மேட்டூர் சட்டமன்றத் தொகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மேட்டூர் சட்டமன்றத் தொகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் பாமக வேட்பாளர் ஜி.கே.மணி பெற்ற வாக்கு விபரம்



2011  சட்டமன்றத் தேர்தலில் பாமக வேட்பாளர் ஜி.கே.மணி பெற்ற வாக்கு விபரம்


Tamil Nadu - Mettur
Result Declared
Candidate PartyVotes
PARTHIBAN.S.R.Desiya Murpokku Dravida Kazhagam75672
MANI.G.K.Pattali Makkal Katchi73078
PADMARAJAN.(DR).K.Independent6273
PAKKIAM.(TMT) A.Independent2738
SENTHILKUMAR.R.Indiya Jananayaka Katchi2487
BALASUBRAMANIAN.P.Bharatiya Janata Party2286
PARTHIBAN.S.K.Independent1338
MANI.R.Independent1254
RANJITH.V.Independent1254
MURUGAN.P.Independent1110
PARTHIPAN.P.Independent672
PARTHEEBAN.G.Independent605
PALANI.K.Independent473
PALANISAMY.K.Independent367


தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்: ஜி.கே.மணி

மேட்டூர்:
 
        மேட்டூர் சட்டமன்றத் தொகுதி,   பா.ம.க. வேட்பாளரும்,  பா.ம.க. மாநில தலைவருமான ஜி.கே.மணி மேட்டூரில்பேட்டி அளித்தார்.

அப்போது மேட்டூர் தொகுதி பா.ம.க. வேட்பாளரும்,  பா.ம.க. மாநில தலைவருமான ஜி.கே.மணி கூறியது:-

            நடந்து முடிந்துள்ள தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த தேர்தலில் வாக்குப்பதிவு எண்ணிக்கை அதிகரித்து இருப்பது தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவாக அமைந்துள்ளது.    இதற்கு காரணம் முதல்-அமைச்சர் கருணாநிதியின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சி தான். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச கலர் டெலிவிஷன் பெட்டிகள், விவசாயிகளின் கடன் தள்ளுபடி, சத்துணவில் கூடுதல் முட்டைகள், கலைஞர் காப்பீட்டு திட்டம், வீடு வழங்கும் திட்டம் போன்ற ஏராளமான நலத்திட்டங்களை பொதுமக்கள் எண்ணிப்பார்த்தும், தற்போது தேர்தல் அறிக்கையில் கூறி உள்ளவற்றை கருணாநிதி கட்டாயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையுடனும் ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்து உள்ளனர்.

          இதற்கும் மேலாக தமிழ்நாட்டில் மக்கள் நலனில் அக்கறை உள்ள பலம் வாய்ந்த அரசியல் கட்சிகள் ஒரு தலைமையில் சேர்ந்து வலுவான கூட்டணி அமைத்தது. அந்த கூட்டணிக்கு டாக்டர் கலைஞர் தலைமை ஏற்ற காரணத்தாலும், கூட்டணி கட்சி தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்ட காரணத்தாலும், கருத்து வேறுபாடு இல்லாமல் செய்த பிரசாரத்தாலும் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.

           இந்த கூட்டணியில் இருந்த அனைவரும் ஒருங்கிணைந்து வெற்றி ஒன்றையே குறிக்கோள் என செயல்பட்டு இருந்தனர்.   இது போன்ற முக்கிய அம்சங்களால் இந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எனவே வரும் மே 13-ந்தேதி வாக்கு எண்ணிக்கையின் போது அதிக இடங்களை தி.மு.க. கூட்டணி பெற்று கலைஞர் 6-வது முறையாக முதல்-அமைச்சாராக பொறுப்பு ஏற்பார் என்பது உறுதியாகி விட்டது.  இதைபோன்று அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீண்டும் அமைச்சராவார். சேலம், தர்மபுரி மாவட்டங்களில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு ஜி.கே. மணி கூறினார்.

மேட்டூர் சதுரங்காடியில் பா.ம.க. வேட்பாளர் ஜி.கே. மணியை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம்

            மேட்டூர் சதுரங்காடியில் பா.ம.க. வேட்பாளர் ஜி.கே. மணியை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு ஜி.கே. மணியை ஆதரித்து பேசினார். 

அப்போதுபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியது:

               கட்சித் தலைவர் என்ற முறையில் ஒருசில கிராமங்களுக்கு ஜி.கே. மணியினால் செல்ல முடியவில்லை. கட்சிப் பணியை அதிகமாக நான் அவருக்கு கொடுத்ததால் அவரால் செல்ல முடியவில்லை. அவர் பேசும்போது என்னுடைய அனுமதியுடன் ஒவ்வொரு வாரமும் கிராமத்திற்கு சென்று மக்களை சந்திப்போம் என்று கூறினார்.

              இதற்கு என்னுடைய அனுமதியே தேவை இல்லை. அவர் வாரம் ஒவ்வொரு கிராமத்திற்கு சென்று கண்டிப்பாக மக்களை சந்திப்பார். இந்த தொகுதி கடந்த 5 ஆண்டுகளில் அமைதி பூங்காவாக  இருந்ததை அனைவரும்  அறிவீர்கள். பகைவர்களுக்கு கூட அருளும் நல்ல  நெஞ்சம் கொண்டவர் அவர். கட்சி, இனம், மதம் என்ற வேறுபாடு இன்றி அனைத்து தரப்பினர்களிடையேயும் பழகுவார்.

              யாரும் இவரை குறை சொல்ல முடியாது. எவரிடமும் ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கதாதவர். இவருடைய தொண்டு தூய்மையானதாக இருப்பது அனைவரும் அறிந்தது. ஜி.கே.மணி வெற்றியை தடுக்க முடியாது. ஆகவே எதிர்த்து நிற்பவரை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்றார்.

மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் ஜி.கே. மணி வாக்கு சேகரிப்பு

மேட்டூர்:

          மேட்டூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஜி.கே. மணி நேற்று காலை கொளத்தூரில் நடைபெற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போது ஜி.கே. மணி
பேசியது:-

                கடந்த 5 ஆண்டுகளில் மேட்டூர் தொகுதிக்கு அரசு கலைக்கல்லூரி, மேட்டூருக்கு மீண்டும் பயணிகள் ரெயில் போக்குவரத்து, மேட்டூர் புதிய அனல் மின் நிலையம், போன்ற பல நல்ல திட்டங்களை டாக்டர் கலைஞர் அரசின் உதவியுடன் நிறைவேற்றி உள்ளேன். மேலும் மேட்டூர் நகராட்சியில் பாதாள சாக்கடை, மேட்டூர் நகராட்சிக்கு 24 மணி நேரமும் தடையில்லா காவிரி குடிநீர் கிடைக்க திட்டம் தயாரிக்கப்பட்டு அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

                எனக்கு வாக்களித்து மீண்டும் மேட்டூர் தொகுதி மக்களுக்கு பணியாற்ற வாய்ப்பினை வழங்கினால் இந்த தொகுதிக்கு மேலும் பல நல திட்டங்களை செயல்படுத்துவேன் என்று பேசினார். இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து அவர் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த கண்ணாம்மூச்சி, சவேரியார்பாளையம், பூமனூர், உள்பட பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று ஓட்டு சேகரித்தார்.

2006 சட்டமன்றத் தேர்தல்: மேட்டூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. ஜி.கே.மணி ஒரு பார்வை

மேட்டூர் தொகுதியில் மீண்டும் 

 

 ஜி.கே.மணி போட்டி? 

 எடப்பாடியில் போட்டியிட பா.ம.க.வினர் கடும் முயற்சி
ஜி.கே. மணி

             பாட்டாளி மக்கள் கட்சி  தலைவரும்   தற்போது மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் ஜி.கே. மணி.  ஜி.கே. மணி. கடந்த தேர்தலில் 66250 ஓட்டுக்கள் பெற்று இருந்தார். இந்த முறையும் மேட்டூர் தொகுதியில் ஜி.கே. மணியே போட்டியிடுகிறார்.


கடந்த தேர்தலில் ஜி.கே.மணியை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களும் அவர்கள் வாங்கிய ஓட்டுகளும் விவரம்


கே.கந்தசாமி - அ.தி.மு.க-55112 
எம்.முத்துராமன் - பா.ஜ.க- 957 
கே.ஆர்.அன்பழகன் - பா.பி- 254 
எஸ்.தண்டபாணி - தே.மு.தி.க - 10921 
கே.கந்தசாமி- சுயேட்சை- 192 
பி.கந்தசாமி - சுயேட்சை- 175 
வி.கந்தசாமி - சுயேட்சை- 215
 டி.சரவணன் - சுயேட்சை-822
பத்மராஜன் - சுயேட்சை-145 
எம்.எஸ்.மணி - சுயேட்சை- 1851