கே.எஸ்.இளவழகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கே.எஸ்.இளவழகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பாமக நிறுவனர் ராமதாஸ் குடும்பத்தினருடன் ஏலகிரிமலைக்கு கோடை சுற்றுலா

             பாமக நிறுவனர் ராமதாஸ்  மற்றும்  முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் ஆகியோர் குடும்பத்தினருடன் ஓய்வெடுப்பதற்காக வேலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான ஏலகிரிமலைக்கு வந்தனர். பாமக மாநில தலைவர் ஜி.கே.மணியும் அவர்களுடன் வந்தார். பாமக நிறுவனர் ராமதாஸ் தங்கியிருக்கும் விடுதியை சுற்றிலும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

             இந்நிலையில் நேற்று பாமக வேட்பாளர்களான ஆற்காடு இளவழகன், ஜோலார்பேட்டை பொன்னுசாமி, பர்கூர் டி.கே.ராஜா ஆகியோர் ராமதாசை சந்தித்தனர். அவர்களுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அணைக்கட்டு பாமக வேட்பாளர் கலையரசு உட்பட பிற வேட்பாளர்களும் ராமதாசை சந்திக்க உள்ளனர்.

             கட்சி நிர்வாகிகள் திரண்டு  சென்று  மருத்துவர்  அய்யாவை சந்திக்க  திரண்டனர். மருத்துவர்  அய்யா குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க வந்துள்ளதால் கட்சியினர் யாரும் சந்திக்க இது தக்க சமயம் இல்லை .என்று  ராமதாஸ் கூறினார். ஆனாலும் நிர்வாகிகள் பலர் ஏலகிரி மலையிலேயே வேறு விடுதிகளில் தங்கி அய்யாவை சந்திக்க உள்ளனர். ராமதாஸ் மற்றும் குடும்பத்தினர் வருகிற 7ம் தேதி வரை ஏலகிரியில் தங்கி இருப்பார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

ஆற்காடு சட்டமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் இளவழகனை ஆதரித்து டாக்டர் ராமதாஸ் பிரச்சாரம்

              ராணிப்பேட்டை தி.மு.க. வேட்பாளர் காந்தி, ஆற்காடு பா.ம.க. வேட்பாளர் இளவழகன், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் கலையரசு ஆகியோரை ஆதரித்து பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் பிரசாரம் செய்தார்.
 
இதனையடுத்து விருபாட்சிபுரத்தில் நடந்த கூட்டத்தில் ராமதாஸ் கலந்துகொண்டு பேசுகையில்,

                மாற்று அணி என்பது நாளுக்கு நாள் கரைந்து கொண்டு காணாமல் போய் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் உள்ள ஒரு நடிகரின் தள்ளாடிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசுகையில் அ.தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளர் ஜெயிலில் இருக்கிறார் என பேசியுள்ளார்.

            அதற்கு அ.தி.மு.க.வினரே எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இது ஒருகட்சி, இதுக்கு ஒரு கூட்டணி. கலைஞர் வீட்டிற்கு சென்று முதன் முதலாக நான் தான் கூட்டணி அமைத்தேன். ஒரு மணி நேரத்தில் 31 தொகுதி என முடிவாகி இருவரும் கையெழுத்திட்டோம். காங்கிரஸ் கட்சிக்காக ஒரு தொகுதியை தியாகம் செய்தோம். தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. மூன்றாவது பெரிய கட்சியாக பலம் பொருந்திய கூட்டணியாக திகழ்கிறது என்றார்.

பொறுப்பில் இருந்தும் செயல்படாதவர்கள் மீது நடவடிக்கை: பாமகவினருக்கு அன்புமணி எச்சரிக்கை


வேலூர்:

          பாமகவில் பொறுப்பில் இருந்தும் செயல்படாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அன்புமணி ராமதாஸ் எச்சரித்தார். வேலூர் ஒருங்கிணைந்த கிழக்கு மாவட்ட பாமக பொதுக் குழுக் கூட்டம் ராணிப்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

இதில், பாமக மாநில இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் பேசியது: 

            அனைத்து சமுதாய மக்களுக்காகவும் பாடுபடும் கட்சி பாமக. பொதுத் தேர்தல் வர உள்ள நிலையில், கட்சிக்காக உழைப்பவர்களுக்கு உயர்ந்த பொறுப்புகள் வழங்கப்படும். கட்சிக்காக அன்று உழைத்தவர்கள் இன்று அமைதியாக கிராமங்களில் முடங்கிக் கிடக்கின்றனர். அவர்களை அழைத்து தலைமை வகிக்கச் செய்து நிகழ்ச்சிகளை நடத்துங்கள். பொறுப்பில் இருந்தும் செயல்படாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 

            பென்னாகரம் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் நாம் தோற்கடிக்கப்பட்டோம்.  இது ஜனநாயகப் படுகொலை செய்யப்பட்ட தேர்தல். நாம் பணம் தராமல் இரண்டாவது இடம் பெற்றோம். இனி பென்னாகரம் தேர்தல் பார்முலாவை பயன்படுத்த உள்ளோம். விஞ்ஞான ரீதியில் அரசியல் நடத்த உள்ளோம். இளைஞர்களை ஊக்குவிக்க உள்ளோம். வாலாஜா ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று சென்றதால் ரயில்வே துறைக்கு ரூ.5 கோடி வரை லாபம் கிடைத்தது. தற்போது எந்த ரயிலும் நிற்பதில்லையாம். இதுகுறித்து 4 முறை மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனிடம் கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று என்னிடம் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர். 

             தன்னால் முடியாது என்று அமைச்சர் சொல்லட்டும். நான் நிறுத்திக் காட்டுக்கிறேன். பாமக 7 இடங்களில் தோற்றதும் அழிந்து விட்டது, ஒழிந்து விட்டது என்று பலர் கூறினர். பாமகவை யாராலும் அழிக்கவோ, ஒழிக்கவோ முடியாது. பாமக இல்லாமல் தமிழகத்தில் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது. வரும் 28-ம் தேதி நடைபெற உள்ள இடஒதுக்கீடு போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். இதற்கும் அரசு செவிசாய்க்கவில்லை என்றால் தலைவர் ராமதாஸ் ஒப்புதலோடு சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடுவோம். கூட்டணி பற்றி யாரும் கவலைகொள்ளத் தேவையில்லை. தலைவர் ராமதாஸ் பார்த்துக் கொள்வார். பாமக இல்லாமல் ஆட்சிக்கு யாரும் வரமுடியாது என்பதை உணர்த்த வேண்டும் என்றார் அவர். 

முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.வேலு: 

              பாமக புத்துணர்வு பெற்று செயல்பட்டு வருகிறது. எதிர்கட்சிகளை எதிர்கொள்ளத் தயாராகி உள்ளது.  52 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக பாமக விளங்குகிறது. இளைஞர் பட்டாளம் அதிகம் உள்ள ஒரே கட்சி பாமகதான் என்றார் அவர். 

பாமக தலைவர் கோ.க.மணி: 

                  நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால் பாமகதான் வெற்றி பெறும். தமிழகத்தில் சுகாதாரத்துறை தன்னிறைவு பெற பாடுபட்டவர் அன்புமணி. தமிழகத்தில் விரைவில் பாமக ஆட்சி அமையும். சட்டப் பேரவைத் தேர்தல் வர உள்ளது. 

               அதற்குள்ளாக கிராமக் கிளைகளை வலுப்படுத்த வேண்டும் என்றார் அவர்.கூட்டத்துக்கு ஆர்க்காடு எம்.எல்.ஏ. கே.எஸ்.இளவழகன் தலைமை வகித்தார். இதேபோல, திருப்பத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் எம்.எல்.ஏ. டி.கே.ராஜா, திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் ஜி.பொன்னுசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.