செஞ்சி:
பாமக விழுப்புரம் மாவட்டம் (வடக்கு) செஞ்சி ஒன்றியச் (மேற்கு) செயலாளராக புதுப்பாளையம் ம.ஜெயக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் மாநில இளைஞர் சங்கத் தலைவர் டாக்டர் அன்புமணி ஆகியோரது ஒப்புதலோடும், மாவட்டச் செயலர் க.மணிமாறன் பரிந்துரையின் பேரில், நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பாமக தலைவர் கோ.க.மணி தெரிவித்துள்ளார்.