நெய்வேலி:
கூட்டணி தொடர்பாக கோபாலபுரமோ அல்லது போயஸ்கார்டனோ செல்லாமலிருக்கவேண்டுமானால் வன்னியர்கள் அனைவரும் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும் என பண்ருட்டி எம்எல்ஏ தி.வேல்முருகன் நெய்வேலியில் வெள்ளிக்கிழமை பேசினார்.
நெய்வேலியில் உள்ள கட்சி பிரமுகர் இல்லத் திருமண விழாவுக்கு வெள்ளிக்கிழமை பாமக நிறுவனர் ராமதாசுடன் வந்த எம்.எல்.ஏ. வேல்முருகன் அங்கு பேசியது:
பெண் சிசு கொலைகளுக்கு வரதட்சிணை தான் முக்கிய காரணம். எனவே வரதட்சிணையை வேரறுக்க வேண்டும். தமிழகத்தில் இரண்டரை கோடி வன்னியர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் பாமகவுக்கு வாக்களித்தால், நாம் போயஸ்கார்டனோ அல்லது கோபாலபுரமோ செல்ல வேண்டியிருக்காது. 15 வயதுள்ள வன்னிய இளைஞர்களை எங்களிடம் நம்பி ஒப்படையுங்கள், வருங்காலத்தில் தமிழகத்தில் ஒரு வன்னியரை முதல்வராகிக் காட்டுகிறோம். பாமக தலைமையில் ஆட்சி அமையுமேயானால், மது விலக்கை அமல்படுத்துவதே முதல் கையெழுத்தாக இருக்கும் என்றார் வேல்முருகன்.
1 கருத்துகள்:
பணம் கொடுத்து வோட்டு வாங்குபவர்கள் திருடர்கள். கொள்ளையடித்த ஊழல்வாதி. இதை மக்கள் சுலபமாக கண்டு கொள்வர். இவர்களால் தொகுதி வளர்ச்சி பெறாது. தமிழ்நாட்டில் உள்ள 100 தொகுதிகள் வன்னியர்களின் கோட்டை. இந்த தொகுதிகளின் வெற்றியை தீர்மானிப்பது வன்னியர்கள்தான். இது தவிர மற்ற 50௦ தொகுதிகளில் வன்னியர்கள் கணிசமாக உள்ளனர். சட்டசபையில் வன்னியர்களின் தனி இட ஒதுக்கீட்டுக்கும், மேம்பாட்டுக்கும், உரிமைக்கும், பிரச்சினைக்கும் குரல் கொடுப்பது பாமக மட்டுமே. மற்ற கட்சிகளுக்கு நாதி இல்லை. எனவே மற்ற கட்சிகள் வோட்டு கேட்க வரும்போது வன்னியர்கள் அவர்களை விரட்டியடிக்க வேண்டும். புறக்கணிக்க வேண்டும். 2.5 கோடி வன்னியர்களின் அரசியல் முகவரி பாமக. பாமகவின் நிரந்தரமான அசையா சொத்து 2.5 கோடி வன்னியர்கள். மற்ற கட்சிகளில் இருப்பவர்கள் எல்லாம் வெறும் பதவி, பணத்துக்கு தான். அது நிரந்தரம் அல்ல. 2.5 கோடி வன்னியர்கள் வோட்டு பாமகவுக்கே.
கருத்துரையிடுக