கிருஷ்ணகிரி:
வருகிற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடவில்லை. எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை விரைவில் முடிவு செய்து அறிவிப்போம் என, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடவில்லை. எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை விரைவில் முடிவு செய்து அறிவிப்போம் என, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிளைத்தலைவர் மற்றும் செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் பேசிய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,
இன்றைய இளைஞர்களில் பலர் சினிமா மோகத்தாலும், மது, சிகரெட் போன்ற போதை பொருட்களாலும் அழிவுப் பாதையில் செல்கிறார்கள். இவர்களை திருத்தி நல்வழிக்கு கொண்டு வருவது எப்படி? இளைஞர்களுக்கு 12 ம் வகுப்பு வரை கட்டாய இலவச கல்வியும், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அவர்கள் அனைவருக்கும் ஆராய்ச்சி படிப்பு போன்ற அனைத்து உயர்கல்வியும் இலவசமாக வழங்க வேண்டும்.
நாம் வருகிற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடவில்லை. எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை விரைவில் முடிவு செய்து அறிவிப்போம். அது எந்த கட்சியுடன் கூட்டணியாக இருந்தாலும் சரி, பர்கூர் தொகுதியை பா.ம.க.விற்கு கேட்டு வாங்குவோம். எனவே விரைவில் பர்கூர் தொகுதியில் தொகுதி மாநாடு நடத்த உள்ளோம். இந்த மாநாட்டில் 50 ஆயிரம் பேரை திரட்ட வேண்டும் என்றார்.
படித்த இளைஞர்கள் அனைவருக்கும் அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். தமிழகத்தில் வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை. ஆனால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 60 லட்சம் பேர் பதிவு செய்து விட்டு வேலைக்காக காத்துள்ளனர். சினிமா மோகத்தில் இருந்து இளைஞர்களை மீட்க வேண்டும்.
1 கருத்துகள்:
பணம் கொடுத்து வோட்டு வாங்குபவர்கள் திருடர்கள். கொள்ளையடித்த ஊழல்வாதி. இதை மக்கள் சுலபமாக கண்டு கொள்வர். இவர்களால் தொகுதி வளர்ச்சி பெறாது. தமிழ்நாட்டில் உள்ள 100 தொகுதிகள் வன்னியர்களின் கோட்டை. இந்த தொகுதிகளின் வெற்றியை தீர்மானிப்பது வன்னியர்கள்தான். இது தவிர மற்ற 50௦ தொகுதிகளில் வன்னியர்கள் கணிசமாக உள்ளனர். சட்டசபையில் வன்னியர்களின் தனி இட ஒதுக்கீட்டுக்கும், மேம்பாட்டுக்கும், உரிமைக்கும், பிரச்சினைக்கும் குரல் கொடுப்பது பாமக மட்டுமே. மற்ற கட்சிகளுக்கு நாதி இல்லை. எனவே மற்ற கட்சிகள் வோட்டு கேட்க வரும்போது வன்னியர்கள் அவர்களை விரட்டியடிக்க வேண்டும். புறக்கணிக்க வேண்டும். 2.5 கோடி வன்னியர்களின் அரசியல் முகவரி பாமக. பாமகவின் நிரந்தரமான அசையா சொத்து 2.5 கோடி வன்னியர்கள். மற்ற கட்சிகளில் இருப்பவர்கள் எல்லாம் வெறும் பதவி, பணத்துக்கு தான். அது நிரந்தரம் அல்ல. 2.5 கோடி வன்னியர்கள் வோட்டு பாமகவுக்கே.
கருத்துரையிடுக