தனபால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தனபால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மங்களூர் ஒன்றிய பா.ம.க.தேர்தல் பணிக்குழுக் கூட்டம்

திட்டக்குடி :

        திட்டக்குடியில் மங்களூர் ஒன்றிய பா.ம.க., சார்பில் உள்ளாட்சித் தேர்தல் பணிக்குழுக் கூட்டம் நடந்தது. மாநில தேர்தல் பணிக்குழுச் செயலர் தனபால் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் ஆடியபாதம், நகர செயலர் சரவணன், ஒன்றிய செயலர் பழனிவேல் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் சிங்காரம் வரவேற்றார். கூட்டத்தில் வெற்றி வாய்ப்பை பெறுவதற்கான வழிமுறைகள், கட்சி அறிவிக்கும் வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபடுதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

சமச்சீர் கல்வி அமல்படுத்த உச்சநீதி மன்றம் தீர்ப்பு: திட்டக்குடியில் பா.ம.க.வினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்

 
திட்டக்குடி: 

         சமச்சீர் கல்வி அமல்படுத்த உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து திட்டக்குடியில் பா.ம.க.வினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு பா.ம.க., மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் தனபால் தலைமையில் மாணவரணி கண்ணன் தலைமையில் ஒன்றிய தலைவர் வீரபொன்முடி, நகர செயலர் சரவணன், ஒன்றிய செயலர் பழனிவேல் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் குழந்தைவேல், வேல்முருகன், பஞ்சு ஆறுமுகம் உட்பட பலர் பள்ளி மாணவர்களுக்கு பேனா வழங்கி பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.