திருவண்ணாமலை மாவட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருவண்ணாமலை மாவட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பா.ம.க.சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட திருவண்ணாமலை மாவட்டதில் விருப்ப மனு

திருவண்ணாமலை:

           திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பா.ம.க.வினர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளனர். 

             பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பின்படி பா.ம.க. சார்பிலும் மனுக்கள் புதன்கிழமை முதல் வாங்கப்படுகின்றன. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பா.ம.க. அலுவலகத்தில் தேர்தல் பொறுப்பாளரும், மாநில துணைப் பொதுச் செயலருமான கோ.எதிரொலிமணியன் விருப்ப மனுக்களை கட்சியினரிடம் இருந்து பெற்றுக்கொண்டார். 

              மகளிரணி நிர்வாகி ஜோதி செல்வம், தலைவர் அ.முத்து, துணைச் செயலர் கே.அறவாழி, ஒன்றியத் தலைவர் லோ.சதாசிவம், துணைச் செயலர் என்.குப்புசாமி உள்பட பலர் மனு அளித்தனர்.  மாநில துணைத் தலைவர்கள் ம.சண்முகசுந்தரம், இரா.காளிதாஸ், செயலர்கள் இரா.ஜானகிராமன், இல.பாண்டியன், தலைவர் இரா.ஏழுமலை, நகர செயலர் மு.சண்முகம் உள்பட பலர் உடனிருந்தனர்.  

திருவண்ணாமலை மாவட்டத்தில் பாமக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம்

ஆரணி:

            திருவண்ணாமலை மாவட்ட பாமகவினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட செப்டம்பர் 7 முதல் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படும் என முன்னாள் எம்எல்ஏவும், மாநில துணைப்பொதுச் செயலருமான கோ.எதிரொலிமணியன் கூறினார். 

இது குறித்து முன்னாள் எம்எல்ஏவும், மாநில துணைப்பொதுச் செயலருமான கோ.எதிரொலிமணியன் கூறியது:    

               திருவண்ணாமலையில் செப்டம்பர் 7-ம் தேதி திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம், செங்கம் ஆகிய 4 தொகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் மனுக்களை பெற்றுக்கொள்ளலாம்.  

              9-ம் தேதி வந்தவாசி, செய்யாறு ஆகிய இரண்டு தொகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வந்தவாசி பாமக அலுவலகத்தில் மனுக்களை பெற்றுக்கொள்ளலாம். 

              காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மனுக்கள் விநியோகம் செய்யப்படும்.    மாலை 2 மணி அளவில் ஆரணி, போளூர் ஆகிய தொகுதிகளுக்கான மனுக்கள் பெரியகடைவீதியில் உள்ள பாமக அலுவலகத்தில் விநியோகிக்கப்படும்.

தண்டராம்பட்டில் பா.ம.க. சார்பில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

தண்டராம்பட்டு:

                  ராஜிவ் கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி திங்கள்கிழமை திருவண்ணாமலை மாவட்டம் ண்டராம்பட்டில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தண்டராம்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் வடக்கு மாவட்டச் செயலர் இல.பாண்டியன் தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலர்கள் சேட்டு, ஆறுமுகம், விஜயன், சாவித்ரி, ஜெயவேல், இளைஞரணி செயலர் மணியரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திருவண்ணாமலையில் பா.ம.க. சார்பில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை:

           ராஜிவ் கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி, திருவண்ணாமலையில்  திங்கள்கிழமை பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

          திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலர் கோ.எதிரொலிமணியன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர்கள் ம.சண்முகசுந்தரம், இரா.காளிதாஸ், மாவட்டச் செயலர் ஆர்.ஜானகிராமன், மாவட்ட இளைஞரணி செயலர் அ.வே.பிரசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்ட பா.ம.க.பொதுக்குழு கூட்டம்

திருவண்ணாமலை:

          ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலையில் இன்று நடந்தது. மாநில துணை பொதுச்செயலாளர் எதிரொலி மணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாண்டியன், ஜானகிராமன், முன்னிலை வகித்தனர். 
 
இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியது:-

           தமிழகம் முழுவதும் பா.ம.க. சார்பில் டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கும் போராட்டம் வெகு விரைவில் அறிவிக்கப்படும்.   திருவண்ணாமலை நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. வருகிற உள்ளாட்சி தேர்தலில் இங்கு பா.ம.க. தனித்து போட்டியிடும். இதற்காக ஒரு குழு அமைக்கப்படும். குழு தேர்ந்தெடுப்பவர்கள் போட்டியிடுவார்கள் அவர்களை நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். வருங்காலத்தில் பா.ம.க. தனி பெரும் கட்சியாக வளர்ச்சி பெறும்.  இவ்வாறு அவர் கூறினார். பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரிகள் பொன்னுசாமி, வேலு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

உயர்நீதி மன்ற வளாகத்தில் உண்ணாவிரதம்: ராமதாஸ் அறிவிப்பு

திருவண்ணாமலை:

          திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னத்தூர் தொகுதியில் உள்ள பாமக கிளை செயலாளர்களுக்கான தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் பாமக நிறுவனர்  ராமதாஸ் கலந்து கொண்டு பேசியது , 


           சென்னை உயர்நீதிமன்றத்தில் 60 நீதிபதிகள் இருக்க வேண்டும். தற்போது 52 நீதிபதிகள் உள்ளனர் அதில் ஒருவர் மட்டுமே வன்னிய சமுகத்தை சேர்ந்தவர். தற்போது 7 பேரை நீதிபதிகளாக நியமிக்க தமிழக அரசு மூலம் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஒருவர் கூட பிற்படுத்தப்பட்டோர் சமுகத்தை சார்ந்தவர்களில்லை. அதனால் இதை கண்டித்து விரைவில் சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்க போகிறேன். இதற்கு நம் சமுகத்தை சார்ந்தவர்கள் ஒன்றாக இருக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
 

             ‘’வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் தனித்து நின்றாலே 30 தொகுதிகளில் வெற்றி பெரும் அளவுக்கு பலம் பொருந்தியுள்ளோம். அதேபோல் இந்த தேர்தலில் வயதானவர்கள் மட்டுமே பணம் தந்தால் அதை வாங்கிக்கொண்டு பணம் தந்தவர்களுக்கு ஓட்டுப்போடுவார்கள். இளைஞர்-இளைஞகள், படித்தவர்கள் பணத்திற்கு மதி மயங்காமல் ஒட்டு போடுவார்கள்’’ என கட்சியினர் மத்தியில் பேசினார்.