சிதம்பரம்:
சிதம்பரம் நகராட்சியில் 3 முறை தொடர்ந்து வெற்றிபெற்ற பாமக.வைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் ஆ.ரமேஷ், 4-வது முறையாக மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
சிதம்பரம் நகராட்சி 14-வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் பாமக.வைச் சேர்ந்த ஆ.ரமேஷ். இவர் 1996-2001, 2001-2006, 2006-2011 ஆகிய காலங்களில் 3 முறை நகர்மன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். இவற்றில் இரண்டு முறை கட்சி சார்பிலும், ஒரு முறை சுயேச்சையாகவும் நின்று வெற்றி பெற்றார். அடிப்படை வசதிகளை நிறைவேற்றியதால் தொகுதி மக்களிடையே நன்கு அறிமுகமான இவர், இப்போது நடைபெறவுள்ள நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 14-வது வார்டில் பாமக சார்பில் மீண்டும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக