உள்ளாட்சி தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உள்ளாட்சி தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கடலூர் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கான தேர்தல்: பா.ம.க ஒரு இடத்தில் வெற்றி

கடலூர் :

          கடலூர் மாவட்டத்தில்  மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் பா.ம.க ஒரு இடத்தில் வெற்றி பெற்றார் .

பா.ம.க.,:  

வார்டு எண்: 26
வேட்பாளர் : கருணாகரன், 
ஓட்டுகள்: 8,676;  

ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்

சிதம்பரம் நகராட்சியில் 4வது முறையாக பா.ம.க.வேட்பாளர் ரமேஷ் வெற்றி

சிதம்பரம் :

          சிதம்பரம் நகராட்சியில் 4வது முறையாக பா.ம.க., வைச் சேர்ந்த ரமேஷ், வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். சிதம்பரம் நகர மன்றத்தில் 1996 தேர்தலில் பா.ம.க., சார்பில் 14வது வார்டில் பா.ம.க.,வைச் சேர்ந்த ரமேஷ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
 
           இதில் பா.ம.க., ரமேஷ் தொடர்ந்து 1996, 2001, 2006, தற்போதைய (2011) தேர்தலிலும் வெற்றி பெற்று தற்போது 4வது முறையாகவும் வெற்றி பெற்று கவுன்சிலர் பதவியை பிடித்துள்ளார். நான்கு முறையாக ஒரே வார்டில் நின்று வெற்றி பெற்று வார்டை தக்க வைத்து சாதனை படைத்துள்ளார்.
 

ஜெயங்கொண்டம் நகராட்சியில் பா.ம.க. 3 வார்டுகளில் வெற்றி


ஜெயங்கொண்டம்: 

         ஜெயங்கொண்டம் நகராட்சியில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட மீனாள் சந்திரசேகர் 6,429 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

                இவருக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க., வேட்பாளர் லெட்சுமிகாந்தன் 5,952 ஓட்டுக்கள் பெற்று தோல்வி அடைந்தார். பா.ம.க., சார்பில் போட்டியிட்ட ஆர்.லட்சுமி 2,194 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் கலைவாணி 548 வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்தார்.

மொத்தமுள்ள 21 வார்டுகளில் 

அ.தி.மு.க., 8 வார்டுகளிலும்,
தி.மு.க., பா.ம.க., தலா 3 வார்டுகளிலும், 
காங்கிரஸ் ஒரு வார்டிலும்,
சுயேட்சை வேட்பாளர்கள் 6 வார்டுகளிலும் 

வெற்றி பெற்றுள்ளனர்.

பொ.மல்லாபுரம் பேரூராட்சித் தலைவர் பதவி பா.ம.க வேட்பாளர் க.சிவக்குமார் மூன்றாமிடம்

பொ.மல்லாபுரம் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் க.முருகன் வெற்றி பெற்றுள்ளார்.
 
வாக்குகள் விவரம்: 
 
க.முருகன் (திமுக)-2,553, 
இரா.ராஜா (அதிமுக)-1,922, 
க.சிவக்குமார் (பாமக)-1,323, 
ந.குமரவேல் (தேமுதிக)-258, 
அ.ஆஜம்கான் (சுயே)-841, 
ரா.சீனிவாசன் (காங்கிரஸ்)-54.
 
மொத்தமுள்ள 15 வார்டுகளில் 
அதிமுக-5, 
பாமக-4, 
திமுக-2, 
தேமுதிக-2, சு
யே-2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
 

காரிமங்கலம் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு பா.ம.க வேட்பாளர் ஏ.சத்யா வெற்றி

தருமபுரி:

      காரிமங்கலம் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஏ.சத்யா  2,194 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

           சுயேச்சை வேட்பாளர் எம்.சந்திரிகா (1,885 வாக் குகள்) 2-வது இடத்தையும், திமுக சீ.ஜெயந்தி (1,371) 3-வது இடத்தையும், அதிமுக ஜி.ஒச்சம்மாள் (977) 4-வது இடத்தையும், தேமுதிக சி.பூங்கொடி (190) 6-வது இடத்தையும் பெற்றனர்.

மொத்தமுள்ள 15 வார்டுகளில் 

அதிமுக, திமுக, காங்கிரஸ் ஆகியவை தலா 3 இடங்களையும், 
சுயேச்சைகள் 4 இடங்களையும், 
பாமக ,தேமுதிக, ஆகியவை 
 தலா 1 இடத்தையும் கைப்பற்றின.

செந்துறை ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு பா.ம.க. வேட்பாளர் கண்ணகி வெற்றி

செந்துறை:
          அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்துக்குட்பட்ட 12-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு பா.ம.க. வேட்பாளர் கண்ணகி அ.தி.மு.க. வேட்பாளர் செல்வி, தி.மு.க. சார்பில் குழந்தை அம்மாள்,  உள்பட 5 பேர் போட்டியிட்டனர். நேற்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய நேரத்தில் இருந்தே தி.மு.க., பா.ம.க.வுக்கும் இடையே இழுபறி நிலை உருவானது.
 
                 முடிவில் 2 கட்சிகளுமே சம ஓட்டுகள் பெற்றது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் 3847 ஆகும். இதில் பா.ம.க. 1310 வாக்குகளும், தி.மு.க. 1303 ஓட்டுகளும் பெற்றது. தபால் ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்டதில் பா.ம.க.வுக்கு 7 ஓட்டுகளும், தி.மு.க.வுக்கு 14 வாக்குகளும் கிடைத்ததால் சமநிலை ஏற்பட்டது.  எனவே ஓட்டுகள் மீண்டும் எண்ணப்பட்டது. அப்போதும் 2 கட்சிகளும் சமநிலையில் இருந்தது. உடனே குலுக்கல் முறையில் தேர்வு நடந்தது. இதில் பா.ம.க. வேட்பாளர் கண்ணகி வெற்றி பெற்றார். மாவட்ட கவுன்சிலர் 1-வது வார்டு பதவிக்கு அ.தி.மு.க. வேட்பாளர் குணசேகரன் தேர்வானார். 5-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு பா.ம.க. வேட்பாளர் தேன்மொழி வெற்றி பெற்றார்.

திட்டக்குடி பேரூராட்சியில் பா.ம.க.விற்கு இரண்டாம் இடம்

திட்டக்குடி, : 

        திட்டக்குடி பேரூராட்சியில் அ.தி.மு.க., வேட்பாளர் நீதிமன்னன் 2 ஆயிரத்து 119 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பா.ம.க., வேட்பாளர் முருகேசன் இரண்டாம் இடம் பெற்றார்.

           திட்டக்குடி பேரூராட்சித் தலைவர் பதவிக்கு 11 பேர் போட்டியிட்டனர். இதில் அ.தி.மு.க., வேட்பாளர் நீதிமன்னன் 5,329 ஓட்டுகள் பெற்று பா.ம.க., வேட்பாளர் முருகேசனை விட 2,119 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பா.ம.க., முருகேசன் 3,210,
தி.மு.க., பரமகுரு 2,366, 
த.மு.தி.க., வினாயகம் 458,
காங்., செல்லமுத்து 118, 
பா.ஜ., ரவி 98, 

சுயேச்சைகள் 

செந்தில் 167,
ராதாகிருஷ்ணன் 146,
சுயேட்சைகள் அருள்நிதி 109, 
உத்தமராஜா 39, 
கார்த்திகேயன் 23 ஓட்டுகள்
பெற்றார்.

மொத்தம் உள்ள 18 வார்டுகளில் 

அ.தி.மு.க., 11, 
தி.மு.க., 2, 
பா.ம.க., - தே.மு.தி.க., தலா ஒன்று, 
சுயேச்சைகள் 3 பேர் வெற்றி பெற்றனர். 
 
 
 
 
 
 
 

திண்டிவனம் காந்திசிலை அருகில் பாமக வேட்பாளர்களை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இறுதி கட்ட பிரசாரம்

திண்டிவனம்:

            திராவிடக் கட்சிகளை வேரறுப்பதுதான் பாமகவின் தற்போதைய கொள்கை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

திண்டிவனம் காந்திசிலை அருகில் திங்கள்கிழமை நடைபெற்ற இறுதி கட்ட பிரசாரத்தில் பாமக நகராட்சித் தலைவர் பதவி வேட்பாளர் மற்றும் உறுப்பினர் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து ராமதாஸ் பேசியது: 

          ""திண்டிவனம்நகரில் இது வரை எந்த நல்ல திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. திராவிட கட்சிகள் 44 ஆண்டுகள் நகராட்சியை ஆட்சி செய்துள்ளன. நல்ல திட்டங்கள் ஏதேனும் அவர்கள் செயல்படுத்தியிருந்தால் நானும் அவர்களுக்கே வாக்களிப்பேன். ஆனால் இது வரை அவர்களால் ஏமாற்றமே கிடைத்துள்ளது. புதிய திண்டிவனம் நகரத்தை பாமக உருவாக்கும் என நான் பல முறை உங்களுக்கு வாக்குறுதி அளித்தும் வாக்காளர்கள் அதைக் கேட்கவில்லை. இப்போது நகரில் நல்ல குடிநீர் மற்றும் அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்பட்டாமல் உள்ளன. மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். 

            பாமக நகராட்சித் தலைவர் வேட்பாளர் மலர்சேகர் (எ) குணசேகரனை வெற்றி பெற செய்தால் என்னுடைய நேரடி பார்வையில் அனைத்து வளர்ச்சி திட்டங்களும் துரிதமாக நடைபெறும். உங்களுக்கு பணி செய்ய பாமக சார்பில் நல்லவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்து அவர்களது சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பாமக-வின் தற்போதைய கொள்கை திராவிடக் கட்சிகளை வேரறுப்பதுதான். தமிழ்நாட்டில் 2016-ல் பாமக ஆட்சி அமைக்கும்'' என்றார் ராமதாஸ்.நகரச் செயலர் ஜெயராஜ் வரவேற்புரை வழங்கினார். மாவட்ட முன்னாள் பாமக செயலர் ஏழுமலை, மாநில துணைத் தலைவர் செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

சென்னை மாநகராட்சித் தேர்தலில் அதிமுகவினர் வாக்குச் சாவடிகளை கைப்பற்றி அத்துமீறல்: பாமக நிறுவனர் ராமதாஸ்கண்டனம்

சென்னை:

 பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

           சென்னை மாநகராட்சித் தேர்தலில் அதிமுகவினர் திட்டமிட்டபடியே முறைகேடுகளை அரங்கேற்றி வருகின்றனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நேரத்திலிருந்தே சென்னை மாநகரத்திற்குட்பட்ட எல்லா வாக்குச் சாவடிகளிலும் குண்டர்களின் உதவியுடன் அ.தி.மு.க.வினர் கள்ளவாக்கு போட்டு வருகின்றனர்.

         சோழிங்கநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பெருங்குடி மற்றும் அதையொட்டிய பகுதிகளில் அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர் கந்தன் அவரது ஆதரவாளர்களுடன் சென்று வாக்குச் சாவடிகளை கைப்பற்றி அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்குகளை செலுத்தியுள்ளார்.  இதேபோல் சென்னை மாநகரின் எல்லா பகுதிகளிலும் அ.தி.மு.க.வைச்  சேர்ந்த அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் உள்ளிட்டோர் தங்களது பகுதியிலுள்ள வாக்குச் சாவடிகளை கைப்பற்றி கள்ளவாக்குகளை செலுத்திவருகின்றனர். சைதாப்பேட்டை உள்ளிட்ட சில பகுதிகளில் வாக்களிக்க வரும் மக்களை அ.தி.மு.க.வுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று அங்குள்ள முகவர்கள் மிரட்டியுள்ளனர். சிலர் வாக்காளர்களின் கைகளைப் பற்றி அ.தி.மு.க. சின்னத்தில் வாக்களிக்க வைத்துள்ளனர்.

            வாக்குச் சாவடியிலிருந்த அதிகாரிகளோ, அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த காவலர்களோ இதை கண்டுகொள்ளவில்லை. இந்த முறைகேடுகள் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தேர்தல் ஆணையர்  சோ.அய்யர், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் திரிபாதி ஆகியோருக்கு புகார் மனுக்கள் அனுப்பப்பட்டும் எந்தப் பயனும் ஏற்படவில்லை. மாநகராட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியினர் பெருமளவில் முறைகேடு செய்வார்கள் என்ற ஐயத்தில்தான் தேர்தலை முறையாக நடத்தும்படி தேர்தல் ஆணையத்திற்கு ஆணையிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 

            அதன் அடிப்படையில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செயல்படுத்தப்படவில்லை. சென்னையின் பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் வீடியோ மூலம் வாக்குப்பதிவு படம்பிடிக்கப்படவில்லை. இவற்றையெல்லாம் பார்க்கும்போது தேர்தல் ஆணையமும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக நடந்து கொண்டிருப்பது உறுதியாகிறது. மாநகராட்சித் தேர்தல் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவிருக்கும் நிலையில், மீதமுள்ள நேரத்திலாவது வாக்குப்பதிவு முறையாக நடப்பதை உறுதி செய்ய தேர்தல் ஆணையரும், சென்னை மாநகரக் காவல்துறை ஆணையரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இவர்கள் மீது நீதிமன்றம் மூலம் சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

மக்களுக்கு நேர்மையாக சேவை செய்ய உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.மக. வேட்பாளர்களுக்கு ஒரு வாய்ப்பு அளியுங்கள்: ஜி.கே.மணி வேண்டுகோள்

சேலம்:

        உள்ளாட்சியில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் நேர்மையாக சேவை செய்ய பயிற்சியளித்து அனுப்புவோம். உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க.வுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று மாநில தலைவர் ஜி.கே.மணி வேண்டுகோள் விடுத்து உள்ளார். 
இது தொடர்பாக மாநில தலைவர் ஜி.கே.மணி  வெளியிட்டு உள்ள அறிக்கை:

           தற்போது நடைபெற உள்ள
தேர்தல் நாடாளுமன்ற, சட்டமன்ற பொது தேர்தல் அல்ல. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான தேர்தலும் அல்ல. பொதுமக்களின் அடிப்படை தேவைகளை, அன்றாட பிரச்சினைகளை நிறைவேறுவதற்கு உரிய தேர்தல். மத்திய ஆட்சி, மாநில ஆட்சி ஆகியவற்றை போல் உள்ளாட்சி ஒரு அரசாங்க தகுதியுடன் கூடுதல் அதிகாரம், தேவையான நிதி ஆதாரங்களுடன் செயல்படும் நிர்வாக அமைப்பாக இருக்க வேண்டும். 
            மத்திய அரசு ஒரு அடுக்கு, மாநில அரசு ஒரு அடுக்கு, உள்ளாட்சி அரசு ஒரு அடுக்கு என்ற மூன்று அடுக்கு அரசு என்ற நிலை உருவானால்தான் உள்ளாட்சியை நல்லாட்சியாக அதிக அதிகாரங்களுடன் போதுமான அளவு நிதி ஆதாரங்களுடன் நிர்வாகம் செய்ய முடியும். அதற்காக குரல் கொடுத்து போராடி வரும் கட்சிதான் பாட்டாளி மக்கள் கட்சி. உள்ளாட்சியில் வெற்றி பெறும் பா.ம.க. பிரதிநிதிகளுக்கு தைலாபுரம் தோட்டம் பா.ம.க. அரசியல் பயிலரங்கத்தில் தலைமைப்பண்புகள், ஆளுமை பண்புகள், குழு இயக்கவியல், சாதனையாளர் என்பது போன்ற தலைப்புகளில் பயிற்சி கொடுக்கப்படும். 
           சுருக்கமாக சொன்னால் இது என் நாடு, என் நாட்டு மக்கள், என் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் என்னால் இயன்ற அளவு சேவை நோக்கத்துடன், அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என்று பயிற்சி கொடுத்து பொறுப்பேற்க செய்வோம்.   பா.ம.க. உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்காமல் உண்மையாகவும், நேர்மையாகவும் சேவை செய்யவும் பயிற்சியளித்து அனுப்புவோம். எனவே கட்சி வித்தியாசம் பாராமல், உள்ளாட்சி தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு வாய்ப்பினை தாருங்கள்.
             ஒரு மாற்றத்தை கொடுங்கள்.  விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், வியாபாரிகள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள், படித்தவர்கள், பண்பாளர்கள், தொழில்முனைவோர் என எல்லா தரப்பினரும் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் அனைத்து பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கொடுங்கள்.

          மாம்பழம் சின்னத்தில் வாக்களியுங்கள். வெற்றி பெற செய்யுங்கள். உள்ளாட்சியில் பா.ம.க.வுக்கு ஒரு வாய்ப்பினை தாருங்கள் என அனைத்து வாக்காளர்களையும் பணிவுடன் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அவர் கூறி உள்ளார்.   

சேலம் மாநகராட்சி பா.ம.க. மேயர் வேட்பாளர் இரா.அருளை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பிரசாரம்



 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/e6c046c6-8ea7-4864-960e-396bc791dfa1_S_secvpf.gif
 
சேலம்:

        சேலம் மாநகராட்சி மேயர் பா.ம.க. வேட்பாளராக மாநில இளைஞர் அணி செயலாளர் இரா.அருள் நிறுத்தப்பட்டு உள்ளார். இவரை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர்   டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று சேலம் வந்து பிரசாரம் செய்தார்.

அப்போது முன்னாள் மத்திய அமைச்சர்   டாக்டர் அன்புமணி ராமதாஸ்
பேசியது:-

         எங்களது வேட்பாளர்கள் சொன்னதை செய்து தருவார்கள். உங்களுக்காக உழைக்க மேயர் வேட்பாளரான இரா.அருளுக்கு வாக்களித்து அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள். மாறி மாறி திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போட்டீர்கள். அவர்கள் ஏதும் செய்து தரவில்லை. அவர்கள் ஏதும் சாதிக்கவில்லை. எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்.  நாங்கள் சாதித்து காட்டுகிறோம். அவர்கள் வசனம் மட்டும் பேசி சென்று விடுவார்கள். ஆனால் நாங்கள் சொன்னதை செய்து தந்து பாராட்டு பெறுவோம். சேலம் திருமணிமுத்தாற்றில் முன்பு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இதில் மக்கள் குளிப்பார்கள் என கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் இந்த ஆற்றின் இன்றைய நிலை என்ன? இதை நாங்கள் மாற்றி காட்டி பழைய நிலைக்கு கொண்டு வருவோம்.

             சுத்தம் சுகாதாரத்திற்கு முன்னுரிமை தருவோம்.சேலத்தை பசுமை நகராக்க ஒரு வாய்ப்பு தாருங்கள். கொசுவை முற்றிலும் ஒழிப்போம், இந்த ஒரு முறை பா.ம.க.விற்கு வாய்ப்பு தந்து ஓட்டு போடுங்கள். நாங்கள் நல்ல நல்ல திட்டங்களை கொண்டு வருவோம். முதலமைச்சர் ஜெயலலிதா மின்வெட்டு இல்லாமல் செய்வோம் என்றார். இப்போது மின் விட்டு இல்லாமலா? உள்ளது. நாங்கள் இதை சரிசெய்வோம். திராவிட கட்சிகள்ஏதும் மக்களுக்கு செய்யவில்லை. எங்களுக்கு நீங்கள் ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள். மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்து காட்டி சாதனை படைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

                இந்த சுற்றுப்பயணத்தின் போது மாநில துணை பொது செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான மு.கார்த்தி, பசுமை தாயகம் மாநில துணை செயலாளர் சத்ரியசேகர், மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் எம்.பி.சதாசிவம், சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் கதிர்ராசரத்தினம், பகுதி செயலாளர் அண்ணாமலை, பூபாலன், பெரியசாமி, பழஅன்பு, ராஜமாணிக்கம், வடக்கு மாவட்ட செயலாளர் சாம்ராஜ், மாநகர் மாவட்ட தலைவர் அன்புக்கரசு, கவுன்சிலர் அருள், எஸ்.பி. ஆறுமுகம், சாம், பழ அன்பு, ராஜமாணிக்கம், திரிசங்கு, பூபதி, மார்க்கெட் சண்முகம், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
 

வடலூரில் உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களை ஆதரித்து ராமதாஸ் பிரசாரம்

வடலூர்:

வடலூரில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தேர்தல் பிரசாரம் செய்தார். 
 
அப்போது பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியது:-

          தமிழகத்தில் பா.ம.க. மட்டுமே வித்தியாசமான கட்சி ஆகும். இதுபோன்ற கட்சி தமிழகத்தில் இல்லை. அப்படிப்பட்ட கட்சி ஏதாவது இருந்தால் நானே அந்த கட்சியில் சேர்ந்துக்கொள்வேன். தமிழகம் முழுவதும் 12 மாவட்டங்களை சுற்றி வந்தேன். பா.ம.க.வுக்கு ஆதரவு பெருகி வருகிறது. திராவிடக்கட்சிகள் கொள்கை இல்லாத கட்சி. அந்த கட்சி மீண்டும் ஆண்டால் தமிழகம் மன்னிக்காது. இலவசங்களை கொடுத்து மக்களை முன்னேற்ற முடியாது. அப்படி முன்னேற்ற முடியும் என்று எந்த அறிஞர்களும் கூற வில்லை.

          இலவசமாக அரிசி, மிக்சி, கிரைண்டர் கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள். மக்களின் உழைப்பைத்தான் கெடுத்து விட்டார்கள். கிராமம் வளர்ச்சி அடைகிறது என்கிறார்கள். மக்கள் நகரங்களை நோக்கி செல்கிறார்கள். முன்பு கிராமத்தில் 80 சதவீதமாகவும், நகரம் 20 சதவீதமாகவும் இருந்தது. இன்றைக்கு இரண்டும் சமமாக ஆகிற வகையில் நகர்புற வளர்ச்சி அதிகமாக இருக்கிறது.  கிராமங்கள்தான் இந்தியாவின் முதுகெலும்பு என்பது மாறி இன்றைக்கு விளை நிலங்கள் பறிபோகிறது. எதிர்காலத்தில் இந்த நிலை மாற 2016ல் பா.ம.க. ஆட்சி அமைக்கும் வகையில் திட்டம் தீட்டி செயல்படுகிறோம். அதன் மூலம் தமிழகம் வளர்ச்சி பெறும். சாராயம் இல்லாத நகரம் கிராமம். அதன் மூலம் அமையும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார். 

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிகையை விடியோவில் பதிவு செய்ய வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

சென்னை:

           உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிகையை விடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக வியாழக்கிழமை  பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை: 

             உள்ளாட்சித் தேர்தல்களை துணை ராணுவப் பாதுகாப்புடன் நடத்த வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தின. இது பற்றிய முடிவை மாநிலத் தேர்தல் ஆணையம் இதுவரை எடுக்கவில்லை.  உள்ளாட்சித் தேர்தல் பணிகளைக் கண்காணிக்க 12 மாநிலங்களின் தேர்தல் ஆணையர்கள் பார்வையாளர்களாக அமர்த்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை ஒரு தேர்தல் பார்வையாளர்கூட வெளி மாநிலத்திலிருந்து வரவில்லை. 

             உள்ளாட்சித் தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது. எனவே, முறைகேடுகள் நடப்பதைத் தடுக்க வாக்கு எண்ணிக்கையை விடியோ பதிவு செய்ய வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பார்வையாளர்களாக அமர்த்த வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

ஜெயங்கொண்டம் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பா.ம.க வேட்பாளர்களை ஆதரித்து ராமதாஸ் பிரசாரம்

ஜெயங்கொண்டம்:


         ஜெயங்கொண்டம் நகர்மன்றத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு உள்ளாட்சிப் பதவிகளுக்கு போட்டியிடும் பாமக வேட்பாளர்களை ஆதரித்து, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். 

பாமகசார்பில் ஜெயங்கொண்டம் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் லட்சுமி ரங்கநாதன் உள்ளிட்ட கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து அண்ணா  சிலை அருகே பிரசாரத்தின் போது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியது:

              திராவிட இயக்கங்கள் 42 ஆண்டுகளாக மக்களைச் சுரண்டி, கொள்ளையடித்து வருகின்றன. உள்ளாட்சித் தேர்தல் மிகமிக முக்கியமானது. இதில் அதிக இடங்களிள் பாமக வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி போன்றவைகளை நிறைவேற்ற முடியும்.  இப்போது, மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதை 50 சதமாக மாற்ற வேண்டும். பாமக ஆட்சிக்கு வந்தால், உள்ளாட்சி அமைப்பின் அனைத்துப் பொறுப்புகளிலும் பெண்களே இருப்பார்கள் என்றார் அவர். பிரசாரத்தில் கட்சியின் தலைவர் கோ க. மணி, சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. குரு, கட்சியின் அரியலூர் மாவட்டச் செயலர் க. வைத்தி, பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


பழனி நகர்மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் வைரமுத்து தீவிர பிரசாரம்

பழனி:

         பழனியில் பா.ம.க சார்பில் நகர்மன்றத் தலைவர் வேட்பாளருக்கு வாக்களிக்கக் கோரி பிரசாரம் நடைபெற்றது. 

         பழனி நகர்மன்றத் தலைவர் பதவிக்கு பாமக சார்பில் போட்டியிடும் திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் வைரமுத்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.  பழனி நகர் பகுதியில் செவ்வாக்கிழமை காந்தி மார்க்கெட் பகுதியில் துவங்கி 1,2,3,13,15 மற்றும் 20,21,22,23,24 வார்டுகளில் வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் வைரமுத்து துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்குச் சேகரித்தார்.    

          நிகழ்ச்சியில் அவருடன் மாவட்ட தொழிற்சங்கத் தலைவர் ராஜரத்தினம், மல்லிகா வைரமுத்து, மகளிரணி பொருளாளர் மீனாட்சி, நகரத் தலைவர் சாகுல் ஹமீது, ஒன்றியச் செயலாளர் சவுந்திரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஜெயங்கொண்டம் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாமக வேட்பாளர் ஆர்.லட்சுமியின் வெற்றி வாய்ப்பு

ஜெயங்கொண்டம்:

           வேட்பாளர்கள் இறுதிப் பட்டியலின்படி, ஜெயங்கொண்டம் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு 9 பேர் போட்டியிடுகின்றனர். 

          ஜெயங்கொண்டம் நகர்மன்றத் தலைவர் பதவி, பெண்களுக்காக (பொது) ஒதுக்கப்பட்டதாகும். இந்தப் பதவிக்கு 15 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதில் 6 மனுக்கள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், வேட்பாளர்கள் இறுதிப் பட்டியலின்படி. இந்தப் பதவிக்கு 9 பேர் போட்டியிடுகின்றனர்.  

வேட்பாளர்கள் விவரம்

           ஆர். லட்சுமி (பாமக), 
           ஜெ. கலைவாணி (காங்கிரஸ்), 
           இ. கவியரசி (தமிழர் நீதிக் கட்சி), 
           எம். சீதா (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) 
           கே. பவானி (பாஜக), 
          ப. மீனாட்சி (விடுதலைச் சிறுத்தைகள்) 
          ச. மீனாள் (திமுக), க. ரோஜாரமணி (சுயே), 
          இரா. லட்சுமிகாந்தம் (அதிமுக).  

        

சிதம்பரம் நகர மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் பா.ம.க, வேட்பாளர் நாகவள்ளி தீவிர வாக்கு சேகரிப்பு

சிதம்பரம் :

          சிதம்பரம் நகர மன்ற தலைவர் மற்றும் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் போட்டி போட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால் நகரமே பரபரப்பாக காணப்படுகிறது. 

            சிதம்பரம் நகர மன்ற தலைவர் பதவிக்கு பா.ம.க., அ.தி.மு.க., - தி.மு.க., - காங்., - ம.தி.மு.க.,   - மா.கம்யூ., - வி.சி., லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த எட்டு வேட்பாளர்களும், 33 வார்டுகளில் 214 பேர் கவுன்சிலர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர். தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் சுறுசுறுப்படைந்து தீவிர ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ளனர். 

               பா.ம.க., நாகவள்ளிக்கு மாவட்டச் செயலர் வேணுபுவனேஸ்வரன், நகர செயலர் குமார் உள்ளிட்ட நிர்வாகிகளும், அ.தி.மு.க., நிர்மலாவிற்கு அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்டச் செயலர் அருண்மொழித்தேவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் வீதி வீதியாக ஓட்டு சேகரித்து வருகின்றனர். தி.மு.க., எழில்மதிக்கு நகர செயலர் செந்தில்குமார் தலைமையில் இளைஞரணி ஜவகர், அப்பு சந்திரசேகர், அவைத் தலைவர் தென்னவன் ஆறுமுகம், திருநாவுக்கரசு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஓட்டு சேகரிக்கின்றனர். காங்., செந்தில்வள்ளிக்கு முன்னாள் மாவட்டச் செயலர் ராதாகிருஷ்ணன், நகர தலைவர் வழக்கறிஞர் வேல்முருகன், லோக்சபா தொகுதி இளைஞர் காங்., சித்தார்த்தன், சட்டசபை தொகுதி இளைஞர் காங்., ரஜினி உள்ளிட்டோர் நகர வீதிகளில் ஓட்டு சேகரித்தனர். 

             மா.கம்யூ., வேட்பாளருக்கு மாநிலக்குழு உறுப்பினர் மூசா, மாவட்டக் குழு ராமச்சந்திரன், நகர செயலர் நடராஜன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும், ம.தி.மு.க., வேட்பாளர் ஜோதிலட்சுமிக்கு வழக்கறிஞர் மோகனசுந்தர், நகர செயலர் சீனுவாசன் உள்ளிட்டோர் ஓட்டு சேகரித்தனர். அதேப்போன்று கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களும் போட்டிபோட்டு ஓட்டு சேகரித்து வருவதால் கடந்த இரண்டு நாட்களாக சிதம்பரம் நகரம் பரபரப்பான நிலைக்கு மாறியுள்ளது.


சென்னை மாநகராட்சி பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி புஷ்பாநகர், மகாலிங்கபுரம், பகுதிகளில் வாக்கு சேகரிப்பு


 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/4490641e-d20f-4d26-b4be-eb835b8508ce_S_secvpf.gif
சென்னை:

         சென்னை மாநகராட்சி பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி புஷ்பாநகர், மகாலிங்கபுரம், பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று மாம்பழம் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார். 
அப்போது சென்னை மாநகராட்சி பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி பேசியது:-

          இத்தனை ஆண்டுகளாக 2 கட்சிகளுக்கு மாறி மாறி ஓட்டு போட்டீர்கள். ஒருத்தர் சிங்கார சென்னையை உருவாக்குவோம் என்றார். இன்னொருத்தர் எழில்மிகு சென்னையை உருவாக்குவோம் என்றார். ஒழுகாத வீடு, உடுத்த உடையெல்லாம் தருவோம் என்று வாக்குறுதி தந்தார்கள். நிறைவேற்றினார்களா?  குறுகிய சென்னையில் கூட குப்பை களை அகற்றி சுகாதாரத்தை கொடுக்கவில்லை. இனி கரேட்டர் சென்னையை எப்படி அழகுபடுத்துவார்கள்? ஆளுங்கட்சி ஆட்சிக்கு வந்தால்தால் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்ற தவறான பிரசாரத்தை செய்கிறார்கள். இதுவரை ஆளுங் கட்சி மேயர்கள் இருந்தபோது என்ன சாதித்தார்கள்?

                சில பாலங்கள், பூங்காக் களை உருவாக்கினால் போதுமா? மக்களின் அடிப் படை தேவைகள் பூர்த்தியாகி விடுமா? மெயின் ரோடுகள் நன்றாக உள்ளது. உட்புற பகுதிகள் பல இடங்களில் கிராமப்பகுதிகளை விட மோசமாக உள்ளது. எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். சென்னையின் முன்னேற்றத்துக்காக பல திட்டங்கள் வைத்து இருக்கிறேன். பள்ளிகளில் தரமான கட்டிடங்கள், தரமான கல்வி, சுமையில்லாத கல்வி, கட்டாய கல்வி, சுகாதார மான குடிநீர், நல்ல சாலைகள், குப்பை யில்லாத, கொசு ஆதிக்கம் இல்லாத சென்னையை உருவாக்குவேன். குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு களுக்கு வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்குவேன்.

            தமிழர் திருநாளில் ஏழைகள் வசிக்கும் குடிசை மாற்று வாரிய வீடுகள் வெள்ளையடித்து தரப்படும். நீங்க நல்லா இருக்க பா.ம.க.வுக்கு ஆதரவு தாருங்கள். மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்தால் சொன்னதை செய்து உங்களிடம் பாராட்டு பெறுவேன்.  இவ்வாறு அவர் பேசினார்.

ஆழ்வார் திருநகரி பேரூராட்சியில் போட்டியிடும் பா.ம.க மாநில கொள்கை விளக்க அணித் தலைவர் வியனரசு உண்ணாவிரதப் போராட்டம்

            ஆழ்வார் திருநகரி பேரூராட்சியில் போட்டியிடும் பா.ம.க மாநில கொள்கை விளக்க அணித் தலைவர் வியனரசு இன்று காலை 9 மணி அளவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். தேர்தல் அதிகாரிகள் அதிமுகவுக்கு சாதகமாக செயல்படுவதாகக் கூறி, தேர்தல் அதிகாரியைக் கண்டித்து, பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள கிராமச்சாவடியில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டார். 


மயிலாடுதுறையில் பா.ம.க வேட்பாளர்களை ஆதரித்து ராமதாஸ் பிரசாரம்

மயிலாடுதுறை:

          அதிமுகவிற்கு ஆதரவாக மாநிலத் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று குற்றம்சாட்டினார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.   

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை  பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்  அளித்த பேட்டி:    

            ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவரின் தண்டனைக்கு எதிராக தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவர்களை காப்பாற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடியரசுத் தலைவருக்கு வெளிப்படையாகக் கடிதம் எழுத வேண்டும்.   சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி என்பவரின் கட்டுப்பாட்டில் இருந்த ரூ. 200 கோடி மதிப்பிலான நிலம் திமுக ஆட்சியில் மீட்கப்பட்டதாகவும், அந்த இடம் தற்போது தாரை வார்க்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியிருக்கும் புகார் குறித்து முதல்வர் ஜெயலலிதா பதிலளிக்க வேண்டும்.  

            தமிழகத்தில் மின் தட்டுப்பாடு நிலவுகிறது. மும்முனை மின்சாரம் குறைந்த அளவிலேயே விநியோகம் செய்யப்படுகிறது.   நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல் செய்யாமல் திருப்பி அனுப்புவதாகவும் புகார்கள் வருகின்றன. இதுகுறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.   மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க 10 ஆண்டுகளுக்கு முன்னரே திட்டம் தயார் செய்யப்பட்டும், இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. இதுகுறித்தும் மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.   

          மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரியை அமைப்பதற்கும், மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கவும் தமிழக அரசை பாமக வலியுறுத்துகிறது.   உள்ளாட்சித் தேர்தலில் பாமக போட்டியிடாத இடங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போட்டியிட்டால், அந்தக் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கப்படும். எந்தக் காரணத்தைக் கொண்டும் திராவிடக் கட்சிகளுக்கு பாமகவின் ஆதரவு கிடையாது.   

           கடந்த திமுக ஆட்சியில் 40 பேரும், அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற 5 மாதங்களில் 8 பேரும் போலீஸ் காவலில் கொல்லப்பட்டுள்ளனர்.    தேர்தல் ஆணையம் அதிமுகவிற்கு ஆதரவாகவே செயல்படுகிறது என்றார் ராமதாஸ்.   கட்சியின் மாநிலத் தலைவர் ஜி. கே. மணி, மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ஏ. ஐயப்பன், முன்னாள் துணைப் பொதுச் செயலர் மு.க. பெரியசாமி,  மாநில துணைச் செயலர் க. அகோரம், மாநில செயற்குழு உறுப்பினர் த. கலியமூர்த்தி, ஒருங்கிணைந்த நாகை மாவட்ட அமைப்பு செயலர் தங்க. அய்யாசாமிஆகியோர் உடனிருந்தனர்.