மரக்காணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மரக்காணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பாட்டாளி மக்கள் கட்சியின் மரக்காணம் ஒன்றிய துணைச் செயலாளர் ஹரிதாஸ் காலமானார்: ராமதாஸ் அஞ்சலி

திண்டிவனம்:

         பாட்டாளி மக்கள் கட்சியின் மரக்காணம் ஒன்றிய துணைச் செயலாளர் ஹரிதாஸ் புதன்கிழமை மாரடைப்பால் காலமானார்.  அவரது உடலுக்கு கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அஞ்சலி செலுத்தினார். 

            மரக்காணத்தை அடுத்த சலாவதியில் வைக்கப்பட்டிருந்த ஹரிதாஸ் உடலுக்கு கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.  கட்சியின் மாநில துணை பொதுச்செயலர் செந்தமிழ்செல்வன்,மாவட்டச் செயலர் மலர்சேகர், முன்னாள் மாவட்டச் செயலர் ஏழுமலை, நகரச் செயலர் ஜெயராஜ், முன்னாள் மரக்காணம் ஒன்றியச் செயலர் நடராஜ் உள்ளிட்டோர் ராமதாசுடன் சென்றிருந்தனர்.

வன்னியர் சங்க மாநாடு மரக்காணம் பா.ம.க.வினர் 100 வாகனங்களில் பயணம்

மரக்காணம்:
                மரக்காணம் கிழக்கு ஒன்றியம் மற்றும் நகர பா.ம.க. சார்பில் ஆலோசனை கூட்டம் மரக்காணத்தில் நடந்தது. முன்னாள் ஒன்றிய தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார்.


                  ஒன்றிய தலைவர் கோவிந் தசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் பெருமாள், மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் இளங்கோவன், முன்னாள் நகர செயலாளர் மின்னல் ஏழுமலை ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.


                 நகர செயலாளர் திருநாவுக் கரசு வரவேற்றார். மாநில தலைமை நிலைய செயலாளர் கருணாநிதி சிறப்புரை ஆற்றினார். முன்னாள் மாவட்ட செய லாளர் ஜெயகிருஷ்ணன், மாவட்ட விளம்பர குழு தலைவர் சுந்தர மூர்த்தி, கவுன்சிலர் சேது, வன்னியர் சங்க மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். வன்னியர் சங்க மாநாட்டில் 100 வாகனங்களில் சென்று பங்கேற்பது. மரக்காணம் பகுதியில் நிலவும் தொடர் மின்தடை யால் விவசாய, வணிக நிறுவனம், பள்ளி மாண வர்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். மின் தடையை நீக்க மாற்று வழியை கையாள வேண்டும்.


               மரக்காணத்தில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர வேண்டும் என தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டது.