நெய்வேலி:
உள்ளாட்சி தேர்தலையொட்டி நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலையத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேலு, சப்- இன்ஸ்பெக்டர்கள் அண்ணாமலை, அசோக் குமார், சுந்தர்ராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
கூட்டத்தில் பா.ம.க. சார்பில் நெய்வேலி நகர செயலாளர் சக்கரவர்த்தி, அ.தி.மு.க. சார்பில் தாண்டவன்குப்பம் ராஜேந்திரன், தி.மு.க. சார்பில் பாலமுருகன் மற்றும் தே.மு.தி.க., விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர்கள், உள்ளிட்ட ஆதண்டார் கொல்லை, காட்டு கூடலூர், மேலக்குப்பம், நைனார்குப்பம் ஆகிய கிராமங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேலு பேசும் போது

உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெறும் வகையில் அரசியல் கட்சிகள் தேர்தல் விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும், சட்டத்துக்கு புறம்பாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்க கூடாது என்றும் தேர்தல் விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக