சென்னை:
சென்னை பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி மெரீனா கடற்கரை மற்றும் மீனவர் குப்பம் பகுதியில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். மைலாப்பூர், திருவல்லிக்கேணி பகுதியில் திறந்த ஜீப்பில் சென்று மாம்பழம் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.

சென்னை பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி பேசியது:-
மெரீனா கடற்கரையை அழகுபடுத்த பல கோடிகளை செலவிட்டுள்ளனர். ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு நவீன வசதிகள் இல்லை. நடைபாதை வியாபாரிகள் கடைவசதி, மின்வசதி உள்ளிட்ட கோரிக்கைகள் விடுத்தனர். எனக்கு வாய்ப்பளித்தால் வெளி நாடுகளில் உள்ளதை போல் கடற்கரையை நவீனப்படுத்த முயற்சி எடுப்பேன்.
வியாபாரிகளுக்கும் நிரந்தர கடைகள் தனி இடத்தில் அமைத்து கொடுப்பேன். மீனவர் குடியிருப்புகளுக்கு பாதிப்பு இல்லாமல் வெளிநாட்டு தொழில் நுட்பத்துடன் கடற்கரை சாலை அமைத்திட மத்திய மாநில அரசுகளிடம் ஒப்புதல் பெற்று நடவடிக்கை எடுப்பேன். இதன் மூலம் மெரீனா கடற்கரை இன்னும் அழகுபெறும். உலகம் முழுக்க இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

மீனவ கிராம மக்கள் கட்டு மரங்களை நிறுத்தவும், வலைகளை உலர்த்தவும் முடிய வில்லை என்று முறையிட்டனர். அவர்களுக்கும் கடற்கரையில் தனி இடவசதி அமைத்து கொடுக்கப்படும். மக்களுக்காக போராடவும் தொண்டாற்றவும் வாய்ப்பளியுங்கள். இவ்வாறு அவர் பேசினார். பிரசாரத்தில் ஜெயராமன், ஜமூனாகேசவன், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக