திண்டிவனம் நகராட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திண்டிவனம் நகராட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திண்டிவனம் காந்திசிலை அருகில் பாமக வேட்பாளர்களை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இறுதி கட்ட பிரசாரம்

திண்டிவனம்:

            திராவிடக் கட்சிகளை வேரறுப்பதுதான் பாமகவின் தற்போதைய கொள்கை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

திண்டிவனம் காந்திசிலை அருகில் திங்கள்கிழமை நடைபெற்ற இறுதி கட்ட பிரசாரத்தில் பாமக நகராட்சித் தலைவர் பதவி வேட்பாளர் மற்றும் உறுப்பினர் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து ராமதாஸ் பேசியது: 

          ""திண்டிவனம்நகரில் இது வரை எந்த நல்ல திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. திராவிட கட்சிகள் 44 ஆண்டுகள் நகராட்சியை ஆட்சி செய்துள்ளன. நல்ல திட்டங்கள் ஏதேனும் அவர்கள் செயல்படுத்தியிருந்தால் நானும் அவர்களுக்கே வாக்களிப்பேன். ஆனால் இது வரை அவர்களால் ஏமாற்றமே கிடைத்துள்ளது. புதிய திண்டிவனம் நகரத்தை பாமக உருவாக்கும் என நான் பல முறை உங்களுக்கு வாக்குறுதி அளித்தும் வாக்காளர்கள் அதைக் கேட்கவில்லை. இப்போது நகரில் நல்ல குடிநீர் மற்றும் அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்பட்டாமல் உள்ளன. மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். 

            பாமக நகராட்சித் தலைவர் வேட்பாளர் மலர்சேகர் (எ) குணசேகரனை வெற்றி பெற செய்தால் என்னுடைய நேரடி பார்வையில் அனைத்து வளர்ச்சி திட்டங்களும் துரிதமாக நடைபெறும். உங்களுக்கு பணி செய்ய பாமக சார்பில் நல்லவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்து அவர்களது சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பாமக-வின் தற்போதைய கொள்கை திராவிடக் கட்சிகளை வேரறுப்பதுதான். தமிழ்நாட்டில் 2016-ல் பாமக ஆட்சி அமைக்கும்'' என்றார் ராமதாஸ்.நகரச் செயலர் ஜெயராஜ் வரவேற்புரை வழங்கினார். மாவட்ட முன்னாள் பாமக செயலர் ஏழுமலை, மாநில துணைத் தலைவர் செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

விழுப்புரம், திண்டிவனம் நகர் மன்ற கவுன்சிலர் பதவிக்கான பா.ம.க., வேட்பாளர் பட்டியல்


செஞ்சி : 

        விழுப்புரம், திண்டிவனம் நகர் மன்ற கவுன்சிலர் பதவிக்கான பா.ம.க., வேட்பாளர் பட்டியலை மாநில துணை பொது செயலாளர் செந்தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ளார்.

வேட்பாளர் பெயர் விவரம், நகராட்சி மற்றும் வார்டு வாரியாக:

விழுப்புரம் : 

1- ஆனந்தன், 
2- மணி, 
4-விஜயன், 
5-இளங்கோ, 
6-முகம்மது ஹக்கீம், 
7-கலியபெருமாள், 
11-சக்தி, 
12-வெங்கடேஷ், 
13- இளங்கோவன், 
22- மீனா, 
25-ஸ்ரீராம், 
27-வெங்கடாஜலபதி, 
28- துரைராஜ், 
34-வேலுச்சாமி, 
35-தமிழ்ச்செல்வன்,
39-ஆதிலட்சுமி, 
40-சிவகாமி, 
41- சுதா, 
42- சிற்றரசன்.

திண்டிவனம் : 

1- கோவிந்தம்மாள், 
4-உமாபதி, 
5-ராஜசேகர், 
6- மகேஸ்வரி, 
7-செந்தில் குமார், 
8-அன்பழகன், 
9-சரவணன், 
12-ஜெயராஜ், 
13-ரேணுகாதேவி ,
14-சிவசங்கரி, 
15-சுகுமார், 
16-மதியழகன், 
18-ஞானாம்பாள்,
19- பத்மாவதி, 
20-வெங்கடேஸ்வரன், 
21-முத்துகுமரன், 
22-முரளிதாஸ், 
23-தேவிகா, 
24-சிவராஜ், 
25-ராஜேஷ், 
27-ஷபி, 
28-செல்வக்குமார், 
29-சின்னசாமி, 
30-சந்திரன், 
31-செந்தில் என்கிற வாசுதேவன், 
33- மதுராம்பாள்.

                இதில் விடுபட்டுள்ள கவுன்சிலர் பதவிக்கான வேட்பாளர்கள் பின்னர் அறிவிக்கப்படுவார்கள் என செந்தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். 


திண்டிவனம் நகர மன்ற தலைவர் பதவிக்கு பா.ம.க.வேட்பாளர் குணசேகரன் வாழ்க்கை வரலாறு

திண்டிவனம்:

          திண்டிவனம் சேர்மன் பதவிக்கு பா.ம.க.,வேட்பாளராக மாவட்ட செயலாளர் குணசேகரன் அறிவிக்கப்பட்டுள்ளார். 

            விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் குணசேகரன் 1967ம் ஆண்டு ஜூன் மாதம் 1ம் தேதி பிறந்தார். இவர் பா.ம.க., துவங்கியதிலிருந்தே கட்சியில் உள்ளார். மாவட்ட துணைத் தலைவர், மாவட்ட துணை செயலாளர், நகர செயலாளர் போன்ற பதவிகளில் இருந்தார். பூ வியாபாரியான இவரது மனைவி சசிகலா. முதல் மகள் உஷா தேவி 10ம் வகுப்பும், இரண்டாவது மகள் ஹேமலதா 8ம் வகுப்பும், மகன் யுவராஜ் 6ம் வகுப்பும் படிக்கின்றனர்.