விழுப்புரம் மாவட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விழுப்புரம் மாவட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உள்ளாட்சி தேர்தல்: விழுப்புரம் காணை ஒன்றியத்தில் பா.ம.க.சார்பில் போட்டியிட விருப்ப மனு

விழுப்புரம்:

            விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியத்தைச் சேர்ந்த பா.ம.க., நிர்வாகிகள் மாவட்ட அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்ட பா.ம.க., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பழனிவேல் விருப்ப மனு பெற்றார். காணை ஒன்றியம் அத்தியூர்திருக்கை கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான விருப்ப மனு அளித்தார். மாநில துணை தலைவர் தங்கஜோதி, செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர், ஒன்றிய செயலாளர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

விழுப்புரம் வடக்கு மாவட்ட வன்னியர் சங்க ஆலோசனைக் கூட்டம்

செஞ்சி:

            விழுப்புரம் வடக்கு மாவட்ட வன்னியர் சங்க ஆலோசனைக் கூட்டம் செஞ்சியில் புதன்கிழமை நடைபெற்றது. 

              மாவட்ட துணைச் செயலர் பி.டி.எம்.அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலர் ஆ.கோ.சிங்காரவேலு முன்னிலை வகித்தார்.  மாநில செயற்குழு உறுப்பினர் ரா.செல்வமணி வரவேற்றார். மாநில வன்னியர் சங்க துணைத் தலைவர் மே.பெ.சி. ராஜேந்திரன், மேல்மலையனூர் ஒன்றியக் குழுத் தலைவர் அன்பழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். செஞ்சி ஒன்றியச் செயலர் புதூர் கே.பி. சம்பத், மேல்மலையனூர் ஒன்றியச் செயலர் பூங்காவனம், வல்லம் ஒன்றியத் தலைவர் முனுசாமி, மாவட்ட துணைத் தலைவர் ஜெயபால் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:  

விழுப்புரம் வடக்கு மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில் 22-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்துக்கு வருகைதரும் வன்னியர் சங்கத் தலைவர் குருவுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, 

வன்னியர் சங்க அறக்கட்டளைக்கு நிதி திரட்டுவது, 

கனல் சந்தா சேர்ப்பது.  

செஞ்சி, மயிலம் தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் வன்னியர் சங்க கொடி ஏற்றுவது, 

3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசை கேட்டு கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பா.ம.க.சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விழுப்புரம் மாவட்டதில் விருப்ப மனு

விழுப்புரம்:

            விழுப்புரம், விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட பாமகவினர் புதன்கிழமை விருப்பமனு தாக்கல் செய்தனர்.  

             விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியில் உள்ள பாமக நகர அலுவலகத்தில் மாநில துணைப் பொதுச் செயலர் பா.செந்தமிழ்ச்செல்வன் விருப்ப மனுக்களை பெற்றார். அப்போது விழுப்புரம் நகர்மன்றத் தலைவருக்கான விருப்ப மனுவை பெருமாள் தாக்கல் செய்தார்.  இந்நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் தங்க.ஜோதி, மாவட்டச் செயலர் ப.பழனிவேல், வன்னியர் சங்க மாவட்டச் செயலர் புண்ணியகோட்டி, இளைஞர் அணி சிவக்குமார், ஒன்றிய செயலர்கள் புகழேந்தி, சம்பத், சீனிவாசன், துரை, சுரேஷ், ரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாட்டாளி மக்கள் கட்சி செஞ்சி ஒன்றிய செயலாளராக புதுப்பாளையம் ம.ஜெயக்குமார் நியமனம்

செஞ்சி:

           பாமக விழுப்புரம் மாவட்டம் (வடக்கு) செஞ்சி ஒன்றியச் (மேற்கு) செயலாளராக  புதுப்பாளையம் ம.ஜெயக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

        பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் மாநில இளைஞர் சங்கத் தலைவர் டாக்டர் அன்புமணி ஆகியோரது ஒப்புதலோடும், மாவட்டச் செயலர் க.மணிமாறன் பரிந்துரையின் பேரில், நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பாமக தலைவர் கோ.க.மணி தெரிவித்துள்ளார்.

உளுந்தூர்பேட்டையில் பா.ம.க. சார்பில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

உளுந்தூர்பேட்டை:
          
            பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன் விழுப்புரம் (கிழக்கு) மாவட்ட பாமக சார்பில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

             ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில துணைச் செயலர் அன்பழகன் தலைமை வகித்தார். நகரச் செயலர் ராஜேஷ் வரவேற்றார். முன்னாள் மாவட்டச் செயலர் வ.ச.சுரேஷ்குமார், வன்னியர் சங்க மாவட்டத் தலைவர் ந.பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் துரை.சுப்பிரமணியம் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியச் செயலர்கள் சி.பாண்டியன், தவஞானம், நேரு உள்பட பாமகவினர் பலர் கலந்து கொண்டனர்.÷நகர இளைஞர் சங்கச் செயலர் கோபி நன்றி கூறினார்.

பேரறிவாளன் வன்னியர், முருகன், சாந்தன் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி வன்னியர் சங்கம் சார்பில் முழக்கம்


வன்னியர் சங்க விழுப்புரம் மாவட்ட செயலாளர் உளுந்தூர்பேட்டையில் பேரறிவாளன் , முருகன், சாந்தன் ஆகியோருக்கு ஆதரவாக முழங்கிய காட்சி.




உள்ளாட்சி தேர்தல் 2011: விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு


விழுப்புரம்
 
          விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் பா.ம.க., சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 7ம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம். 
 
இது குறித்து மாநில துணை பொதுச்செயலாளர் செந்தமிழ்ச்செல்வன் விடுத்துள்ள அறிக்கை: 
 
              விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் பா.ம. க.,வினரிடம் 7ம் தேதி முதல் மனுக்கள் பெறப்படுகின்றன. 
 
விழுப்புரம், விக்கிரவாண்டி தொகுதியை சேர்ந்தவர்கள் 7 மற்றும் 8ம் தேதிகளில் விழுப்புரத்தில் உள்ள கட்சி அலுவலகத்திலும், 
 
திண்டிவனம், வானூர் தொகுதியை சேர்ந்தவர்கள் 9 மற்றும் 10ம் தேதி திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்தில் மனு அளிக்கலாம். 
 
மயிலம், செஞ்சி தொகுதியை சேர்ந்தவர்கள் 11, 12ம் தேதி செஞ்சியில் உள்ள அலுவலகத்தில் மனு அளிக்கலாம். 
 
கட்டண விபரம்:
பேரூராட்சி தலைவர் பதவிக்கு 2,000 ரூபாய், 
உறுப்பினர் பதவிக்கு 500 ரூபாய், 
நகராட்சி தலைவர் பதவிக்கு 3,000 ரூபாய், 
உறுப்பினர் பதவிக்கு 1,000 ரூபாய், 
ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு 1,000 ரூபாய், 
மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 3,000 ரூபாய் செலுத்த வேண்டும். 
 
பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் பாதிக்கட்டணம் செலுத்த வேண்டும்.

சங்கராபுரம் (தெற்கு) ஒன்றிய பா.ம.க. பொதுக் குழு கூட்டம்: ஒன்றிய செயலாளர் லோகநாதன் தலைமை தாங்கினார்

ங்கராபுரம் : 

            விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் பா.ம.க., தெற்கு ஒன்றிய பொதுக் குழு கூட்டம் நடந்தது. 

            ஒன்றிய செயலாளர் லோகநாதன் தலைமை தாங்கினார். சுரேஷ், ராஜா, அன்புமணி முன்னிலை வகித்தனர். மாநில துணை பொதுச் செயலாளர் கலிவரதன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் பாண்டியன், மாவட்ட தலைவர் அமுத மொழி, மாநில மகளிரணி செயலாளர் காசாம்பூ பூமாலை, ராமு பேசினர். 

சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு தகுதியான இடத்தை தேர்வு செய்து தரும்படி தமிழக அரசைக் கேட்டுக் கொள்வது,

மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு அரசு நிர்ணயித்த விலை கிடைக்க ஆவன செய்ய வேண்டும். 

நகரில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும். சங்கராபுரம் நகரில் பொது மக்களுக்கு நவீன கழிப்பிட வசதி செய்து தர வேண்டும்.
 
கள்ளக்குறிச்சி நகரை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமும், 

சங்கராபுரம் நகரை தலைமையிடமாக கொண்டு ஆர்.டி.ஓ., அலுவலகம் அமைக்க தமிழக அரசைக் கேட்டுக் கொள்ளுதல் 

உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய இளைஞரணி செயலாளர் சிலம்பரசன் நன்றி கூறினார்.

கள்ளக்குறிச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம்

கள்ளக்குறிச்சி:

        கள்ளக்குறிச்சியில் மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் 05.08.2011 அன்று மதியம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மாநில தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர். 

அப்போது பேசிய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,

           கடந்த மாதம் 27ந் தேதி சென்னையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், திராவிட கட்சிகளுடன் கூட்டணி வேண்டாம் என்றும், இனிமேல் தனித்துநின்று போட்டியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. நமது கொள்கை விரும்பி, மக்களுக்காக போராடும் கட்சி மற்றும் சங்க அமைப்புகள் நமது கூட்டணிக்கு வந்தால் தேர்தலில் போட்டியிடுவோம். இங்கு பேசிய ஒருவர் பா.ம.க. தான் சிறந்த கட்சி என்று கூறினார். இதைத்தான் 3 ஆண்டுகளாக நான் சொல்லிவருகிறேன்.

             மக்களை நம்பி தான், நான் 1989 ல் கட்சியை தொடங்கினேன். ஒரு கட்சி தொடங்குவது மற்றொரு கட்சியை ஆட்சியை அமர்த்துவதற்கு அல்ல. ஆனால் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளை நாம் ஆட்சியில் அமர்த்தி வந்தோம். இனி இதுபோன்று கூடாது. எனவேதான் தனித்துப்போட்டியிடுவது என்று முடிவு எடுத்தோம். இதை நல்லவர்கள், படித்தவர்கள், நடுநிலையார்கள், உயர்அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.

               தனித்து போட்டி என்ற முடிவை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு எடுத்திருந்தால் தற்போது நாம்தான் ஆட்சி நடத்துவோம். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 11 சதவீதம் புதிய வாக்காளர்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தனர். இவர்கள் அ.தி.மு.க.வை விரும்பி வாக்களிக்கவில்லை. தி.மு.க. வரக்கூடாது என்ற எண்ணத்தில்  3 வது அணி இல்லாத காரணத்தால் வாக்களித்தனர். அப்படி 3வது அணியாக நாம் இருந்திருந்தால் நமக்குத்தான் அந்த வாக்குகள் கிடைத்திருக்கும் என்றார்.

விழுப்புரம் மாவட்டத்தில்ல பசுமைத் தாயகம் சார்பில் சாலை விபத்து தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி

 விழுப்புரம்:

            விழுப்புரம் மாவட்ட பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் சாலை விபத்துகளைத் தடுக்க விழிப்புணர்வு மனித சங்கிலி விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் முன்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

             உலகில் சாலை விபத்துகள் அதிகம் இந்தியாவில் நடக்கிறது, இதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. எனவே சாலை விபத்துகளைத் தடுக்க குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தடுப்பது, கட்டாயம் தலைக்கவசம் அணிவது, வேகத்தைக் கட்டுப்படுத்துவது, கட்டாய வார்ப்பட்டை அணிவது ஆகியவற்றை வலியுறுத்தி இந்த மனித சங்கிலி நடைபெற்றது.

             இந்நிகழ்ச்சிக்கு, பாமக மாநில துணைப் பொதுச் செயலர் செந்தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். மாநில கொள்கை விளக்க அணிச் செயலர் வியன்ன அரசு சிறப்புரையாற்றினார். இதில்  மாநில துணைத் தலைவர் தங்க.ஜோதி, மாவட்டச் செயலர்கள் பழனிவேலு, மணிமாறன், மாவட்ட இணைச் செயலர் சிவக்குமார், ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் துரைமுருகன், நகரச் செயலர் தமிழ்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னாள் பா.ம.க. எம்.எல்.ஏ., கலிவரதன் இல்ல திருமண விழா: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பங்கேற்ப்பு

விழுப்புரம்
        சமச்சீர் கல்வி வராத வரை இந்த சமூகத்தில் முன்னேற்றம், மாற்றம் ஏற்படாது என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் முன்னாள்
பா.ம.க. எம்.எல்.ஏ., கலிவரதன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்

                நம் நாட்டில் ஏழை, பணக்காரர்கள், நடுத்தர வர்க்கத்தினர்களுக்கு என தனித்தனியாக படிப்புகள் உள்ளது. இதில் பணத்தை கொடுத்தால் தான், தரமான கல்வியை பெறமுடியும் என்ற நிலை நிலவுகிறது. பணக்காரர்கள் படிக்கும் சி.பி.எஸ்.சி., படிப்பு கிராமப்புறத்தில் உள்ள ஏழைகளுக்கும் கிடைக்க வேண்டும். அதே பள்ளியை அரசு சார்பில் கிராமத்தில் துவக்கி தரமான கல்வியை வழங்க வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமம். பணக்காரர்களுக்கு மட்டும் தேர்தலில் கூடுதலான ஓட்டுக்களா உள்ளது? அவர்களுக்கும் ஒரே ஓட்டு தான். அதுபோல் அனைவருக்கும் சமமான கல்வி கட்டாயம் வேண்டும். ராமதாஸ் மட்டும் தான் இதுபற்றி பேசிவருகிறான். குடிக்க கூடாது என கூறுபவனும் இந்த ராமதாஸ் மட்டும் தான். 


                  சமச்சீர் கல்வி என்றால், யார் என்ன படிக்க விரும்பினாலும் அவர்களுக்கு கட்டாயமாக அந்த கல்வியை கொடுக்க வேண்டும். தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். கட்டணம் இல்லாத கல்வி வேண்டும். இதனை செயல் படுத்த முடியும். அதற்கான திட்டம் எங்களிடம் உள்ளது. சமச்சீர் கல்வி வராத வரை இந்த சமூகத்தில் முன்னேற்றம், மாற்றம் ஏற்படாது என்றார்

விழுப்புரம் மாவட்டத்தில் பாமக நிர்வாகிகள் மாற்றம்

விழுப்புரம்:

            தேர்தல் பணியில் கூட்டணிக் கட்சியினருக்கு முழுமையாக இறங்கி பணியாற்றாததால் தமிழகம் முழுவதும் 1560 நிர்வாகிகளை பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடியாக நீக்கியுள்ளார்.  

              தமிழகத்தில் உள்ள வருவாய் மாவட்டத்தில் உள்ள 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலர் என்றும், மாவட்டத்துக்கு ஒரு மாநில துணைப் பொதுச் செயலர் என்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.  இதேபோல் மாணவர் அணி, விவசாய அணி என்று ஒரு மாவட்டத்துக்கு 52 செயலர்கள் வீதம் 30 மாவட்டங்களில் 1560 மாவட்டச் செயலர்கள் இருந்தனர்.  இந்த நிர்வாகிகளுக்கு பக்குவமின்மையும், தொண்டர்களை அரவணைத்துப் போகும் மனப்பக்குவம் இல்லாததால் கட்சித் தொண்டர்களிடையை அதிருப்தி நிலவியது.  

             அதேபோல் தற்போது சட்டப்பேரவை உறுப்பினர்களாக உள்ள 18 பேரில் 7 பேருக்கு மட்டுமே இந்த தேர்தலில் வாய்ப்பளிக்கப்பட்டது. புதிதாக அறிவிக்கப்பட்ட பெரும்பாலான வேட்பாளர்கள் தொகுதியை சாராதவர்களாக இருந்தனர். உதாரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம், செஞ்சி ஆகிய தொகுதிகளுக்கு வெளிமாவட்டங்களிலிருந்து வந்தவர்கள் போட்டியிட்டனர்.

             சில திமுக மாவட்டச் செயலர்கள் இப்பிரச்னையை ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் கவனத்துக்கும், தங்கள் கட்சி தலைமைக்கும் கொண்டு சென்றனர். இதனால் பாமக தலைமை, சம்மந்தப்பட்ட நிர்வாகிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒழுங்காக பணியாற்றக் கூறியும் பலர் ஈடுபாட்டுடன் செயல்படவில்லை.  

                இந்நிலையில் அண்மையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்த ராமதாஸிடம், தனது மனக்குறையை கருணாநிதி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ராமதாúஸ அதிர்ச்சியடைந்துள்ளார்.  இதனால் வந்த வேகத்தில் அனைத்து மாவட்டச் செயலர்களின் பதவிகளும் பறிக்கப்படுவதாகவும், மாநில துணைப் பொதுச் செயலர்களாக உள்ளவர்கள் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலர்களாக செயல்படுமாறும் தெரிவித்துள்ளார்.   வெளிப்படையாக அறிவிக்கப்படாமல் தனித்தனியாக தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 1560 மாவட்ட நிர்வாகிகளின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

திண்டிவனத்தில் பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் தேர்தல் பிரசாரத்தை முடித்தார்

திண்டிவனம்:

          பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் திண்டிவனத்தில் நேற்று பிரசாரத்தை முடித்தார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் காந்தியார் திடலில் பா.ம.க., வேட்பாளர் சங்கரை ஆதரித்து பிரசார பொதுக் கூட்டம் நேற்று நடந்தது.

மாலை 4.40 மணிக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியது

             :இது ஜனநாயக முற்போக்கு கூட்டணி. எதிரணியில் ஜனநாயகமும் இல்லை; முற்போக்கும் இல்லை. கருணாநிதியை 5 நிமிடத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் யார் வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். ஜெ.,வையோ 10 நாட்கள் அல்ல, ஒரு மாதமானாலும் தொடர்பு கொள்ள முடியாது. 

            இது எனக்கு மட்டுமல்ல, இப்போது அந்த கூட்டணியில் உள்ள கம்யூ., கட்சி தோழர்களும் இதை கூறுவர்.கருணாநிதியின் 10 ஆண்டு சாதனைகளையும், ஜெ.,வின் 10 ஆண்டு சாதனைகளையும் தராசில் எடை போடுங்கள். கருணாநிதி பக்கம் 1,000 மடங்கு கீழே இறங்கும். இந்த தேர்தலில் கருணாநிதி ஆதரவு அலை வேகமாக வீசுகிறது. ஜெ., ஆளத் தகுதியற்றவர். அவர் ஆட்சிக்கு வரக்கூடாது.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

மயிலம் சட்டமன்றத் தொகுதி - கண்ணோட்டம்


மயிலம்- தொகுதி கண்ணோட்டம்
விழுப்புரம்:

        மயிலம் புதிதாக உருவாக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இதன் தொகுதி எண் 71 ஆகும்.


தொகுதி எல்லைக‌ள்: 

செஞ்சி தாலுக்கா (பகுதி) 

             உடையந்தாங்கல், கள்ளிப்புலியூர், இரும்புலி, கண்டமநல்லூர், சோழங்குணம், பெரும்பூண்டி, தாமனூர், பூதேரி, தொண்டூர், சின்னகரம், பென்னகர், சண்டசாட்சி, மகாதேவிமங்கலம், இல்லோடு, கருங்குழி, ஈஞ்சூர், முக்குணம், மேல் ஒலக்கூர், விருணாமூர், நீர்பெருத்தகரம், ஏதாநெமிலி, மேல் அத்திப்பாக்கம், எடமலை, போந்தை, அகலூர், நெகனூர், காரியமங்கலம், செல்லபிராட்டி, மேல்களவாய், பெரும்புகை, ஆனந்தூர், விற்பட்டு, சேதுராய நல்லூர், வடபுத்தூர், ஆனங்கூர், அவியூர், நங்கியானந்தல், அருகாவூர், பள்ளிக்குளம், மேல்கூத்தப்பாக்கம், இந்திரசன்குப்பம், மேல்சித்தாமூர், மேலாத்தூர், பனப்பாக்கம், நாட்டார்மங்கலம், கொறவனந்தல், கலையூர், கடம்பூர், சேர்விளாகம், வடவானூர், நங்கிலிகொண்டான், ராஜம்புலியூர், குறிஞ்சிப்பை, துடுப்பாக்கம், மொடையூர், வல்லம், மருதேரி, கொங்கரப்பட்டு, மேல்சேவூர், கிளையூர், மணியம்பட்டு, கம்மந்தூர், தையூர், சொரத்தூர், கீழ்பாப்பம்பாடி, வடதரம், கீழ்மாம்பட்டு, திருவாம்பட்டு, கப்பை, கல்லாலிப்பட்டு, தளவானூர், வில்வமாதேவி, எர்ரம்பட்டு, அணீலாடி, வெளவால்குன்றம், மேல் கூடலூர், கீழ்வைலாமூர், கல்லடிக்குப்பம், மரூர், நாகந்தூர், தளவாழ்ப்பட்டு, தென்புத்தூர், பேரம்பட்டு மற்றும் ஆமூர் கிராமங்கள். 

திண்டிவனம் தாலுக்கா (பகுதி) 

               மாம்பாக்கம், செம்பாக்கம், கோணலூர், மேல்சிவிரி, அத்திப்பாக்கம், நெடுந்தோண்டி, வெள்ளிமேடுபேட்டை, புத்தனந்தல், தாதாபுரம், சிக்கானிக்குப்பம், கீழ்மலயனூர், மேல் ஆதனூர், அம்மணம்பாக்கம், வைரபுரம், தேங்காப்பாக்கம், புறங்கரை, கீழ்காரணை, ஏவலூர், சாத்தனூர், சித்தேரிப்பட்டு, மேல்பாக்கம், நெய்குப்பி, புலையூர், கொடியம், கீழ்மாவிலங்கை, மேல்மாவிலங்கை, நாகவரம், வடசிறுவளூர், தணியல், புலியனூர், கல்பாக்கம், கிராண்டிபுரம், வடம்பூண்டி, பெரப்பேரி, கருவம்பாக்கம், ஊரல், பட்டணம், டி.பஞ்சாலம், மேல் பலாகுப்பம், வெண்மணியாத்தூர், காட்டுசிவிரி, பாம்பூண்டி, நடுவனந்தல், மண்னம்பூண்டி, இளமங்கலம், விழுக்கம், தீவனூர், அகூர், மேல் பேரடிக்குப்பம், சாலை, கொள்ளார், வேம்பூண்டி, நெட்டியூர், பேரமண்டூர், அசூர், வெங்காந்தூர், ரெட்டணை, அவையாக்குப்பம், முப்புலி, கொடிமா, படமங்கலம், டி.கேணிப்பட்டு, நல்லாமூர், கொல்லியங்குணம், சின்னநெற்குணம், கூட்டேரிப்பட்டு, சின்னவளவனூர், சோழியசொக்குளம், ஆலக்கிராமம், நெடுமொழியனூர், செஞ்சிகொத்தமங்கலம், வி.நல்லாளம், வி.பாஞ்சாலம் , செண்டியம்பாக்கம், செண்டூர், வேளங்கம்பாடி, மைலம், தென்கொளப்பாக்கம், தளுதாளி, கண்ணியம், தென்னாலப்பாக்கம், குரளுர், பாதிராபுலியூர், பாலப்பட்டு, பேரணி,பெரியதச்சூர், சித்தணி, ஏழாய், அத்திக்குப்பம், அங்காணிக்குப்பம், வடூர், கோணமங்கலம், கணபதிப்பட்டு மற்றும் எஸ்.கடூர் கிராமங்கள் 

 Halloween Comments - http://www.halloweentext.comகடலூர் மாவட்ட செய்திகள்




விழுப்புரத்தில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்: பாமக நிறுவனர் ராமதாஸ் பங்கேற்ப்பு

ரிஷிவந்தியம் :

           ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் விஜயகாந்த் டெபாசிட் வாங்கக் கூடாது என, பாமக நிறுவனர் ராமதாஸ் பேசினார். விழுப்புரத்தில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்டு பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,

             விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் பொன்முடி அவர்கள் மாபெரும் வெற்றி பெற வேண்டும். அதாவது எதிரணி வேட்பாளர் டெபாசிட் வாங்க கூடாது. டெபாசிட் வாங்க கூடாது. டெபாசிட் வாங்க கூடாது. என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன் டெபாசிட் வாங்க கூடாது. 

           இதேபோல் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சிவராஜ் அவர்கள் மாபெரும் வெற்றி பெற வேண்டும். என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன் எதிரணி வேட்பாளர் டெபாசிட் வாங்க கூடாது. டெபாசிட் வாங்க கூடாது. டெபாசிட் வாங்க கூடாது. இதேபோல் வானூர் தொகுதியில் புஷ்பராஜ், உளுந்தூர் பேட்டையில் முகமது யூசப், கள்ளக்குறிச்சியில் பாவரசு, விக்கிரவாண்டியில் ராதாமணி, சங்கராபுரத்தில் உதயசூரியன் ஆகியோர் வெற்றி பெற வேண்டும். இதற்கு பாமக நிர்வாகிகள் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

விழுப்புரம் மாவட்டத்தில் பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம்

ரிஷிவந்தியம்:
 
           தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்னைகளுக்காக பாளையங்கோட்டையை தவிர, அனைத்து சிறைகளுக்கும் சென்றுள்ளேன்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார். 

விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதி காங்.,வேட்பாளரை ஆதரித்து பகண்டை கூட்ரோட்டில், நேற்று முன்தினம் இரவு நடந்த பிரசார பொதுக் கூட்டத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியது:

                   ஜெ.,யாரையும் மதிக்காதவர். கருணாநிதி சிறந்த சிந்தனையாளர். இங்கு நிற்கும் வேட்பாளரின் கட்சிக்கு என்ன கொள்கை உள்ளது. என்னை போராளி என, கூறுகிறார். தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்னைகளுக்காக பாளையங்கோட்டையைத் தவிர அனைத்து சிறைகளுக்கும் சென்றுள்ளேன்.திருமண மண்டபம் இடித்ததாலும், படம் வெளியிட தியேட்டர் கிடைக்காததாலும் ஒருவர் போராட்டம் நடத்தியுள்ளார். 

              "இளைஞர்கள் புகை பிடிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது' என்பதற்காக சினிமாக்களில் அந்த காட்சிகளுக்கு தடை கொண்டு வர செய்தோம். தள்ளாடும் நபரையா ஆதரிக்கப் போகிறீர்கள்.இளைஞர்கள் சிலர் அவருக்கு பின்னால் உள்ளனர். பெரியவர்கள் தான் இளைஞர்களை மாற்ற வேண்டும். விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டால் அவர்கள் என்ன செய்வார்களோ என்ற அச்சத்தில் இங்கு வந்துள்ளார். அவரை ஜெயிக்க விடக் கூடாது.ஓட்டு போடாவிட்டால் நடிக்கச் சென்று விடுவேன் என கூறுகிறார். 

               காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜிற்கு ஓட்டு போடா விட்டாலும் இங்கு தான் இருப்பார். இந்த மண்ணின் மைந்தர். அவருக்கு சொந்த ஊர் மதுரை. அங்கு சென்று தேர்தலில் நிற்க வேண்டியது தானே. உங்கள் வீட்டு இளைஞர்களை தட்டிக் கொடுத்து, அவர் பின்னால் சென்று தள்ளாடாமல் இருக்க திசை திருப்புங்கள். சிவராஜிற்கு ஓட்டளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

           விழுப்புரம் மாவட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று இரவு, ஜனநாயக முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.

இதில், தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியது:
                    
          பொன்முடி ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். தேர்தல் அன்று சிறுத்தைகள், பாட்டாளி தொண்டர்கள் 100 பேர் ஓட்டுச்சாவடி முன் நின்றாலே போதும், மற்ற கட்சியினர் உள்ளே வராமல் திரும்பிவிடுவர். நமக்கு வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக நினைத்து ஒதுங்கிவிடாமல், மீதமுள்ள 12 நாட்களிலும் 12 முறை மக்களைப் பார்த்து ஓட்டு சேகரிக்க வேண்டும். தொகுதியில் உள்ள 2 லட்சத்து 4 ஆயிரம் பேரையும் நாம் திரும்பத் திரும்ப போய் பார்த்தால் தான் வெற்றி பெற முடியும்.இவ்வாறு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

செஞ்சியில் புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம்: முன்னாள் மத்திய அமைச்சர்ஏ.கே. மூர்த்தி துவக்கி வைத்தார்

செஞ்சி : 

             விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து, புதுச்சேரிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தியின் சொந்த கிராமமான கீழ்மாம்பட்டு வழியாக, புதிய வழி தடத்தில் பஸ் இயக்கப்பட்டது. கீழ்மாம்பட்டில் நேற்று காலை நடந்த விழாவில் முன்னாள் அமைச்சர் ஏ.கே. மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். அரசு போக்குவரத்து கழக வர்த்தக பிரிவு பொது மேலாளர் சண்முகசுந்தரம், திண்டிவனம் கிளை மேலாளர் சவுக்கத் அலி, பா.ம.க., ஒன்றிய செயலர் வேலுச்சாமி, ஊராட்சி தலைவர் வள்ளிமாரி கலந்து கொண்டனர்.

பொங்கல் விடுமுறையில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: பாமக எம்.எல்.ஏ. செந்தமிழ்ச்செல்வன்

சென்னை:

            பொங்கல் விடுமுறையின்போது 4 நாள்களுக்கு டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பாமக எம்.எல்.ஏ. செந்தமிழ்ச்செல்வன் கோரிக்கை விடுத்தார்.  

சட்டப் பேரவையில் திங்கள்கிழமை தொடங்கிய ஆளுநர் உரை மீதான விவாதத்தில்  பாமக எம்.எல்.ஏ. செந்தமிழ்ச்செல்வன் பேசியது: 

             பொங்கல் விடுமுறையின்போது கலவரங்கள் ஏற்படுவதைத் தடுக்க 4 நாள்களுக்கு டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும்.  தமிழகத்தில் 65 சதவீத இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிóட்டு வேலைக்காக காத்திருக்கின்றனர். 

             ஆனால், இவர்களின் எதிர்காலம் குறித்த எந்த அறிவிப்பும் ஆளுநர் உரையில் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. அரியலூர், பெரம்பலூர் போன்ற பின்தங்கிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் சென்னைக்கும், பெங்களூருக்கும் வேலைக்குச் செல்கின்றனர். இதனைத் தடுக்கும் வகையில் பின்தங்கிய மாவட்டங்களில் தொழிற்சாலைகளையும், தொழிற்பேட்டைகளையும் அமைக்க வேண்டும். 

            இன்றைய நிலையில் 96 சதவீத வேலைவாய்ப்புகள் தனியார் துறையில் உள்ளன. அதனால் தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இலங்கைத் தமிழர் குறித்த ஆதங்கம் மட்டுமே ஆளுநர் உரையில் உள்ளது. இலங்கை தமிழர் பிரச்னை தீர தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். 

               தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கச்சத்தீவை மீட்க வேண்டும்.  விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் காய்கறி கடைகளில் ஒரே நாளில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி பதுக்கலைத் தடுக்க வேண்டும். பாமகவின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்றார் செந்தமிழ்ச்செல்வன்.

அரசியலில் திரைப்படத்துறையினரின் ஆதிக்கம் மாற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

விழுப்புரம்:

          விழுப்புரம் அருகே உள்ள நாட்டார் மங்களத்தில் பாமகவைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்டு பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,

               அரசு மது விற்பனையை பற்றியே கவலைப்படுகிறது. தமிழகத்தில் வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 63 வருட சுதந்திரத்தில் தமிழகம் எப்படி இருக்க வேண்டும். வறுமையை ஒழித்திருக்க வேண்டும். ஆனால் பணக்காரன் மேலும் பணக்காரணாக ஆகிறான். ஏழை மேலும் ஏழையாகிறான் என்றார்.

முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், 

                 காசு கொடுத்தால் டாக்டர் பட்டம் கொடுக்கிறார்கள். நானும், மருத்துவர் ராமதாசும் படித்து டாக்டர் பட்டம் வாங்கினோம். தமிழகத்தில் பட்டங்கள் மற்றும் விருதுகள் பணம் கொடுத்து வாங்கப்படும் நிலை மாற்றப்பட வேண்டும். தமிழக அரசியலில் திரைப்படத்துறையினர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் நிலை மாறவேண்டும் என்றார்

நடிகர்கள் கோட்டைக்குச் செல்ல க்யூவில் நிற்கிறார்கள்: ராமதாஸ்!

விழுப்புரம்:

            நடிகர்கள் கோட்டைக்குச் சென்றே தீருவேன் என்று கூறி வரிசையில் நிற்கிறார்கள் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் இராமதாஸ் கூறியுள்ளார்.
 
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பாமக இளைஞர் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பேசிய ராமதாஸ், 

              கிராமங்களில் மதுக்கடைகளை அறவே ஒழிக்க வேண்டும் என்று கூறினார். நாடு விடுதலை அடைந்து 63 ஆண்டுகள் கடந்த பின்னரும் அனைவருக்கும் உணவு கிடைக்கவில்லை. இளைஞர்கள் மது மற்றும் திரைப்பட மாயையில் சிக்கித் தவிக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.

               இப்போது நிறையபேர் நடிக்க வந்துவிட்டார்கள். கோட்டைக்குச் சென்றே தீருவேன் என்று வரிசையில் நிற்கிறார்கள். எங்கு பார்த்தாலும் நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் உள்ளன. இந்த முகங்களைப் பார்த்துவிட்டு இளைய சமுதாயம் ஓடுகிறது. நடிகர்கள் பின்னால் ஓடுவதை இளைஞர்கள் நிறுத்தும்போதுதான் நாடு முன்னேறும் என்றும் மருத்துவர் ராமதாஸ் பேசினார்.
 
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ், 

            சட்டமன்றத் தேர்தலின் போது எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது கூறித்து பாமக நிறுவனர் உரிய நேரத்தில் முடிவை எடுப்பார் என்று கூறினார்.