திருக்கோவிலூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருக்கோவிலூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: பா.ம.க. மாவட்ட தலைவர் செழியன் கோரிக்கை


திருக்கோவிலூர்:

பா.ம.க. மாவட்ட தலைவர் செழியன் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பது:-
 

            திருக்கோவிலூரில் உள்ள அரசு மருத்துவமனையில்  திருக்கோவிலூர், முகையூர், ரிஷிவந்தியம் மற்றும் திருவெண்ணை நல்லூர் ஆகிய 4 ஒன்றியங்களை உள்ளடக்கி உள்ளது. மேற்கண்ட பகுதியில் உள்ள சுமார் 200 கிராம மக்கள் இந்த அரசு மருத்துவமனையைத்தான் நம்பி உள்ளனர்.  நாள் ஒன்றுக்கு சராசரியாக ஆயிரத்து 500 பேர் புறநோயாளிகளாக வருகின்றனர்.

        இவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய டாக்டர்கள் இல்லை. 23 டாக்டர்கள் பணி புரியவேண்டிய இடத்தில் தற்போது 6 பேர் மட்டுமே உள்ளனர். குறிப்பாக பொதுமருத்துவம் பார்க்கும் எம்.டி. டாக்டர், குழந்தை டாக்டர், தோல்டாக்டர், எலும்புடாக்டர், பல்டாக்டர், லேப்டெக்னீஷியன் கூடுதலாக தேவைப்படுகின்றனர். போதிய மருந்து, மாத்திரைகளும் இல்லாதநிலை உள்ளது. துப்புரவு பணியாளர்கள் இல்லை, கட்டு, கட்டும் ஊழியர்கள் இல்லை.  இதனால் இங்கு வரும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே இந்த குறையை போக்க உடன் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

பா.ம.க.சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டையில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம்

திருக்கோவிலூர்:

              உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் பாமகசார்பில் போட்டியிட  விருப்பமனு அளிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

           திருக்கோவிலூர், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், கள்ளக்குறிச்சி தொகுதிகளுக்கு உள்பட்ட பாமகவினர் வரும் 9,10,11 ஆகிய தேதிகளில் விருப்ப மனு செய்யலாம் என்று கட்சியின் மாநில துணை பொதுச் செயலரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான வி.ஏ.டி.கலிவரதன் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து  மாநில துணை பொதுச் செயலரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான வி.ஏ.டி.கலிவரதன் கூறியது; 

        திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய தொகுதிக்குட்பட்டவர்கள் 9-ம் தேதி, திருக்கோவிலூர் பயணியர் விடுதியிலும், 

          கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் ஆகிய தொகுதிக்குட்பட்டவர்கள் 10,11 ஆகிய தேதிகளில் கள்ளக்குறிச்சி பயணியர் விடுதியிலும் விருப்ப மனு செய்யலாம்.  

 கட்டண விபரம்

இதில் மாவட்டக்குழு உறுப்பினருக்கு ரூ.3,000, 
 ஒன்றியக்குழு உறுப்பினருக்கு ரூ.1,000, 
 ஊராட்சித் தலைவருக்கு ரூ.1,000, 
பேருராட்சித் தலைவருக்கு ரூ.2,000, 
பேருராட்சி உறுப்பினர்களுக்கு ரூ.500, 
நகர்மன்றத் தலைவருக்கு ரூ.3,000, 
நகர் மன்ற உறுப்பினருக்கு ரூ.1,000 

கட்டணமாக செலுத்தி மனு செய்ய வேண்டும் என்றார்.

திருக்கோவிலூரில் பா.ம.க. சார்பில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

திருக்கோவிலூர்:

           திருக்கோவிலூரில் பாமக சார்பில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்டன  ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.  

             திருக்கோவிலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, பாமக மாநில துணை பொதுச் செயலரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான வி.எ.டி.கலிவரதன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவர் அ.பா.செழியன், முன்னாள் மாவட்டத் தலைவர் சப்தகிரி, முன்னாள் ஒன்றியச் செயலர் ஜி.ஞானவேல், மாவட்ட மாணவர் சங்கச் செயலர் ஆர்.சுபாஷ், ஒன்றியச் செயலர் சுப்பிரமணியன் உள்பட சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் விவசாயம் மறைந்து வருகிறது : ராமதாஸ் வேதனை

திருக்கோவிலூர்:

           திருக்கோவிலூர் அருகே உள்ள முகையூர் ஒன்றியம் சு.பில்ராம்பட்டு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவரும் பாட்டாளி இளைஞர் சங்க மாவட்ட தலைவருமான பி.ஜே.ஏழுமலை மதுமிதா ஆகியோரால் கட்டப்பட்டுள்ள ஸ்ரீரூபிகா திருமண மண்டப திறப்பு விழா நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பா.ம.க நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில்,
            தமிழகத்தில் இன்று விவசாயம் இல்லாத ஒரு நிலை காணப்படுகிறது. விவசாயிகள் அதிகம் நஷ்டப் படுகின்றனர்.  ஆனால் அதனை வாங்கி விற்கும் வியாபாரிகள் கொள்ளை லாபம் அடிக்கின்றனர். விவசாயிகள்தான் கஷ்டப்பட்டு விவசாயம் செய்து அதனை அறுவடை செய்து விற்பனைக்கு எடுத்து வரும் போது பண முதலைகள் அடிமாட்டு விலைக்கு விளைபொருட்களை வாங்கி அதனை பதுக்கி வைக்கின்றனர்.

              இதனால் ஏற்படும் பற்றாக்குறை, அதனைதொடர்ந்து ஏற்படும் விலை உயர்வால் கொள்ளை லாபம் பார்க்கின்றனர். இதனால் விவசாயிகள் அரசாங்கத்தை பார்த்து நாங்கள் வாழவேண்டுமா? சாகவேண்டுமா எனக் கேட்கின்றனர். அந்த அளவுக்கு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயி இரவு, பகல் பாராமல் உழைக்கின்றான். ஆன் லைன் வியாபாரம் செய்து பதுக்கல்காரன் பதுக்கிக்கொண்டே இருக்கிறான். அரசாங்கம் விளைபொருட்கள் அதிகம் விளையும் நேரத்தில் அதனை சேமிப்பு குடோன்களில் சேமித்து வைத்து பின் விலை உயர்வு ஏற்படும்போது அதாவது சீசன் இல்லாத சமயத்தில் அதிக விலைக்கு விற்று அதில் ஏற்படும் கூடுதல் வருவாயை விவசாயிக்கு தரவேண்டும்.

                 மார்க்கெட் கமிட்டியில் பெரும் கொள்ளை நடக்கிறது. விவசாயிகளிடம் இருந்து வாங்கும் விளை பொருட்களுக்கு உடனடியாக பணப்பட்டுவாடா செய்வதில்லை. வேண்டு மென்றே காலம் தாழ்த்து கின்றனர். அரசாங்கத்துக்கும் இந்த நிலை தெரியும். ஆனால் கண்டுகொள்வதும் இல்லை. கவலைப்படுவதும் இல்லை.

                 இதனால்தான் விவசாயிகள் தங்கள் விலைநிலங்களை விற்றுவருகின்றனர். அவ்வாறு வாங்கும் விளை நிலங்களிலும் விவசாயம் நடைபெறுவதில்லை. இந்த நிலை இப்படியே நீடித்தால் நாம் அரிசிக்கு அண்டை மாநிலங்களை நம்பியிருக்கவேண்டிய அபாய நிலை ஏற்படும். நமது மாநிலத்தில் அண்டை மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நிலம் வாங்கி அதனை ஒரு வருடத்திற்க்குள் விவசாய பணி செய்யாமல் இருந்தால் அந்த நிலத்தை விற்ற நீங்களே உள்ளே சென்று பயிர் செய்யுங்கள். அதில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் நான் உங்களுக்காக வருகின்றேன்.

                   சிறு, மற்றும் குறு விவசாயிகளுக்கு வருடத்துக்கு ரு 25 ஆயிரம் சம்மந்தப்பட்ட விவசாயின் வங்கி கணக்கில் அரசாங்கம் பணம்போடவேண்டும். காரணம் அந்த விவசாயி இந்த சூழ்நிலையிலும் விவசாயம் செய்வதை ஊக்கப்படுத்தவே இந்த தொகை ஆகும்.  விவசாயிகள் பாவப்பட்டவர்களாக உள்ளனர். விவசாயிகளுக்காக நாம்போராடும் இந்த நிலையை அனைவரும் உணரவேண்டும். அந்த நிலை வரும். அப்போது பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வரும். அதற்கு அனைவரும் அயராது உழைக்கவேண்டும் என்றார்.