ஸ்ரீவைகுண்டம்:
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி ஸ்ரீவைகுண்டத்தில் பாமகவினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலர் விஜயராஜா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சரவணன், ஒன்றியச் செயலர் வள்ளிநாயகம், தேர்தல் பணிக்குழுத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி கோஷமிட்டனர். மாநில கொள்கை விளக்க அணித் தலைவர் வியனரசு, கொள்கை விளக்க அணிச் செயலர் ராமச்சந்திரன், பஷீர்அகமது, விவசாய அணித் தலைவர் செல்வம், சிறுபான்மைப் பிரிவுச் செயலர் ரவி, முகமது நியாஸ், சீனிவாசன், ஜெயசிங், ஆனந்தராஜ், சிவபெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.