ஈரோடு மாவட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈரோடு மாவட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உள்ளாட்சி தேர்தலில் ஈரோட்டில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/3b085abc-f5be-4781-8db4-d4ea4c372429_S_secvpf.gif
 
ஈரோடு:

          பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்றது. இதில் பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசினார்.

அப்போது பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
கூறியது:-

           இந்த உள்ளாட்சி தேர்தல் ஊழல் கட்சிகளுக்கும், நல்ல, நேர்மையான, வித்தியாசமான கட்சியான பாட்டாளி மக்கள் கட்சிக்கும் இடையே நடக்கும் போட்டியாகும். தமிழ்நாட்டை கடந்த 44 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஆட்சி செய்து சின்னாபின்னமாக்கி சீரழித்து விட்டன. இந்த திராவிட கட்சிகளின் அத்தியாயத்தை முடிக்கவே பா.ம.க. தனித்து போட்டியிடுகிறது.  இந்த முடிவை சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு எடுத்திருந்தால் 50 முதல் 60 வரை சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ம.க.வுக்கு கிடைத்திருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.   இனிமேல் எந்த காலத்திலும் திராவிட கட்சிகளுடன் ஒட்டும் கிடையாது. உறவும் கிடையாது. 
 
          இந்த கட்சிகளை வேரறுத்து, ஒழித்து தமிழகத்தில் இந்த கட்சிகள் இல்லாத நிலையை ஏற்படுத்துவதே பா.ம.க.வின் வருங்கால செயல்பாடுகளாக அமையும். திராவிட கட்சிகளுக்கு என்று ஒரு கொள்கையும் கிடையாது.  இவர்களின் ஒரே கொள்கை கொள்ளையடிப்பதுதான். இளைஞர்களுக்கு மதுவை கொடுத்து 4 தலைமுறைகளாக இந்த நாட்டை சீரழித்து விட்டார்கள். இலவசங்களை கொடுத்து மக்களின் சுயமரியாதையை இழக்க செய்து விட்டார்கள்.   மிக்சி, கிரைண்டர் வழங்கு வதால் நாட்டில் வளர்ச்சி ஏற்பட்டு விடாது. வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்றால் தரமான கல்வியும், தரமான இலவச மருத்துவமும் கிடைக்க வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள்.

             44 ஆண்டுகள் தமிழகத்தை ஆளும் திராவிட கட்சிகளால் ஏன் வறுமையை ஒழிக்க முடியவில்லை. முதலில் மக்களின் வறுமையை ஒழிப்போம் என்று கூறியவர்கள் தற்போது வறுமைக்கு என்ற அளவுகோல் என்று தெரியவில்லை என்று கூறுகிறார்கள்.   திராவிட கட்சிகளும், அவர்களின் குடும்பத்தினரும் நடத்தும் தொலைக்காட்சிகளில் தமிழ் கலாச்சாரம் சீரழிக்கப்படுகிறது. தமிழகத்தை சீரழித்த இவர்கள் மீது நீதிமன்றம் தண்டனை கொடுப்பது உடனே முடியாது. மக்கள் மன்றம் தான் தண்டனை கொடுக்க வேண்டும்.  திராவிட கட்சிகளை இந்த மண்ணில் இருந்து வேரறுக்கும் பொறுப்பை தமிழக மக்கள் எங்களிடம் ஒப்படைத்து உள்ளனர். எனவே பா.ம.க.வுக்கு நீங்கள் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.  

பின்னர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறும்போது, தயாநிதிமாறன் மற்றும் கலாநிதிமாறன் ஆகியோரின் வீடுகளில் சி.பி.ஐ.சோதனை செய்யும் நடவடிக்கை என்பது காலதாமதமான நடவடிக்கை. சட்டம் தன் கடமையை செய்யும் என்றார். கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மாநில துணை பொதுச்செயலாளர் மகேந்திரன், மாவட்ட செயலாளர்கள் ஆறுமுகம் வடிவேல், வன்னியர் சங்க செயலாளர் ஸ்டீல்ரவி, மாநில துணை தலைவர் பரமசிவம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஈரோட்டில் சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரி பாமக ஆர்பாட்டம்

ஈரோடு:

             சமச்சீர் கல்வியை உடனடியாக அமுல்படுத்த கோரி வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே பா.ம.க. சார்பில் செவ்வாய் கிழமை
ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். 

              மாநில துணை பொதுச்செயலாளர் மகேந்திரன், மாநில துணை தலைவர் பரமசிவம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.   இதில் தெற்கு மாவட்ட செயலாளர் வடிவேல், வன்னியர் சங்க மாநில துணை தலைவர் பரமேஸ்வரன், மருத்துவர் அணி பொறுப்பாளர் ஆதிஅருண் மணி, நகர செயலாளர்கள் ராஜேந்திரன், சஜிவ் மற்றும் கட்சி நிர்வாகிகள் ராஜேந்திரன், கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஈரோட்டில் பா.ம.க. நகர செயலாளர் குத்திக்கொலை: கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை

 
ஈரோடு:


         ஈரோடு பழையபாளையம் இந்திராகாந்தி வீதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 45). சூரம்பட்டி நகர பாட்டாளி மக்கள் கட்சி செயலாளராக இருந்து வந்தார். இவர் தனது வீடு அருகே 2 சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு சத்யா என்ற மகளும், சந்தோஷ் என்ற மகனும் உள்ளனர்.

             இவர்களில் சத்யா திண்டிவனத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். சந்தோஷ் பிளஸ் 2 படித்து முடித்துள்ளார்.   நேற்று மாலை செல்வம் தனது ஒர்க்ஷாப்பில் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீர் என்று 2 மோட்டார் சைக்கிளில் சுமார் 4 பேர் அவரது ஒர்க்ஷாப்பிற்குள் வந்தனர். அவர்களை பார்த்ததும் சந்தேகம் அடைந்த செல்வம் நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். ஆனால் எதுவும் பேசாமல் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செல்வத்தை கத்தியால் குத்தினர்.

              இதில் செல்வத்தின் நெஞ்சு அருகே கத்தி கத்து விழுந்தது. இதை அவர் தடுக்க முயன்ற போது அவரது கையிலும் கத்தி குத்து விழுந்தது””. இதனால் ரத்த வெள்ளத்தில் செல்வம் மயங்கி விழுந்தார். இதை தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து 2 சக்கர வாகனத்தில் தப்பி சென்று விட்டனர். சற்று நேரத்தில் செல்வத்தின் மகன் சந்தோஷ். அங்கு வந்தார். தனது தந்தை கத்தி குத்து காயங்ளுடன் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார்.

               அவரது சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மயங்கி கிடந்த செல்வத்தை ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் செல்வம் பரிதாபமாக இறந்தார். சம்பவ இடத்துக்கு சூரம்பட்டி போலீசார் சென்று விசாரணை நடத்தினர். செல்வத்திடம் உள்ள செல்போனில் உள்ள போன் எண்களை வைத்து கடைசியாக அவரிடம் பேசியது யார்? அவர்களுக்கும் கொலைக்கும் தொடர்பு உள்ளதா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

               கொலையாளிகள் 4 அல்லது 5 பேர் இருக்கலாம் என்றும், அவர்களுக்கு 20 வயது முதல் 23 வயதுக்குள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. செல்வம் கொலை செய்யப்பட்டதற்கான காரணங்கள் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல் தகராறு காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாமோ? என்ற சந்தேகத்தின் பேரிலும் போலீசார் தங்களது விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.  

                செல்வத்தை கொன்ற கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று சிலரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகிறார்கள். சூரம்பட்டி நகர பா.ம.க. செயலாளர் செல்வம் கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



பர்கூர் சட்டமன்றத் தொகுதியில் பா.ம.க. போட்டியிடும் : பாமக நிறுவனர் ராமதாஸ்

ஈரோடு:

          பாமக நிறுவனர் ராமதாஸ் ஈரோடு மாவட்டம் பர்கூரில்  பேட்டியளித்தார்.  ’’கூட்டணி குறித்து 4 நாட்களில் முடிவு கூறப்படும். எந்த கூட்டணியாக இருந்தாலும் பர்கூரை பா.ம.க., கேட்டு பெறும்’’ என்று தெரிவித்தார்.