சௌம்யா அன்புமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சௌம்யா அன்புமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பசுமைத் தாயகம் சார்பில் சமச்சீர்க் கல்வி: அடுத்தது என்ன? என்ற தலைப்பில் கருத்தரங்கம்: சௌமியா அன்புமணி தலைமை தாங்குகிறார்

பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

             சமச்சீர்க் கல்வி: அடுத்தது என்ன? என்ற தலைப்பில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் சென்னையில் 25.08.2011 அன்று சென்னை தியாகராயர் நகரிலுள்ள சர்.பிட்டிதியாகராயர் அரங்கில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

             பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி தலைமையில் நடைபெறும் இந்த கருத்தரங்கில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் மற்றும் பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்.  இக்கருத்தரங்கில் உண்மையான சமச்சீர்க் கல்வியை எட்ட ஆக்கப்பூர்வமான பல செயல் திட்டங்கள் முன்வைக்கப்பட உள்ளன என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

பூமி வெப்பமயமாதலைத் தடுப்பது தனி மனிதக் கடமை: சௌமியா அன்புமணி

சென்னை:
                   பூமி வெப்பமயமாதலைத் தடுப்பது ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உள்ள தலையாய கடமையாகும் என பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி கூறினார்.  புவி வெப்பம் அதிகரிப்பதைத் தடுக்க பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பாக 350 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  
இதில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி பேசியது: 
                  புவி வேகமாக வெப்பமடைந்து வருவதன் விளைவாக ஏற்படும் காலநிலை மாற்றத்தால் மிகப் பெரிய ஆபத்துகள் உண்டாகும். இந்த நிலை நீடிக்குமேயானால் எதிர் காலங்களில் மனித சமுதாயமே அழியக்கூடும் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதிக அளவில் வெளியேற்றப்படும் கரியமில வாயுவே இதற்கு முக்கிய காரணமாகும்.  இதன் காரணமாக, வளிமண்டலத்தில் கரியமிலவாயுவின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த அளவைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.  
                மரங்களை அதிக அளவு வளர்ப்பதன் மூலமாகவே எதிர் வரும் பேரழிவிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.  பூமி வெப்பமடைவதற்கு அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளே காரணமாக இருக்கிறது. தனி நபர் அளவில் பார்க்கும் போது மற்ற நாடுகளை விட பத்து மடங்கு அதிகமான கரியமில வாயுவை வளர்ந்த நாடுகள் வெளியிடுகின்றன. ஆனால், இந்தியா உள்ளிட்ட நாடுகளே இதனால் அதிகமாக பாதிப்படுகின்றன.  பூமி வெப்படைதலைத் தடுப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் ஐ.நா. சபையின் காலநிலை மாற்றப் பிரிவினால் நடத்தப்பட்டு வருகின்றது. 
                     வரும் டிசம்பர் மாதம் மெக்சிகோவில் நடைபெறும் மாநாட்டில் இறுதி ஒப்பந்தம் எட்டப்பட இருக்கிறது. இது இந்தப் பிரச்னையை தீர்க்க நல்ல வாய்ப்பாக அமையும்.  பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு இதற்கு தீர்வு காண வேண்டும. பூமி வெப்பமயமாதலைத் தடுப்பது ஒவ்வொரு தனி மனிதனின் தலையாய கடமையாகும் என்றார் அவர்.  சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பாக  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மரம் நடும் விழாவில் கலந்து கொண்ட அந்த அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி.

"இயற்கை அழிவுக்கு மனிதனின் சுயநலமே காரணம்': ராமதாஸ்


பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நாளைய சென்னை - ஆபத்துகளும், தீர்வுகளும் என்ற கண்காட்சியை தொடங்கி வைத்தார்

சென்னை:
 
       இயற்கை அழிக்கப்படுவதற்கு மனிதனின் சுயநலமே காரணம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.
 
பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "நாளைய சென்னை - ஆபத்துகளும், தீர்வுகளும்' என்ற கண்காட்சியை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து அவர் பேசியது:
 
             இன்றைய சென்னை மாநகரம் எப்படி உள்ளது நாளைய சென்னை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இயற்கை நமக்கு அளித்த கொடைகளான நிலம், நீர், காற்று ஆகியவற்றை மனிதர்கள் அழித்து வருகிறார்கள். சென்னை மாநகரம் மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியற்ற நகரமாக மாறிவிட்டது. இதனை உச்ச நீதிமன்ற நீதிபதிகளே வேதனையுடன் குறிப்பிட்டுள்ளனர்.இன்று மனிதன் இயற்கைக்கு மாறான வாழ்க்கை வாழ தொடங்கியுள்ளான். 
 
            உணவு பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட எல்லாமே மாறிவிட்டன. பாரம்பரியமான கம்பு, சோளம், கேழ்வரகு, தினை, சாமை போன்ற உணவு வகைகளை யாரும் உண்பதில்லை. பொறித்த, வறுத்த, பாட்டிலில் அடைக்கப்பட்ட உணவுகளையே அதிகமாக சாப்பிடுகிறார்கள். இதன்மூலம் மனிதன் தனது வாழ்நாளைச் சுருக்கிக் கொண்டுவிட்டான்.உடல் பருமன் இன்று மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அதனால் நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட ஏராளமான நோய்கள் ஏற்படுகின்றன. போக்குவரத்து நெரிசல், மக்காத பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு, சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவற்றினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் இந்தக் கண்காட்சியில் விளக்கப்பட்டுள்ளன.
 
             சென்னை மாநகரில் இருந்த ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட ஏராளமான நீர்நிலைகள் காணாமல் போய்விட்டன. அதனால் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இதற்கான தீர்வுகளும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் ராமதாஸ்.பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌம்யா அன்புமணி, பொதுச்செயலாளர் அருள், காங்கிரஸ் எம்.பி. கிருஷ்ணசாமி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
 
                  சென்னை அசோக் பில்லர் அருகில் உள்ள அறிஞர் அண்ணா சமூகக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 25) வரை மூன்று நாள்களுக்கு காலை 10 முதல் இரவு 8 மணி வரை அக்கண்காட்சி நடைபெறவுள்ளது.

புதுப் பொலிவுடன் மக்கள் தொலைக்காட்சி

         மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு புதுப் பொலிவு தர நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. தற்போதைய பாணியை மாற்றி சில நிகழ்ச்சிகளை களம் இறக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். ஈரானிய சினிமாக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதைப் போல் சில தமிழ் சினிமாக்களையும் ஒளிபரப்பும் திட்டம் பரிசீலிக்கப்படுகிறதாம். இந்த ஆப்ரேஷனுக்கு தலைமை சௌம்யா அன்புமணி