முருகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முருகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கு தண்டனை: தமிழக அரசின் நிலை அதிர்ச்சி அளிக்கிறது , ராமதாஸ்


         பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனு அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து சனிக்கிழமை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: 

          மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வது தொடர்பான தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்ற உயர் நீதிமன்றத்தின் கேள்விக்கு, தமிழக அரசின் சார்பில் உள்துறை செயலர் ரமேஷ்ராம் மிஸ்ரா பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் மூவரின் தூக்கு தண்டனையையும் ரத்து செய்வது தொடர்பான எல்லா வினாக்களுக்கும் கருத்து கூற விரும்பவில்லை என்றும், தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி அவர்கள் மூவரும் தாக்கல் செய்துள்ள மனுக்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது

   இது தமிழ் உணர்வாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் மூலம், மரணத்தின் விளிம்பில் போராடிக் கொண்டிருக்கும் 3 தமிழர்களையும் காப்பாற்றுவதில் முதல்வருக்கு அக்கறை இல்லை என்பதும், மக்களின் எழுச்சியை அடக்குவதற்காகவே பெயரளவில் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார் என்பதும் அம்பலமாகியிருக்கிறது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.


சீர்காழியில் பா.ம.க.சார்பில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குதண்டனையை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/1a665167-ad70-4521-a54a-a157e53d8d35_S_secvpf.gif
சீர்காழி:


            சீர்காழி தாலுக்கா அலுவலகம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குதண்டனையை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கல்யாண சுந்தரம் தலைமை தாங்கினார்.


            மாநில செயற்குழு உறுப்பினர் பழனிகாளிதாஸ் முன்னிலை வகித்தார். சீர்காழி நகர செயலாளர் நவநீதன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் மணிசெல்வம் பேசினார். மாவட்ட துணை செயலாளர்கள் செந்தில் குமார், பன்னீர்செல்வம், தொழிற்சங்க செயலாளர் குமார், ஜீவானந்தம், ஒன்றிய செயலாளர்கள் தேக்கு தியாகு, பாலதண்டாயுதம், ஒன்றிய தலைவர் சாமிநாதன், பி.எஸ்.குமார், செல்வமுருகன், சந்துரு, காளிமுத்து, வரதராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.


செஞ்சியில் பா.ம.க. சார்பில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

செஞ்சி:

              ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் தண்டனையை குறைக்க வலியுறுத்தி செஞ்சி வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு, முன்னாள் எம்.எல்.ஏ.பா.செந்தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கி  உரையாற்றினார். மாவட்டத் தலைவர் தங்க.சுந்தர்ராஜன், மாவட்ட அமைப்புச் செயலர் கோ.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாமக மாவட்டச் செயலர் க.மணிமாறன் வரவேற்றார். ஒன்றியச் செயலர்கள் செ.பி.முருகன், ஏ.ர.அய்யனார், இரா.வேல்முருகன், இரா.வேலுச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உளுந்தூர்பேட்டையில் பா.ம.க. சார்பில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

உளுந்தூர்பேட்டை:
          
            பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன் விழுப்புரம் (கிழக்கு) மாவட்ட பாமக சார்பில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

             ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில துணைச் செயலர் அன்பழகன் தலைமை வகித்தார். நகரச் செயலர் ராஜேஷ் வரவேற்றார். முன்னாள் மாவட்டச் செயலர் வ.ச.சுரேஷ்குமார், வன்னியர் சங்க மாவட்டத் தலைவர் ந.பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் துரை.சுப்பிரமணியம் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியச் செயலர்கள் சி.பாண்டியன், தவஞானம், நேரு உள்பட பாமகவினர் பலர் கலந்து கொண்டனர்.÷நகர இளைஞர் சங்கச் செயலர் கோபி நன்றி கூறினார்.

வானூரில் பா.ம.க. சார்பில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

வானூர்: 

            பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி  விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றிய பாமக சார்பில் திருச்சிற்றம்பலம் சந்திப்புச் சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

            மாவட்டத் தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றியச் செயலர் கோபால் தொடக்க உரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் சிவக்குமார் கண்டன உரையாற்றினார். வடக்கு ஒன்றியச் செயலர் ஏழுமலை, ஒன்றியத் தலைவர்கள் உலகநாதன், சுப்பிரமணி, கண்டமங்கலம் ஒன்றியச் செயலர்கள் அருள்மணி, சுகுமார், கோட்டகுப்பம் பஞ்சமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றியச் செயலர்கள் வி.சி.ஆறுமுகம், ஞானசேகர், பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழுப்புரத்தில் பா.ம.க. சார்பில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்:

             பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் விழுப்புரத்தில் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

           விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைப் பொதுச் செயலர் பா.செந்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார் ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலர் பா.பழனிவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் வசுந்தராதேவி, மாநில துணைத் தலைவர் தங்க.ஜோதி, வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் முனியப்ப கவுண்டர், மாநில இணைச் செயலர் மா.தனராசு, மாவட்டச் செயலர் புண்ணியகோடி, பாமக நகரச் செயலர் தமிழ்செல்வன், மாவட்டத் தலைவர் துரைமுருகன், ஒன்றியச் செயலர்கள் சம்பத், சீனிவாசன், புகழேந்தி, ரத்தினம், சுரேஷ், துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பூரில் பா.ம.க. சார்பில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

திருப்பூர்:

            ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி பாமக சார்பில் திருப்பூரில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

             மாநகராட்சி முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தெற்கு மாவட்டச் செயலர் மு.ரமேஷ் தலைமை வகித்தார். தெற்கு நகரச் செயலர் கே.ஏ.கண்ணன் வரவேற்றார். வடக்கு மாவட்டச் செயலர் ராஜேந்திரன், வடக்கு மாவட்டத் தலைவர் கே.கே.சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொதுச் செயலர் சி.வடிவேல் கவுண்டர் சிறப்புரையாற்றினார்.   

              ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.   மாவட்டப் பொருளாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலர் பிரகாஷ், பல்லடம் ஒன்றியச் செயலர் புருஷோத்தமன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஆம்பூரில் பா.ம.க. சார்பில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

ஆம்பூர்:

          தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரியும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் தண்டனையை குறைக்க வலியுறுத்தியும் ஆம்பூர் பஸ் நிலையம் அருகில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

             வேலூர் வடமேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலர் ஆர்.டி. சாமுவேல் செல்லபாண்டியன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர்கள் ரவி, குமரவேல், ஜெயசீலன், ஆம்பூர் நகரச் செயலர் நசீர், மாவட்டத் தொழிற்சங்கச் செயலர் எஸ்.எஸ். மனோகரன், இளைஞர் அணி பாவேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விருதுநகரில் பா.ம.க. சார்பில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

விருதுநகர்:

           ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி விருதுநகரில் பழைய பஸ் நிலையம் முன்பு பா.ம.க.வினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.  

           ஆர்ப்பாட்டத்துக்கு பா.ம.க. கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜகோபால் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட அமைப்பாளர் ஜெகதீசன், மேற்கு மாவட்டச் செயலாளர் மாணிக்கம், மத்திய அமைப்புச் செயலாளர் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொதுச்செயலாளர் லட்சுமணன் சிறப்புரையாற்றினார்.  இதில் பா.ம.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வந்தவாசியில் பா.ம.க. சார்பில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

வந்தவாசி:

         ராஜிவ் கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி, வந்தவாசியில் திங்கள்கிழமை பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நகர்மன்றத் தலைவர் க.சீனுவாசன், பாமக நிர்வாகிகள் பிச்சைக்கண்ணு, கோ.மணவாளன், பட்டாபிராமன், ராஜாபாஷா, கராத்தே சரவணன், சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆரணியில் பா.ம.க. சார்பில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

ஆரணி :

             ராஜிவ் கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி திங்கள்கிழமை  ஆரணியில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலர் ஆ.வேலாயுதம் தலைமை தாங்கினார். வன்னியர் சங்கத்தின் மாவட்டச் செயலர் ஆ.குமார், நகரச் செயலர் மார்க்கெட் ந.ரமேஷ், நகரத் தலைவர் வி.எஸ்.வெங்கடேசன், மாவட்ட அமைப்புச் செயலர் அ.க.ராஜேந்திரன், ஒன்றியச் செயலர்கள் மெய்யழகன், ஜெயக்குமார், வடிவேலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

போளூரில் பா.ம.க. சார்பில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

போளூர்:

          ராஜிவ் கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி திங்கள்கிழமை  போளூரில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  கட்சியின் மாவட்டத் தலைவர் கி.ஏழுமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தண்டராம்பட்டில் பா.ம.க. சார்பில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

தண்டராம்பட்டு:

                  ராஜிவ் கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி திங்கள்கிழமை திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தண்டராம்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் வடக்கு மாவட்டச் செயலர் இல.பாண்டியன் தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலர்கள் சேட்டு, ஆறுமுகம், விஜயன், சாவித்ரி, ஜெயவேல், இளைஞரணி செயலர் மணியரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திருவண்ணாமலையில் பா.ம.க. சார்பில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை:

           ராஜிவ் கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி, திருவண்ணாமலையில்  திங்கள்கிழமை பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

          திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலர் கோ.எதிரொலிமணியன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர்கள் ம.சண்முகசுந்தரம், இரா.காளிதாஸ், மாவட்டச் செயலர் ஆர்.ஜானகிராமன், மாவட்ட இளைஞரணி செயலர் அ.வே.பிரசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திருவள்ளூரில் பா.ம.க. சார்பில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்:

            ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாமகவினர் திருவள்ளூரில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

              திருவள்ளூர் நகர தலைவர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் கண்ணன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் விஜயராகவன், கேசவன், மோகன்குமார், வாசுதேவன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைப் பொதுச் செயலாளர் பாலயோகி, மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். 

            இதில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்னையை ரத்து செய்ய வேண்டும். மேலும் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என மத்திய, மாநில, அரசுகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஜே.குமார் நன்றி கூறினார்.



தென்காசியில் பா.ம.க. சார்பில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

தென்காசி:

           பேரறிவாளன்,சாந்தன், முருகன் ஆகியோரது தூக்குத் தண்டனையை ரத்து செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி திருநெல்வேலி மேற்கு மாவட்ட பாமக சார்பில் தென்காசியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

            தென்காசி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மேற்கு மாவட்டச் செயலர் ஆறுமுகசாமியாதவ் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர் குலாம், தங்கராஜ், ஒன்றிய செயலர்கள் சண்முகசுந்தரம்,  காளிராஜ்,கடையநல்லூர் நகரத் தலைவர் மசூது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாவட்டத் தலைவர் சேது அரிகரன், மாநில துணைப் பொதுச்செயலர் திருமலைகுமாரசாமி யாதவ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். 

            பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோரது தூக்குத் தண்டனையை ரத்து செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றவும்,  தமிழக முதல்வர், ஆளுநருக்கு பரிந்துரைக்கவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தில் தென்காசி நகரத் தலைவர் சித்திக், மீரான், இஸ்மாயில், விஜயாகனகராஜ்  முபாரக்,செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராசம்மா நன்றி கூறினார்.

ஸ்ரீவைகுண்டத்தில் பா.ம.க. சார்பில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவைகுண்டம்:

            ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி ஸ்ரீவைகுண்டத்தில் பாமகவினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். 

           ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலர் விஜயராஜா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சரவணன், ஒன்றியச் செயலர் வள்ளிநாயகம், தேர்தல் பணிக்குழுத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி கோஷமிட்டனர்.  மாநில கொள்கை விளக்க அணித் தலைவர் வியனரசு, கொள்கை விளக்க அணிச் செயலர் ராமச்சந்திரன், பஷீர்அகமது, விவசாய அணித் தலைவர் செல்வம், சிறுபான்மைப் பிரிவுச் செயலர் ரவி, முகமது நியாஸ், சீனிவாசன், ஜெயசிங், ஆனந்தராஜ், சிவபெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சேலத்தில் பா.ம.க. சார்பில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

சேலம்:

           ராஜீவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 3 பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி பாமக சார்பில் சேலத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

           சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி தலைமை வகித்தார்.

போராட்டத்தில் தலைவர் ஜி.கே.மணி பேசும்போது, 

             3 பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள், கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பல்வேறு அமைப்புகள், மாணவர்கள், வழக்குரைஞர்கள் என பலதரப்பட்டவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மூவருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை உயர் நீதிமன்றம் 8 வாரத்துக்கு தடை செய்துள்ளது. இதன் பிறகு என்ன ஆகும் என்று தெரியவில்லை. ஒருவேளை மீண்டும் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டால் அதை எதிர்த்து மீண்டும் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். 

           இதற்கிடையே வரும் 14-ம் தேதி திருச்சியில் தமிழ் அமைப்புகளின் சார்பில் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி மாநாடு நடத்த உள்ளோம். இதில் ராமதாஸ்  கலந்து கொள்ள உள்ளனர் என்றார்.  போராட்டத்தில் மூவரின் தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அறந்தாங்கியில் பா.ம.க. சார்பில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

அறந்தாங்கி:

            ராஜீவ் காந்தி கொலையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் தண்டனையை குறைக்க வலியுறுத்தி, அறந்தாங்கி பேருந்து நிலையம் எதிரில் பாட்டாளி மக்கள் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   

              ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் முன்னாள் மாநிலப் பொதுக் குழு உறுப்பினர் அ. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநில மகளிர் அணி துணைச் செயலர் சுப. சீத்தாலட்சுமி, அறந்தாங்கி ஒன்றியத் தலைவர் இல. ராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலர் சுப. அருள்மணி ஆர்ப்பாட்டத்தை தொடக்கிவைத்துப் பேசினார்.  

            ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பாமக செயலர் அரங்க. செல்லையா, மாவட்டத்  துணைச் செயலர் ஜீவானந்தம், மகளிரணி பொருளாளர் காசி. சுந்தராம்பாள், திருவரங்குளம் ஒன்றியச் செயலர் ரவி, பசுமைத் தாயகம் தங்க. கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  முன்னதாக, அறந்தாங்கி ஒன்றியச் செயலர் ராம. துரைராசன் வரவேற்றார்.

திருச்செங்கோட்டில் பா.ம.க. சார்பில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு:
          
           ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி நாமக்கல் மேற்கு மாவட்ட பாமக சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

           திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, பாமக மேற்கு மாவட்டச் செயலாளர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் டி.ஆர்.லோகநாதன் முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்புச் செயலாளர் பழனியப்பன், பொருளாளர் கலாவதி, குமாரபாளையம் நகரச் செயலாளர் பொன்னுசாமி, பள்ளிபாளையம் ஒன்றியச் செயலாளர் மூர்த்தி, மல்லசமுத்திரம் கணேஷ் உள்பட பலர் பேசினர்.