திருக்கோவிலூர்:
பா.ம.க. மாவட்ட தலைவர் செழியன் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பது:-
திருக்கோவிலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் திருக்கோவிலூர், முகையூர், ரிஷிவந்தியம் மற்றும் திருவெண்ணை நல்லூர் ஆகிய 4 ஒன்றியங்களை உள்ளடக்கி உள்ளது. மேற்கண்ட பகுதியில் உள்ள சுமார் 200 கிராம மக்கள் இந்த அரசு மருத்துவமனையைத்தான் நம்பி உள்ளனர். நாள் ஒன்றுக்கு சராசரியாக ஆயிரத்து 500 பேர் புறநோயாளிகளாக வருகின்றனர்.
இவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய டாக்டர்கள் இல்லை. 23 டாக்டர்கள் பணி புரியவேண்டிய இடத்தில் தற்போது 6 பேர் மட்டுமே உள்ளனர். குறிப்பாக பொதுமருத்துவம் பார்க்கும் எம்.டி. டாக்டர், குழந்தை டாக்டர், தோல்டாக்டர், எலும்புடாக்டர், பல்டாக்டர், லேப்டெக்னீஷியன் கூடுதலாக தேவைப்படுகின்றனர். போதிய மருந்து, மாத்திரைகளும் இல்லாதநிலை உள்ளது. துப்புரவு பணியாளர்கள் இல்லை, கட்டு, கட்டும் ஊழியர்கள் இல்லை. இதனால் இங்கு வரும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே இந்த குறையை போக்க உடன் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக