அஞ்சலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அஞ்சலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பாட்டாளி மக்கள் கட்சியின் மரக்காணம் ஒன்றிய துணைச் செயலாளர் ஹரிதாஸ் காலமானார்: ராமதாஸ் அஞ்சலி

திண்டிவனம்:

         பாட்டாளி மக்கள் கட்சியின் மரக்காணம் ஒன்றிய துணைச் செயலாளர் ஹரிதாஸ் புதன்கிழமை மாரடைப்பால் காலமானார்.  அவரது உடலுக்கு கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அஞ்சலி செலுத்தினார். 

            மரக்காணத்தை அடுத்த சலாவதியில் வைக்கப்பட்டிருந்த ஹரிதாஸ் உடலுக்கு கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.  கட்சியின் மாநில துணை பொதுச்செயலர் செந்தமிழ்செல்வன்,மாவட்டச் செயலர் மலர்சேகர், முன்னாள் மாவட்டச் செயலர் ஏழுமலை, நகரச் செயலர் ஜெயராஜ், முன்னாள் மரக்காணம் ஒன்றியச் செயலர் நடராஜ் உள்ளிட்டோர் ராமதாசுடன் சென்றிருந்தனர்.

மெரினாவில் ஈழத்தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி : பாமக இணைப் பொதுச்செயலாளர் தி.வேல்முருகன் பங்கேற்பு



 



           
 


            ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் நாளை உலகெங்கிலும் சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவு தினமாக ஐநா கடைபிடித்து வருகிறது.

        இலங்கை அரசின் சித்திரவதைகளூக்கு ஆளாக்கப்பட்டு இன்னுயிர் துறந்தல் ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெரினா கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி நேற்று  ( 26.6.2011) மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது.

        பழ.நெடுமாறன், காசி ஆனந்தன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்,  பாமக இணைப் பொதுச்செயலாளர்  தி.வேல்முருகன், மதிமுக மல்லை சத்யா உட்பட பல்லாயிரக்கணக்காணோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். பழ.நெடுமாறன்  எழுச்சி உரை ஆற்றினார்.   சீமான் எழுச்சி கோஷங்கள் எழுப்பினார்.  இந்த நிகழ்வு கட்சி சார்பற்ற நிகழ்வாகவே இருந்தது.