ஆலோசனைக் கூட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆலோசனைக் கூட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திண்டிவன நகர பா.ம.க. தேர்தல் ஆலோ சனைக் கூட்டம்

திண்டிவனம்:

         திண்டிவனத்தில் நகர பா.ம.க., தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
            
               நகர செயலாளர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். நகர தலைவர் ரவி வரவேற்றார். மாநில துணைத் தலைவர் கருணாநிதி, மாவட்ட செயலாளர் மலர்சேகர், முன்னாள் மாவட்ட செயலாளர் ஏழுமலை, மாநில செயற்குழு உறுப்பினர் இளங்கோபடையாட்சி, மாநில சட்ட பாதுகாப்புக்குழு செயலாளர் வழக்கறிஞர் பாலாஜி, மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜேஷ், மாவட்ட மாணவரணி செயலாளர் சந்திரன், நகர தொண்டரணி செயலா ளர் அகன் உட்பட பலர் கலந்துகொண்டனர். உள்ளாட்சித் தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

விழுப்புரம் வடக்கு மாவட்ட வன்னியர் சங்க ஆலோசனைக் கூட்டம்

செஞ்சி:

            விழுப்புரம் வடக்கு மாவட்ட வன்னியர் சங்க ஆலோசனைக் கூட்டம் செஞ்சியில் புதன்கிழமை நடைபெற்றது. 

              மாவட்ட துணைச் செயலர் பி.டி.எம்.அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலர் ஆ.கோ.சிங்காரவேலு முன்னிலை வகித்தார்.  மாநில செயற்குழு உறுப்பினர் ரா.செல்வமணி வரவேற்றார். மாநில வன்னியர் சங்க துணைத் தலைவர் மே.பெ.சி. ராஜேந்திரன், மேல்மலையனூர் ஒன்றியக் குழுத் தலைவர் அன்பழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். செஞ்சி ஒன்றியச் செயலர் புதூர் கே.பி. சம்பத், மேல்மலையனூர் ஒன்றியச் செயலர் பூங்காவனம், வல்லம் ஒன்றியத் தலைவர் முனுசாமி, மாவட்ட துணைத் தலைவர் ஜெயபால் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:  

விழுப்புரம் வடக்கு மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில் 22-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்துக்கு வருகைதரும் வன்னியர் சங்கத் தலைவர் குருவுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, 

வன்னியர் சங்க அறக்கட்டளைக்கு நிதி திரட்டுவது, 

கனல் சந்தா சேர்ப்பது.  

செஞ்சி, மயிலம் தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் வன்னியர் சங்க கொடி ஏற்றுவது, 

3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசை கேட்டு கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விருத்தாசலத்தில் பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

விருத்தாசலம் : 

             விருத்தாசலத்தில் பா.ம.க., தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. 

            மாவட்ட செயலர் செல்வராசு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலர்கள் செல்வகுமார், வெங்கடேசன், உத்தண்டி, ராஜவேல், நெடுமாறன் முன்னிலை வகித்தனர். நகர செயலர் முருகன் வரவேற்றார். மாநில சொத்து பாதுகாப்பு குழுத் தலைவர் டாக்டர் கோவிந்தசாமி கூட்டம் குறித்து பேசினார். கூட்டத்தில் தொகுதியில் பொதுக்கூட்டம் நடத்துவது. வரும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெறுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் பவுனாம்பாள், கவுன்சிலர்கள் பாபு, கந்தசாமி, ஏழுமலை, இளைஞர் அணி சுரேஷ், பூமாலை உட்பட பலர் பங்கேற்றனர். நகர தலைவர் சீனுவாசன் நன்றி கூறினார்.

நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடவேண்டும்

நெய்வேலி:

             நெய்வேலி புதுநகர் 27-வது வட்டம் யூரியா தெருவில் பாட்டாளி மக்கள் கட்சி கிளையின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வன்னியர் சங்க முன்னாள் நகர செயலாளர் ஜோதிலிங்கம் தலைமை தாங்கினார். ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

                உட்கிளை தலைவர் இளையபெருமாள், செயலாளர் கண்ணன், பொருளாளர் ஸ்டெல்லா மேரி மற்றும் தட்சிணா மூர்த்தி, பிரேம்நாத், திணேஷ், முத்துவேல், பாண்டியன், ஜோதிமணிகண்டன், ஜெயச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  தமிழக சட்டசபை தேர்தலில் நெய்வேலி தொகுதியில் தி.மு.க., பா.ம.க. கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு சீட் ஒதுக்கப்படுமேயானால் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நெய்வேலி தொகுதியில் பா.ம.க. வேட்பாளரை வெற்றிபெற செய்வது. கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து விடுபட்ட வாக்காளர் பட்டியலை வீடு, வீடாக சென்று சரிபார்த்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பாமக போட்டியிடும் தொகுதிகள் : திமுக குழுவுடன் ஆலோசனை

         தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்து, திமுக ஐவர் குழுவுடன் பாமகவினர் ஆலோசனை நடத்தினர். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகள் எவை என்பது குறித்து திமுக பொருளாளரும், திமுக தொகுதி பங்கீட்டுக் குழுத் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஐவர் குழுவுடன் பாமக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.  இந்த ஆலோசனையில் திமுக தரப்பில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், ஆர்க்காடு வீராசாமி, பொன்முடி, டி.ஆர்.பாலுவும், பாமக தரப்பில்   தலைவர் ஜி.கே.மணி, வேலு, ஏ.கே.மூர்த்தி, வேல்முருகன், தமிழரசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டனர்.



பர்கூர் தொகுதியில் தொகுதி மாநாடு: டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

கிருஷ்ணகிரி:


             வருகிற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடவில்லை. எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை விரைவில் முடிவு செய்து அறிவிப்போம் என, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

                 கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிளைத்தலைவர் மற்றும் செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்தது. 



கூட்டத்தில் பேசிய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,

              இன்றைய இளைஞர்களில் பலர் சினிமா மோகத்தாலும், மது, சிகரெட் போன்ற போதை பொருட்களாலும் அழிவுப் பாதையில் செல்கிறார்கள். இவர்களை திருத்தி நல்வழிக்கு கொண்டு வருவது எப்படி? இளைஞர்களுக்கு 12 ம் வகுப்பு வரை கட்டாய இலவச கல்வியும், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அவர்கள் அனைவருக்கும் ஆராய்ச்சி படிப்பு போன்ற அனைத்து உயர்கல்வியும் இலவசமாக வழங்க வேண்டும்.

               நாம் வருகிற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடவில்லை. எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை விரைவில் முடிவு செய்து அறிவிப்போம். அது எந்த கட்சியுடன் கூட்டணியாக இருந்தாலும் சரி, பர்கூர் தொகுதியை பா.ம.க.விற்கு கேட்டு வாங்குவோம். எனவே விரைவில் பர்கூர் தொகுதியில் தொகுதி மாநாடு நடத்த உள்ளோம். இந்த மாநாட்டில் 50 ஆயிரம் பேரை திரட்ட வேண்டும் என்றார்.
           

                  படித்த இளைஞர்கள் அனைவருக்கும் அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். தமிழகத்தில் வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை. ஆனால் வேலைவாய்ப்பு லுவலகத்தில் 60 லட்சம் பேர் பதிவு செய்து விட்டு வேலைக்காக காத்துள்ளனர். சினிமா மோகத்தில் இருந்து இளைஞர்களை மீட்க வேண்டும்.

உயர்நீதி மன்ற வளாகத்தில் உண்ணாவிரதம்: ராமதாஸ் அறிவிப்பு

திருவண்ணாமலை:

          திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னத்தூர் தொகுதியில் உள்ள பாமக கிளை செயலாளர்களுக்கான தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் பாமக நிறுவனர்  ராமதாஸ் கலந்து கொண்டு பேசியது , 


           சென்னை உயர்நீதிமன்றத்தில் 60 நீதிபதிகள் இருக்க வேண்டும். தற்போது 52 நீதிபதிகள் உள்ளனர் அதில் ஒருவர் மட்டுமே வன்னிய சமுகத்தை சேர்ந்தவர். தற்போது 7 பேரை நீதிபதிகளாக நியமிக்க தமிழக அரசு மூலம் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஒருவர் கூட பிற்படுத்தப்பட்டோர் சமுகத்தை சார்ந்தவர்களில்லை. அதனால் இதை கண்டித்து விரைவில் சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்க போகிறேன். இதற்கு நம் சமுகத்தை சார்ந்தவர்கள் ஒன்றாக இருக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
 

             ‘’வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் தனித்து நின்றாலே 30 தொகுதிகளில் வெற்றி பெரும் அளவுக்கு பலம் பொருந்தியுள்ளோம். அதேபோல் இந்த தேர்தலில் வயதானவர்கள் மட்டுமே பணம் தந்தால் அதை வாங்கிக்கொண்டு பணம் தந்தவர்களுக்கு ஓட்டுப்போடுவார்கள். இளைஞர்-இளைஞகள், படித்தவர்கள் பணத்திற்கு மதி மயங்காமல் ஒட்டு போடுவார்கள்’’ என கட்சியினர் மத்தியில் பேசினார்.

வெள்ளச் சேதம் பாமக குழு பார்வையிடும்: ஜி.கே. மணி

அரக்கோணம்:
 
             வெள்ளச் சேதங்களை பாமகவின் ஐவர் குழு பார்வையிட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு அறிக்கை அனுப்பும் என்று கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே. மணி கூறினார். 
 
சோளிங்கரில் திங்கள்கிழமை பாமக மாநிலத் தலைவர் ஜி.கே. மணி கூறியது:
 
               கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் வெள்ளச் சேதம் அதிக அளவில் உள்ளது. 
 
               பாமக நிறுவனர் ராமதாஸின் உத்தரவின்பேரில், இம்மாவட்டங்களில் கட்சியின் ஐவர் குழு 7-ம் தேதி முதல் பார்வையிட உள்ளது. எனது தலைமையில், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆர்.வேலு, பொன்னுசாமி, எம்எல்ஏக்கள் பெரியசாமி, வேல்முருகன் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். 
 
              தற்போது வெள்ள நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ள 100 கோடியை அதிகரிக்க வேண்டும். எனவே, மத்திய அரசு உடனடியாக கூடுதல் நிதியை வழங்க வேண்டும். 
 
பாலாற்றில் தண்ணீர் வரவில்லை:
 
             தமிழ்நாட்டில் அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால், பாலாற்றில் மட்டும் தண்ணீர் வரவில்லை. இதற்கு குப்பம் தொகுதியில் உள்ள கணேசபுரத்தில் ஆந்திர அரசு கட்டிவரும் தடுப்பணையே காரணம். எனவே, அந்த தடுப்பணையின் கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் 
 
"உன்னையே நீ அறிவாய்' ஆலோசனைக் கூட்டம்:
 
                தீய சக்தி, பண்பாட்டு சீரழிவில் இருந்து இளைஞர்கள், இளம்பெண்களை காப்பாற்ற "உன்னையே நீ அறிவாய்' எனும் ஆலோசனைக் கூட்டங்கள் பாமக சார்பில் நடந்து வருகின்றன.தமிழ்நாட்டில் 100 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இத்தகைய கூட்டங்களை நடத்த உள்ளோம். தற்போது 22 தொகுதிகளில் இக்கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.

2020ல் பா.ம.க. ஆட்சி: ஜி.கே.மணி

காஞ்சீபுரம் :             

                2020ல் பா.ம.க. ஆட்சியை பிடிக்கும் என, பாமக தலைவர் ஜி.கே.மணி கூறினார். காஞ்சீபுரத்தில் பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார். 

கூட்டம் முடிந்த பிறகு பேசிய பாமக தலைவர் ஜி.கே.மணி,

            ஆந்திர மாநிலம் குப்பம் அருகே கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநில அரசு அணை கட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே பாலாறு வறண்ட நிலையில் உள்ளது. அங்கு அணை கட்டினால் தமிழகத்துக்கே பேராபத்து ஏற்படும். எனவே இந்த அணை கட்டும் முயற்சியை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து எதிர்க்கவேண்டும்.

                       கர்நாடகத்தில் சில தினங்களுக்கு முன்பு அசாதாரண சூழ்நிலை நிலவியது. எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். அந்த சூழ்நிலையிலும், தமிழகத்துக்கு காவிரி நீரை விடவேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறிய போதும், அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து கூடி ஆலோசித்து தமிழகத்துக்கு தண்ணீர் விட முடியாது என்று தீர்மானம் போட்டுள்ளது. தமிழகத்திலும் காவிரிநீர், பாலாறு அணை போன்ற பொதுப்பிரச்சினைகளில் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். அப்போது தான் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட முடியும்.

                  தமிழக அரசு கொண்டு வந்துள்ள கலைஞர் வீடு கட்டும் திட்டம் நல்ல திட்டம் தான். ஆனால் கட்டுமானப் பொருட்கள் விலை உயர்ந்து விட்டது. அவற்றை வாங்க முடியாமல் மக்கள் திணறுகின்றனர். லாரியில் திருட்டுத்தனமாக மணல் எடுப்பவர்களை அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை. ஆனால் டயர் வண்டியில் மணல் எடுத்துச்செல்லும் ஏழை விவசாயிகளை பிடித்து ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கின்றனர். அதிகாரிகளின் இது போன்ற செயலை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக மக்கள் மனது வைத்தால் 2020ல் பா.ம.க. ஆட்சியை பிடிக்கும் என்றார்.

திண்டிவனத்தில் பாமக ஆலோசனைக் கூட்டம்

திண்டிவனம்:
            திண்டிவனத்தை அடுத்த மரக்காணம் மேற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட கீழ்சிவிரி மற்றும் வடஆலப்பாக்கம் ஊராட்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

                கீழ்சிவிரி மற்றும் வடஆலப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அனைத்து இளம் பெண்கள் மற்றும் இளைஞர்களை பாட்டாளி மக்கள் கட்சியில் உறுப்பினர்களாக இணைப்பதென முடிவு செய்யப்பட்டது. இரு ஊராட்சிகளிலும் மாநில துணைத் தலைவர் ந.ம.கருணாநிதி மாவட்டச் செயலர் ச.இ.ஏழுமலை சிறப்புரையாற்றினர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் மற்றும் கிளைச் செயலர் தனசேகர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நகரச் செயலர் மலர்சேகர் மற்றும் ஒன்றியச் செயலர் நடராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.


திண்டிவனத்தில் பாமக ஆலோசனைக் கூட்டம்

திண்டிவனம்:

          திண்டிவனத்தை அடுத்த மரக்காணம் ஒன்றியம் வன்னிப்பேர் ஊராட்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

            கூட்டத்துக்கு கிளைச் செயலர் ரா.மணிகண்டன் தலைமை வகித்தார். கிளை தலைவர் கண்ணப்ப நயினார் வரவேற்றார். வன்னிப்பேர் ஊராட்சி மன்றத் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் கருணாநிதி, மாவட்ட செயலர் ஏழுமலை, ஒன்றியச் செயலர் நடராஜன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். வன்னிப்பேர் பகுதியில் உள்ள இளம் பெண்கள் மற்றும் இளைஞர்களை கட்சியில் உறுப்பினர்களாக பதிவுசெய்து அவர்களை கட்சியில் இணைப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.