உயர்நீதி மன்ற வளாகத்தில் உண்ணாவிரதம்: ராமதாஸ் அறிவிப்பு

திருவண்ணாமலை:

          திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னத்தூர் தொகுதியில் உள்ள பாமக கிளை செயலாளர்களுக்கான தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் பாமக நிறுவனர்  ராமதாஸ் கலந்து கொண்டு பேசியது , 

           சென்னை உயர்நீதிமன்றத்தில் 60 நீதிபதிகள் இருக்க வேண்டும். தற்போது 52 நீதிபதிகள் உள்ளனர் அதில் ஒருவர் மட்டுமே வன்னிய சமுகத்தை சேர்ந்தவர். தற்போது 7 பேரை நீதிபதிகளாக நியமிக்க தமிழக அரசு மூலம் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஒருவர் கூட பிற்படுத்தப்பட்டோர் சமுகத்தை சார்ந்தவர்களில்லை. அதனால் இதை கண்டித்து விரைவில் சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்க போகிறேன். இதற்கு நம் சமுகத்தை சார்ந்தவர்கள் ஒன்றாக இருக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
 
             ‘’வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் தனித்து நின்றாலே 30 தொகுதிகளில் வெற்றி பெரும் அளவுக்கு பலம் பொருந்தியுள்ளோம். அதேபோல் இந்த தேர்தலில் வயதானவர்கள் மட்டுமே பணம் தந்தால் அதை வாங்கிக்கொண்டு பணம் தந்தவர்களுக்கு ஓட்டுப்போடுவார்கள். இளைஞர்-இளைஞகள், படித்தவர்கள் பணத்திற்கு மதி மயங்காமல் ஒட்டு போடுவார்கள்’’ என கட்சியினர் மத்தியில் பேசினார்.

3 கருத்துகள்:

dakaraidakila சொன்னது…

தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக வேண்டுமானால் பாமக ஆட்சிக்கு வரவேண்டும். மது ஒழிப்பு, சமச்சீர் கல்வி, வரதட்சணை ஒழிப்பு, போதை பொருள் ஒழிப்பு, பசுமை புரட்சி, தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு, லாட்டரி & கிரிக்கெட் சூதாட்ட ஒழிப்பு, பெண்களுக்கு சமஉரிமை, அனைவருக்கும் அனைத்தும் கிடைப்பது, வன்முறை& தீவிரவாதம் ஒழிப்பு, கட்டாய கல்வி. இவற்றை பாமக மட்டுமே செய்ய முடியும். இவற்றை வேறு எந்த கட்சியாலும் செய்யவும் முடியாது. அவர்களால் பேசக்கூட முடியாது. அவர்கள் வெறும் கவர்ச்சி திட்டங்கள் தான் செய்ய முடியும். முன்னோடி & வளர்ச்சி திட்டங்கள் இருக்காது. இதை தமிழக மக்கள் உணர்ந்தால் அடுத்த நிமிடமே பாமக ஆட்சிதான். குறிப்பாக 2 .5 கோடி வன்னியர்கள் உணர்ந்தால் 100 தொகுதிகளில் பாமக வெற்றிபெறும். 2 .5 கோடி வன்னியர்களின் ஒரே அரசியல் முகவரி பாமக. பாமகவில் மட்டுமே வன்னியர்களுக்கு மதிப்பு, மரியாதை, பதவி உண்டு. மற்ற கட்சிகளில் வன்னியர்கள் கிள்ளு கீரைகள்தான். கொடி பிடிக்கும் அடிமைதான் என்பதை உணரவேண்டும். டாக்டர் அய்யா அவர்கள் பதவி சுகம் பார்க்காமல் கடந்த 30 வருடங்களாக வன்னியர்கள் முன்னேற்றத்திற்க்குத்தான் பாடுபடுகிறார் என்பதை வன்னியர்கள் அனைவரும் உணரவேண்டும். எனவே 2.5 கோடி வன்னியர்களும் குடும்பத்தோடு உறுப்பினர் ஆக சேரவேண்டிய இடம் பாமக. நாளைய ஆட்சி பாமக.

dakaraidakila சொன்னது…

தமிழ்நாட்டில் 2 .5 கோடி வன்னியர்கள் உள்ளனர். பல ஊர்களில் / ஒன்றியங்களில் வன்னியர்கள் இருந்தும் பாமக அறிமுகமும், தொடர்பும் இல்லாமல் இன்னும் உள்ளது. குறிப்பாக நாமக்கல், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக 20% வன்னியர்கள் பெரும்பாலான கிராமங்கள், ஒன்றியங்களில் வசிக்கின்றனர். எனவே வன்னியர்கள் இருக்கும் அனைத்து பகுதிகளையும் இடம் கண்டறிந்து பாமகவுக்கு ஆதரவு திரட்டனும். ஒரு வன்னியர் ஓட்டு கூட சிதற கூடாது. டாக்டர் அய்யா ஒருமுறை இந்த மாவட்டங்களில் வலம் வந்து ஆதரவு திரட்டனும்.. அவ்வாறு செய்தல் தமிழ்நாட்டில் பாமக 100 தொகுதிகளில் வெற்றி பெரும். திருச்சி , தஞ்சை , திருவாரூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களிலும் கணிசமாக வன்னியர்கள் உள்ளனர்.