விருத்தாசலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விருத்தாசலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

விருத்தாசலத்தில் பா.ம.க.சார்பில் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவு நாளையொட்டி மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி

விருத்தாசலம்:

          விருத்தாசலத்தில் பா.ம.க., சார்பில் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவு நாளையொட்டி மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி ஊர்வலம் நடந்தது.

            மாநில சொத்து பாதுகாப்பு குழுச் செயலர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்டச் செயலர் செல்வராசு முன்னிலை வகித்தார்.
பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பாலக்கரை வரை ஊர்வலமாக சென்று மவுன அஞ்சலி செலுத்தினர். நகர சேர்மன் முருகன், நகர தலைவர் சீனு, முன்னாள் துணை பொதுச்செயலர் திருஞானம், ஒன்றிய செயலர்கள் வெங்கடேசன், செல்வகுமார், ராஜவேல், சீனுஜோதி உட்பட பலர் பங்கேற்றனர்.


விருத்தாசலத்தில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டைனையை ரத்து செய்யக்கோரி பா.ம.க வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/newsphotos/reporter/perambalur/viruthsalam-1.jpg

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/newsphotos/reporter/perambalur/viruthsalam-3.jpg

           பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி விருத்தாசலத்தில் பா.ம.க வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணியில் ஈடுபட்டனர். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஊர்வலமாக சென்று கோட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், தூக்கு தண்டனையை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர். இதேபோல் புகைப்பட கலைஞர்களும் விருத்தாசலத்தில் போராட்டம் நடத்தினர்.

விருத்தாசலத்தில் பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

விருத்தாசலம் : 

             விருத்தாசலத்தில் பா.ம.க., தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. 

            மாவட்ட செயலர் செல்வராசு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலர்கள் செல்வகுமார், வெங்கடேசன், உத்தண்டி, ராஜவேல், நெடுமாறன் முன்னிலை வகித்தனர். நகர செயலர் முருகன் வரவேற்றார். மாநில சொத்து பாதுகாப்பு குழுத் தலைவர் டாக்டர் கோவிந்தசாமி கூட்டம் குறித்து பேசினார். கூட்டத்தில் தொகுதியில் பொதுக்கூட்டம் நடத்துவது. வரும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெறுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் பவுனாம்பாள், கவுன்சிலர்கள் பாபு, கந்தசாமி, ஏழுமலை, இளைஞர் அணி சுரேஷ், பூமாலை உட்பட பலர் பங்கேற்றனர். நகர தலைவர் சீனுவாசன் நன்றி கூறினார்.

விருத்தாசலத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரி பாமக ஆர்பாட்டம்

விருத்தாசலம்:

          விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், பாமக நகரச் செயலரும், நகர்மன்றத் தலைவருமான வ.க.முருகன் தலைமை ஏற்றார். மாவட்டச் செயலர் செல்வராசு சிறப்புரையாற்றினார்.

மருத்துவர் ராமதாசு கலை அறிவியல் கல்லூரியில் பசுமைத் தாயகம் சார்பில் மரக்கன்று நடும் விழா

விருத்தாசலம்:

           விருத்தாசலத்தை அடுத்த பெரியவடவாடியில் பசுமைத்தாயக நாளை முன்னிட்டு  ருத்துவர் ராமதாசு கலை அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன.  

            பசுமைத் தாயக நாளை முன்னிட்டு, விருத்தாசலம் அருகே பெரியவடவாடியில் உள்ள மருத்துவர் ராமதாசு கலை அறிவியல் கல்லூரியில் பசுமைத் தாயகம் சார்பில், மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதில், கல்லூரித் தாளாளர் மருத்துவர் கோவிந்தசாமி மரக்கன்றுகளை நட்டார்.  பசுமைத் தாயக அமைப்பின் நிர்வாகிகள் ராஜ், மதியழகன், பாமக நிர்வாகிகள் செல்வகுமார், வெங்கடேசன், சீனுவாசன், சிங்காரவேலு மற்றும் பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விருத்தாசலத்தில் பா.ம.க.செயற்குழு கூட்டம்

சிறுபாக்கம் : 

          ராமநத்தம் அடுத்த கல்லூரில் மங்களூர் ஒன்றிய பா.ம.க., செயற்குழுக் கூட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் ராமதாஸ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பொன் பெரியசாமி, இளங்கோவன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலர் கோபி வரவேற்றார். கூட்டத்தில் மாநில தேர்தல் பொறுப்பாளர் டாக்டர் கோவிந்தசாமி, துணை பொதுச் செயலர் திருமால்வளவன்,  மாவட்டச் செயலர் செல்வராஜ் பேசினர்.
 
             தேர்தலில் தி.மு.க., தலைமையிலான கூட்டணி வெற்றி பெற பாடுபடுவது. ஆவட்டி - மங்களூர் தார் சாலையை செப்பனிட வலியுறுத்துவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் வேலாயுதம், சின்னசாமி, ராதா, மயிலவன், வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

விருத்தாசலம் ராமதாஸ் கலை அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா

விருத்தாசலம்:

               சின்னவடவாடி ராமதாஸ் கலை அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது. கல்லூரி தாளாளர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். முதல்வர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார். பேராசிரியர் பழனிவேல் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் கோவிந்தராஜன் தலைமையில் பட்டிமன்றம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விளையாட்டு உட்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பேராசிரியர் அன்பு கணபதி பரிசு வழங்கினார். சேர்மன் செல்வராசு, கல்விக் குழு உறுப்பினர்கள் கலியபெருமாள், செல்வகுமார், வசந்தி, ரங்கநாயகி, ராஜவேல் உட்பட பலர் பங்கேற்றனர். செந்தில்குமார் நன்றி கூறினார்.

வன்னியர்களை, வன்னியர்களே தோற்கடிக்கும் பழக்கம்: ராமதாஸ் வேதனை

சேத்தியாத்தோப்பு: 
 
          அனைத்து வன்னியர்களும், மற்ற கட்சிகளை தூக்கி எறிந்துவிட்டு பா.ம.க.,வை ஆதரிக்கவேண்டும்,'' என, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

 கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு, கே.பி.டி. திருமணமகாலில் நேற்று நடந்த திருமணவிழாவில்  பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:

             படையாண்ட ஜாதி, ஆண்டபரம்பரை, மன்னர் வம்சம், பாராண்டவர்கள் என வாழ்ந்த வன்னியர்கள், இப்போது ஏதாவதுஒரு வழக்கில் சிக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இங்கே இருக்கும் பெண்களுக்கு சொல்கிறேன்... 

                 இந்தியாவிலேயே பெரிய மாநிலம் உத்தரபிரதேசத்தில், 403 தொகுதிகள் உள்ளன. அங்கு 20 சதவீதமே உள்ள தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச்சேர்ந்த மாயாவதி, ஐந்தாவது முறையாக முதல்வராக இருக்கிறார்.

              அங்கு அவர்களால் முதல்வராக முடியும் போது, தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு வாழும் வன்னியர்களால் முதல்வராக முடியவில்லை. நமக்குள் ஒற்றுமை இல்லை. வன்னியர்களை, வன்னியர்களே தோற்கடிக்கும் பழக்கம் உள்ளது. அதனால் தான், விருத்தாசலத்தில் கோவிந்தசாமி தோற்கடிக்கப்பட்டார். மதுரையிலிருந்து வந்த யாரோ ஒருவரை, எம்.எல்.ஏ.,வாக ஏற்றுக் கொண்டனர். விருத்தாசலத்தில் கோவிந்தசாமி தோற்க வேண்டும் என,அனைத்து ஜாதியினரும் ஒன்றுசேர்ந்தனர்.

லோக்சபா தேர்தலில் நம்மைஎதிர்த்து நின்றவர்கள், ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதிக்குச்சென்று பணம் கொடுத்த போது, 

                 "நாங்கள் எங்கள் வேட்பாளருக்குஓட்டு போடுவோம். வன்னியர்களிடம் கொண்டு போய் கொடுங்கள்' என்று, கூறினர். பணத்தைபெற்றுக் கொண்ட வன்னியர்கள், பா.ம.க.,வை தோற்கடித்தனர். ஆனால், உத்தரபிரதேசத்தில் ஓட்டு கேட்காமலேயே 100 பேர் ஜெயிக்கின்றனர். அந்த நிலைதமிழகத்தில் வர வேண்டும். 

           வன்னியர்கள் வளரக்கூடாது என்பதில் எல்லா கட்சிகளும் உறுதியாக உள்ளன. நான் வன்னியர் சமுதாயத்தைச்சேர்ந்தவன் என கூறிவிட்டு,தி.மு.க., - அ.தி.மு.க.,வில் இருக்கக் கூடாது. வன்னியர்களுக்குள் ஒற்றுமை ஏற்படுத்த இன்னொரு ராமதாஸ் எப்போது வருவாருன்னு சொல்லமுடியாது. எனவே, அனைத்து வன்னியர்களும் மற்ற கட்சிகளை தூக்கி எறிந்து விட்டு, பா.ம.க.,விற்கு ஓட்டு போடும் நாள் வரவேண்டும். அந்த நிலை வந்தால்,பா.ம.க., ஆட்சியில் அமர்வதையாராலும் தடுக்க முடியாது.

              பா.ம.க., ஆட்சிக்கு வந்ததும், வன்னியர் முதல்வர் போடும் முதல் கையெழுத்து மதுக்கடைகளை மூட வேண்டும் என்பதுதான். தமிழகத்தில் உள்ள அனைத்துகட்சித் தலைவர்களும் குடிக்கச்சொல்கின்றனர். நான் மட்டும்தான் படிக்கச் சொல்கிறேன். இந்தசமுதாயம் வாழ வேண்டும் என்றால், அனைவரும், பா.ம.க.,வை ஆதரிக்க வேண்டும் .இவ்வாறு ராமதாஸ் பேசினார்.