சென்னை
சென்னை மாநகராட்சி பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி மதுரவாயல் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மாம்பழம் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார். பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்தனர். சில தெருக்களில் மாம்பழம் சின்னத்தை கோலமிட்டு இருந்தனர். பொதுமக்கள் பலர் அந்த பகுதியில் அடிப்படை வசதிகள் செய்துதர கோரி மனு கொடுத்தனர்.
அவர்கள் மத்தியில் சென்னை மாநகராட்சி பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி கூறியது:-
சென்னை நகரை ஒட்டி இருக்கும் மதுரவாயல், வளசரவாக்கம், போரூர், நெசப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் எந்த வசதியும் இல்லாமல் மிக மோசமாக உள்ளது. சாலைகள் சரியில்லை. வீதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. பொதுமக்கள் தண்ணீருக்காக திண்டாடுகிறார்கள். கிணற்று தண்ணீர் சரியில்லாததால் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் கூட தண்ணீர் விலைக்கு வாங்குகிறார்கள்.
எனது பிரசாரத்தில் மக்கள் படும் கஷ்டங்களை நேரில் பார்த்தேன். என்னை மேயராக தேர்வு செய்தால் தண்ணீர் விலை கொடுத்து வாங்கும் நிலையை மாற்றுவேன். அடிப்படை வசதிகளை உடனே நிறைவேற்றுவேன். சென்னைக்கு இணையாக இந்த பகுதியில் வசதிகள் செய்து கொடுப்பேன். மதுரவாயல் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் பட்டா இல்லாமல் அவதிப் படுகிறார்கள். கேட்டால் ஏரி புறம்போக்கு என்கிறார்கள். அப்படி பார்த்தால் சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகள் இருந்தன.
இப்போது அவை இருந்த அடையாளம் கூட இல்லை. கடந்த ஆட்சியில் 2 ஏக்கர் நிலம் தருவதாக கூறினார்கள். வீடுகட்டி குடியிருக்கும் 2 சென்ட் நிலத்துக்கு கூட அவர்களால் பட்டா கொடுக்க முடியவில்லை. என்னை மேயராக தேர்வு செய்தால் அனைவருக்கும் பட்டா கிடைக்க ஏற்பாடு செய் வேன். இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக