சென்னை மாநகராட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சென்னை மாநகராட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சென்னை மாநகராட்சித் தேர்தலில் அதிமுகவினர் வாக்குச் சாவடிகளை கைப்பற்றி அத்துமீறல்: பாமக நிறுவனர் ராமதாஸ்கண்டனம்

சென்னை:

 பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

           சென்னை மாநகராட்சித் தேர்தலில் அதிமுகவினர் திட்டமிட்டபடியே முறைகேடுகளை அரங்கேற்றி வருகின்றனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நேரத்திலிருந்தே சென்னை மாநகரத்திற்குட்பட்ட எல்லா வாக்குச் சாவடிகளிலும் குண்டர்களின் உதவியுடன் அ.தி.மு.க.வினர் கள்ளவாக்கு போட்டு வருகின்றனர்.

         சோழிங்கநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பெருங்குடி மற்றும் அதையொட்டிய பகுதிகளில் அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர் கந்தன் அவரது ஆதரவாளர்களுடன் சென்று வாக்குச் சாவடிகளை கைப்பற்றி அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்குகளை செலுத்தியுள்ளார்.  இதேபோல் சென்னை மாநகரின் எல்லா பகுதிகளிலும் அ.தி.மு.க.வைச்  சேர்ந்த அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் உள்ளிட்டோர் தங்களது பகுதியிலுள்ள வாக்குச் சாவடிகளை கைப்பற்றி கள்ளவாக்குகளை செலுத்திவருகின்றனர். சைதாப்பேட்டை உள்ளிட்ட சில பகுதிகளில் வாக்களிக்க வரும் மக்களை அ.தி.மு.க.வுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று அங்குள்ள முகவர்கள் மிரட்டியுள்ளனர். சிலர் வாக்காளர்களின் கைகளைப் பற்றி அ.தி.மு.க. சின்னத்தில் வாக்களிக்க வைத்துள்ளனர்.

            வாக்குச் சாவடியிலிருந்த அதிகாரிகளோ, அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த காவலர்களோ இதை கண்டுகொள்ளவில்லை. இந்த முறைகேடுகள் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தேர்தல் ஆணையர்  சோ.அய்யர், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் திரிபாதி ஆகியோருக்கு புகார் மனுக்கள் அனுப்பப்பட்டும் எந்தப் பயனும் ஏற்படவில்லை. மாநகராட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியினர் பெருமளவில் முறைகேடு செய்வார்கள் என்ற ஐயத்தில்தான் தேர்தலை முறையாக நடத்தும்படி தேர்தல் ஆணையத்திற்கு ஆணையிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 

            அதன் அடிப்படையில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செயல்படுத்தப்படவில்லை. சென்னையின் பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் வீடியோ மூலம் வாக்குப்பதிவு படம்பிடிக்கப்படவில்லை. இவற்றையெல்லாம் பார்க்கும்போது தேர்தல் ஆணையமும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக நடந்து கொண்டிருப்பது உறுதியாகிறது. மாநகராட்சித் தேர்தல் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவிருக்கும் நிலையில், மீதமுள்ள நேரத்திலாவது வாக்குப்பதிவு முறையாக நடப்பதை உறுதி செய்ய தேர்தல் ஆணையரும், சென்னை மாநகரக் காவல்துறை ஆணையரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இவர்கள் மீது நீதிமன்றம் மூலம் சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

சென்னை மாநகராட்சி பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி புஷ்பாநகர், மகாலிங்கபுரம், பகுதிகளில் வாக்கு சேகரிப்பு


 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/4490641e-d20f-4d26-b4be-eb835b8508ce_S_secvpf.gif
சென்னை:

         சென்னை மாநகராட்சி பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி புஷ்பாநகர், மகாலிங்கபுரம், பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று மாம்பழம் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார். 
அப்போது சென்னை மாநகராட்சி பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி பேசியது:-

          இத்தனை ஆண்டுகளாக 2 கட்சிகளுக்கு மாறி மாறி ஓட்டு போட்டீர்கள். ஒருத்தர் சிங்கார சென்னையை உருவாக்குவோம் என்றார். இன்னொருத்தர் எழில்மிகு சென்னையை உருவாக்குவோம் என்றார். ஒழுகாத வீடு, உடுத்த உடையெல்லாம் தருவோம் என்று வாக்குறுதி தந்தார்கள். நிறைவேற்றினார்களா?  குறுகிய சென்னையில் கூட குப்பை களை அகற்றி சுகாதாரத்தை கொடுக்கவில்லை. இனி கரேட்டர் சென்னையை எப்படி அழகுபடுத்துவார்கள்? ஆளுங்கட்சி ஆட்சிக்கு வந்தால்தால் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்ற தவறான பிரசாரத்தை செய்கிறார்கள். இதுவரை ஆளுங் கட்சி மேயர்கள் இருந்தபோது என்ன சாதித்தார்கள்?

                சில பாலங்கள், பூங்காக் களை உருவாக்கினால் போதுமா? மக்களின் அடிப் படை தேவைகள் பூர்த்தியாகி விடுமா? மெயின் ரோடுகள் நன்றாக உள்ளது. உட்புற பகுதிகள் பல இடங்களில் கிராமப்பகுதிகளை விட மோசமாக உள்ளது. எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். சென்னையின் முன்னேற்றத்துக்காக பல திட்டங்கள் வைத்து இருக்கிறேன். பள்ளிகளில் தரமான கட்டிடங்கள், தரமான கல்வி, சுமையில்லாத கல்வி, கட்டாய கல்வி, சுகாதார மான குடிநீர், நல்ல சாலைகள், குப்பை யில்லாத, கொசு ஆதிக்கம் இல்லாத சென்னையை உருவாக்குவேன். குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு களுக்கு வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்குவேன்.

            தமிழர் திருநாளில் ஏழைகள் வசிக்கும் குடிசை மாற்று வாரிய வீடுகள் வெள்ளையடித்து தரப்படும். நீங்க நல்லா இருக்க பா.ம.க.வுக்கு ஆதரவு தாருங்கள். மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்தால் சொன்னதை செய்து உங்களிடம் பாராட்டு பெறுவேன்.  இவ்வாறு அவர் பேசினார்.

சென்னை மாநகராட்சி பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரிப்பு

        
 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/edea9792-9786-47d2-8975-a76ec3d67dcd_S_secvpf.gif

        சென்னை மாநகராட்சி பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் வியாசர்பாடி, கொடுங்கையூர் உள்பட பெரம்பூர் பகுதியில் திறந்த ஜீப்பில் சென்று மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். முன்னதாக ஏ.கே.மூர்த்தி ஆர்.கே.நகர் பகுதியில் வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டினார்.

அப்போது
சென்னை மாநகராட்சி பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி பேசியது


         ‘’என்னை மேயராக வெற்றி பெற செய்தால் எல்லா தரப்பு மக்களும் விரும்பும் நேர்மையான, திறமையான நிர்வாகத்தை தருவேன்.  சர்வதேச தரத்துக்கு இணையாக சென்னை நகரை மாற்றிக்காட்டுவேன். மாநகராட்சி மயான பூமிகள் அனைத்தும் நவீன முறையில் பராமரிக்கப்படும்.  மயானபூமி என்றாலே திரும்பி பார்க்க அச்சப்படும் நிலையை மாற்றி பூங்காக்கள் அமைத்து எழில் கொஞ்சும் பகுதியாக மாற்றி அமைப்பேன்.காவலாளிகள் நியமித்து பொழுது போக்குக்காக பொதுமக்கள் வந்து செல்லும் நிலையை உருவாக்குவேன்.

            வழிபாட்டு தலங்களுக்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள். வழிபாட்டு தலங்களின் நிர்வாகிகள் அனுமதி பெற்று மாநகராட்சி ஊழியர்களே சுத்தம் செய்ய ஏற்பாடு செய்வேன். அவர்களை அசிங்கப்படுத்துவதை தடுத்து கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள் இருக்கும் இடங்களை எல்லோரையும் கவரும் வகையில் பராமரிக்கப்படும். எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் சென்னையில் மாற்றத்தை ஏற்படுத்துவேன்’’ என்று பேசினார். அவருடன் ஜெயராமன், சத்யா மற்றும் கவுன்சிலர் வேட்பாளர்கள் உடன் சென்றனர்

சென்னை மாநகராட்சி பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி மதுரவாயல் தொகுதியில் வாக்கு சேகரிப்பு

http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/3c42023a-49b6-41ed-83e7-d940e9d6c89c_S_secvpf.gif
சென்னை

           சென்னை மாநகராட்சி பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி மதுரவாயல் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மாம்பழம் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார். பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்தனர். சில தெருக்களில் மாம்பழம் சின்னத்தை கோலமிட்டு இருந்தனர். பொதுமக்கள் பலர் அந்த பகுதியில் அடிப்படை வசதிகள் செய்துதர கோரி மனு கொடுத்தனர்.

அவர்கள் மத்தியில்    சென்னை மாநகராட்சி பா.ம.க. மேயர் வேட்பாளர்  ஏ.கே.மூர்த்தி கூறியது:-

             சென்னை நகரை ஒட்டி இருக்கும் மதுரவாயல், வளசரவாக்கம், போரூர், நெசப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் எந்த வசதியும் இல்லாமல் மிக மோசமாக உள்ளது. சாலைகள் சரியில்லை. வீதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. பொதுமக்கள் தண்ணீருக்காக திண்டாடுகிறார்கள். கிணற்று தண்ணீர் சரியில்லாததால் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் கூட தண்ணீர் விலைக்கு வாங்குகிறார்கள்.

             எனது பிரசாரத்தில் மக்கள் படும் கஷ்டங்களை நேரில் பார்த்தேன். என்னை மேயராக தேர்வு செய்தால் தண்ணீர் விலை கொடுத்து வாங்கும் நிலையை மாற்றுவேன். அடிப்படை வசதிகளை உடனே நிறைவேற்றுவேன். சென்னைக்கு இணையாக இந்த பகுதியில் வசதிகள் செய்து கொடுப்பேன். மதுரவாயல் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் பட்டா இல்லாமல் அவதிப் படுகிறார்கள். கேட்டால் ஏரி புறம்போக்கு என்கிறார்கள். அப்படி பார்த்தால் சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகள் இருந்தன.

           இப்போது அவை இருந்த அடையாளம் கூட இல்லை. கடந்த ஆட்சியில் 2 ஏக்கர் நிலம் தருவதாக கூறினார்கள். வீடுகட்டி குடியிருக்கும் 2 சென்ட் நிலத்துக்கு கூட அவர்களால் பட்டா கொடுக்க முடியவில்லை. என்னை மேயராக தேர்வு செய்தால் அனைவருக்கும் பட்டா கிடைக்க ஏற்பாடு செய் வேன்.  இவ்வாறு அவர் கூறினார். 

சென்னை பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வாக்கு சேகரிப்பு


 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/f9c4a430-0717-4515-87fb-ce3d8541ee2b_S_secvpf.gif
 
சென்னை:

               சென்னை பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி மெரீனா கடற்கரை மற்றும் மீனவர் குப்பம் பகுதியில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். மைலாப்பூர், திருவல்லிக்கேணி பகுதியில் திறந்த ஜீப்பில் சென்று மாம்பழம் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார். 
 
சென்னை பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி பேசியது:-

             மெரீனா கடற்கரையை அழகுபடுத்த பல கோடிகளை செலவிட்டுள்ளனர். ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு நவீன வசதிகள் இல்லை. நடைபாதை வியாபாரிகள் கடைவசதி, மின்வசதி உள்ளிட்ட கோரிக்கைகள் விடுத்தனர். எனக்கு வாய்ப்பளித்தால் வெளி நாடுகளில் உள்ளதை போல் கடற்கரையை நவீனப்படுத்த முயற்சி எடுப்பேன்.

           வியாபாரிகளுக்கும் நிரந்தர கடைகள் தனி இடத்தில் அமைத்து கொடுப்பேன். மீனவர் குடியிருப்புகளுக்கு பாதிப்பு இல்லாமல் வெளிநாட்டு தொழில் நுட்பத்துடன் கடற்கரை சாலை அமைத்திட மத்திய மாநில அரசுகளிடம் ஒப்புதல் பெற்று நடவடிக்கை எடுப்பேன். இதன் மூலம் மெரீனா கடற்கரை இன்னும் அழகுபெறும். உலகம் முழுக்க இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். 
 
             மீனவ கிராம மக்கள் கட்டு மரங்களை நிறுத்தவும், வலைகளை உலர்த்தவும் முடிய வில்லை என்று முறையிட்டனர். அவர்களுக்கும் கடற்கரையில் தனி இடவசதி அமைத்து கொடுக்கப்படும். மக்களுக்காக போராடவும் தொண்டாற்றவும் வாய்ப்பளியுங்கள்.  இவ்வாறு அவர் பேசினார். பிரசாரத்தில் ஜெயராமன், ஜமூனாகேசவன், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சென்னை பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி திருவொற்றியூர் பகுதியில் வாக்கு சேகரிப்பு

 http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/b9ea3895-b28c-4116-bc1c-5ba45d5333a8_S_secvpf.gif
 
சென்னை:
 
          சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் பா.ம.க. வேட்பாளராக போட்டியிடும் ஏ.கே. மூர்த்தி  வெள்ளிக்கிழமை  கத்தி வாக்கத்தில் பிரசாரம் செய்தார். கத்திவாக்கம், திருவொற்றியூர் பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் திறந்த ஜீப்பில் சென்று மாம்பழம் சின்னத்துக்கு ஆதரவளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.  
 
வாக்காளர்கள் மத்தியில் பா.ம.க. வேட்பாளராக போட்டியிடும் ஏ.கே. மூர்த்தி  பேசியது 
 
               நான் மக்களுக்காக போட்டியிடுகிறேன். மக்களை நம்பியே இந்த தேர்தலில் நிற்கிறேன். எனக்கொரு வாய்ப்பளித்தால் வடசென்னை பகுதியையும் முன் மாதிரி பகுதியாக மாற்றுவேன். மத்திய, மாநில அரசின் உதவி பெற்று கடலரிப்புக்கு நிரந்தர தீர்வு காண்பேன். தென் சென்னை பகுதியில் இருக்கும் பீச் போல் வடசென்னை பகுதியின் கடற்கரையும் சுற்றுலா தலமாக மாற்றுவேன் என்றார்.

             முன்னதாக திருப்பதி குடை ஊர்வலம் சென்ற பக்தர்களிடம் ஏ.கே. மூர்த்தி ஆதரவு திரட்டினார். அவர்களுடன் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றார். பக்தர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். பிரசார நிகழ்ச்சியில் கட்சியின் துணை பொது செயலாளர் ரவிராஜ், மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன், நகர செயலாளர் தேவராஜ், அமுதம் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சென்னை மாநகராட்சி பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி வேட்பு மனு தாக்கல்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/b6763112-ea5d-4603-8d3c-b0dc0630fc5f_S_secvpf.gif
 
சென்னை:

          சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளராக ஏ.கே.மூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். நேற்று  காலை 11 மணிக்கு சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயனிடம் ஏ.கே.மூர்த்தி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

         முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன், வக்கீல் பாலு ஆகியோர் உடன் சென்றனர். 
 
மனுதாக்கல் முடிந்ததும் அன்புமணி  கூறியது:-

            தமிழ்நாட்டில் ரெயில்வே துறையில் சாதனைகளை தொடங்கியவர் ஏ.கே.மூர்த்தி. அதுபோன்ற சாதனைகளை சென்னை நகர மக்களுக்கும் அவர் செய்திட வாய்ப்பளிக்க வேண்டும். குப்பை இல்லாத, கொசு இல்லாத, பசுமையான மாநகரமாக மாற்றுவதற்கு ஏ.கே.மூர்த்தி முயற்சி மேற்கொள்வார். பா.ம.க. தனித்து போட்டியிட்டாலும் ஏ.கே.மூர்த்தி அனைவருக்கும் அறிமுகமானவர். எல்லோரிடமும் சகஜமாக பழகுவார்.

     மக்கள் அவரை கட்சிக்கு அப்பாற்பட்டு தங்கள் சேவகனாக பார்ப்பார்கள். பாராளுமன்ற தேர்தலின் போது புறநகர் பகுதியில் கணிசமான வாக்குகளை பெற்றார். அப்பகுதிகள் இப்போது சென்னையுடன் இணைந்து இருக்கிறது. மக்கள் நிச்சயம் அவரை வெற்றிபெற செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.இவ்வாறு அன்புமணி கூறினார்.

ஏ.கே.மூர்த்தி கூறும்போது, 
 
             நான் மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் என்னை மேயர் வேட்பாளராக அறிவித்துள்ளார். மக்கள் எனக்கொரு வாய்ப்பளித்தால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்கவும், சுத்தமான குடிநீர் கிடைக்கவும் பாடுபடுவேன் என்றார். பின்னர் வெளியே திரண்டு இருந்த பா.ம.க. தொண்டர்கள் ஏ.கே.மூர்த்திக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் பிரகாஷ், கன்னியப்பன், ஜமுனாகேசவன், சுரேஷ்குமார், முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
 

சென்னை மாநகராட்சி பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி மற்றும் கவுன்சிலர் பதவிக்கான வேட்பாளர்கள் அறிமுகம்


http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/f92afea2-b881-4cad-9116-8bf4f10d1cf2_S_secvpf.gif


சென்னை:
          சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் பா.ம.க. வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி போட்டியிடுகிறார். இவர் நேற்று முதல் பிரசாரத்தை தொடங்கினார். அண்ணாநகரில் நடந்த 67 கவுன்சிலர் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் ஏ.கே.மூர்த்தி கலந்து கொண்டு பேசினார்.

            இன்று ஆலந்தூர், சோழிங்க நல்லூர், சைதாப்பேட்டை, தி.நகர், விருகம்பாக்கம் உள்பட 69 கவுன்சிலர் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் வேளச்சேரியில் நடந்தது. அதன் பிறகு ஏ.கே.மூர்த்தி வேளச்சேரியில் பிரசாரத்தை தொடங்கினார். ஒவ்வொரு பகுதியாக சென்று ஆதரவு திரட்டினார்.
 
           நிகழ்ச்சியில் மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் எம்.எல். ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம், மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன், மாவட்ட செயலாளர் கன்னியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  மாலை திருவொற்றியூர், பெரம்பூர், ஆர்.கே.நகர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம், எழும்பூர் உள்பட 67 கவுன்சிலர் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் ராயபுரத்தில் நடக்கிறது


அம்பத்தூர் உள்பட 9 நகரசபைகள், 8 பேரூராட்சிகள், 25 ஊராட்சிகள் ;ராமதாஸ் கோரிக்கை

             அம்பத்தூர் உள்பட 9 நகரசபைகள், 8 பேரூராட்சிகள், 25 ஊராட்சிகளை சென்னை மாநகராட்சியுடன் இணைக்கும் அரசாரணையை திரும்பப் பெற வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.

இது தொடர்பாக, பாமக நிறுவனர்  ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

          ’’சென்னை புறநகர்ப் பகுதிகளில் உள்ள 9 நகராட்சிகளையும், 8 பேரூராட்சிகளையும், 25 ஊராட்சிப் பகுதிகளையும் சென்னை மாநகராட்சியுடன் இணைத்து, சென்னை பெருநகர மாநகராட்சி என அறிவிக்க அரசு முடிவு செய்திருக்கிறது. அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டு ஒரு வருடம் கழித்து சென்னை மாநகராட்சியின் ஒப்புதலைப் பெற இப்போது முயற்சி மேற்கொள்ளப் பட்டிருக்கிறது.

              அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும். அப்போதுதான் மக்களின் அடிப்படைத் தேவைகளையும், இதர கட்டமைப்பு வசதிகளையும் நிறைவு செய்வதில் வெற்றி பெற முடியும் என்று ஒருபுறம் பேசி வருகிறோம். இன்னொரு புறம், இதற்கு மாறாக பரவலாக செயல்பட்டு வரும் உள்ளாட்சி மன்றங்களை கலைத்து விட்டு, சென்னை மாநகராட்சியோடு இணைத்து ஒரு அதிகார குவியலை ஏற்படுத்தும் முயற்சியும் நடைபெறுகிறது. இது அதிகார பரவல் என்ற அடிப்படைக் கொள்கைக்கு முரணானது.

                    சென்னை பெருநகர மாநகராட்சியோடு இணைக்கப்பட இருக்கும் பகுதிகளில் 9 நகர் மன்றத் தலைவர்களும், 200க்கு மேற்பட்ட நகராட்சி கவுன்சிலர்களும், 8 பேரூராட்சித் தலைவர்களும், 200-க்கும் மேற்பட்ட பேரூராட்சி கவுன்சிலர்களும், 25 ஊராட்சி மன்றத் தலைவர்களும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 400-க்கும் மேற்பட்ட ஊராட்சி கவுன்சிலர்களும் இப்போது அந்தப் பகுதிகளின் மக்களின் தேவையை உணர்ந்து நிறை வேற்றி வைப்பதில் அக்கறையோடு செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

             ஒட்டு மொத்தமாக 800-க்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் செய்து வரும் பணியினை இனி மாநகராட்சியுடன் இணைப்பதன் மூலம் வெறும் 93 மாநகராட்சி கவுன்சிலர்களால் நிறைவு செய்ய முடியுமா? என்பதை அரசு எண்ணிப் பார்க்க வேண்டும். ஏற்கெனவே வேலைப்பளுவால் சென்னை மாநகராட்சியில் வேலைகள் ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. வீட்டு வரி, சொத்து வரி வசூலில் என்றைக்கும் இல்லாமல் இந்த ஆண்டு குளறுபடிகள் நடைபெற்று மக்கள் வட்ட அலுவலகங்களுக்கும், மண்டல அலுவலகங்களுக்கும், மாநகராட்சி தலைமை அலுவலகத்திற்குமாக அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள். ஒரு வீட்டின் பிரச்சினை தீர்ப்பதற்கு பல மாதங்கள் ஆகின்றன.

             இந்த நிலையில் மாநகராட்சியை மேலும் விரிவாக்குவதால் வேலைப்பளு அதிகரிக்கும். மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் இன்னும் காலதாமதமாகும்.தரமான சாலை வசதிகள், குடிநீர் வழங்குதல், தெரு விளக்குகள், கழிவுநீர் அகற்றுதல் மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஆகிய கட்டமைப்பு வசதிகளை மாநகருக்கு அருகாமையில் உள்ள பகுதிகளிலும் வழங்க இந்த விரிவாக்கம் அவசியமாகிறது என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

                 இது உண்மையானால் தற்போதைய மாநகராட்சிப் பகுதிகளில் இந்த கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு, சென்னை மாநகராட்சி இதில் தன்னிறைவு பெற்று விளங்குகின்றது என்று அறிவிக்க முடியுமா? சென்னை மாநகரின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விட்டோம்; இனி மேற்கொண்டு செய்வதற்கு எதுவும் இல்லை என்ற நிலையை எப்போது அடைகிறதோ? அன்றைக்கு நகருக்கு அருகாமையில் உள்ள உள்ளாட்சிப் பகுதிகளிலும் இந்த வசதிகளை செய்து கொடுப்பதற்கு மாநகராட்சி பகுதியோடு இணைத்தால் அதனை வரவேற்கலாம்.

              பெருநகர தரவரிசைப் பட்டியலில் 3-வது அல்லது 4-வது இடத்தையோ சென்னை மாநகரம் பெற வேண்டும் என்பதற்காக பக்கத்தில் உள்ள பகுதிகளையெல்லாம் சேர்த்து மக்கள் தொகை கணக்கை அதிகப்படுத்துவதில் என்ன பெருமை இருக்கிறது?  மக்களின் அடிப்படை வசதிகளையும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் நிறைவேற்றுவதில் சென்னை மாநகராட்சி தன்னிறைவு பெற்று முதலிடத்தைப்பிடித்தால் அதில் தான் பெருமை இருக்கிறது.

              இத்தகைய பெருமையைப் பெற நகர விரிவாக்கம் எந்த வகையிலும் உதவாது. எனவே சென்னை மாநகரோடு அம்பத்தூர் உள்ளிட்ட 9 நகராட்சிகளையும், 8 பேரூராட்சிகளையும், 25 ஊராட்சிகளையும் இணைக்கும் அரசாணையை அரசு திரும்ப பெற வேண்டும். அதற்குப் பதிலாக, ஏற்கெனவே ஆலோசனை செய்தபடி அம்பத்தூர்- சென்னை, திருவொற்றியூர் - சென்னை, தாம்பரம் - சென்னை என 3 புதிய மாநகராட்சிகளை உருவாக்கி, அவற்றில் பேரூராட்சி மற்றும் ஊராட்சி மன்றங்களையும், நகராட்சிப் பகுதிகளையும் இணைத்து சென்னையோடு போட்டி போட்டு வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றி முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று தெரிவித்துள்ளார்.