தேர்தல் பணிக்குழு கூட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேர்தல் பணிக்குழு கூட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உள்ளாட்சித் தேர்தல்: கடலூர் மாவட்ட பா.ம.க.பணிக்குழு நியமனம்

கடலூர்:

           கடலூர் மாவட்ட பா.ம.க., வில் உள்ளாட்சித் தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது என மாநில இணை பொதுச் செயலாளர்  வேல்முருகன் கூறியுள்ளார்.

மாநில இணை பொதுச் செயலாளர்  வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

           கடலூர் மாவட்ட பா.ம.க., வில் உள்ளாட்சித் தேர்தல் பணிக் குழுக்கள் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் ஒப்புதலுடன், மாநில சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் கோவிந்தசாமி, மாநில துணை பொதுச் செயலர் சண்முகம் ஆகியோர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி

கடலூர், பண்ருட்டி:

           கடலூர், பண்ருட்டிக்கு மாவட்டச் செயலர் பஞ்சமூர்த்தி, அலுவலக செயலர் ராமச்சந்திரன், தலைவர் கோதண்டபாணியும், 


நெய்வேலி, குறிஞ்சிப்பாடி:

      
நெய்வேலி, குறிஞ்சிப்பாடிக்கு மாநில துணைத் தலைவர் திருமால்வளவன், மாவட்டச் செயலர் தர்மலிங்கம், நிர்வாகக்குழு உறுப்பினர் முத்து வைத்திலிங்கம், தலைவர் சக்திவேல், அமைப்புச் செயலர் ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி:

              புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடிக்கு மாநில தேர்தல் பணிக்குழு தனபால், மாவட்டச் செயலர் சின்னதுரை, முன்னாள் மாநில துணை பொதுச் செயலர் திருஞானம், முன்னாள் மாவட்டச் செயலர் செல்வராசு, மாவட்டத் தலைவர் ஆடியபாதம், சிதம்பரம், 

காட்டுமன்னார்கோவில் :

          காட்டுமன்னார்கோவிலுக்கு மாநில துணைத் தலைவர் சவுந்திரபாண்டியன், மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழு தேவதாஸ் படையாண்டவர், மாவட்டச் செயலர் வேணு புவனேஸ்வரன், முன்னாள் மாவட்டச் செயலர் கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளனர் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மங்களூர் ஒன்றிய பா.ம.க.தேர்தல் பணிக்குழுக் கூட்டம்

திட்டக்குடி :

        திட்டக்குடியில் மங்களூர் ஒன்றிய பா.ம.க., சார்பில் உள்ளாட்சித் தேர்தல் பணிக்குழுக் கூட்டம் நடந்தது. மாநில தேர்தல் பணிக்குழுச் செயலர் தனபால் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் ஆடியபாதம், நகர செயலர் சரவணன், ஒன்றிய செயலர் பழனிவேல் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் சிங்காரம் வரவேற்றார். கூட்டத்தில் வெற்றி வாய்ப்பை பெறுவதற்கான வழிமுறைகள், கட்சி அறிவிக்கும் வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபடுதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

புதுச்சேரி மாநிலத்தில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 தொகுதிகள் வேண்டும்: தேர்தல் குழு தீர்மானம்

               சட்டமன்ற தேர்தலில் போட்டியிட புதுச்சேரி மாநிலத்தில் 7 தொகுதிகளில் கேட்டு பெற வேண்டும் என்று பா.ம.க. தலைமை தேர்தல் பணிக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
             புதுச்சேரி மாநில பா.ம.க. தலைமை தேர்தல் பணிக்குழு கூட்டம் 100 அடி ரோட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில், புதுச்சேரி மாநிலத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. சார்பில் 7 தொகுதிகளை ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளிடம் கேட்டு பெற வேண்டும்.
            புதுச்சேரி மாநிலத்தில் எந்தெந்த தொகுதிகளை கேட்டு பெறுவது என்றும், வேட்பாளர்கள் யார் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய இரவும், பகலும் பாடுபட வேண்டும். தொகுதி அளவில் தேர்தல் பணிக்குழு அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.