சென்னை:
சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளராக ஏ.கே.மூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை 11 மணிக்கு சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயனிடம் ஏ.கே.மூர்த்தி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன், வக்கீல் பாலு ஆகியோர் உடன் சென்றனர்.

மனுதாக்கல் முடிந்ததும் அன்புமணி கூறியது:-
தமிழ்நாட்டில் ரெயில்வே துறையில் சாதனைகளை தொடங்கியவர் ஏ.கே.மூர்த்தி. அதுபோன்ற சாதனைகளை சென்னை நகர மக்களுக்கும் அவர் செய்திட வாய்ப்பளிக்க வேண்டும். குப்பை இல்லாத, கொசு இல்லாத, பசுமையான மாநகரமாக மாற்றுவதற்கு ஏ.கே.மூர்த்தி முயற்சி மேற்கொள்வார். பா.ம.க. தனித்து போட்டியிட்டாலும் ஏ.கே.மூர்த்தி அனைவருக்கும் அறிமுகமானவர். எல்லோரிடமும் சகஜமாக பழகுவார்.
மக்கள் அவரை கட்சிக்கு அப்பாற்பட்டு தங்கள் சேவகனாக பார்ப்பார்கள். பாராளுமன்ற தேர்தலின் போது புறநகர் பகுதியில் கணிசமான வாக்குகளை பெற்றார். அப்பகுதிகள் இப்போது சென்னையுடன் இணைந்து இருக்கிறது. மக்கள் நிச்சயம் அவரை வெற்றிபெற செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.இவ்வாறு அன்புமணி கூறினார்.
ஏ.கே.மூர்த்தி கூறும்போது,

நான் மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் என்னை மேயர் வேட்பாளராக அறிவித்துள்ளார். மக்கள் எனக்கொரு வாய்ப்பளித்தால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்கவும், சுத்தமான குடிநீர் கிடைக்கவும் பாடுபடுவேன் என்றார். பின்னர் வெளியே திரண்டு இருந்த பா.ம.க. தொண்டர்கள் ஏ.கே.மூர்த்திக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் பிரகாஷ், கன்னியப்பன், ஜமுனாகேசவன், சுரேஷ்குமார், முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக