பா.ம.க.வேட்பாளர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பா.ம.க.வேட்பாளர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சென்னை பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே. மூர்த்தி சார்பில் உயர்நீதி மன்றத்தில் மனு

சென்னை:

         
பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே. மூர்த்தி  சார்பில் மூத்த வக்கீல் பி. வில்சன், வக்கீல்கள் என். ஜோதி, கே. பாலு, தண்டபாணி உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி சிவஞானம் கியோர் முன் ஜராகி முறையீடு செய்தனர்.

அப்போது வக்கீல் பி. வில்சன், வக்கீல்கள் என். ஜோதி, கே. பாலு, தண்டபாணி
கூறியது:- 

              சென்னை மாநகராட்சி தேர்தலில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதை தடுக்க மாநில தேர்தல்
ணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. ளுங்கட்சிக்கு தரவாக தேர்தல் ணையாளர் சோ. அய்யர் செயல்பட்டுள்ளார். ஐகோர்ட்டு உத்தரவை மாநில தேர்தல் ணையம் முழுமையாக செயல்படுத்தவில்லை. கவே சோ. அய்யர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், தேர்தல் ணைய செயலாளர் சேவியர் கிறிஸ்சோ நாயகர் கியோர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரவேண்டும்.

            வன்முறை சம்பவங்கள் குறித்து தேர்தல்
ணையம், காவல்துறையிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. வீடியோ படம் எடுக்கப்படாத வாக்குச்சாவடிகளில் கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளது.   18 வார்டுகளில் வாக்குச்சாவடிகள் கைப்பற்றுதல் சம்பவம் நடந்துள்ளன. இதனால் மக்கள் பீதி அடைந்து வாக்களிக்க முன் வரவில்லை. ஆகவே ஓட்டு எண்ணிக்கைக்கு தடை விதிக்கவேண்டும். சென்னை மாநகராட்சிக்கு மறுதேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்.  இவ்வாறு அவர்கள் முறையிட்டனர்.  

            இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இது குறித்து மனு தாக்கல் செய்யும்படியும், அந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் தெரிவித்தனர்.

ஜெயங்கொண்டம் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பா.ம.க வேட்பாளர்களை ஆதரித்து ராமதாஸ் பிரசாரம்

ஜெயங்கொண்டம்:


         ஜெயங்கொண்டம் நகர்மன்றத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு உள்ளாட்சிப் பதவிகளுக்கு போட்டியிடும் பாமக வேட்பாளர்களை ஆதரித்து, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். 

பாமகசார்பில் ஜெயங்கொண்டம் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் லட்சுமி ரங்கநாதன் உள்ளிட்ட கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து அண்ணா  சிலை அருகே பிரசாரத்தின் போது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியது:

              திராவிட இயக்கங்கள் 42 ஆண்டுகளாக மக்களைச் சுரண்டி, கொள்ளையடித்து வருகின்றன. உள்ளாட்சித் தேர்தல் மிகமிக முக்கியமானது. இதில் அதிக இடங்களிள் பாமக வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி போன்றவைகளை நிறைவேற்ற முடியும்.  இப்போது, மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதை 50 சதமாக மாற்ற வேண்டும். பாமக ஆட்சிக்கு வந்தால், உள்ளாட்சி அமைப்பின் அனைத்துப் பொறுப்புகளிலும் பெண்களே இருப்பார்கள் என்றார் அவர். பிரசாரத்தில் கட்சியின் தலைவர் கோ க. மணி, சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. குரு, கட்சியின் அரியலூர் மாவட்டச் செயலர் க. வைத்தி, பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


திண்டுக்கல் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் சுப. கோபாலகிருஷ்ணன் வாக்கு சேகரிப்பு

திண்டுக்கல்:

            வரும் அக். 19 ஆம் தேதி திண்டுக்கல் நகராட்சிக்கான தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, பா.ம.க. தனது பிரசாரத்தை முதன்முதலாக புதன்  கிழமை தொடங்கியது. 

            திண்டுக்கல் நகர்மன்றத்தில் உள்ள 48 வார்டுகளுக்கும், நகர்மன்றத் தலைவர் பதவிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சுப. கோபாலகிருஷ்ணனும், வார்டு கவுன்சிலர் பதவிக்கு 16 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.  

         வெள்ளை விநாயகர் கோவில் அருகே நகர்மன்றத் தலைவர் சுப.கோபாலகிருஷ்ணன் பிரசாரத்தைத் தொடங்கினார். கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி, பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாக்குகளைச் சேகரித்தனர்.  இதில் கிழக்கு மாவட்டச் செயலாளர் பரசுராமன், நகரச் செயலாளர் சண்முகம், நகரத் தலைவர் யூசூப் அன்சாரி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

 Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

பழனி நகர்மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் வைரமுத்து தீவிர பிரசாரம்

பழனி:

         பழனியில் பா.ம.க சார்பில் நகர்மன்றத் தலைவர் வேட்பாளருக்கு வாக்களிக்கக் கோரி பிரசாரம் நடைபெற்றது. 

         பழனி நகர்மன்றத் தலைவர் பதவிக்கு பாமக சார்பில் போட்டியிடும் திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் வைரமுத்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.  பழனி நகர் பகுதியில் செவ்வாக்கிழமை காந்தி மார்க்கெட் பகுதியில் துவங்கி 1,2,3,13,15 மற்றும் 20,21,22,23,24 வார்டுகளில் வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் வைரமுத்து துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்குச் சேகரித்தார்.    

          நிகழ்ச்சியில் அவருடன் மாவட்ட தொழிற்சங்கத் தலைவர் ராஜரத்தினம், மல்லிகா வைரமுத்து, மகளிரணி பொருளாளர் மீனாட்சி, நகரத் தலைவர் சாகுல் ஹமீது, ஒன்றியச் செயலாளர் சவுந்திரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஜெயங்கொண்டம் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாமக வேட்பாளர் ஆர்.லட்சுமியின் வெற்றி வாய்ப்பு

ஜெயங்கொண்டம்:

           வேட்பாளர்கள் இறுதிப் பட்டியலின்படி, ஜெயங்கொண்டம் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு 9 பேர் போட்டியிடுகின்றனர். 

          ஜெயங்கொண்டம் நகர்மன்றத் தலைவர் பதவி, பெண்களுக்காக (பொது) ஒதுக்கப்பட்டதாகும். இந்தப் பதவிக்கு 15 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதில் 6 மனுக்கள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், வேட்பாளர்கள் இறுதிப் பட்டியலின்படி. இந்தப் பதவிக்கு 9 பேர் போட்டியிடுகின்றனர்.  

வேட்பாளர்கள் விவரம்

           ஆர். லட்சுமி (பாமக), 
           ஜெ. கலைவாணி (காங்கிரஸ்), 
           இ. கவியரசி (தமிழர் நீதிக் கட்சி), 
           எம். சீதா (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) 
           கே. பவானி (பாஜக), 
          ப. மீனாட்சி (விடுதலைச் சிறுத்தைகள்) 
          ச. மீனாள் (திமுக), க. ரோஜாரமணி (சுயே), 
          இரா. லட்சுமிகாந்தம் (அதிமுக).  

        

கெங்கைகொண்டான் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாமக வேட்பாளர் க.சக்திவேலின் வெற்றி வாய்ப்பு

நெய்வேலி:

          நெய்வேலியை அடுத்துள்ள கெங்கைகொண்டான் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு பாமக சார்பில் இப்போதைய தலைவர் க.சக்திவேல்,  திமுக சார்பில் தற்போதைய துணைத்தலைவர் சதாசிவம், அதிமுக சார்பில் வழக்குரைஞர் மனோகர், பாஜக சார்பில் கண்ணன், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் மார்ட்டின்,தேமுதிக சார்பில் கே.ஆனந்தன், காங்கிரஸ் சார்பில் திருஞானசம்பந்தம் மற்றும் இரு சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

             15 வார்டுகள் கொண்ட இப் பேரூராட்சியில், 6 மற்றும் 7-வது  வார்டு மக்கள், என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணிகளால் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர். இருப்பினும் இவ்விரு  வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், தலைவர் பொறுப்புக்கு போட்டியிடும் வேட்பாளர்களில் இப்போதைய தலைவர் க.சக்திவேல், தனது கடந்த கால  செயல்பாடுகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்கிறார். பாமக தனித்து போட்டியிடுவதால் இளைஞர்களும்  இவருடன் சென்று தீவிர வாக்கு சேகரிக்கின்றனர்.

சிதம்பரம் நகர மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் பா.ம.க, வேட்பாளர் நாகவள்ளி தீவிர வாக்கு சேகரிப்பு

சிதம்பரம் :

          சிதம்பரம் நகர மன்ற தலைவர் மற்றும் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் போட்டி போட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால் நகரமே பரபரப்பாக காணப்படுகிறது. 

            சிதம்பரம் நகர மன்ற தலைவர் பதவிக்கு பா.ம.க., அ.தி.மு.க., - தி.மு.க., - காங்., - ம.தி.மு.க.,   - மா.கம்யூ., - வி.சி., லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த எட்டு வேட்பாளர்களும், 33 வார்டுகளில் 214 பேர் கவுன்சிலர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர். தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் சுறுசுறுப்படைந்து தீவிர ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ளனர். 

               பா.ம.க., நாகவள்ளிக்கு மாவட்டச் செயலர் வேணுபுவனேஸ்வரன், நகர செயலர் குமார் உள்ளிட்ட நிர்வாகிகளும், அ.தி.மு.க., நிர்மலாவிற்கு அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்டச் செயலர் அருண்மொழித்தேவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் வீதி வீதியாக ஓட்டு சேகரித்து வருகின்றனர். தி.மு.க., எழில்மதிக்கு நகர செயலர் செந்தில்குமார் தலைமையில் இளைஞரணி ஜவகர், அப்பு சந்திரசேகர், அவைத் தலைவர் தென்னவன் ஆறுமுகம், திருநாவுக்கரசு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஓட்டு சேகரிக்கின்றனர். காங்., செந்தில்வள்ளிக்கு முன்னாள் மாவட்டச் செயலர் ராதாகிருஷ்ணன், நகர தலைவர் வழக்கறிஞர் வேல்முருகன், லோக்சபா தொகுதி இளைஞர் காங்., சித்தார்த்தன், சட்டசபை தொகுதி இளைஞர் காங்., ரஜினி உள்ளிட்டோர் நகர வீதிகளில் ஓட்டு சேகரித்தனர். 

             மா.கம்யூ., வேட்பாளருக்கு மாநிலக்குழு உறுப்பினர் மூசா, மாவட்டக் குழு ராமச்சந்திரன், நகர செயலர் நடராஜன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும், ம.தி.மு.க., வேட்பாளர் ஜோதிலட்சுமிக்கு வழக்கறிஞர் மோகனசுந்தர், நகர செயலர் சீனுவாசன் உள்ளிட்டோர் ஓட்டு சேகரித்தனர். அதேப்போன்று கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களும் போட்டிபோட்டு ஓட்டு சேகரித்து வருவதால் கடந்த இரண்டு நாட்களாக சிதம்பரம் நகரம் பரபரப்பான நிலைக்கு மாறியுள்ளது.


மயிலாடுதுறையில் பா.ம.க வேட்பாளர்களை ஆதரித்து ராமதாஸ் பிரசாரம்

மயிலாடுதுறை:

          அதிமுகவிற்கு ஆதரவாக மாநிலத் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று குற்றம்சாட்டினார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.   

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை  பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்  அளித்த பேட்டி:    

            ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவரின் தண்டனைக்கு எதிராக தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவர்களை காப்பாற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடியரசுத் தலைவருக்கு வெளிப்படையாகக் கடிதம் எழுத வேண்டும்.   சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி என்பவரின் கட்டுப்பாட்டில் இருந்த ரூ. 200 கோடி மதிப்பிலான நிலம் திமுக ஆட்சியில் மீட்கப்பட்டதாகவும், அந்த இடம் தற்போது தாரை வார்க்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியிருக்கும் புகார் குறித்து முதல்வர் ஜெயலலிதா பதிலளிக்க வேண்டும்.  

            தமிழகத்தில் மின் தட்டுப்பாடு நிலவுகிறது. மும்முனை மின்சாரம் குறைந்த அளவிலேயே விநியோகம் செய்யப்படுகிறது.   நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல் செய்யாமல் திருப்பி அனுப்புவதாகவும் புகார்கள் வருகின்றன. இதுகுறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.   மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க 10 ஆண்டுகளுக்கு முன்னரே திட்டம் தயார் செய்யப்பட்டும், இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. இதுகுறித்தும் மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.   

          மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரியை அமைப்பதற்கும், மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கவும் தமிழக அரசை பாமக வலியுறுத்துகிறது.   உள்ளாட்சித் தேர்தலில் பாமக போட்டியிடாத இடங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போட்டியிட்டால், அந்தக் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கப்படும். எந்தக் காரணத்தைக் கொண்டும் திராவிடக் கட்சிகளுக்கு பாமகவின் ஆதரவு கிடையாது.   

           கடந்த திமுக ஆட்சியில் 40 பேரும், அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற 5 மாதங்களில் 8 பேரும் போலீஸ் காவலில் கொல்லப்பட்டுள்ளனர்.    தேர்தல் ஆணையம் அதிமுகவிற்கு ஆதரவாகவே செயல்படுகிறது என்றார் ராமதாஸ்.   கட்சியின் மாநிலத் தலைவர் ஜி. கே. மணி, மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ஏ. ஐயப்பன், முன்னாள் துணைப் பொதுச் செயலர் மு.க. பெரியசாமி,  மாநில துணைச் செயலர் க. அகோரம், மாநில செயற்குழு உறுப்பினர் த. கலியமூர்த்தி, ஒருங்கிணைந்த நாகை மாவட்ட அமைப்பு செயலர் தங்க. அய்யாசாமிஆகியோர் உடனிருந்தனர்.

உள்ளாட்சி தேர்தலில் ஈரோட்டில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/3b085abc-f5be-4781-8db4-d4ea4c372429_S_secvpf.gif
 
ஈரோடு:

          பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்றது. இதில் பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசினார்.

அப்போது பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
கூறியது:-

           இந்த உள்ளாட்சி தேர்தல் ஊழல் கட்சிகளுக்கும், நல்ல, நேர்மையான, வித்தியாசமான கட்சியான பாட்டாளி மக்கள் கட்சிக்கும் இடையே நடக்கும் போட்டியாகும். தமிழ்நாட்டை கடந்த 44 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஆட்சி செய்து சின்னாபின்னமாக்கி சீரழித்து விட்டன. இந்த திராவிட கட்சிகளின் அத்தியாயத்தை முடிக்கவே பா.ம.க. தனித்து போட்டியிடுகிறது.  இந்த முடிவை சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு எடுத்திருந்தால் 50 முதல் 60 வரை சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ம.க.வுக்கு கிடைத்திருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.   இனிமேல் எந்த காலத்திலும் திராவிட கட்சிகளுடன் ஒட்டும் கிடையாது. உறவும் கிடையாது. 
 
          இந்த கட்சிகளை வேரறுத்து, ஒழித்து தமிழகத்தில் இந்த கட்சிகள் இல்லாத நிலையை ஏற்படுத்துவதே பா.ம.க.வின் வருங்கால செயல்பாடுகளாக அமையும். திராவிட கட்சிகளுக்கு என்று ஒரு கொள்கையும் கிடையாது.  இவர்களின் ஒரே கொள்கை கொள்ளையடிப்பதுதான். இளைஞர்களுக்கு மதுவை கொடுத்து 4 தலைமுறைகளாக இந்த நாட்டை சீரழித்து விட்டார்கள். இலவசங்களை கொடுத்து மக்களின் சுயமரியாதையை இழக்க செய்து விட்டார்கள்.   மிக்சி, கிரைண்டர் வழங்கு வதால் நாட்டில் வளர்ச்சி ஏற்பட்டு விடாது. வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்றால் தரமான கல்வியும், தரமான இலவச மருத்துவமும் கிடைக்க வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள்.

             44 ஆண்டுகள் தமிழகத்தை ஆளும் திராவிட கட்சிகளால் ஏன் வறுமையை ஒழிக்க முடியவில்லை. முதலில் மக்களின் வறுமையை ஒழிப்போம் என்று கூறியவர்கள் தற்போது வறுமைக்கு என்ற அளவுகோல் என்று தெரியவில்லை என்று கூறுகிறார்கள்.   திராவிட கட்சிகளும், அவர்களின் குடும்பத்தினரும் நடத்தும் தொலைக்காட்சிகளில் தமிழ் கலாச்சாரம் சீரழிக்கப்படுகிறது. தமிழகத்தை சீரழித்த இவர்கள் மீது நீதிமன்றம் தண்டனை கொடுப்பது உடனே முடியாது. மக்கள் மன்றம் தான் தண்டனை கொடுக்க வேண்டும்.  திராவிட கட்சிகளை இந்த மண்ணில் இருந்து வேரறுக்கும் பொறுப்பை தமிழக மக்கள் எங்களிடம் ஒப்படைத்து உள்ளனர். எனவே பா.ம.க.வுக்கு நீங்கள் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.  

பின்னர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறும்போது, தயாநிதிமாறன் மற்றும் கலாநிதிமாறன் ஆகியோரின் வீடுகளில் சி.பி.ஐ.சோதனை செய்யும் நடவடிக்கை என்பது காலதாமதமான நடவடிக்கை. சட்டம் தன் கடமையை செய்யும் என்றார். கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மாநில துணை பொதுச்செயலாளர் மகேந்திரன், மாவட்ட செயலாளர்கள் ஆறுமுகம் வடிவேல், வன்னியர் சங்க செயலாளர் ஸ்டீல்ரவி, மாநில துணை தலைவர் பரமசிவம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திட்டக்குடி பேரூராட்சி பா.ம.க. வேட்பாளர் வழக்கறிஞர் முருகேசனைஆதரித்து மருத்துவர் கோவிந்தசாமி வாக்கு சேகரிப்பு

திட்டக்குடி : 

        திட்டக்குடி பேரூராட்சி பா.ம.க., வேட்பாளரை ஆதரித்து டாக்டர் கோவிந்தசாமி ஓட்டு சேகரித்தார்.

           திட்டக்குடி பேரூராட்சித் தலைவர் பதவிக்கு பா.ம.க., சார்பில் போட்டியிடும் வழக்கறிஞர் முருகேசனையும், வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் சாவித்திரி, சின்னசாமி, ரங்கநாதன் உள்ளிட்ட 9 வேட்பாளர்களையும் ஆதரித்து பா.ம.க., மாநில சொத்து பாதுகாப்புக்குழு தலைவரும் விருத்தாசலம் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான டாக்டர் கோவிந்தசாமி ஓட்டு சேகரித்தார்.

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பேசுகையில், 

             "திட்டக்குடியில் பாதாள சாக்கடைத் திட்டத்தினை நிறைவேற்றுவோம். வணிகர்களின் உற்ற நண்பனாய் பா.ம.க., விளங்கி வருகிறது. ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தை வழங்குவோம்' என்றார். கூட்டத்தில் மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் தனபால், நகர செயலர் சரவணன், துணை செயலர் அசோக், ஒன்றிய செயலர் பழனிவேல் மற்றும் நிர்வாகிகள் ஒன்பது வார்டு வேட்பாளர்கள் உடனிருந்தனர்.

உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாநகராட்சியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்: பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் பங்கேற்பு

சேலம்:

             சேலம்கோட்டை மைதானத்தில் சேலம் மாநகராட்சி மேயர் பா.ம.க. வேட்பாளர் இரா.அருள் மற்றும் 60டிவிசன் கவுன்சிலர் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சேலம் முன்னாள் எம்.எல்.ஏவும், மாநில துணை பொது செயலாளருமான மு.கார்த்தி தலைமை வகித்தார். மாநகர் மாவட்டசெயலாளர் கதிர்ராசரத்தினம் வரவேற்றார்.

           பசுமை தாயகம் மாநில துணை செயலாளர் சி.பெ.சத்ரியசேகர், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் எம்.பி.சதாசிவம், வடக்குமாவட்ட செயலாளர் சாம்ராஜ், மாநகர் மாவட்ட தலைவர் அன்புக்கரசு, வடக்கு மாவட்ட தலைவர் சித்தேஸ்வரன் உள்பட பலர் முன்னிலைவகித்தனர். கூட்டத்தில் வேட்பாளர்களை டாக்டர் ராமதாஸ் அறிமுகம்செய்து வைத்து பேசினார்.

அப்போது  டாக்டர் ராமதாஸ்
கூறியது:-

              பாமக போல் கொள்கை உள்ள கட்சி ஏதும் இல்லை. நல்ல கொள்கை உள்ள கட்சி பாமக. சேலத்திற்கு ரெயில்வே கோட்டம் கொண்டு வந்தோம். இதற்கு பெரும் முயற்சி மேற்கொண்டது ரெயில்வே அமைச்சர்களாக இருந்த வேலு, மூர்த்தித்தான். புதிய புதிய வழித்தடங்கள் மூலம் ரெயில்கள் விடப்பட்டது. புதிய ரெயில்களும் விட்டோம். இதுபோல் சேலத்தில் அதிநவீன மருத்துவமனை கொண்டு வந்தவர் டாக்டர் அன்புமணிராமதாஸ்தான். ஆட்சிசெய்யாத நிலையில் இருந்த நாங்கள் இவ்வளவையும் செய்துகொடுத்தோம்.

             சேலம் மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் இரா.அருளை வெற்றி பெற செய்தால் அவர் மாநகர மக்களுக்கு நல்லாட்சி தருவார். அவர் ஒரு சிறு தவறு கூட செய்யாமல் மக்களுக்கு உதவி செய்வார். இதனால் நாங்கள் மக்களுக்கு தொண்டு செய்ய ஒரு வாய்ப்பு தாருங்கள். மது இல்லாத தமிழகத்தை உருவாக்க பா.மக. வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள். இப்படி வேறு கட்சிகள் கூறமுடியுமா. மற்றவர்களால் இப்படி கூற முடியாது. ஒவ்வொரு வருடமும் நாங்கள் பட்ஜெட் போடுகிறோம்.

               
துபோல் வேறு கட்சிகள் போடுகிறதா. இல்லை. 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை சுட்டு உள்ளது. இதற்கு ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள். கச்சத்தீவு பிரச்சினை என்னானது. தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் தர மறுக்கிறது. பெரிய மழைபெய்தாலோ, அணைகளுக்கு ஆபத்து என்று வந்தாலோத்தான் காவிரியில் தண்ணீர் திறந்து விடுகிறார்கள். பாலாறு பாழாய் போய்கிடக்கிறது.

              இவற்றை எல்லாம் பா.ம.க. மட்டும் தான் பேசிபோராடி வருகிறது. தமிழக மக்கள் வேறு ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த மாற்றத்தை இந்த தேர்தலில் ஏற்படுத்துங்கள். திராவிட கட்சிகளை ஒழிக்க வேண்டும்.அப்புறப்படுத்த வேண்டும். இந்த வேலைகளை பா.ம.க. செய்ய இருக்கிறது. தமிழகத்திற்கு மாற்றம் தேவை. மக்கள் நினைத்தால் இந்த மாற்றத்தை ஏற்படுத்தலாம்.  இவ்வாறு அவர் கூறினார்.

           கூட்டத்தில் மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான ஜி.கே. மணி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் தமிழரசு, கன்னையன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் க.சண்முகம் மற்றும் பலர் பேசினர். முடிவில் பழ.அன்பு நன்றி கூறினார்.

வந்தவாசி மற்றும் போளூரில் பா.ம.க வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் : பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பங்கேற்பு


திருவண்ணாமலை: 

           வந்தவாசி மற்றும் போளூரில் நடந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

வந்தவாசியில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியது:

            கடந்த 10 ஆண்டாக கட்சிகள் தனியாக போட்டியிட வேண்டும் என்று கூறி வந்தோம், ஏனெனில் கூட்டணி என்றால் கூடி பா.ம.க.,வை காலை வாருவதுதான் வாடிக்கையாக வைத்திருந்தார்கள்.அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் சென்னையில் கூடி ஓட்டுக்கு பணம் கொடுப்பதில்லை என்று ஒப்பந்தம் போட வேண்டும். அப்போதுதான் தேர்தலில் சேவை மனப்பான்மை உடைய நல்லவர்கள் வெற்றி பெறுவர்.வரும் 2016ம் ஆண்டு நாம் ஆட்சிக்கு வருவோம். அப்போது ஐந்து ஆண்டுகளுக்கு மட்டும் அனைத்து பதவிகளுக்கும் பெண்கள் மட்டுமே வரமுடியும் என்ற சட்டம் கொண்டு வருவோம். இதன் மூலம் பெண்கள் நல்ல நிலைக்கு உயர்ந்துவிடுவர்.

           ஆண்கள், பெண்களுக்கு தலா 50 சதவீத ஒதுக்கீடு வழங்குவோம். இதன் மூலம் பா.ம.க., வித்தியாசமான கட்சிதான் என்ற உண்மையை அனைவரும் உணர்வர். தேர்தலில் வெற்றி பெறும் பா.ம.க., வினர் அலுவலக தூசியை கூட தங்கள் வீட்டுக்கு எடுத்து வரக்கூடாது அந்த அளவுக்கு நாம் நேர்மையாக இருக்க வேண்டும்.

போளூரில் ராமதாஸ் பேசியது:

          உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க., வேட்பாளர்களுக்கு வாய்ப்பு தாருங்கள். திராவிட கட்சிகளுக்கு கொள்கை கிடையாது. ஆனால், பா.ம.க, மற்ற கட்சிகளை காட்டிலும் உயரிய கொள்கை உடையது.இது வரை திராவிட கட்சிகளை மாறி மாறி பா.ம.க., ஆதரித்து வந்தது. இனி எந்த திராவிட கட்சியையும் ஆதரிக்காது. எதிர்காலத்தில் பா.ம.க., ஆளுங்கட்சி அந்தஸ்து பெறும். ஓட்டுக்களை பணம் கொடுத்து வாங்கும் கலாச்சாரம் பெருகிவிட்டது. அதுபோன்ற வேலைகளை பா.ம.க., ஒரு போதும் செய்யாது.இவ்வாறு அவர் பேசினார்.

கண்ணமங்கலத்தில் பா.ம.க. வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பங்கேற்பு

கண்ணமங்கலம்:

           கண்ணமங்கலம் புதிய பஸ்நிலைய திடலில் பா.ம.க. வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு முன்னாள் எம்.எல். ஏ. எதிரொலி மணியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய அமைச்சர் வேலு, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 
கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர்
டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியது:-

            தமிழகத்தில் 44 ஆண்டுகளாக ஆண்டு வரும் திராவிட கட்சிகள் தமிழக மக்களுக்கு இலவசங்களை கொடுத்து பிச்சைக்காரர் ஆக்கியதுதான் சாதனை. இன்றைக்கு தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூலம் ஏராளமானோர் குடிகாரர்களாகி வருகின்றனர். உழைக்கும் மக்கள் தாங்கள் பெறும் கூலியை டாஸ்மாக் கடைக்கு செலவிட்டே உடல்நிலை பாதிக்கும் நிலை உள்ளது.  மக்களுக்கு இலவச கல்வி, இலவச வைத்தியம் கொடு என்று நாங்கள் பல முறை கூறியும் கண்டு கொள்ளவில்லை. டாக்டர் அன்புமணி, மத்திய சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தபோது ஜனாதிபதிக்கு கிடைக்கும் அனைத்து மருத்துவ வசதிகளும், ஏழை பாமரனுக்கும் கிடைக்க வழி செய்யும் படி கூறினேன். அதன்படியே அவரும் செய்து ஏராளமான விருதுகளும் பாராட்டுக்களும் பெற்றார்.

            இன்று தமிழ்நாட்டில் ஏராளமானோர் குடிப்பழக்கம், போதைப்பழக்கம் ஆகியவற்றுக்கு அடிமையாவதைக் கண்டு எங்கள் மனம் பதறுகிறது. விவசாயிகள் இன்று வாழ்வதா? சாவதா? என்ற நிலைக்கு வந்துள்ளனர். விவசாய விளை பொருட்களுக்கு போதுமான விலை கிடைக்காததால் இன்று அவலநிலை உள்ளது. எனவே திராவிட கட்சிகளின் ஆட்சி ஒழிந்து, பா.ம.க. ஆட்சி மலர உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க.வுக்கு வாக்களியுங்கள்.

             விவசாயிகளுக்காக நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் விவசாய பட்ஜெட் போட்டு அரசிடம் சமர்ப்பித்தும் கண்டு கொள்ளவில்லை. அந்த பட்ஜெட் நிறைவேறினால், விவசாயிகள் வாழ்வு மலரும். வருகிற 2016-ம் ஆண்டு சட்டமன்ற பா.ம.க. ஆட்சிக்கு வரும். இனிமேல் நாங்கள் யாருடனும் கூட்டு சேரப் போவதில்லை. கட்சி வேட்பாளர்களை எதிர்த்து, சுயேட்சையாக நிற்கும் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்காமல் பா.ம.க. வேட்பாளர்கள் வெற்றி பெற மாம்பழம் சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.

கோவை மாநகராட்சி பா.ம.க மேயர் வேட்பாளர் ராஜேந்திரன் சிறப்பு பேட்டி




கோவை பா.ம.க. மேயர் வேட்பாளர் ராஜேந்திரன்
பாட்டாளி மக்கள் கட்சியினுடைய மேயர் வேட்பாளர் ராஜேந்திரன் சிறப்பு பேட்டி 


          மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று சொல்லுகிறார்கள். மக்கும் குப்பை பரவாயில்லை இருந்துபோகட்டும். மக்காத குப்பை எதுக்கு வருது. அரசே அதை தடுத்து நிறுத்த வேண்டும்.  மழைநீர் வடிகால் திட்டத்தை அந்த அம்மா கொண்டு வந்தாங்க. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசு வந்தவுடன் கண்டுகொள்ளவில்லை. அதேபோல திமுக ஏதாவது திட்டம் கொண்டு வந்தால், அதிமுக அதை தடை செய்துவிடும். அப்படி எல்லாம் நான் இல்லாம, நான் மேயர் ஆனால், போன மேயர் என்ன நல்லத் திட்டங்கள் கொண்டு வந்தாரோ, அந்த நலத்திட்டங்களை தடை செய்யாமல் கொண்டு வருவேன். நான் மேயர் ஆனால், முதல்ல ஒன்றே ஒன்று செய்வேன். மேயர் பங்களாவுக்கு குடிபோகமாட்டேன். ஏன் என்றால் ராசி இல்லை. நம்ம எது செய்சாலும் நல்லா நடக்காது. அதனால நான் குடிபோக மாட்டேன். இவ்வாறு பேசினார்.

வேலூர் மாநகராட்சி பாமக மேயர் வேட்பாளர் வெண்ணிலாவை ஆதரித்து டாக்டர் ராமதாஸ் பிரச்சாரம்

வேலூர்:

        வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே பா.ம.க. பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். 
 
அப்போது பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியது:-

         வேலூர் மாநகராட்சி மேயர் வேட்பாளராக வெண்ணிலா நிறுத்தப்பட்டுள்ளார். தனித்து போட்டியிட வேண்டும் என்கிற நிலைமை எடுத்துள்ள பா.ம.க.வுக்கு மக்கள் ஆதரவு தரவேண்டும். திராவிட கட்சிகள் இல்லாத ஒரு சகாப்தத்தை உருவாக்க வேண்டும்.

         தனித்து போட்டி என்கிற முடிவை நாங்கள் எடுத்த பிறகு மற்ற கட்சிகளும் தனித்து போட்டியிடுவது என்கிற முடிவை  எடுத்துள்ளன. தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த மாற்றம் உள்ளாட்சி தேர்தல் மூலம் வரவேண்டும். பா.ம.க. ஒரு வித்தியாசமான கட்சி, எல்லோருக்கும் கல்வி, அதுவும் கட்டணமில்லா கல்வி கொடுத்து, அவர்கள் வேலை வாய்ப்பை பெற்று அதன் தேவையானவற்றை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம்.

           வேலூர் மாநகராட்சிக்கு நடைபெறும் முதல் தேர்தலில் முதல் மேயராகவும், கவுன்சிலராகவும் பா.ம.க. வினர் வரபொதுமக்கள் வாக்களிக்க வேண்டும். வேலூர் மாநகரில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன, அவைகளை போக்க பா.ம.க. வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டுகிறேன். மாற்றத்தை கொண்டு வாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

         கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி வேலு, எம்.எல்.ஏ. சண்முகம், கலையரசு எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன், கட்சியின் மாவட்ட செயலாளர் பி.கே.வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் கூட்டத்தில் பா.ம.க. மேயர், கவுன்சிலர் வேட்பாளர்கள் உள்பட பல்வேறு பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.


புவனகிரி பேரூராட்சி 12வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு பா.ம.க - அ.தி.மு.க நேரடி போட்டி

புவனகிரி : 

           புவனகிரி பேரூராட்சி 12வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு பா.ம.க. - அ.தி.மு.க. - இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

           புவனகிரி பேரூராட்சியில் 12வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு பா.ம.க., சார்பில் ரவிச்சந்திரனும்,  அ.தி.மு.க.,சார்பில் காவேரி, போட்டியிடுகின்றனர். இந்த வார்டில் அ.தி.மு.க., - பா.ம.க., இடையே நேரடி போட்டி நிலவுகிறது. 

 வாக்காளர்களின் எண்ணிக்கை

 ஆண் வாக்காளர்கள் 373

 பெண் வாக்காளர்கள் 390

 மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 763. 

                இங்கு பேரூராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க., தவிர தி.மு.க., - காங்., - தே.மு.தி.க., - வி.சி., ஆகிய கட்சிகள் போட்டியிடாமல் பா.ம.க., மட்டும் போட்டியிடுவதால் பா.ம.க - அ.தி.மு.க நேரடி போட்டி நிலவுகிறது.

உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர்களை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரம்

          தமிழ்நாட்டில் வரும் 17 மற்றும் 19 ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்,  இன்று (03-10-2011) முதல் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். இந்தப் பரப்பரை கூட்டங்களில் பாமக தலைவர் ஜி.கே.மணியும் பங்கேற்கிறார்.

10 ந்தேதி வரையிலான பரப்புரை அட்டவணை:


பரப்புரை பயணத்திட்ட விவரம்

03-10-2011 – மாலை 6 மணி  சென்னை தியாகராயர் நகர் பொதுக்கூட்டம்

04-10-2011 – மாலை 4.00 மணி  பல்லாவரம்
                    மாலை 5.00 மணி  தாம்பரம்
                    மாலை 6.00 மணி  மறைமலை நகர்
                    இரவு  7.15  மணி  செங்கல்பட்டு
                    இரவு  8.15  மணி  மதுராந்தகம்
                   இரவு  9.15  மணி  அச்சிறுபாக்கம்

06-10-2011 – மாலை 4.00 மணி  வந்தவாசி
                    மாலை 5.30 மணி  சேத்துப்பட்டு
                    மாலை 6.45 மணி  போளுர்
                    இரவு  8.00  மணி  கண்ணமங்கலம்
                    இரவு  9.15  மணி  வேலூர்

07-10-2011 – மாலை 4.00 மணி  வாலாஜா
                    மாலை 4.45 மணி  அம்மூர்
                    மாலை 5.30 மணி  இராணிப்பேட்டை
                    மாலை  6.15  மணி  ஆர்க்காடு
                    இரவு  7.30  மணி  ஆம்பூர்
                    இரவு  8.15  மணி  வாணியம்பாடி
                    இரவு 9.00  மணி திருப்பத்தூர்

08-10-2011 – மாலை 4.00 மணி  ஓசூர்
                    மாலை 5.45 மணி  கிருஷ்ணகிரி
                    மாலை 6.15 மணி  காரிமங்கலம்
                    இரவு  7.30  மணி  கம்பை நல்லூர்
                   இரவு  8.15  மணி  கடத்தூர்
                   இரவு  9.15  மணி  தருமபுரி
09-10-2011 – மாலை 4.00 மணி  ஓமலூர்
                    மாலை 5.30 மணி  சூரமங்கலம்
                    இரவு  7.00  மணி  கொண்ட்லாம்பட்டி
                    இரவு  8.00  மணி  அம்மாபேட்டை
                    இரவு  9.00  மணி  அஸ்தம்பட்டி

10-10-2011 – மாலை 4.00 மணி  எடப்பாடி
                   மாலை 6.00 மணி  மேட்டூர்
                   மாலை 6.00 மணி  மறைமலை நகர்
                   இரவு  8.00  மணி  பவானி
                   இரவு  9.00  மணி  ஈரோடு
மேற்கண்ட தகவல் பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள குறிப்பில் உள்ளது.


11ந்தேதி முதல் மேற்கொள்ளவுள்ளச் பரப்புரை பயணம் குறித்த விவரம் பினனர் அறிவிக்கப்படும்.


சேலம் மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் பா.ம.க, வேட்பாளர் இரா.அருள் சொத்து மதிப்பு விபரம்

சேலம்: 

சொத்தின் மதிப்பு விபரம் 

            சேலம் மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் பா.ம.க., வேட்பாளர் இரா.அருள், அசையும் சொத்தின் மதிப்பு (கையிருப்பு தொகை, கார், வங்கி இருப்பு, தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் டெபாஸிட் செய்த தொகை), 27 லட்சத்து, 47 ஆயிரத்து, 838 ரூபாய். 

                மனைவி பெயரில், 23 லட்சத்து, 11 ஆயிரத்து, 577 ரூபாயும், அவரை சார்ந்தவர்கள் பெயரில், முதல் நபர் மீது, 50 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது நபர் மீது, ஒரு லட்சத்து, 64 ஆயிரத்து, 500 ரூபாயும் இருக்கிறது.

அருளின் அசையா சொத்து

                (விவசாய நிலம், தனியாக வாங்கப்பட்ட சொத்து, கட்டுமானம், நில முதலீடு, வணிக கட்டிடம்) மதிப்பு, ஒரு கோடியே, 63 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய். மனைவி பெயரில் உள்ள சொத்து மதிப்பு, 20 லட்சத்து, 90 ஆயிரம் ரூபாய்.


 

சேலம் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் 11 வார்டுகளுக்கான பா.ம.க.,வேட்பாளர் பட்டியல்

சேலம்: 

        சேலம் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், 11 வார்டுகளுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார். 

அதன்படி, 

வார்டு எண் 8 சந்திரா, 
9- கலாசெல்வன், 
7- சித்ரா, 
6- மாரியம்மாள்,
2- முருகன், 
1- முருகன்,
10- ஜெயகுமார், 
11- சுப்புரு,
13- பழனியம்மாள், 
3- சின்னராஜ்,
5- ராஜா.


செஞ்சி பேரூராட்சி தலைவர் பதவிக்கு பா.ம.க.வேட்பாளர் கணபதி மனு தாக்கல்


செஞ்சி : 

               செஞ்சி பேரூராட்சி தலைவர் பதவிக்கு  பேரூராட்சி தலைவர் பதவிக்கு பா.ம.க., சார்பில் மாவட்ட தொண்டரணி தலைவர் கணபதி மனு தாக்கல் செய்தார். வார்டு கவுன்சிலர் பதவிக்கு பெருமாள், காந்திமதிநாதன், வெங்கடேசன், பரமேஸ்வரி, சிவாஜி, சந்திரசேகர் மனு தாக்கல் செய்தனர். இதில் முன்னாள் எம். எல்.ஏ., செந்தமிழ்ச்செல்வன் உடனிருந்தனர்.