விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள நாட்டார் மங்களத்தில் பாமகவைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,
அரசு மது விற்பனையை பற்றியே கவலைப்படுகிறது. தமிழகத்தில் வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 63 வருட சுதந்திரத்தில் தமிழகம் எப்படி இருக்க வேண்டும். வறுமையை ஒழித்திருக்க வேண்டும். ஆனால் பணக்காரன் மேலும் பணக்காரணாக ஆகிறான். ஏழை மேலும் ஏழையாகிறான் என்றார்.
முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில்,
காசு கொடுத்தால் டாக்டர் பட்டம் கொடுக்கிறார்கள். நானும், மருத்துவர் ராமதாசும் படித்து டாக்டர் பட்டம் வாங்கினோம். தமிழகத்தில் பட்டங்கள் மற்றும் விருதுகள் பணம் கொடுத்து வாங்கப்படும் நிலை மாற்றப்பட வேண்டும். தமிழக அரசியலில் திரைப்படத்துறையினர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் நிலை மாறவேண்டும் என்றார்
1 கருத்துகள்:
தமிழகம் எப்படி பொறுக்கும். நம் இரண்டரை கோடி வன்னியர்களுக்கு இன்னுமா உறக்கம். சிங்க கூட்டம் எழுந்தால் பாமக ஆட்சியை பிடிக்கும். இது நம்முடைய மன்னர்கள் (பல்லவன்,சோழன், சமபுவராயர்) ஆண்ட பூமி. இனி நாம் ஆளவேண்டிய பூமி. இது பெரும்பான்மை மக்கள் கொண்ட ஜாதி. இனி நமக்கு வேண்டும் ஒரு நீதி. எழுங்கள். புறப்படுங்கள். டாக்டர் அய்யாவின் பாதையை பின்பற்றுங்கள். நாளை இந்த தமிழ் மண்ணை ஆளவேண்டும் பாட்டாளி சொந்தங்களே. இந்த மண்ணும் நம்ம வீடும் வளர வேண்டும் புரட்சி மலர்களே.
கோட்டையிலே நமது கோடி பறந்திட வேண்டும். அதற்கு வன்னியர் சொந்தங்கள் ஒற்றுமையாக பாடுபட வேண்டும். வன்னியர் சக்தி உலகிற்கு தெரிந்திட வேண்டும். மக்கள் நலம் மக்கள் நலம் என்று வாழும் அய்யாவின் கரத்தை வலுபடுத்த வேண்டும். இதுவே தாரக மந்திரமாக மனதில் கொள்ளவேண்டும். உங்கள் இதயத்தில் இருக்க வேண்டும் ஒரே சின்னம். அதுவே அருஞ்சுவை தரும் மாம்பழ சின்னம்.
கருத்துரையிடுக