சென்னை:
சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் பா.ம.க. வேட்பாளராக போட்டியிடும் ஏ.கே. மூர்த்தி வெள்ளிக்கிழமை கத்தி வாக்கத்தில் பிரசாரம் செய்தார். கத்திவாக்கம், திருவொற்றியூர் பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் திறந்த ஜீப்பில் சென்று மாம்பழம் சின்னத்துக்கு ஆதரவளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
வாக்காளர்கள் மத்தியில் பா.ம.க. வேட்பாளராக போட்டியிடும் ஏ.கே. மூர்த்தி பேசியது
நான் மக்களுக்காக போட்டியிடுகிறேன். மக்களை நம்பியே இந்த தேர்தலில் நிற்கிறேன். எனக்கொரு வாய்ப்பளித்தால் வடசென்னை பகுதியையும் முன் மாதிரி பகுதியாக மாற்றுவேன். மத்திய, மாநில அரசின் உதவி பெற்று கடலரிப்புக்கு நிரந்தர தீர்வு காண்பேன். தென் சென்னை பகுதியில் இருக்கும் பீச் போல் வடசென்னை பகுதியின் கடற்கரையும் சுற்றுலா தலமாக மாற்றுவேன் என்றார்.
முன்னதாக திருப்பதி குடை ஊர்வலம் சென்ற பக்தர்களிடம் ஏ.கே. மூர்த்தி ஆதரவு திரட்டினார். அவர்களுடன் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றார். பக்தர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். பிரசார நிகழ்ச்சியில் கட்சியின் துணை பொது செயலாளர் ரவிராஜ், மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன், நகர செயலாளர் தேவராஜ், அமுதம் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக