ஆர்.கே.ஆர்.அனந்தராமன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆர்.கே.ஆர்.அனந்தராமன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதுச்சேரி பா.ம.க. சார்பில் பசுமை தாயகம் ஆண்டு விழா

 http://mmimages.mmnews.in/Articles/2011/Jul/ff8f411d-ba0f-4e92-9183-44148e2a0a12_S_secvpf.gif

 
புதுச்சேரி:
 
          புதுவை பா.ம.க. சார்பில் பசுமை தாயகம் ஆண்டு விழா திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி பசுமை தாயகம் மற்றும் பா.ம.க. சார்பில் எல்லைப்பிள்ளை சாவடியில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்று பிறந்த 25 குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

            இதைத்தொடர்ந்து பா.ம.க.வினர் அங்கிருந்து கார் மற்றும் மோட்டார் சைக்கிளில்களில் ஊர்வலமாக புறப்பட்டு வில்லியனூர் விவேகானந்தா அரசு மேல்நிலைப்பள்ளியை அடைந்தனர். அங்கு சுற்று சூழலை வலியுறுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டன. 
 
              இந்த நிகழ்ச்சிகளுக்கு பா.ம.க. மாநில செயலாளர் அனந்தராமன் தலைமை தாங்கினார். பா.ம.க. ஆலோசகர் ராமகிருஷ்ண கவுண்டர், மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் மதியழகன், முன்னாள் எம்.எல்.ஏ. அருள்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர்கள் பொன்.செல்வராஜ், ஜெயபாலன், ரவி, வி.பி.பி.வேலு, வடிவேலு, வெங்கடேசன், பெருமாள், முகமது யூனூஸ், கிருஷ்ணமூர்த்தி, தேவராஜ், சாந்தா, அசோக், ஆதிலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

புதுச்சேரியில் பசுமைத் தாயகம் சார்பில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் விழா

புதுச்சேரி

           புதுச்சேரியில் பாமகவினர் சார்பில்  நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் விழா பசுமைத் தாயகம் நாளாக திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

            இதையொட்டி பாமக செயலர் ஆர்.அனந்தராமன் தலைமையில் மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் ஜூலை 25-ல் பிறந்த குழந்தைகளுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டது. பின்னர் கட்சி நிர்வாகிகள் பைக்கில் ஊர்வலகமாக மங்களம் தொகுதியில் உள்ள விவேகானந்தர் பள்ளியில் மரக்கன்றுகளை நட்டனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.கே.அருள்முருகன், கட்சியின் ஆலோசகர் கா.கோ.ராமகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் சி.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் 22ம் ஆண்டு துவக்க விழா: மாநில செயலாளர் அனந்தராமன் தலைமை தாங்கினார்

புதுச்சேரி : 

           பாட்டாளி மக்கள் கட்சியின் 22ம் ஆண்டு துவக்க விழா ப்ளிஸ் இன் ஓட்டலில் நேற்று நடந்தது. மாநில செயலாளர் அனந்தராமன் தலைமை தாங்கினார். கட்சி ஆலோசகர் ராமகிருஷ்ணன், நிர்வாகிகள் சுப்ரமணியன், மதியழகன் முன்னிலை வகித்தனர். 

விழாவில், செயலாளர் அனந்தராமன் பேசியது:

       இந்த கூட்டத்துக்கு பல தொகுதிகளின் நிர்வாகிகள் வராதது வேதனை அளிக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்றால்தான் கட்சி என்பது கிடையாது. எந்த நேரத்திலும் மக்கள் பணியாற்ற வேண்டும். துடிப்புடன் பணியாற்றும் புதிய நிர்வாகிகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். கட்சிக்காக வேலை செய்பவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.

           கடந்த கால ஆட்சியாளர்கள் மீது இருந்த வெறுப்பு தேர்தல் தோல்விக்கு ஒரு காரணமாகும். பெரும்பான்மை சமுதாயத்தை சேர்ந்தவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கியதால் மக்கள் ஆதங்கத்தில் ஓட்டளித்தனர். இதனால், பா.ம.க., வுக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஒவ்வொரு தொகுதியிலும் 10 ஆயிரம் ஓட்டுக்களை பா.ம.க., பெற்று தந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில தேர்தல் ஆணையரை உடனடியாக நியமிக்க வேண்டும்.

             தேர்தலில் நிற்க விரும்புபவர்கள் வரும் 25ம் தேதியில் இருந்து விருப்ப மனு தரலாம். இவ்வாறு அனந்தராமன் பேசினார். விழாவில், துணை செயலாளர்கள் செல்வராஜ், ஜெயபால், ஞானசேகரன், முகமது யூசுப், தொண்டரணி அமைப்பாளர் சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இளைஞரணி: 

          பா.ம.க., இளைஞரணி சார்பில் முத்தியால்பேட்டையில் துவக்க விழா நடந்தது. இளைஞரணி தலைவர் அறிவழகன் வரவேற்றார். செயலாளர் அனந்தராமன், கொடியேற்றினார்.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் பா.ம.க.வுக்கு 7 தொகுதி ஒதுக்க கோரி தீர்மானம்



புதுச்சேரி:

            சட்டமன்ற தேர்தலில் பா.ம.க.வுக்கு 7 தொகுதி ஒதுக்க கோரி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

              பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் மாநில செயலாளர் அனந்தராமன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் புதுச்சேரியில் ஒரு பலமான வெற்றிக் கூட்டணியை உருவாக்கி குறைந்த பட்சம் 7 சட்டமன்ற தொகுதிகளை பா.ம.க.வுக்கு ஒதுக்கீடு செய்து பெற்றுதர வேண்டுமெனவும், கூட்டணி சம்மந்தமாக முடிவு செய்ய பா.ம.க. நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யாவுக்கு முழு அதிகாரத்தையும் அளிப்பது எனவும் இந்த நிர்வாகக் குழு கூட்டம் முடிவு செய்கிறது.

               மருத்துவர் அய்யா அமைக்க இருக்கும் கூட்டணியில் பா.ம.க.வும், கூட்டணி கட்சிகளும் பெரும் வெற்றி பெற்று, கூட்டணி ஆட்சி அமைக்க பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, அணி பொறுப்பாளர்களும், தொகுதி நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும் அயராது பாடுபடுவது எனவும் இக்கூட்டம் முடிவு செய்கிறது.

             இக்கூட்டத்தில் ஆலோசகர் ராமக்கிருஷ்ணன், செய்தி தொடர்பாளர் ராஜசேகரன், பொருளாளர் கோபி, மாவட்ட தலைவர் சுப்ரமணி, மாவட்ட செயலாளர் மதியழகன், வன்னியர் சங்க தலைவர் வேணுகோபால், ஞானசேகரன், கிருஷ்ணராஜ், செல்வராஜ், வேலு, வடிவேலு, யுணுஸ், தங்க.அறிவழகன், சுரேஷ், ரமேஷ், வெங்கடேசன், சந்தானம், பாண்டியராஜன், சங்கர், சீனுவாசன் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

மழை நிவாரண தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்: பா.ம.க. வலியுறுத்தல்

புதுச்சேரி:

               பா.ம.க.வின் இளைஞர் அணி புதுவை மாநில பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டம் 45 அடி ரோட்டில் உள்ள மகாராஜா திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு பா.ம.க. மாநில செயலாளர் அனந்தராமன் எம்.எல். ஏ. தலைமை தாங்கினார்.

                மாநில இளைஞர் அணி தலைவர் தங்க.அறிவழகன், செயலாளர்கள் மாதவன், சுரேஷ் மற்றும் மாநில துணை தலைவர்கள், துணை செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மதியழகன் வரவேற்றார்.


கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-


               
புதுவை மாநில இளைஞர் பொறுப்பாளர்களை நியமனம் செய்த டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் கட்சி தலைவர் ஜி.கே.மணி ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்து கொள்வது. கட்சிக்கு இளைஞர் அணி பக்கபலமாக இருந்து தொகுதி வாரியாக கட்சி கொடி ஏற்றி விழாவை நடத்துவது.

              புதுவையில் வெள்ள சேதங்களை அரசு உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்து சேத மதிப்பீட்டு அறிக்கையை தயார் செய்து அதன் மூலம் மத்திய அரசை அணுகி வெள்ள நிவாரண நிதி பெற்று பொது மக்களின் துயரை துடைக்க வேண்டும்.

                கிராம பஞ்சாயத்துகளுக்கு வெள்ள நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் மழை பாதிப்பை கருத்தில் கொண்டு மழை நிவாரண தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஆங்காங்கே மழைநீர் தேங்கி உள்ளதாக காலரா, பேதி, விஷகாய்ச்சல் போன்ற நோய் பரவுவதை தடுக்க சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நட வடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.


                 கூட்டத்தில் மாநில துணை செயலாளர்கள் ஜெயபாலன், வி.பி.பி.வேலு, பொருளாளர் கோபி என்ற கேபாலகிருஷ்ணன், செய்தி தொடர்பாளர் ராஜசேகர், ஆலோசகர் ராமகிருஷ்ண கவுண்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: பாமக

              புதுச்சேரி அரசை கண்டித்து வரும் 22ஆம் தேதி காரைக்காலில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, அம்மாநில பாமக அறிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய புதுச்சேரி பாமக செயலாளர் அனந்தராமன்,

               காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் தேவமணி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதை கண்டித்து வரும் 22ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இந்த ஆர்ப்பாட்டம் காரைக்கால் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும். பாமகவின் வளர்ச்சியை பிடிக்காத புதுச்சேரி அரசு திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கையாக தேவமணியை கைது செய்துள்ளது. தேவமணியை உடனடியாக விடுவிக்க வேண்டும். அவரை விடுவிக்கும் வரை பல கட்ட போராட்டங்களை நடத்த உள்ளோம் என்றார்.

சட்டப்பேரவை முற்றுகை: 3 பாமக எம்எல்ஏக்கள் உட்பட 507 பேர் கைது

புதுச்சேரி:

               புதுச்சேரியில் பிராந்திய இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி, பாமகவினர் சட்டப்பேரவை முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினர். இதில் 3 பாமக எம்எல்ஏக்கள் உள்பட 507 பேரை பெரியகடை போலீசார்  கைது செய்தனர்.

                புதுச்சேரி மாநிலத்தில் அரசியல் அமைப்பு சட்ட ரீதியான இட ஒதுக்கீடு இருந்தும், பிராந்திய இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியதை கண்டித்தும், பிராந்திய இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இமாகுலேட் மேல்நிலைப் பள்ளி அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட பாமகவினரை ஆம்பூர் சாலை அருகே போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் பாமக எம்எல்ஏக்கள் ஆர்.கே.ஆர்.அனந்தராமன், என்.ஜி.பன்னீர்செல்வம், கே.பி.கே.அருள்முருகன் உள்பட 507 பேர் கைது செய்யப்பட்டனர். கட்சியின் மாநிலச் செயலர் கே.சி.ராமகிருஷ்ணன், துணைச் செயலர் வி.பி.பி.வேலும், பொருளாளர் ஜெ.கோபி உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.