவில் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, வேலு, குரு எம்.எல்.ஏ., திருக்கச்சூர் ஆறுமுகம், எஸ்.வி.சேகர், புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி உள்பட பலர் மணமக்களை வாழ்த்தினார்கள்.


மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் பாமக வேட்பாளர் ஜி.கே.மணி பெற்ற வாக்கு விபரம்



2011  சட்டமன்றத் தேர்தலில் பாமக வேட்பாளர் ஜி.கே.மணி பெற்ற வாக்கு விபரம்


Tamil Nadu - Mettur
Result Declared
Candidate PartyVotes
PARTHIBAN.S.R.Desiya Murpokku Dravida Kazhagam75672
MANI.G.K.Pattali Makkal Katchi73078
PADMARAJAN.(DR).K.Independent6273
PAKKIAM.(TMT) A.Independent2738
SENTHILKUMAR.R.Indiya Jananayaka Katchi2487
BALASUBRAMANIAN.P.Bharatiya Janata Party2286
PARTHIBAN.S.K.Independent1338
MANI.R.Independent1254
RANJITH.V.Independent1254
MURUGAN.P.Independent1110
PARTHIPAN.P.Independent672
PARTHEEBAN.G.Independent605
PALANI.K.Independent473
PALANISAMY.K.Independent367


பா.ம.க.தலைவர் ஜி.கே.மணி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரை சந்தித்து மனு அளித்தார்

சென்னை:
         
           வாக்கு எண்ணிக்கையின்போது புதிய முறையைக் கையாளாமல் வாக்குச் சாவடி வாரியாக எண்ண வேண்டும் என்று பாமக கோரிக்கை விடுத்துள்ளது.  
 
                பாமக தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஆர். வேலு, வழக்கறிஞர் பாலு ஆகியோர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமாரை சந்தித்து இது தொடர்பாக மனு அளித்தனர்.  
 
இது குறித்து பாமக தலைவர் ஜி.கே. மணி கூறியது: 
 
            வாக்கு எண்ணிக்கையில் புதிய முறையை கையாளப்போவதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமாரை சந்தித்து வாக்கு எண்ணிக்கை தொடர்பாக பாமக சார்பில் சில கோரிக்கைகளை வலியுறுத்தினோம்.  ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்குப் பதிவு முடிந்ததும் 17-சி என்ற படிவம் வேட்பாளர்களின் முகவர்களுக்குத் தரப்படும். அதில் மொத்த வாக்குகள், பதிவான வாக்குகள் போன்ற விவரங்கள் தேர்தல் அலுவலர், முகவர்களின் கையெழுத்துடன் இருக்கும். அதில் ஒரு படிவம் வாக்குப் பதிவு இயந்திரத்தில் வைக்கப்பட்டிருக்கும். 
 
            அந்தப் படிவத்துடன், வேட்பாளர்களின் முகவர்களிடம் இருக்கும் படிவத்தை ஒப்பிட்டு சரிபார்த்த பிறகே வாக்கு எண்ணிக்கையைத் தொடங்குவார்கள். அப்போதுதான் தவறுகளை தடுக்க முடியும்.  எனவே, புதிய முறையைப் பின்பற்றாமல் வாக்குச் சாவடி வாரியாக வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும்.  ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே அடுத்த சுற்றுக்குச் செல்ல வேண்டும். அதில் வேட்பாளர்களின் முகவர்கள் சந்தேகம் எழுப்பினால் அதற்குத் தீர்வு கண்ட பிறகே அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டும்.  வேட்பாளர்களின் தலைமை முகவர் முன்னிலையில்தான் அஞ்சல் வாக்குகளை எண்ண வேண்டும். 
 
              இது தொடர்பாக 234 தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி உறுதியளித்தார் என்றார் ஜி.கே. மணி.

கருணாநிதியுடன் பாமக நிறுவனர் ராமதாஸ் சந்திப்பு




சென்னை:

          6வது முறையாக தமிழக முதல் அமைச்சராக கலைஞர் பொறுப்பேற்பது உறுதி என, பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.



          சென்னையில் திமுக தலைவர் கலைஞரை அவரது இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.


இச்சந்திப்புக்குப் பின்னர் பேசிய ராமதாஸ்,


 
             திமுக தலைமையிலான ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். 6வது முறையாக தமிழக முதல் அமைச்சராக கலைஞர் பொறுப்பேற்பது உறுதி. இச்சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றார்.