திருவள்ளூர் சட்டசபை தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் கிளை தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்களுக்கு பயிற்சி முகாம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு மணவாளநகரில் உள்ள கே.இ.ஜெயலட்சுமி திருமண மண்டபத்தில் நடக்கிறது.
இந்த பயிற்சி முகாமில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பயிற்சி அளிக்கிறார். இதில் முன்னாள் அமைச்சர் வேலு, கோ.க.மணி எம்.எல்.ஏ., மாநில துணை பொது செயலாளர் சிவ.கோவிந்தராசு உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் பாலா என்ற பாலயோகி செய்து வருகிறார்.