கோவை பா.ம.க. மேயர் வேட்பாளர் ராஜேந்திரன்
பாட்டாளி மக்கள் கட்சியினுடைய மேயர் வேட்பாளர் ராஜேந்திரன் சிறப்பு பேட்டி
மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று சொல்லுகிறார்கள். மக்கும் குப்பை பரவாயில்லை இருந்துபோகட்டும். மக்காத குப்பை எதுக்கு வருது. அரசே அதை தடுத்து நிறுத்த வேண்டும். மழைநீர் வடிகால் திட்டத்தை அந்த அம்மா கொண்டு வந்தாங்க. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசு வந்தவுடன் கண்டுகொள்ளவில்லை. அதேபோல திமுக ஏதாவது திட்டம் கொண்டு வந்தால், அதிமுக அதை தடை செய்துவிடும். அப்படி எல்லாம் நான் இல்லாம, நான் மேயர் ஆனால், போன மேயர் என்ன நல்லத் திட்டங்கள் கொண்டு வந்தாரோ, அந்த நலத்திட்டங்களை தடை செய்யாமல் கொண்டு வருவேன். நான் மேயர் ஆனால், முதல்ல ஒன்றே ஒன்று செய்வேன். மேயர் பங்களாவுக்கு குடிபோகமாட்டேன். ஏன் என்றால் ராசி இல்லை. நம்ம எது செய்சாலும் நல்லா நடக்காது. அதனால நான் குடிபோக மாட்டேன். இவ்வாறு பேசினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக