வேலூர் மாநகராட்சி பாமக மேயர் வேட்பாளர் வெண்ணிலாவை ஆதரித்து டாக்டர் ராமதாஸ் பிரச்சாரம்

வேலூர்:

        வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே பா.ம.க. பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். 
 
அப்போது பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியது:-

         வேலூர் மாநகராட்சி மேயர் வேட்பாளராக வெண்ணிலா நிறுத்தப்பட்டுள்ளார். தனித்து போட்டியிட வேண்டும் என்கிற நிலைமை எடுத்துள்ள பா.ம.க.வுக்கு மக்கள் ஆதரவு தரவேண்டும். திராவிட கட்சிகள் இல்லாத ஒரு சகாப்தத்தை உருவாக்க வேண்டும்.

         தனித்து போட்டி என்கிற முடிவை நாங்கள் எடுத்த பிறகு மற்ற கட்சிகளும் தனித்து போட்டியிடுவது என்கிற முடிவை  எடுத்துள்ளன. தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த மாற்றம் உள்ளாட்சி தேர்தல் மூலம் வரவேண்டும். பா.ம.க. ஒரு வித்தியாசமான கட்சி, எல்லோருக்கும் கல்வி, அதுவும் கட்டணமில்லா கல்வி கொடுத்து, அவர்கள் வேலை வாய்ப்பை பெற்று அதன் தேவையானவற்றை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம்.

           வேலூர் மாநகராட்சிக்கு நடைபெறும் முதல் தேர்தலில் முதல் மேயராகவும், கவுன்சிலராகவும் பா.ம.க. வினர் வரபொதுமக்கள் வாக்களிக்க வேண்டும். வேலூர் மாநகரில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன, அவைகளை போக்க பா.ம.க. வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டுகிறேன். மாற்றத்தை கொண்டு வாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

         கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி வேலு, எம்.எல்.ஏ. சண்முகம், கலையரசு எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன், கட்சியின் மாவட்ட செயலாளர் பி.கே.வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் கூட்டத்தில் பா.ம.க. மேயர், கவுன்சிலர் வேட்பாளர்கள் உள்பட பல்வேறு பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.


0 கருத்துகள்: