பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிகையை விடியோவில் பதிவு செய்ய வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

சென்னை:

           உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிகையை விடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக வியாழக்கிழமை  பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை: 

             உள்ளாட்சித் தேர்தல்களை துணை ராணுவப் பாதுகாப்புடன் நடத்த வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தின. இது பற்றிய முடிவை மாநிலத் தேர்தல் ஆணையம் இதுவரை எடுக்கவில்லை.  உள்ளாட்சித் தேர்தல் பணிகளைக் கண்காணிக்க 12 மாநிலங்களின் தேர்தல் ஆணையர்கள் பார்வையாளர்களாக அமர்த்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை ஒரு தேர்தல் பார்வையாளர்கூட வெளி மாநிலத்திலிருந்து வரவில்லை. 

             உள்ளாட்சித் தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது. எனவே, முறைகேடுகள் நடப்பதைத் தடுக்க வாக்கு எண்ணிக்கையை விடியோ பதிவு செய்ய வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பார்வையாளர்களாக அமர்த்த வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர்களை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரம்

          தமிழ்நாட்டில் வரும் 17 மற்றும் 19 ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்,  இன்று (03-10-2011) முதல் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். இந்தப் பரப்பரை கூட்டங்களில் பாமக தலைவர் ஜி.கே.மணியும் பங்கேற்கிறார்.

10 ந்தேதி வரையிலான பரப்புரை அட்டவணை:


பரப்புரை பயணத்திட்ட விவரம்

03-10-2011 – மாலை 6 மணி  சென்னை தியாகராயர் நகர் பொதுக்கூட்டம்

04-10-2011 – மாலை 4.00 மணி  பல்லாவரம்
                    மாலை 5.00 மணி  தாம்பரம்
                    மாலை 6.00 மணி  மறைமலை நகர்
                    இரவு  7.15  மணி  செங்கல்பட்டு
                    இரவு  8.15  மணி  மதுராந்தகம்
                   இரவு  9.15  மணி  அச்சிறுபாக்கம்

06-10-2011 – மாலை 4.00 மணி  வந்தவாசி
                    மாலை 5.30 மணி  சேத்துப்பட்டு
                    மாலை 6.45 மணி  போளுர்
                    இரவு  8.00  மணி  கண்ணமங்கலம்
                    இரவு  9.15  மணி  வேலூர்

07-10-2011 – மாலை 4.00 மணி  வாலாஜா
                    மாலை 4.45 மணி  அம்மூர்
                    மாலை 5.30 மணி  இராணிப்பேட்டை
                    மாலை  6.15  மணி  ஆர்க்காடு
                    இரவு  7.30  மணி  ஆம்பூர்
                    இரவு  8.15  மணி  வாணியம்பாடி
                    இரவு 9.00  மணி திருப்பத்தூர்

08-10-2011 – மாலை 4.00 மணி  ஓசூர்
                    மாலை 5.45 மணி  கிருஷ்ணகிரி
                    மாலை 6.15 மணி  காரிமங்கலம்
                    இரவு  7.30  மணி  கம்பை நல்லூர்
                   இரவு  8.15  மணி  கடத்தூர்
                   இரவு  9.15  மணி  தருமபுரி
09-10-2011 – மாலை 4.00 மணி  ஓமலூர்
                    மாலை 5.30 மணி  சூரமங்கலம்
                    இரவு  7.00  மணி  கொண்ட்லாம்பட்டி
                    இரவு  8.00  மணி  அம்மாபேட்டை
                    இரவு  9.00  மணி  அஸ்தம்பட்டி

10-10-2011 – மாலை 4.00 மணி  எடப்பாடி
                   மாலை 6.00 மணி  மேட்டூர்
                   மாலை 6.00 மணி  மறைமலை நகர்
                   இரவு  8.00  மணி  பவானி
                   இரவு  9.00  மணி  ஈரோடு
மேற்கண்ட தகவல் பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள குறிப்பில் உள்ளது.


11ந்தேதி முதல் மேற்கொள்ளவுள்ளச் பரப்புரை பயணம் குறித்த விவரம் பினனர் அறிவிக்கப்படும்.


திருச்சி மேற்கு தொகுதி இடைத் தேர்தல் முடிவுகளை உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவிற்கு பிறகு வெளியிட வேண்டும்: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்


பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

            தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசிக்காமல் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக அறிவித்ததால், தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

             வேட்பு மனு தாக்கல் தொடங்குவதற்கு 14 மணி நேரம் முன்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டதால் அ.தி. மு.க.வைத் தவிர எந்த அரசியல் கட்சியாலும் இதுவரை வேட்பாளர் பட்டியலை முழுமையாக வெளியிடமுடியவில்லை. அதுமட்டுமின்றி திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான அக்டோபர் 17-ஆம் தேதி உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் குழப்பம் மேலும் அதிகரித்துள்ளது.

                முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கிய ஒருசில மணி நேரங்களிலேயே திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு விடும் என்பதால் அது வாக்காளர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் திருச்சி இடைத் தேர்தலில் வெற்றி பெறும் கட்சிக்கு சாதகமாக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அமைய வாய்ப்பிருக்கிறது. அதுமட்டுமின்றி, உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நேரத்தில், திருச்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி, வெற்றியை கொண்டாடும் போது அது அரசியல் கட்சிகளுக்கிடையிலான மோதலாக மாறும் வாய்ப்பும் உள்ளது.

           திருச்சி மேற்கு தொகுதி இடைத் தேர்தலுக்கான அட்டவணை முன் கூட்டியே வெளியிடப்பட்டு விட்ட நிலையில், அதனுடன் எந்த வகையிலும் குறுக்கிடாத படிதான் உள்ளாட்சி தேர்தல் அட்டவணை தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆளும் கட்சியை திருப்தி படுத்துவதையே ஒரே கொள்கையாக கொண்டுள்ள மாநிலத் தேர்தல் ஆணையம், இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் விருப்பம் போல தேர்தல் அட்டவணையை தயாரித்து வெளியிட்டிருக்கிறது.

              கடந்த 2006-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல்கள் அக்டோபர் 13 மற்றும் 15-ஆம் தேதிகளில் நடைபெற்றன. அதற்கு முன்பாக அக்டோபர் 11-ஆம் தேதியே மதுரை மத்திய தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்ட போதிலும், அதன் முடிவுகள் உள்ளாட்சி தேர்தலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக, உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த பின்னர் அக்டோபர் 17-ந் தேதி தான் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. அது மட்டுமின்றி, கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் கூட ஒரு மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் இன்னொரு மாநிலத்தின் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதற்காக தமிழகத்தில் தேர்தல் முடிந்து ஒரு மாதம் கழித்து தான் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.

           அதே போல் இந்த உள்ளாட்சி தேர்தலிலும் திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தல் முடிவுகள் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தி விடாமல் தவிர்க்க, அதன் வாக்கு எண்ணிக்கையை அக்டோபர் 19-ம் தேதிக்குப்பிறகு நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.


பாமக நிறுவனர் ராமதாசுடன் ஜான்பாண்டியன் சந்திப்பு


         பாமக நிறுவனர் ராமதாஸை தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நேற்று காலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு, பாமக பொதுச்செயலர் வடிவேல் ராவணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இது மரியாதை நிமிர்த்தமான சந்திப்பு என பாமக வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையுடன் இந்திய கடற்படையினர் கூட்டுப் பயிற்சி:பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

சென்னை:

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

             இலங்கை கடற்படையுடன் இந்திய கடற்படையினர் கூட்டுப் பயிற்சியை தொடங்கி உள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் இருநாட்டு கடற்படையினரும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும், இந்த பயிற்சியை தொடர்ந்து இலங்கை கடற்படைக்கு பல்வேறு உதவிகளை வழங்க இந்தியா முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

             50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை கொன்று குவித்ததற்காக உலக அரங்கில் போர்க்குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கும் இலங்கை கடற்படையுடன் இந்தியா கூட்டுப் பயிற்சி மேற்கொண்டிருப்பது கண் டிக்கத்தக்கது. ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் இலங்கை அரசுக்கு இந்தியா உதவிகளை வாரி வழங்கி கொண்டிருக்கிறது. காங்கேசன் துறைமுகத்தை பல நூறுகோடி ரூபாய் செலவில் புதுப்பித்து வரும் இந்திய அரசு, அடுத்தக் கட்டமாக இலங்கை கடற்படைக்கு பயிற்சியும், பிற உதவிகளையும் வழங்க இருக்கிறது. இலங்கையுடன் எந்த உறவையும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று ஒட்டுமொத்த தமிழகமே வலியுறுத்தி வரும் நிலையில் அந்நாட்டு கடற்படையுடன் இணைந்து இந்தியக் கடற்படை கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவது சரியல்ல.

               அப்பாவி தமிழ் மீனவர்களை கொன்று குவித்ததற்கு பரிசாகத்தான் இந்த பயிற்சியை இலங்கைக்கு இந்தியா வழங்குகிறதா என்ற வினா தமிழகத்தில் உள்ள தமிழர்களின் மனதில் எழுந்திருக்கிறது. எனவே தமிழர்களின் உணர்வுகளை மதித்து இலங்கை கடற்படையுடனான கூட்டுப் பயிற்சியை ரத்து செய்ய வேண்டும். இலங்கையுடனான ராணுவ உறவுகளை முறித்துக் கொண்டு அந்நாட்டு அரசுக்கு எதிரான போர்க்குற்ற நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திண்டிவனத்தில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அஞ்சலி

 
http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/ee8af956-c1d5-471e-8c54-f0e57e4c7672_S_secvpf.gif
 
திண்டிவனம்:

            வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை காலையில் திண்டிவனம்-மயிலம் ரோட்டில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உயிர் நீத்தவர்களின் உருவப்படங்கள் முன்பு மெழுகுவர்த்தி ஏற்றிவைத்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினார்.

             இதில் மாநில வன்னியர் சங்க தலைவர் குரு, பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி வேலு, முன்னாள் எம்.பி.தன்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. செந்தமிழ்செல்வன், கருணாநிதி, ராஜேந்திரன், வசுந்தராதேவி, மலர்சேகர், ஏழுமலை, சங்கர், சிவகுமார், குமணன், ஜெயராஜ், பாலாஜி, ஜெயகிருஷ்ணன், சவுந்தர், நெடிசுப்பிரமணி, ஒலக்கூர் ராமலிங்கம், மகளிர் அணி சத்தியா, மகேஸ்வரி, பூங்காவனம், குமாரி மற்றும் செந்தில், பூதேரிரவி, ராகேஷ், நொளம்பூர் ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.  முன்னதாக திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பெரியார் பிறந்தநாளையொட்டி அவரது உருவ சிலைக்கு டாக்டர் ராமதாஸ் மாலை அணிவித்து மரயாதை செலுத்தினர்.

பரமக்குடி துப்பாக்கி சூடு காவல்துறை அதிகாரிகளின் அலட்சியம்: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

          துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான காவல் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.


இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:

            காவல்துறை அதிகாரிகள் அலட்சியமாகச் செயல்பட்டுவிட்டு, பின்னர் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தினோம் என்பது கண்டனத்துக்குரியது. பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சரியாகச் செய்யாமல் தங்கள் தவறை மறைக்க அப்பாவிகளைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்குக் காரணமான காவல்துறை அதிகாரிகளை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இளம் கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு: பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு




சென்னை:
          பட்டப்படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக  பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:
           2013 -ம் கல்வியாண்டு முதல் இளம் கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு நாடு தழுவிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கான ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் கூறியிருக்கிறார். அமைச்சரின் இந்த அறிவிப்பு ஒடுக்கப்பட்ட மாணவர்களின் உயர் கல்வி கனவுகளைப் பொசுக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இதை கடுமையாக கண்டிக்கிறேன்.
              பொருளாதாரத் துறையில் இந்தியா வளர்ச்சி அடைந்துவிட்டதாக மத்திய அரசு மார் தட்டிக் கொண்டபோதிலும், உயர் கல்வியில் இந்தியா இன்னும் பின்தங்கிய நிலையில்தான் உள்ளது. உலகின் மிகச் சிறிய நாடுகளில் எல்லாம் உயர் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை 30 விழுக்காட்டிற்கும் கூடுதலாக இருக்கும் நிலையில், இந்தியாவில் உயர்கல்வி கற்போரின் எண்ணிக்கை வெறும் 12.5 சதவீதமாகவே உள்ளது.அதாவது இந்தியாவில் தொடக்கப் பள்ளிகளில் சேரும் மாணவர்களில் 87.5 சதவீதம் மாணவர்களுக்கு உயர் கல்வி கிடைப்பதில்லை. 
               இது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக கபில்சிபல் பதவியேற்ற நாளிலிருந்தே ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை எப்படியாவது பறித்துவிட வேண்டும் என்று சபதம் ஏற்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்று தமது அதிகார வரம்பை மீறி பரிந்துரைத்த கபில்சிபல் அடுத்தகட்டமாக தொழில்நுட்ப படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்திருக்கிறார். இது போதாது என்று இளநிலை படிப்புகளுக்கும் பொதுநுழைவுத் தேர்வு கொண்டு வரப்படும் என்று அறிவித்து அடித்தட்டு மாணவர்களின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறார். 
               சமூக நீதியில் அக்கறை கொண்ட எவரும் இந்த முயற்சிகளை அனுமதிக்க மாட்டார்கள்.எனவே பட்டப்படிப்பு மாணவர்களுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை ஆய்வு நிலையிலேயே கைவிட வேண்டும்.அனைத்து படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்த முயற்சிப்பதன் மூலம் மாநில அரசுகளின் கல்வி உரிமையை கபில்சிபல் பறித்து வருகிறார். இதே நிலை நீடித்தால், கல்வித்துறையையே மாநில பட்டியலில் இருந்து மத்திய பட்டியலில் சேர்த்துவிடுவார். எனவே, கபில்சிபலின் இந்த முயற்சிகளை எதிர்த்து தமிழக அரசும் குரல் கொடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த பாமக பொதுக்குழு கூட்டம்: பாமக நிறுவனர் ராமதாஸ் பங்கேற்பு

       

http://www.sivajitv.com/newsphotos/Ramadoss%20Reading%20book.jpg
      
         திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த பாமக பொதுக்குழு கூட்டம் (21.08.2011) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,

           மது, திரைப்பட மோகம் ஆகிய கலாச்சார சீரழிவுகளில் இருந்து தமிழகத்தைக் காப்பாற்ற இளைஞர்கள் ஒருகிணைந்து செயல்பட வேண்டும். 44 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் அனைத்து வகையிலும் பின்நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இலவச திட்டங்களை முற்றிலும் நிறுத்தி விட்டு, மேல்படிப்பு வரை கல்வியை இலவசமாக வழங்க வேண்டும்.  பாமக தலைமையிலான அணி உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று மாற்றத்தை ஏற்படுத்தும். அடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் பாமக அதிக இடங்களை கைப்பற்றும் என்று தெரிவித்தார்.

சென்னையில் மோனோ ரயில் திட்டத்தால் பயன் ஏதும் இல்லை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

சென்னை,:
 
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்  வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறி இருப்பது:-
 
          சென்னை நகரில் மோனோ ரயில் திட்டத்தை முதல்கட்டமாக 111 கிலோமீட்டர் தொலைவுக்கு அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பின்னர் அது 300 கிலோமீட்டருக்கு நீட்டிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                 சென்னை மக்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்க வாய்ப்பில்லாத இத்திட்டத்தை தமிழக அரசு கெளரவம் பார்க்காமல் கைவிட வேண்டும். உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 60 இடங்களில் மட்டுமே மோனோ ரயில் திட்டங்கள் உள்ளன. இவற்றில் 48 திட்டங்கள் 3 அல்லது 4 கிலோமீட்டர் தூரத்துக்கு மட்டுமே உள்ளன.  உலகில் உள்ள மோனோ ரயில் திட்டங்களின் ஒட்டுமொத்த நீளத்தையும் கூட்டினால் அது வெறும் 400 கிலோமீட்டர் மட்டுமே வருகிறது. உலக நிலவரம் இவ்வாறு இருக்கும்போது தமிழக அரசு சென்னையில் மட்டும் 300 கிலோமீட்டர் தொலைவுக்கு மோனோ ரயில் அமைக்கப் போவதாகக் கூறுவது நடைமுறை சாத்தியமில்லாதது.  இவ்வாறு அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களுடன் சந்திப்பு


சென்னை:
 
       பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 
 
அப்போது பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியது:-

               தமிழ்நாட்டில் இலவசங்களை தந்து வறுமையை ஒழிக்கப்போவதாக கூறுகிறார்கள். கடந்த தி.மு.க. ஆட்சியில் இலவச திட்டங்களுக்காக ரூ.70 ஆயிரம் கோடியை வீணாக செலவழித்தார்கள். அப்படியும் ஓட்டு பெற முடியவில்லை.  புதிதாக வந்துள்ள அரசும் மிக்சி, மின்விசிறி, கிரைண்டர், ஆடு, மாடு என்று ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடியை செலவிட உள்ளது. 27 சதவீதம் பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கிறார்கள்.   இந்த விகிதம் குறைய வில்லை. ஆனால் இலவசங்கள் அதிகரித்து வருகிறது.

             மதுவின் மூலம் வருமானம் இந்த ஆண்டு ரூ.17 ஆயிரம் கோடி என்கிறார்க்ள. இது தான் வளர்ச்சியா? கல்வி, சுகாதாரம், விவசாயம் இவற்றுக்குத்தான் அரசு இலவசமாக தரவேண்டும். சமச்சீர் கல்வியில் முத்துக்குமரன் பரிந்துரையில் பல அம்சங்கள் இன்னும் நிறை வேற்றப்படவில்லை. பொது பாடத்திட்டம் மட்டும்தான் நிறைவேறியுள்ளது. ஆங்கிலோ இந்தியன் ஓரியண்டல், மெட்ரிக்குலேசன் கல்வி வாரியங்களை கலைக்க வேண்டும். ஒரே வாரியத்தின் கீழ் கல்வித்துறை செயல்படவேண்டும். 
 
         தமிழ் நாட்டிற்கு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் தேவையில்லை. அமிதாப்பச்சன் நடித்து வெளிவந்துள்ள ஆரக்ஷன் திரைப்படத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான காட்சிகளை நீக்கி விட்டு திரையிட அனுமதிக்கலாம். ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது மரண தண்டனையை நிறுத்த சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் பா.ம.க. சார்பில் மதுக்கடையை மூடும் போராட்டம் தீவிரப்படுத்தப்படும். நானே தலைமை தாங்கி மதுக்கடைகளுக்கு பூட்டு போடுவேன்.

             எங்கள் கட்சியின் கொள்கைகளை போல் வேறு எந்த கட்சிக்கும் கொள்கைகள் இல்லை. திராவிட கட்சிகளோடு சேர்ந்த காரணத்தால் பா.ம.க.வால் வளர முடியவில்லை. இனி அந்த தவறை செய்ய மாட்டேன். மன்னிப்பு கேட்கிறேன் நாங்கள் இணைந்து திராவிட கட்சிகளை ஆட்சியில் அமர்த்தியதற்காக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.  கடந்த 44 ஆண்டுகளாக அரசியல் கலாச்சாரம், கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளையும் திராவிட கட்சிகள் சீரழித்து விட்டன. இனி எந்த காலத்திலும் திராவிட கட்சிகளுடன் சேர மாட்டேன். திராவிட கட்சிகளுக்கு மாற்றாக முதன்மை அணியாக செயல்பட வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்.

             தகுதி இல்லாத எத்தனையோ பேர் வாரிசுகள் என்பதால் அரசியலுக்கு வந்தது அனைவருக்கும் தெரியும். அன்புமணி ஆனால் அன்புமணிக்கு தகுதி இருந்ததால் மத்திய மந்திரி பதவி கொடுக்கப்பட்டது. சிறந்த முறையில் பணியாற்றி உலக அளவில் 3 விருதுகளையும் பெற்றார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் அன்புமணி போட்டியிடுவார். புதிய ஆட்சி பொறுப்பேற்ற பிறகும் சட்டம்- ஒழுங்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஊழலை ஒழிக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. அன்னாஹசாரே இவ்வளவு நாளும் எங்கிருந்தார். இப்போதுதான் புதிதாக வந்துள்ளார். அவரது போராட்டத்துக்கு ஏதோ உள்நோக்கமும், பின்னணியும் உள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

       பேட்டியின்போது, பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. மூர்த்தி, பசுமை தாயகம் அருள், ஜெயராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.
 
 

65வது சுதந்திர தினம்: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி



இந்தியாவின் 65வது சுதந்திர தினவிழா  கொண்டாடப்படுவதையொட்டி பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ்  வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

வாழ்த்து செய்தி:

                தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி. ஆனால் ஒருவேளை உணவுக்கு கூட வழியில்லாமல் இந்தியாவில் தவிப்போரின் எண்ணிக்கை கோடிக்கணக்கில் உள்ளது. தெருவுக்கு தெரு மதுக்கடைகளை திறந்து மக்களிடம் இருக்கும் பணத்தை பறித்துக் கொண்டிருக்கின்றனர். இலவசங்களை ஒழித்து மக்களுக்கு தரமான கல்வி, சிறப்பான மருத்துவம் ஆகியவற்றை வழங்குவதன் மூலமும் மதுவை ஒழிப்பதன் மூலமும்தான் மக்களுக்கு உண்மையான விடுதலையை வழங்க முடியும்.  


அமெரிக்க துணை தூதரர் மவ்ரீன் காவ் தமிழர்களை அழுக்கர் எனக் கூறியதற்கு பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Aug/824e4a69-1001-414c-a666-04c7ca00df07_S_secvpf.gif
சென்னை:
            சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துணை தூதராக இருப்பவர் மவ்ரீன் காவ். பெண் அதிகாரியான இவர், சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.
அப்போது  அமெரிக்க துணை தூதர் மவ்ரீன் காவ் பேசியது 
             20 ஆண்டுகளுக்கு முன்பு படிப்பதற்காக இந்தியா வந்த நான், டெல்லியில் இருந்து ஒரிசாவுக்கு ரெயிலில் சென்றேன். 24 மணி நேரத்தில் போய் சேர வேண்டிய இடத்தை 72 மணி நேரமாகியும் அந்த ரெயில் போய் சேரவில்லை. இந்த பயணத்தின் போது எனது தோல் தமிழர்களை போல கறுப்பாகவும், அழுக்காகவும் மாறிவிட்டது என்றார். அவரது பேச்சை வட இந்திய மாணவர்கள் பலர் கைதட்டி ரசித்துள்ளனர். ஆனால் மேடையில் இருந்த முக்கிய பிரமுகர்களும், தமிழ் மாணவர்களும் இதனை கண்டு கொள்ளாமல் வாயை பொத்திக் கொண்டு இருந் துள்ளனர்.   அமெரிக்க பெண் அதிகாரியின் இந்த பேச்சுக்கு பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:-

              தமிழ்நாட்டில் பணியாற்றிக்கொண்டு தமிழர்களால் நடத்தப்படும் பல்கலைக்கழகத்தில் தமிழர்களை பற்றியே இனவெறியுடன் மவுரின் சோவ் பேசியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. அமெரிக்க உதவி துணை தூதரின் இந்தப் பேச்சு தமிழர்களை பற்றிய குரூரமான கற்பனை ஆகும். தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் அமெரிக்கர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சவால்விடும் வகையில் தமிழர்கள் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், அவர்களை தீண்டத்தகாதவர்களை போல சித்தரித்து அமெரிக்க உதவித்துணை தூதர் பேசியிருப்பதை தன்மானம் உள்ள தமிழர்கள் எவராலும் சகித்துக் கொள்ள முடியாது.

        அமெரிக்காவுக்குச் செல்லும் இந்திய அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்களை பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் ஆடைகளை களைந்து அவமதிக்கும் அமெரிக்கர்களின் இனவெறி தற்போது தமிழகம் வரை நீண்டிருப்பது உணர்வுள்ள தமிழர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது. ஈழத்தமிழர் சிக்கல் முதல் அனைத்து விவகாரங்களிலும் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் நடுவண் அரசு செயல்பட்டு வருவதாலும், தாராளமயமாக்கல் கொள்கை காரணமாக தமிழர்களிடையே இன உணர்வும், பண்பாட்டு உணர்வும் குறைந்து வருவதாலும்தான் எங்கிருந்தோ வந்தவர்களுக்கு இப்படியெல்லாம் பேசுவதற்கான துணிச்சல் ஏற்பட்டிருக்கிறது.

                 ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்ட கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஒபாமா அமெரிக்காவின் அதிபராக பதவி வகித்து வரும் நிலையில், அவரின் பிரதிநிதியாக தமிழகத்தில் இருக்கும் ஒருவர் தமிழர்களை கறுப்பர்கள் என்றும், அழுக்கானவர்கள் என்றும் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த இனவெறி பேச்சுக்காக மவுரின் சோவ் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும். இவரைப்போன்ற பிறவிகள் இனியும் தமிழகத்தில் தங்கியிருக்க அனுமதிக்கக்கூடாது. தமிழர்களை அவமதித்த அவரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேரில் அழைத்து கண்டிப்பதுடன், உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்.


சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பை பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு

        ''சமச்சீரகல்வியஅமல்படுத்வேண்டுமஎன்றஉச்ச நீதிமன்றமதீர்ப்பளித்திருப்பதசமூநீதிக்ககிடைத்வெற்றி'' எ‌ன்று ா.ம.நிறுவனரராமதாஸகூறியுள்ளார்.
 

இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல் இதனை தெ‌ரி‌வி‌த்து‌ள்ள பா.ம.க நிறுவனர் ராமதா‌‌ஸ், 


        சமச்சீரகல்விததிட்டத்தாலமாணவர்களுக்கஏற்படுமபயன்களகுறித்த 25 அம்சங்களஆராய்ந்தஇந்தீர்ப்பஉச்ச நீதிமன்றமவழங்கியுள்ளது எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர். இந்தததீர்ப்பின்படி 10 நாட்களுக்குளசமச்சீரகல்விததிட்டத்தஅமல்படுத்வேண்டுமஎன்று‌ம் ராமதாஸ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்திய நாடாளுமன்றத்தில் வரவேற்பு: பா.ம.க.நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டனம்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

           இலங்கையில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்த மகிந்தா ராஜபக்சேவின் சகோதரரும், அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகருமான சமல் ராஜபக்சே தலைமையிலான இலங்கை நாடாளுமன்ற குழுவினர் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளனர்.

             இலங்கையில் நடைபெற்ற போரின்போது 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களிளை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்ததற்காக இலங்கை அரசு மீது போர்க்குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், அவர்களின் உணர்வுகளை சற்றும் மதிக்காமல், போர்க்குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டியவர்களுக்கு நாடாளுமன்றத்தில் கவுரவம் அளித்த இந்தியாவின் செயல் கண்டிக்கத்தக்கது.

            இனப்படுகொலையை நடத்திய ராஜபக்சேவையோ அல்லது அவரது நாட்டின் தலைவர்களையோ உலகின் எந்த நாடும் வரவேற்பதில்லை. இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றச் சென்றபோது, அங்குள்ள தமிழர்களின் எதிர்ப்பை அடுத்து அவரை பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்க இங்கிலாந்து மறுத்துவிட்டது. அதுமட்டுமின்றி ராஜபக்சே எவ்வளவோ முயன்றும் அவரை சந்திக்க இங்கிலாந்து தலைவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் அவர் பாதியிலேயே அங்கிருந்து வெளியேற நேரிட்டது. அதேபோல் ராஜபக்சே அமெரிக்கா சென்றால் அவரைக் கைது செய்ய அந்நாட்டுடு நீதிமன்றமும், காவல்துறையும் காத்திருக்கின்றன.

            இலங்கை அரசுக்கு எதிராக உலக நாடுகள் இவ்வளவு கடுமையான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ள நிலையில், தமிழர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டிய தார்மீக கடமை கொண்ட இந்திய அரசு மட்டும் இலங்கை அதிபரையும், அந்நாட்டு தலைவர்களையும் மாதத்திற்கு ஒருமுறை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது. இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமிழத்திற்கு வந்தபோது வானூர்தி நிலையத்திலேயே தடுத்து திருப்பி அனுப்ப்பட்டனர்.

          ஆனால், சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் இந்திய அரசு வரவேற்று உபசரிப்பது தமிழகத்திலுள்ள 7 கோடி தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது. ஈழத்தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் இந்திய அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் கொலைக்குற்றம் சாற்றப்பட்ட சிங்களத் தலைவர்களை இந்தியாவுக்கு அழைப்பதை நிறுத்திவிட்டு, ராஜபக்சே உள்ளிட்டோர் மீது போர்க்குற்ற விசாரணையை நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

விவசாய நில‌ங்க‌ளி‌ல் ‌சிற‌ப்பு பொருளாதார ம‌ண்டல‌ம் அமை‌க்க தடை: பா.ம.க. நிறுவனர் ராமதா‌ஸ் கோரிக்கை

       மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் சட்ட மசோதாவுக்கு வரவேற்பு தெரிவி‌த்து‌ள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், விளை நிலங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க தடை விதிக்க வேண்டும் எ‌ன்று வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  

            அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகளை அமைப்பதற்காக வேளாண் விளை நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்று கடந்த 5 ஆண்டுகளாகவே வலியுறுத்தி வருகிறேன். அதிலும் குறிப்பாக சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் பெரிய நிறுவனங்கள் மறைமுகமான நில வணிகத்தில் ஈடுபடுவதை எதிர்த்தும், இதற்காக ஏழை, எளிய உழவர்களின் வாழ்வாதாரமான நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்றும் ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறேன்.


           அரசின் நிலம் எடுப்பு கொள்கைக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறுவாழ்வு அளித்தல் சட்டம் திருத்தப்படும் என்று மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமை‌ச்ச‌ர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார். அதற்கான வரைவு சட்டத்தையும் தயாரித்து அரசின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். எக்காரணத்தை முன்னிட்டும் பாசன வசதி பெறும் நிலங்களோ அல்லது பலவகையான பயிர்கள் விளையும் நிலங்களோ கையகப்படுத்தப்படாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.


               
            தனியார் நிறுவனங்களுக்காக அரசே நிலத்தை கையகப்படுத்தி தராது என்றும், அரசின் திட்டங்களுக்காக நிலத்தை கையகப்படுத்த வேண்டுமானால், அதனால் பாதிக்கப்படும் நில உரிமையாளர்களில் 80 சதவீதத்தினரின் ஒப்புதலை பெறவேண்டும் என்றும் வரைவு சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பா.ம.க போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி. இதை பா.ம.க. சார்பில் வரவேற்கிறேன்.



            தவிர்க்க முடியாத அவசர திட்டங்களுக்காக நிலத்தை கையகப்படுத்தும்போது, நகர்ப்புறங்களாக இருந்தால் சந்தை மதிப்பைவிட 2 மடங்காகும், கிராமப்புறங்களாக இருந்தால் சந்தை மதிப்பைவிட 6 மடங்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று வரைவுச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இது போதுமானதல்ல. கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு சந்தை மதிப்பைவிட 10 மடங்கு கூடுதல் விலை தரவேண்டும். அதுமட்டுமின்றி, நிலம் தருவோரின் குடும்பங்களுக்கு அவர்களது நிலத்தில் தொடங்கப்படும் நிறுவனத்தில் வேலை வழங்க வேண்டும். லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ஒதுக்க வேண்டும்.

               சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு விளைநிலங்களை கையகப்படுத்துவதால், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம்தான் பாதிக்கப்படுகிறதே தவிர, எந்த வகையிலும் பொருளாதார வளர்ச்சி ஏற்படவில்லை. இதை உணர்ந்து விளை நிலங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று ராமதா‌ஸ் வலியுறுத்‌தியு‌ள்ளா‌ர்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் திண்டிவனத்தில் சமச்சீர் கல்வியை அமுல்படுத்த கோரி ஆகஸ்ட் 2 ல் ஆர்ப்பாட்டம்

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியது:-

           சமச்சீர் கல்வி திட்டத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்பார்க்காமல் ஐகோர்ட்டால் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டபடி அச்சடிக்கப்பட்டு தயாராக இருக்கும் சமச்சீர் கல்வி பாட நூல்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி நாளை  (2-ந்தேதி) தமிழ்நாடு முழுவதும் பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

            திண்டிவனத்தில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தமிழ்நாட்டில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் கூட மதுவுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை. தெருவுக்கு தெரு மதுக்கடைளை திறந்து வருகின்றனர். இலவச திட்டங்களை செயல்படுத்த மதுக்கடைகளை திறந்து வருவாய் ஈட்ட முயலுகிறார்கள்.

              தமிழக அரசு மதுக்கடைகள் மூலம் வருமானத்தை உயர்த்துவதில் குறியாக உள்ளது. கேரளாவில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மதுக்கடைகள் மூலம் வரு மானம் வெறும் 3 கோடியாக இருந்தது.   தற்போது 2 மடங்கு அதிகரித்துள்ளது. அதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த கேரள அரசு மது குடிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை எண்ணி அதை கட்டுப்படுத்த முடிவு செய்தது.

             21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்கக் கூடாது. 3 கிலோ மீட்டருக்கு ஒரு மதுக்கடைதான் இருக்க வேண்டும். புதிதாக மதுக்கடைகள் திறக்க கூடாது என்று சட்டம் கொண்டு வந்துள்ளது. மராட்டிய மாநிலத்திலும் 25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக் கூடாது. ஒரு கிராமத்தில் 25 சதவீத மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் கடை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   ஆனால் தமிழக அரசு மது விற்பனை 5 மடங்காக உயர்ந்தாலும் கவலைப்படு வதில்லை.

              மது விற்பனை உயர்ந்து அதனால் விபத்துகள் அதிகரித்தாலும், தாய்மார்கள் கணவனை இழந்து விதவைகளானாலும் அதைப்பற்றி தமிழக அரசு கவலைப்படாது. மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பா.ம.க. சார்பில் விரைவில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். அப்போது தமிழகம் முழுவதும் உள்ள பா.ம.க. கட்சியினர், நாட்டு நலனில் அக்கறையுள்ளோர் பெருமளவில் பங்கேற்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய தூதரகம் மூலமாக ஓமனில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழர்களை மீட்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ்

          ஓமனில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழர்களை மீட்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

          கொரியா நாட்டுக்குச் சொந்தமான ஓஷன் ஸ்டார் என்ற கப்பல் பாகிஸ்தானின் கராச்சி நகரிலிருந்து ஓமனுக்கு அரிசி ஏற்றிச் சென்றபோது, ஓமன் கடல் பகுதியில் புயலில் சிக்கி கடந்த மாதம் 26ஆம் தேதி மூழ்கிவிட்டது. அக்கப்பலில் இருந்த 10 பணியாளர்களில் 4 பேர் கடலில் குதித்து தப்ப முயன்றபோது அவர்களை துபாய் நாட்டுக் கப்பல் மீட்டது. அவர்களில் இந்தியாவைச் சேர்ந்த மூவர் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டனர்.

           மீதமுள்ள 6 பேரையும் ஓமன் நாட்டுக் கடற்படையினர் மீட்டு தங்களது காவலில் வைத்திருப்பதாக தெரியவந்துள்ளது. அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த கனராஜ் சேவியர், ஸ்ரீதர் சகாய ராஜ் ஆகிய இருவர் உள்ளிட்ட 4 இந்தியர்களும் அடக்கம்.

          கடந்த 10 நாட்களாக ஓமன் நாட்டு கடற்படையினரின் காவலில் உள்ள அவர்களை மீட்டுத்தரும்படி உறவினர்கள் முறையீடு செய்தும், இன்றுவரை அவர்ள் மீட்கப்படவில்லை. எனவே, இந்த விஷயத்தில் மத்திய அரசும், கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசனும் தலையிட்டு ஓமன் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உள்ளிட்ட 4 இந்தியர்களையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இலங்கை உள்ளாட்சி தேர்தலில் 18 இடங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி, தனித்தமிழ் ஈழத்திற்கான தீர்ப்பு: பாமக நிறுவனர் ராமதாஸ்

           இலங்கை உள்ளாட்சி தேர்தல் முடிவு தனித்தமிழ் ஈழத்திற்கான தீர்ப்பு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

              இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தமிழர் கட்சிகளின் கூட்டணியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. வடக்கு மாநிலத்தில் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இலங்கை படையினர் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டனர் - ஆளும் கட்சியினர் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டது.
                
               இவற்றையெல்லாம் மீறி வடக்கு மாநிலத்தில் மொத்தமள்ள 20 உள்ளாட்சி அமைப்புகளில் 18ஐ தமிழ் தேசியக் கூட்டமைப்பு வென்றுள்ளது. அதுமட்டுமின்றி, பதிவான வாக்குகளில் 75 விழுக்காட்டிற்கும் அதிக வாக்குகளை அக்கூட்டமைப்பு பெற்றுள்ளது. இதன்மூலம் ராஜபக்சே தலைமையிலான சிங்கள இனவெறி அரசு மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என்பதையும், தங்களுக்கென தனித் தமிழ் தலைமை தேவை என்பதையும் ஈழத்தமிழர்கள் உணர்த்தியிருக்கின்றனர். இதை தனித் தமிழ் ஈழம் அமைவதற்கான கருத்து கணிப்பு முடிவாகவே உலக நாடுகள் கருத வேண்டும்.

              இலங்கையில் சிங்களர்கள் வாழும் பகுதிகளை பொறுத்தவரை தமிழர்களை அழிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட ராஜபக்சே கட்சிதான் பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் இலங்கையில் தமிழர்களும், சிங்களர்களும் இணைந்து வாழ்வதற்கான வாய்ப்பே இல்லை என்பது இன்னொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.  இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இதை உணர்ந்து, தமிழர்கள் வாழும் பகுதிகளை பிரித்து, தனித் தமிழ் ஈழம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

              இதற்காக ஈழத்தமிழர்கள், தமிழகத் தமிழர்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில் கிழக்கு தைமூர், தெற்கு சூடான் ஆகியவற்றிற்கு அடுத்தப்படியாக உலகின் 194ஆவது நாடாக தமிழ் ஈழத்தை ஆறிவிக்க ஐ.நா. நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழகத்தில் இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை

              இலங்கை இறுதிப் போரின் போது நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை அந்நாட்டிற்கான உதவிகள் நிறுத்தப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி இலங்கைக்கு வழங்கப்பட இருந்த ரூ.65 கோடி நிதி உதவியையும் அமெரிக்க அரசு ரத்து செய்திருக்கிறது.

           இலங்கைப் போரில் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா கொண்டுள்ள அக்கறை மனநிம்மதி அளிக்கிறது. அதே நேரத்தில் இந்த விஷயத்தில் இந்திய அரசின் நிலைப்பாடு கவலையும், வேதனையும் அளிக்கிறது. இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் வரை இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கப்பட வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை.

              இதன்மூலம் தமிழகத்தில் உள்ள 7 கோடி தமிழர்களின் உணர்வுகளை மதிக்க மத்திய அரசு தவறிவிட்டது. மாறாக இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்தை பலநூறு கோடி ரூபாய் செலவில் சீரமைத்து தர இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அத்துடன் நிற்காமல் போர்க் குற்றவாளிகள் என்று அறிவித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய இலங்கை ராணுவ அதிகாரிகளை தமிழகத்திற்கு அழைத்து வந்து பயிற்சி அளிக்கிறது.

          இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.இலங்கை ராணுவத்தினருக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்க மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து அந்த பயிற்சி இன்று ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இனிவரும் காலங்களிலாவது இலங்கை படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதை கைவிட வேண்டும்.

           ஈழத் தமிழர்களின் நலனை பாதுகாப்பதில் அமெரிக்காவை விட இந்தியாவிற்குதான் அதிக பொறுப்பு உள்ளது. இலங்கையில் போர்க் குற்றங்கள் நடைபெற்றது உண்மைதான் என ஐ.நா. வல்லுனர் குழு அறிக்கையில் உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா இனியும் காத்திருக்காமல் இலங்கை அரசுக்கு எதிராக பன்னாட்டு விசாரணை நடத்தவும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமான ராஜபக்சேவை குற்றவாளி கூண்டில் ஏற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

             இந்த விசாரணை முடியும் வரை இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். அதே நேரத்தில் பொருளாதார தடையால் அங்குள்ள தமிழர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இந்திய நிதியைக் கொண்டு 50 ஆயிரம் வீடுகளை கட்டித் தரும் திட்டத்தை இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலமாக மேற் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.