பா. செந்தமிழ்ச்செல்வன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பா. செந்தமிழ்ச்செல்வன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பாட்டாளி மக்கள் கட்சியின் மரக்காணம் ஒன்றிய துணைச் செயலாளர் ஹரிதாஸ் காலமானார்: ராமதாஸ் அஞ்சலி

திண்டிவனம்:

         பாட்டாளி மக்கள் கட்சியின் மரக்காணம் ஒன்றிய துணைச் செயலாளர் ஹரிதாஸ் புதன்கிழமை மாரடைப்பால் காலமானார்.  அவரது உடலுக்கு கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அஞ்சலி செலுத்தினார். 

            மரக்காணத்தை அடுத்த சலாவதியில் வைக்கப்பட்டிருந்த ஹரிதாஸ் உடலுக்கு கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.  கட்சியின் மாநில துணை பொதுச்செயலர் செந்தமிழ்செல்வன்,மாவட்டச் செயலர் மலர்சேகர், முன்னாள் மாவட்டச் செயலர் ஏழுமலை, நகரச் செயலர் ஜெயராஜ், முன்னாள் மரக்காணம் ஒன்றியச் செயலர் நடராஜ் உள்ளிட்டோர் ராமதாசுடன் சென்றிருந்தனர்.

உள்ளாட்சித் தேர்தலில் திண்டிவனத்தில் போட்டியிட பா.ம.க.வினர் விருப்ப மனு

திண்டிவனம்:

         திண்டிவனம் வன்னியர் சங்க அலுவலகத்தில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் பா.ம.க., வினர் மனு அளித்தனர். திண்டிவனம் நகராட்சி, மரக்காணம் பேரூராட்சி சேர்மன், மரக்காணம், ஒலக்கூர் ஒன்றியங்களுக்கான உள்ளாட்சி பதவிகளுக்கான மனுக்கள் பெறப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ் செல்வன், மாநில துணைத் தலைவர் கருணாநிதி இருவரும் பா.ம.க.வினரிடம் விருப்ப மனு பெற்றனர். சாரம் ஜானகி ராமன், மாவட்ட செயலர் மலர்சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

செஞ்சியில் பா.ம.க. சார்பில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

செஞ்சி:

              ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் தண்டனையை குறைக்க வலியுறுத்தி செஞ்சி வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு, முன்னாள் எம்.எல்.ஏ.பா.செந்தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கி  உரையாற்றினார். மாவட்டத் தலைவர் தங்க.சுந்தர்ராஜன், மாவட்ட அமைப்புச் செயலர் கோ.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாமக மாவட்டச் செயலர் க.மணிமாறன் வரவேற்றார். ஒன்றியச் செயலர்கள் செ.பி.முருகன், ஏ.ர.அய்யனார், இரா.வேல்முருகன், இரா.வேலுச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழுப்புரத்தில் பா.ம.க. சார்பில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்:

             பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் விழுப்புரத்தில் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

           விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைப் பொதுச் செயலர் பா.செந்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார் ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலர் பா.பழனிவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் வசுந்தராதேவி, மாநில துணைத் தலைவர் தங்க.ஜோதி, வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் முனியப்ப கவுண்டர், மாநில இணைச் செயலர் மா.தனராசு, மாவட்டச் செயலர் புண்ணியகோடி, பாமக நகரச் செயலர் தமிழ்செல்வன், மாவட்டத் தலைவர் துரைமுருகன், ஒன்றியச் செயலர்கள் சம்பத், சீனிவாசன், புகழேந்தி, ரத்தினம், சுரேஷ், துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திண்டிவனம் நகர பா.ம.க., பொதுக்குழு கூட்டம்: நகர செயலாளர் ஜெயராஜ் தலைமை தாங்கினர்

திண்டிவனம் :

            திண்டிவனம் நகர பா.ம.க., பொதுக்குழு கூட்டம் நடந்தது. நகர செயலாளர் ஜெயராஜ் தலைமை தாங்கினர். 

             கவுன்சிலர்கள் வடபழனி, ராமன், முரளிதாஸ், சவுந்தர், ஞானவேல் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் ஒவியர் ரவி வரவேற்றார். முன்னாள் எம்.பி., தன்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ்செல்வன், மாநில துணைத் தலைவர் கருணாநிதி, மாவட்ட செயலாளர் மலர் சேகர், தலைவர் சங்கர், முன்னாள் மாவட்ட செயலாளர் ஏழுமலை, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் வசுந்தரா தேவி, வழக்கறிஞர் பாலாஜி பேசினர். 

           திண்டிவனம் காவேரிப்பாக்கம் சுரங்க நடை பாதையை உடனடியாக சீரமைக்க நகராட்சி நடவடிக்கை வேண்டும். 

            திண்டிவனம் நகருக்கு நிரந்தரமான பஸ் நிலையத்தை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. 

          செயற்குழு உறுப்பினர் சுப்ராயலு, மரக்காணம் ஒன்றிய துணை சேர்மன் ஜெயகிருஷ்ணன், ஜானகிராமன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தனலட்சுமி நன்றி கூறினார்.

விழுப்புரம் மாவட்டத்தில்ல பசுமைத் தாயகம் சார்பில் சாலை விபத்து தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி

 விழுப்புரம்:

            விழுப்புரம் மாவட்ட பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் சாலை விபத்துகளைத் தடுக்க விழிப்புணர்வு மனித சங்கிலி விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் முன்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

             உலகில் சாலை விபத்துகள் அதிகம் இந்தியாவில் நடக்கிறது, இதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. எனவே சாலை விபத்துகளைத் தடுக்க குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தடுப்பது, கட்டாயம் தலைக்கவசம் அணிவது, வேகத்தைக் கட்டுப்படுத்துவது, கட்டாய வார்ப்பட்டை அணிவது ஆகியவற்றை வலியுறுத்தி இந்த மனித சங்கிலி நடைபெற்றது.

             இந்நிகழ்ச்சிக்கு, பாமக மாநில துணைப் பொதுச் செயலர் செந்தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். மாநில கொள்கை விளக்க அணிச் செயலர் வியன்ன அரசு சிறப்புரையாற்றினார். இதில்  மாநில துணைத் தலைவர் தங்க.ஜோதி, மாவட்டச் செயலர்கள் பழனிவேலு, மணிமாறன், மாவட்ட இணைச் செயலர் சிவக்குமார், ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் துரைமுருகன், நகரச் செயலர் தமிழ்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பொங்கல் விடுமுறையில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: பாமக எம்.எல்.ஏ. செந்தமிழ்ச்செல்வன்

சென்னை:

            பொங்கல் விடுமுறையின்போது 4 நாள்களுக்கு டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பாமக எம்.எல்.ஏ. செந்தமிழ்ச்செல்வன் கோரிக்கை விடுத்தார்.  

சட்டப் பேரவையில் திங்கள்கிழமை தொடங்கிய ஆளுநர் உரை மீதான விவாதத்தில்  பாமக எம்.எல்.ஏ. செந்தமிழ்ச்செல்வன் பேசியது: 

             பொங்கல் விடுமுறையின்போது கலவரங்கள் ஏற்படுவதைத் தடுக்க 4 நாள்களுக்கு டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும்.  தமிழகத்தில் 65 சதவீத இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிóட்டு வேலைக்காக காத்திருக்கின்றனர். 

             ஆனால், இவர்களின் எதிர்காலம் குறித்த எந்த அறிவிப்பும் ஆளுநர் உரையில் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. அரியலூர், பெரம்பலூர் போன்ற பின்தங்கிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் சென்னைக்கும், பெங்களூருக்கும் வேலைக்குச் செல்கின்றனர். இதனைத் தடுக்கும் வகையில் பின்தங்கிய மாவட்டங்களில் தொழிற்சாலைகளையும், தொழிற்பேட்டைகளையும் அமைக்க வேண்டும். 

            இன்றைய நிலையில் 96 சதவீத வேலைவாய்ப்புகள் தனியார் துறையில் உள்ளன. அதனால் தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இலங்கைத் தமிழர் குறித்த ஆதங்கம் மட்டுமே ஆளுநர் உரையில் உள்ளது. இலங்கை தமிழர் பிரச்னை தீர தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். 

               தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கச்சத்தீவை மீட்க வேண்டும்.  விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் காய்கறி கடைகளில் ஒரே நாளில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி பதுக்கலைத் தடுக்க வேண்டும். பாமகவின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்றார் செந்தமிழ்ச்செல்வன்.

30 ஆண்டுகளாகப் போராடி இட ஒதுக்கீடு மட்டுமே கிடைத்தது: டாக்டர் ராமதாஸ்

செஞ்சி:

               வன்னியர் சமுதாயத்துக்காக 30 ஆண்டுகளாக பாடுபட்டு இட ஒதுக்கீட்டை மட்டுமே பெற முடிந்தது. ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

செஞ்சியில் நடைபெற்ற வன்னியர் சங்க இளைஞர்கள், இளம்பெண்கள் நிர்வாகிகள் கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியது:

                  30 ஆண்டுகளுக்கு முன் வன்னியர் சமுதாயத்தில் 3 டாக்டர்கள் மட்டுமே இருந்தார்கள். தற்போது 50 ஆயிரம் டாக்டர்கள் உள்ளார்கள்; 10 ஆயிரம் வழக்கறிஞகள் உள்ளார்கள். பல்வேறு துறையிலும் பணியில் உள்ளார்கள். இவை எல்லாம் இட ஒதுக்கீடு பெற்ற பிறகு வந்தவை. இந்த இட ஒதுக்கீட்டைக் கூட தனியாக தரவில்லை 107 சாதியை சேர்த்துதான் கொடுத்தார்கள். மற்ற முன்னேறிய ஜாதிகளுக்கு இணையாக தாழ்த்தப்பட்ட ஜாதிகளை உயர்த்தியுள்ளார் உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி. 

                அவர் என்னென்ன செய்தார் என்பது குறித்து ஒரு பக்க அளவுக்கு ஆங்கில நாளிதழ்களில் விளம்பரம் வெளிவந்துள்ளது.ஆந்திரம், கேரளம், கர்நாடக மாநிலங்களில் சில பிரிவு மக்களைத் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வர முடியாது. அதேபோல வன்னியர் சமுதாயம் அதிகம் உள்ள தமிழ்நாட்டில் வன்னியர் ஆட்சிக்கு வர முடிவில்லை.இதற்கு வன்னியர்களிடத்தில் ஒற்றுமை இல்லாததே காரணம். 

               விழுப்புரத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் தனியாக நின்று பாமக வெற்றி பெற முடியும் செஞ்சி தொகுதியில் நாம் தனியாக நின்றாலும் வெற்றி பெற முடியும். ஒரு இளைஞன் ஒரு கிராமத்தில் 60 ஓட்டுகளைப் பெற முடியும். இளைஞர்களிடத்தில் ஆற்றல், திறமை உள்ளது. ஆதலால் இளைஞர்களிடத்தில் கட்சியை ஒப்படைக்கிறேன். இவ்வாறு என்றார் ராமதாஸ். மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, மேல்மலையனூர் எம்.எல்.ஏ. பா.செந்தமிழ்ச்செல்வன், மாவட்டச் செயலர் மணிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

127 தொகுதிகளில் வென்றால் ஆட்சி: டாக்டர் ராமதாஸ்

விழுப்புரம்:
 
               வன்னியர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் இணைந்து வாக்களித்தால் 127 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கலாம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார். பாமக விக்கிரவாண்டி தொகுதி இளைஞர்கள், இளம்பெண்கள் பயிற்சி முகாம் கெடாரில் சனிக்கிழமை நடைபெற்றது.
 
இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியது: 
 
                  வன்னியர் அனைவரும் ஒருங்கிணைந்து வாக்களித்தால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் தனித்தே ஜெயிக்கலாம். தமிழகத்தில் 100 தொகுதிகளில் ஜெயிக்கலாம். ஆட்சியை பிடிக்க கூடுதலாக 17 பேர் தேவை.இந்நிலையில் வன்னியர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் இணைந்து வாக்களித்தால் 127 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கலாம்.
 
                 உத்தரப்பிரதேசத்தில் 20 சதவீதம் தாழ்த்தப்பட்டவர்கள் ஒருங்கிணைந்து வாக்களித்து 5-வது முறையாக மாயாவதி முதல்வராக உள்ளார். அந்த மக்கள் அப்படியே ஓட்டு போட்டார்கள். ஒரு ஓட்டுக்கு ஒரு கோடி கொடுத்தாலும் அவர்கள் மாற்றிப் போடமாட்டார்கள்.அதுபோல நீங்களும் வாக்களித்தால்தான் ஆட்சியை பிடிக்க முடியும். நீங்கள்தான் என்னை போயஸ் தோட்டத்துக்கும், கோபாலபுரத்துக்கும் அனுப்புகிறீர்கள். நீங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் இந்த நிலை ஏன் எனக்கு ஏற்படப்போகிறது?
 
                  பாமக ஆட்சிக்கு வந்தால் 3 வேளை உணவு, உடைக்கு உத்தரவாதம் அளிக்கப்படும். வீடு இல்லையென்று பட்டா கேட்டு மனு தரும் நிலை இருக்காது. கழிப்பறை இல்லாத வீடுகள் இருக்காது. அனைவரும் கல்வியறிவு பெறவேண்டும், குடும்பம் தவறாமல் அரசு வேலைக்கு உத்தரவாதம் அளிக்கப்படும். சாராயம் இல்லாத மாநிலமாக உருவாக்குவோம், ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் இதையெல்லாம் செய்வோம். அப்போது அனைத்து மக்களுமே நம்மை ஆதரிப்பார்கள் என்றார்.
 
                   கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் கோ.க. மணி ஆகியோர் பேசினர். எம்எல்ஏ பா.செந்தமிழ்ச்செல்வன், மாநில துணைத் தலைவர் தங்கஜோதி, மாநில செயற்குழு உறுப்பினர் சு.நடராஜன், காணை ஒன்றியச் செயலர் சு.துரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் பாமக எம்எல்ஏ-க்கள் ஆய்வு

விழுப்புரம்:

                 விக்கிரவாண்டித் தொகுதியில் பாமக ஆய்வுப் பணிகள் புதன்கிழமை முதல் 29-ம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது என்று கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலர் பா. செந்தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து , பாட்டாளி மக்கள் கட்சிகட்சியின் மாநில துணைப் பொதுச்செயலர் பா. செந்தமிழ்ச்செல்வன் வெளியிட்ட அறிக்கை

                    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ள, மாநிலத் தலைவர் கோ.க. மணி தலைமையில் 18 சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் அனைத்து கிராமங்களிலும் ஆய்வுப் பணிமேற்கொள்வர். அப்போது மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை பொறுப்பாளர்கள் அனைவரும் உரிய ஒத்துழைப்பு தந்து சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.