எம்.எல்.ஏ.வேல்முருகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எம்.எல்.ஏ.வேல்முருகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மாற்று கட்சியில் இணையும் எண்ணம் இல்லை : தி.வேல்முருகன் அறிவிப்பு

             முறையான காரணம் இன்றி முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.   இந்த தகவல் வெளியானதை அடுத்து கடலூர், பண்ருட்டி, நெய்வேலி பகுதிகளில்  ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் கட்சி அலுவலகம், நெய்வேலியில் உள்ள பா.ம.க. தொழிற்சங்க அலுவலகம் சூறையாடப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ம.க. கொடிக்கம்பங்களை அகற்றினார்கள். இந்த நிலையில் பா.ம.க. வில் இருந்து நீக்கப்பட்ட வேல்முருகன் தி.மு.க.வில் சேரப்போவதாக கடலூர் பகுதியில் நேற்று தகவல் பரவியது. 

இதுபற்றி வேல்முருகன் கூறியது
 
            வேறு எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் எனக்கு இல்லை. இப்போதும் பா.ம.க. வில் தான் இருக்கிறேன். நான் நீக்கப்பட்டதாக கூறப்பட்டிருப்பது பற்றி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பா.ம.க. தொண்டர்களிடம் நீதி கேட்பேன். நான் நீக்கப்பட்டது சம்பந்தமாக இதுவரையிலும் எனக்கு எந்த தகவலும் முறைப்படி அனுப்பப்பட வில்லை. அப்படி ஒரு தகவல் வந்தால் அடுத்த கட்ட நடவடிக்கையை பின்னர் முடிவு செய்வேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

உள்ளாட்சித் தேர்தல்: கடலூர் மாவட்ட பா.ம.க.பணிக்குழு நியமனம்

கடலூர்:

           கடலூர் மாவட்ட பா.ம.க., வில் உள்ளாட்சித் தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது என மாநில இணை பொதுச் செயலாளர்  வேல்முருகன் கூறியுள்ளார்.

மாநில இணை பொதுச் செயலாளர்  வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

           கடலூர் மாவட்ட பா.ம.க., வில் உள்ளாட்சித் தேர்தல் பணிக் குழுக்கள் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் ஒப்புதலுடன், மாநில சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் கோவிந்தசாமி, மாநில துணை பொதுச் செயலர் சண்முகம் ஆகியோர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி

கடலூர், பண்ருட்டி:

           கடலூர், பண்ருட்டிக்கு மாவட்டச் செயலர் பஞ்சமூர்த்தி, அலுவலக செயலர் ராமச்சந்திரன், தலைவர் கோதண்டபாணியும், 


நெய்வேலி, குறிஞ்சிப்பாடி:

      
நெய்வேலி, குறிஞ்சிப்பாடிக்கு மாநில துணைத் தலைவர் திருமால்வளவன், மாவட்டச் செயலர் தர்மலிங்கம், நிர்வாகக்குழு உறுப்பினர் முத்து வைத்திலிங்கம், தலைவர் சக்திவேல், அமைப்புச் செயலர் ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி:

              புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடிக்கு மாநில தேர்தல் பணிக்குழு தனபால், மாவட்டச் செயலர் சின்னதுரை, முன்னாள் மாநில துணை பொதுச் செயலர் திருஞானம், முன்னாள் மாவட்டச் செயலர் செல்வராசு, மாவட்டத் தலைவர் ஆடியபாதம், சிதம்பரம், 

காட்டுமன்னார்கோவில் :

          காட்டுமன்னார்கோவிலுக்கு மாநில துணைத் தலைவர் சவுந்திரபாண்டியன், மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழு தேவதாஸ் படையாண்டவர், மாவட்டச் செயலர் வேணு புவனேஸ்வரன், முன்னாள் மாவட்டச் செயலர் கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளனர் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடலூர் மேற்கு மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டம் : உள்ளாட்சி தேர்தலில் அனைத்து பதவிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்த தீர்மானம்

சேத்தியாத்தோப்பு : 

           உள்ளாட்சி தேர்தலில் அனைத்து பதவிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்த கடலூர் மேற்கு மாவட்ட பா.ம.க., செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

            கடலூர் மேற்கு மாவட்ட பா.ம.க., செயற்குழு கூட்டம் சேத்தியாத்தோப்பு நடராஜா திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்டத் தலைவர் ஆடியபாதம் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சித் தலைவர் சிலம்புச்செல்வி, மாநில துணை பொதுச்செயலர் சண்முகம், ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் தேவதாஸ் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் சின்னதுரை வரவேற்றார். மாநில இணை பொதுச் செயலர், முன்னாள் எம்.எல்.ஏ., வேல்முருகன், முன்னாள் மாவட்டச் செயலர் ராஜேந்திரன், விவசாய அணிச் செயலர் சேரலாதன், ராஜா சாமிநாதன், வேல்முருகன் உட்பட பலர் பேசினர்.
 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள்

  1.  உள்ளாட்சியில் அனைத்து பதவிகளுக்கும் பா.ம.க., வேட்பாளர்களை நிறுத்துவது. 
  2. கரும்பு டன்னுக்கு 3,000 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். 
  3. சேத்தியாத்தோப்பு பால் குளிரூட்டு நிலையத்தை நவீனப்படுத்த வேண்டும். 
  4. மாவட்டத்தில் கூடுதலான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் 

என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய செயலர்கள் இளையராஜா, சரவணன், ஒன்றிய விவசாய அணி செயலர் ராதாகிருஷ்ணன் பரமசிவம், பஞ்சநாதன், வீரப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புவனகிரி ஒன்றிய செயலர் செல்வராஜ் நன்றி கூறினார்.

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

பண்ருட்டியில் பா.ம.க.சார்பில் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த தேசிங்கு நினைவிடத்தில் ராமதாஸ்அஞ்சலி


பண்ருட்டி:

            இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தேசிங்கு நினைவிடத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் சனிக்கிழமை மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

           பாமக சார்பில் இட ஒதுக்கீடு வேண்டி 1987 செப்டம்பர் மாதம் தொடர் சாலை மறியல் நடைபெற்றது. செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற்ற சாலை மறியலின் போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் உயிர் இழந்தனர். 

              கொள்ளுக்காரன்குட்டையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சிறுதொண்டமாதேவியை சேர்ந்த தேசிங்கு உயிரிழந்தார். இவரின் நினைவிடத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மாநிலத் தலைவர் கோ.க.மணி, முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன், மாநில துணை பொதுச் செயலர் தி.திருமால்வளவன், வன்னிய சங்கத் தலைவர் குரு, சொத்து பாதுகாப்பு குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

காஞ்சிபுரத்தில் செங்கொடியின் இறுதிநிகழ்வு - வீடியோ காட்சிகள்

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்யக் கோரி போராட்டம் : பா.ம.க இணைப் பொதுச் செயலாளர் தி.வேல்முருகன் அழைப்பு


பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்யக் கோரி போராட்டம் : பா.ம.க இணைப் பொதுச்  செயலாளர் தி.வேல்முருகன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:    

http://www.hindu.com/fline/fl1622/16221323.jpg

http://rste.org/wp-content/uploads/2011/08/perarivaalan-murugan-santhan.jpg


 http://stbjp.msn.com/i/59/53DE72EA2E66F0D15BD389FF3A2B6.jpg



http://www.manithan.com/news/data/upimages/murugan_santhan_perarivalan_1.jpg
அன்பார்ந்த புலம்பெயர் உறவுகளே!

                      முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி  கொலைவழக்கில்  கடந்த 20 ஆண்டுகளாக வெஞ்சிறையில் வெந்து அவதியுறும் தமிழர்களான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்காக பல வழிகளிலும் நாம் போராடி வருகிறோம். வழக்கு நடந்த காலத்திலிருந்து,  மொத்தமாக 26 பேருக்கு தூக்கு என்று தீர்ப்பு வந்த காலமாக இருந்தாலும், பின்னர் மேல்முறையீட்டில் 19 பேர் விடுவிக்கப்பட்ட போதும் எஞ்சிய அப்பாவித் தமிழர்களுக்காக, தமிழர்களாகிய நாம் குரல் கொடுத்தே வந்திருக்கிறோம். 

                  கடந்த இரு இந்தியக் குடியரசுத் தலைவர்களும் தங்கள் காலத்தில் கருணை மனுவை நிராகரிக்கும் முடிவைத் தள்ளிவைத்தனர். ஆனால், இன்று மூன்று தமிழர்களின் மரணதண்டனை மீதான கருணை மனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நாம் அனைவரும் இணைந்து குரல்கொடுத்து தூக்குக் கயிற்றிலிருந்து இம்மூன்று தமிழ்ர்களையும் காக்கப் போராட வேண்டியது இன்று மிக முக்கியமானதாகும். தமிழகத்தின் தமிழுணர்வாளர்கள் இதற்காகக் குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், களத்தில் இறங்கி செயல்படவும் செய்கிறார்கள். 

           அதுபோக இருபத்தொன்று ஆண்டுகள் தம் வாழ்வின் இளமையை இழந்து தனிமைச்சிறையில் வாடிய அவர்களுக்கு ஆதரவாக நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டிய காலம் இது.  இன்று உலகத் தமிழர்களும் இணைந்து குரல் தந்து, செயல்களில் கரம் தந்து இணைய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள் மூலமும், உலகெங்கும் வாழும் தமிழ் அமைப்புகள் மூலமும் பன்னாட்டு அரசுகளுக்கும் அவற்றின் மூலமாக இந்திய அரசுக்கும் குரல் கொடுத்து தமிழர்கள் மூவரின் வாழ்வைக் காக்கும் பணியை நாம் செய்தாக வேண்டும். 

              அதுபோக புலம்பெயர் தமிழர்கள் தத்தமது நாடுகளில் உள்ள எழுத்தாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஒத்த கருத்துள்ளோர்கள் போன்ற அத்துணை பேரையும் இந்த நீதிகாக்கும் போராட்டத்தில் இணைக்குமாறும் நாம் கேட்டுக்கொள்கிறோம். ஆங்காங்கே தமிழர்கள் அமைதியான முறையில் பல்வேறு பரப்புரை இயக்கங்களை துவங்குமாறும் நாம் அறைகூவல் விடுக்கின்றோம். மரணதண்டனைகள் ஒழிக்கப்பட்ட நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் அந்நாடுகளையும் இந்த குரலோடு ஒத்திசைக்க ஆவன செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

விடுதலை வேட்கையோடு 

தி.வேல்முருகன்

முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் 
பாட்டாளி மக்கள் கட்சி மாநில  இணை பொதுச் செயலாளர் ,
எண் 159.திலீபன் இல்லம்,
திருப்பதி நகர் முதல் தெரு ,
சிறிதேவி குப்பம் பிரதான சாலை,
வளசரவாக்கம்
சென்னை. 
தமிழ்நாடு, இந்தியா.


தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

மெரினாவில் ஈழத்தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி : பாமக இணைப் பொதுச்செயலாளர் தி.வேல்முருகன் பங்கேற்பு



 



           
 


            ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் நாளை உலகெங்கிலும் சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவு தினமாக ஐநா கடைபிடித்து வருகிறது.

        இலங்கை அரசின் சித்திரவதைகளூக்கு ஆளாக்கப்பட்டு இன்னுயிர் துறந்தல் ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெரினா கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி நேற்று  ( 26.6.2011) மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது.

        பழ.நெடுமாறன், காசி ஆனந்தன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்,  பாமக இணைப் பொதுச்செயலாளர்  தி.வேல்முருகன், மதிமுக மல்லை சத்யா உட்பட பல்லாயிரக்கணக்காணோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். பழ.நெடுமாறன்  எழுச்சி உரை ஆற்றினார்.   சீமான் எழுச்சி கோஷங்கள் எழுப்பினார்.  இந்த நிகழ்வு கட்சி சார்பற்ற நிகழ்வாகவே இருந்தது.  

நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் பாமக வேட்பாளர் தி.வேல்முருகன் பெற்ற வாக்கு விபரம்

2011  சட்டமன்றத் தேர்தலில் நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் பாமக வேட்பாளர் தி.வேல்முருகன் பெற்ற வாக்கு விபரம்


Tamil Nadu - Neyveli
Result Declared
Candidate PartyVotes
M.P.S.SIVASUBRAMANIYANAll India Anna Dravida Munnetra Kazhagam69549
T.VELMURUGANPattali Makkal Katchi61431
M.KARPAGAMBharatiya Janata Party1406
S.PANDIANIndependent1273
P.LILYLok Satta Party1232
P.KUMARIndiya Jananayaka Katchi971
S.ELANGOVANLok Jan Shakti Party576
P.CHANDRASOCIALIST UNITY CENTRE OF INDIA (COMMUNIST)478
V.K.KUMARAGURUIndependent441


நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் மாம்பழம் சின்னத்திற்கு வாக்களியுங்கள்- தி.வேல்முருகன்

மாம்பழம் சின்னத்திற்கு வாக்களியுங்கள் - 

தி.வேல்முருகன் அவர்களின் 

வேண்டுகோள் 


 http://profile.ak.fbcdn.net/hprofile-ak-snc4/187834_142248415845892_284602_n.jpg



           அனைவருக்கும் வணக்கம், நான் இப்போது நெய்வேலி நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில்  போட்டியிடுகிறேன். நெய்வேலி தொகுதி வாக்காள நண்பர்கள் மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.

         நெய்வேலி தொகுதி அல்லாத நண்பர்கள் நெய்வேலிதொகுதி நண்பர்களுக்கு என்னை அறிமுகம் செய்து எனக்கு வாக்களிக்க செய்யுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.

அன்புடன்


தி.வேல்முருகன்

நெய்வேலி தொகுதி வேட்பாளர்
 
 

நெய்வேலியில் மீண்டும் அரசு பஸ் பணிமனை: பாமக வேட்பாளர் தி.வேல்முருகன்

நெய்வேலி:

             நெய்வேலி நகரில் செயல்பட்டு வந்த அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையை மீண்டும் நெய்வேலியிலேயே அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளவதாக நெய்வேலி தொகுதி பாமக வேட்பாளர் தி.வேல்முருகன் வாக்குறுதி அளித்தார். 

             திமுக கூட்டணி சார்பில் நெய்வேலி தொகுதியில் களமிறங்கியுள்ள பாமக வேட்பாளர் தி.வேல்முருகன், ஞாயிற்றுக்கிழமை நெய்வேலி வட்டம் 21, 30 பகுதிகளில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். 

              நெய்வேலியில் இயங்கிவந்த அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை வடலூருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.   நெய்வேலியிலிருந்து ஏராளமான மாணவர்கள் பெருநகரங்களில் உள்ள கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். இவர்கள் வந்து செல்ல ஏதுவாக பஸ் வசதி இருந்துவந்ததாகவும், தற்போது முன்னர் இருந்தது போன்று பஸ் வசதி இல்லை எனவும் நெய்வேலி வாசிகளாகிய நீங்கள் கூறிவருகிறீர்கள். 

              எனவே வடலூரில் இருக்கும் பணிமனையைப் போன்று நெய்வேலியிலும் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையை ஏற்படுத்துவது தொடர்பாக போக்குவரத்துத் துறையிடம் பேசி அதற்கு தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்வேன். நெய்வேலி வட்டம் 21, 30 பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மின்சாரம் கிடைப்பது தொடர்பாகவும், தர வாடகை ரத்து தொடர்பாகவும் என்.எல்.சி. நிர்வாகத்திடம் ஏற்கெனவே பேசியுள்ளேன். சட்டமன்றத்திலும் இதுகுறித்து பதிவு செய்திருக்கிறேன். எனவே வரும் காலத்தில் இதற்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் எனது நடவடிக்கை அமையும் என்றார் வேல்முருகன்.

நெய்வேலி சட்டமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் தி.வேல்முருகன் நெய்வேலி புதுநகர் பகுதிகளில் சூறாவளி தேர்தல் பிரச்சாரம்

நெய்வேலி:

             நெய்வேலி சட்டமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வேல்முருகன் நெய்வேலி புதுநகர் பகுதிகளில் சூறாவளி தேர்தல் பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 
 
            நேற்று நெய்வேலி புதுநகருக்கு வடக்கே அமைந்துள்ள சிலோன் குவாட்டர்ஸ் (இலங்கை குடியிருப்பு பகுதிகளில்) வாக்கு சேகரிப்பை தொடங்கினார். திறந்த வேனில் கூட்டணி கட்சியான தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைமை நிர்வாகிகள் மற்றும் தி.மு.க. நகர செயலாளர் புகழேந்தி, பா.ம.க. நகர செயலாளர் சக்கரவர்த்தி உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், துணை தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோருடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனார்.

பின்னர் வேல்முருகன்  கூறியது:-

             நெய்வேலி 1-வது வட்டம், 7-வது வட்டத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை குடியிருப்பு வாசிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர். காலத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இந்த வீடுகள் தற்சமயம் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டு மழை காலங்களில் வீடு முழுவதும் பாதிக்கப்படுவதாகவும், சரியான வடிகால் வசதி இல்லாமல் உள்ளது எனவும் இங்குள்ள மக்கள் என்னிடம் கூறியுள்ளனர். இவர்களின் அத்தியாவசிய இந்த 2 கோரிக்கைகளையும் மனதில் வைத்து, சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதும் முதல் நடவடிக்கையாக இலங்கை குடியிருப்பு வாசிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, என்.எல்.சி. நிறுவனம் மற்றும் தமிழக முதல்வரிடம் முறையிட்டு நிவாரணம் பெற வழிவகை செய்வேன்.  இவ்வாறு வேல்முருகன் கூறினார்.


நெய்வேலியில் கொளுத்தும் வெயிலில் பா.ம.க வேட்பாளர் வேல்முருகன் வாக்கு சேகரிப்பு

நெய்வேலி:

                நெய்வேலி தொகுதி பா.ம.க. வேட்பாளர் வேல்முருகன் கொளுத்தும் வெயிலில் நெய்வேலி டவுன்ஷிப் 1-வது வட்டத்திலிருந்து 10-வட்டம் வரை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காலை 10 மணிக்கு நெய்வேலி புதுநகர் 1-வது வட்டம் பெரியார் சிலைக்கு, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் வேட்பாளர் வேல்முருகன் ஆகியோர் மாலை அணிவித்தார்.

            பின்னர் முக்கிய வீதிகள் வழியாக செல்லும் பொதுமக்கள், வணிகர்கள், தொழிலாளர்களிடம் வேல்முருகன் வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிப்பின்போது தி.மு.க. நகர செயலாளர் புகழேந்தி, தொ.மு.ச. நிர்வாகிகள் வீர.ராமச்சந்திரன், கோபாலன், ரகுராமன், காத்தவராயன், பா.ம.க. நகர செயலாளர் சக்கரவர்த்தி, பாட்டாளி தொழிற்சங்க நிர்வாகிகள் பெருமாள், திலகர், மோனிகா, சுப்ரமணியன், முன்னாள் வன்னியர் சங்க தலைவர் ஜோதிலிங்கம், சிவந்தான்செட்டி, ராசவன்னியன், ஸ்ரீதர், முருகேசன், ஆரோக்யதாஸ், சம்பூவராயர், ஜோதிபிரகாசம், காங்கிரஸ் நகர செயலாளர் கோவிந்தராஜ், பாலாஜி, ராதாகிருஷ்ணன், கலியபெருமாள், சந்திரமோகன், திருநாவுக்கரசு, நிக்ஸன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 
பின்னர் வேல்முருகன் கூறியது:-


               தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைவதில் எள்ளவும் சந்தேகமில்லை. கட்சி பாகுபாடின்றி தி.மு.க.வை சேர்ந்த தொ.மு.ச., பா.ம.க.வை சேர்ந்த பாட்டாளி தொழிற்சங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தொழிலாளர் விடுதலை முன்னணி, மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த மூ.மு.தொழிற்சங்கம், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கம் உள்பட அனைத்து கூட்டணி அமைப்பினரும் எனது வெற்றிக்காக கடுமையாக பாடுபட்டு வருகின்றனர்.

             இவர்களின் தொய்வில்லாத பணி தமிழகத்தில் மீண்டும் கலைஞர் ஆட்சியை உறுதி செய்து வருகிறது. அவர்களுக்கு என்றென்றைக்கும் நன்றி கடன் பட்டுள்ளேன். கலைஞர் ஆட்சியின் பல்வேறு சாதனைகளை மக்கள் உணர்ந்துள்ளனர். அதன் வெளிப்பாடே நான் செல்லும் இடங்கலெல்லாம் மீண்டும் கலைஞர் ஆட்சி தேவை என்று பொதுமக்கள் கூறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

பண்ருட்டியில் பாமகவில் இணைந்த தேமுதிக ஒன்றிய நிர்வாகிகள்

பண்ருட்டி:
 
             காடாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த தேமுதிக ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் நெய்வேலி தொகுதி பா.ம.க. வேட்பாளர் தி.வேல்முருகன் முன்னிலையில் பாட்டாளி மக்கள் கட்சியில் வியாழக்கிழமை இணைந்தனர்.  

               2001, 2006-ம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த தி.வேல்முருகன், தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.  நெய்வேலி மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் தி.வேல்முருகன் முன்னிலையில் பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் பாமகவில் இணைந்து வருகின்றனர்.  

            வியாழக்கிழமை காடாம்புலியூர் கிராமம் தேமுதிகவைச் சேர்ந்த முன்னாள் ஒன்றியச் செயலர் எம்.முருகன் தலைமையில், அக்கட்சியைச் சேர்ந்த கௌரவத் தலைவர் கொஞ்சிக்குப்பம் ஏழுமலை, காடாம்புலியூர் கிளைப் பொருளர் ஆனந்த், தலைவர் சக்தி, பிரதிநிதிகள் சதிஷ், அன்பரசு, செயலர் மோகன், துணைச் செயலர்கள் இராமலிங்கம், சிவா, கிளைச் செயலர் (தெற்கு) முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் தங்கள் உறுப்பினர்கள் அட்டையை ஒப்படைத்து தி.வேல்முருகன் முன்னிலையில் பாமகவில் இணைந்தனர்.  

           பாமகவில் இணைந்தவர்களை வாழ்த்தி பேசிய தி.வேல்முருகன் சிறப்பாக கட்சி மற்றும் தேர்தல் பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் சார்பில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி : பா.ம.க.வேட்பாளர் வேல்முருகன்

நெய்வேலி : 

              நெய்வேலி நகரம் எந்த அளவிற்கு அடிப்படை வசதிகளுடன் திகழ்கிறதோ அதுபோலவே நெய்வேலி தொகுதி முழுவதையும் மின்னொளியால் ஜொலிக்கச் செய்வேன் என பா.ம.க., வேட்பாளர் வேல்முருகன் கூறியுள்ளார்.

இதுகுறித்து  பா.ம.க., வேட்பாளர் வேல்முருகன் கூறியது: 

                   என்.எல்.சி.,யில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் இன்ஜினியர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை பெற்றுத் தருவேன். நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியில் இலவச கல்வி வழங்க நடவடிக்கை எடுப்பேன். மேலும், நெய்வேலியில் என்.எல்.சி., நிறுவனம் சார்பில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி உருவாக்கிக் கொடுக்கவும், அதில் என்.எல்.சி., தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு இலவச கல்விக்கு நடவடிக்கை எடுப்பேன். 

                என்.எல்.சி.,யில் ஐ.டி.ஐ., அப்ரண்டீஸ் முடித்தவர்களுக்கும், என்.எல்.சி., பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை பெற்றுத் தருவேன். என்.எல்.சி., நிறுவனத்திற்காக வீடு, நிலம் வழங்கிய, இழந்த மண்ணின் மைந்தர்களுக்கும் என்.எல்.சி.,யில் வேலை வாங்கித் தருவேன். நெய்வேலியில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் நியாயமான கட்டணத்தை வசூலிக்கச் செய்வேன். தென்குத்து வானதிராயபுரம் கிராமங்களில் சுரங்கங்களுக்கு வைக்கப்படும் வெடியால் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. 

               எனவே, இந்த கிராம மக்களுக்கு மாற்று குடியிருப்பு, நஷ்ட ஈடு மற்றும் வீட்டிற்கு ஒருவருக்கு வேலை பெற்றுத் தருவேன். என்.எல்.சி., நிர்வாகம் தொகுதி வளர்ச்சிக்காக வழங்கும் 2 கோடி ரூபாயை 5 கோடி ரூபாயாக உயர்த்தி பெற்று அதனைக் கொண்டு கிராமங்களுக்கு குடிநீர், சாலை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதோடு, நெய்வேலி நகரில் உள்ளது போல் தொகுதியை மின்னொளியால் ஜொலிக்கச் செய்வேன். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுப்பேன். 

               முந்திரிக் கொட்டை உடைக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க பாடுபடுவேன். மேலும், நெய்வேலி பிளாக் 21, 30 தாண்டவன்குப்பம் பகுதியில் வசூலிக்கப்படும் தரை வாடகையை ரத்து செய்து, மின் வசதியை ஏற்படுத்தி தருவேன். இவ்வாறு பா.ம.க., வேட்பாளர் வேல்முருகன் கூறினார்.

நெய்வேலியில் அரசு மருத்துவ கல்லூரி அமைய பாடுபடுவேன்: பா.ம.க. வேட்பாளர் வேல்முருகன்

நெய்வேலி:

               நெய்வேலியில் உள்ள பாட்டாளி தொழிற்சங்க அலுவலகத்தில் தொழிற் சங்கம் மற்றும் பா.ம.க. கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. பாட்டாளி தொழிற்சங்க பொதுச்செயலாளர் திலகர் வரவேற்றார். தலைவர் பெருமாள் முன்னிலை வகித்தார்.  
கூட்டத்தில் நெய்வேலி தொகுதி பா.ம.க. வேட்பாளர் வேல்முருகன் கலந்து கொண்டு பேசியது:-

                  நெய்வேலியில் அமைந்துள்ள தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் பாட்டாளி தொழிற் சங்கம் ஆகியவைகள் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களாக உள்ளன. இந்த தொழிற் சங்கங்களின் உறுப்பினர்கள் முனைப்புடன் கூட்டணி கட்சியினருடன் ஒற்றுமையுடன் செயல்பட்டு தி.மு.க. கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும். நெய்வேலியில் தொழி லாளர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்காக களமிறங்கி போராடி வெற்றி பெற்றுள்ளேன்.

               பா.ம.க. கூட்டணி வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும். முன்னாள் மத்திய மந்திரி அன்புமணியின் கனவை நனவாக்கும் வகையில் நெய்வேலியில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க பாடுபடுவேன். 21, 30 ஆகிய வட்டங்களில் குடியிருக்கும் குடிசை வாழ் மக்களின் அடிப்படை பிரச்சினையான குடிநீர் மற்றும் மின்சாரம் பெற்றுத்தர முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் பலமுறை பேசியுள்ளேன். அவரும் கலெக்டர் மற்றும் என்.எல்.சி. நிறுவன தலைவரிடம் பேசியுள்ளார். இந்த பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

               கூட்டத்தில் நெய்வேலி நகர செயலாளர் சக்கரவர்த்தி மற்றும் நிர்வாகிகள் ஜோதி பிரகாசம், வளர்மதி, பாட்டாளி தொழிற்சங்க பொருளாளர் மோனிகா, அலுவலக செயலாளர் சுப்பிரமணியன், வன்னியர் சங்க முன்னாள் செயலாளர் ஜோதிலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் பா.ம.க.வேட்பாளர் வேல்முருகன் வேட்பு மனு தாக்கல்





நெய்வேலி : 

            ""என்.எல்.சி., அதிகாரிகளுக்கு எதிரானவன் என, சில விஷமிகள், புரளியை கிளப்பி விடுகின்றனர்,'' என, பா.ம.க., வேட்பாளர் வேல்முருகன் கூறினார். கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் அவர், நில எடுப்பு துணை கலெக்டர் கந்தசாமியிடம்  மனு தாக்கல் செய்தார்.

 பின்பு  பா.ம.க., வேட்பாளர் வேல்முருகன் கூறியது 

                   நான், என்.எல்.சி., அதிகாரிகளுக்கு எதிரானவன் என்பது போன்ற புரளியை, சில விஷமிகள் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். நான், என்.எல்.சி.,யில் பணிபுரியும் அனைவருக்கும் பாதுகாப்பாக இருப்பேன். ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்னைகளை விரைவில் முடித்துக் கொடுப்பேன். நெய்வேலி தொகுதியில் என்.எல்.சி., தொழிலாளர்களுக்கு எவ்வித குறையும் கிடையாது. அவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். அவர்களுக்கு ஏதேனும் பிரச்னைகள் உருவானால், தொ.மு.ச., - பா.தொ.ச. உள்ளிட்ட அனைத்து கட்சியின் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் இணைந்து பிரச்னைகளை சரி செய்வேன். இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தி.வேல்முருகன் அறிமுகம் செய்யும் கூட்டம்

நெய்வேலி:

      தொழிலாளர்களிடையே இவர் நிரந்தரத் தொழிலாளி, இன்னொருவர் ஒப்பந்தத் தொழிலாளி என பேதம் பார்த்து பணியாற்றவில்லை. அனைவரின் கோரிக்கைக்காகவும் நான் குரல் கொடுத்து போராடியிருக்கிறேன் என நெய்வேலியில் திங்கள்கிழமை நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வேல்முருகன் பேசினார்.  

              நெய்வேலித் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தி.வேல்முருகனை அறிமுகம் செய்யும் கூட்டம் நெய்வேலியில் உள்ள அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் குடியிருப்பில் திங்கள்கிழமை நடந்தது. இக்கூட்டத்திற்கு திமுக நகரச் செயலர் புகழேந்தி தலைமைவகித்தார். 

               அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேல்முருகனை அறிமுகம் செய்து வைத்து, அவருக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற வேண்டும் என நெய்வேலி நகர திமுகவினருக்கு உத்தரவிட்டார்.  


இதைத்தொடர்ந்து நெய்வேலித் தொகுதி பாமக வேட்பாளர் தி.வேல்முருகன் பேசுகையில்,

                 ""நான் அடிப்படையில் திமுகவில் இருந்து பின்னர் பாமகவில் வளர்ந்து வந்தவன். எனது தொகுதிக்குட்பட்ட மக்களுக்காக நான் குரல் கொடுப்பதில் என்றைக்கும் தயங்கியது கிடையாது. மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் குணம் உள்ளவன்.  திமுக தலைமைக்கும், பாமக தலைமைக்கும் இடையே ஒரு அணிலாக இருந்து தூது சென்று கூட்டணி அமைய காரணமாக இருந்துள்ளேன்.  

                என்னைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் தவறான அபிப்பிராயம் இருந்தால் அதை நேரிடையாக கேளுங்கள் நான் உங்களுக்கு பதில் கூற கடமைப்பட்டுள்ளேன்.  நான் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதிலும், இங்குள்ள ஜவகர் பள்ளி ஆசிரியர்கள் பிரச்னை, அப்ரண்டீஸ் இளைஞர்கள் பிரச்னை, வட்டம் 21-30 மக்களின் வாழ்வாதார பிரச்னை, ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிரச்னை என அனைத்து பிரச்னைகளுக்கும் சட்டமன்றத்தில் குரல் கொடுத்து மாநில அரசின் கவனத்தை ஈர்த்துள்ளேன்.  

                நிரந்தரத் தொழிலாளர்களின் போனஸ், ஊக்கத்தொகை பிரச்னைகளுக்கும் குரல் கொடுத்ததோடு, இங்குள்ள தொழிற்சங்க நிர்வாகிகளோடு ஒன்றாக அமர்ந்து பிரச்னை முடியும் வரை அவர்களுக்காக போராடியிருக்கிறேன்.  எனது தொகுதி வாசிகளின் பிரச்சனைகள் தீர 24 மணிநேரமும் உழைக்க நான் காத்திருக்கிறேன்'' என்றார் வேல்முருகன்.,  

                   கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், மூமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நெய்வேலியில் வசிக்கும் பண்ருட்டி திமுக வேட்பாளர் சபா.ராஜேந்திரனும் வேல்முருகனுக்கு ஆதரவு அளிக்கவேண்டுமென திமுகவினரை கேட்டுக்கொண்டார்.