திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் அருகே உள்ள முகையூர் ஒன்றியம் சு.பில்ராம்பட்டு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவரும் பாட்டாளி இளைஞர் சங்க மாவட்ட தலைவருமான பி.ஜே.ஏழுமலை மதுமிதா ஆகியோரால் கட்டப்பட்டுள்ள ஸ்ரீரூபிகா திருமண மண்டப திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பா.ம.க நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில்,

தமிழகத்தில் இன்று விவசாயம் இல்லாத ஒரு நிலை காணப்படுகிறது. விவசாயிகள் அதிகம் நஷ்டப் படுகின்றனர். ஆனால் அதனை வாங்கி விற்கும் வியாபாரிகள் கொள்ளை லாபம் அடிக்கின்றனர். விவசாயிகள்தான் கஷ்டப்பட்டு விவசாயம் செய்து அதனை அறுவடை செய்து விற்பனைக்கு எடுத்து வரும் போது பண முதலைகள் அடிமாட்டு விலைக்கு விளைபொருட்களை வாங்கி அதனை பதுக்கி வைக்கின்றனர்.
இதனால் ஏற்படும் பற்றாக்குறை, அதனைதொடர்ந்து ஏற்படும் விலை உயர்வால் கொள்ளை லாபம் பார்க்கின்றனர். இதனால் விவசாயிகள் அரசாங்கத்தை பார்த்து நாங்கள் வாழவேண்டுமா? சாகவேண்டுமா எனக் கேட்கின்றனர். அந்த அளவுக்கு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயி இரவு, பகல் பாராமல் உழைக்கின்றான். ஆன் லைன் வியாபாரம் செய்து பதுக்கல்காரன் பதுக்கிக்கொண்டே இருக்கிறான். அரசாங்கம் விளைபொருட்கள் அதிகம் விளையும் நேரத்தில் அதனை சேமிப்பு குடோன்களில் சேமித்து வைத்து பின் விலை உயர்வு ஏற்படும்போது அதாவது சீசன் இல்லாத சமயத்தில் அதிக விலைக்கு விற்று அதில் ஏற்படும் கூடுதல் வருவாயை விவசாயிக்கு தரவேண்டும்.
மார்க்கெட் கமிட்டியில் பெரும் கொள்ளை நடக்கிறது. விவசாயிகளிடம் இருந்து வாங்கும் விளை பொருட்களுக்கு உடனடியாக பணப்பட்டுவாடா செய்வதில்லை. வேண்டு மென்றே காலம் தாழ்த்து கின்றனர். அரசாங்கத்துக்கும் இந்த நிலை தெரியும். ஆனால் கண்டுகொள்வதும் இல்லை. கவலைப்படுவதும் இல்லை.
இதனால்தான் விவசாயிகள் தங்கள் விலைநிலங்களை விற்றுவருகின்றனர். அவ்வாறு வாங்கும் விளை நிலங்களிலும் விவசாயம் நடைபெறுவதில்லை. இந்த நிலை இப்படியே நீடித்தால் நாம் அரிசிக்கு அண்டை மாநிலங்களை நம்பியிருக்கவேண்டிய அபாய நிலை ஏற்படும். நமது மாநிலத்தில் அண்டை மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நிலம் வாங்கி அதனை ஒரு வருடத்திற்க்குள் விவசாய பணி செய்யாமல் இருந்தால் அந்த நிலத்தை விற்ற நீங்களே உள்ளே சென்று பயிர் செய்யுங்கள். அதில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் நான் உங்களுக்காக வருகின்றேன்.
சிறு, மற்றும் குறு விவசாயிகளுக்கு வருடத்துக்கு ரு 25 ஆயிரம் சம்மந்தப்பட்ட விவசாயின் வங்கி கணக்கில் அரசாங்கம் பணம்போடவேண்டும். காரணம் அந்த விவசாயி இந்த சூழ்நிலையிலும் விவசாயம் செய்வதை ஊக்கப்படுத்தவே இந்த தொகை ஆகும். விவசாயிகள் பாவப்பட்டவர்களாக உள்ளனர். விவசாயிகளுக்காக நாம்போராடும் இந்த நிலையை அனைவரும் உணரவேண்டும். அந்த நிலை வரும். அப்போது பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வரும். அதற்கு அனைவரும் அயராது உழைக்கவேண்டும் என்றார்.

1 கருத்துகள்:
தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக வேண்டுமானால் பாமக ஆட்சிக்கு வரவேண்டும். மது ஒழிப்பு, சமச்சீர் கல்வி, வரதட்சணை ஒழிப்பு, போதை பொருள் ஒழிப்பு, பசுமை புரட்சி, தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு, லாட்டரி & கிரிக்கெட் சூதாட்ட ஒழிப்பு, பெண்களுக்கு சமஉரிமை, அனைவருக்கும் அனைத்தும் கிடைப்பது, வன்முறை& தீவிரவாதம் ஒழிப்பு, கட்டாய கல்வி. இவற்றை பாமக மட்டுமே செய்ய முடியும். இவற்றை வேறு எந்த கட்சியாலும் செய்யவும் முடியாது. அவர்களால் பேசக்கூட முடியாது. அவர்கள் வெறும் கவர்ச்சி திட்டங்கள் தான் செய்ய முடியும். முன்னோடி & வளர்ச்சி திட்டங்கள் இருக்காது. இதை தமிழக மக்கள் உணர்ந்தால் அடுத்த நிமிடமே பாமக ஆட்சிதான். குறிப்பாக 2 .5 கோடி வன்னியர்கள் உணர்ந்தால் 100 தொகுதிகளில் பாமக வெற்றிபெறும். 2 .5 கோடி வன்னியர்களின் ஒரே அரசியல் முகவரி பாமக. பாமகவில் மட்டுமே வன்னியர்களுக்கு மதிப்பு, மரியாதை, பதவி உண்டு. மற்ற கட்சிகளில் வன்னியர்கள் கிள்ளு கீரைகள்தான். கொடி பிடிக்கும் அடிமைதான் என்பதை உணரவேண்டும். டாக்டர் அய்யா அவர்கள் பதவி சுகம் பார்க்காமல் கடந்த 30 வருடங்களாக வன்னியர்கள் முன்னேற்றத்திற்க்குத்தான் பாடுபடுகிறார் என்பதை வன்னியர்கள் அனைவரும் உணரவேண்டும். எனவே 2.5 கோடி வன்னியர்களும் குடும்பத்தோடு உறுப்பினர் ஆக சேரவேண்டிய இடம் பாமக. நாளைய ஆட்சி பாமக.
கருத்துரையிடுக