வேலூர் மாவட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேலூர் மாவட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவுக்கு 10 நாட்களுக்கு முன்பே டாஸ்மாக் கடையை மூட வேண்டும்: ராமதாஸ்


வேலூரில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,
        உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவுக்கு 10 நாட்களுக்கு முன்பே டாஸ்மாக் கடையை மூட வேண்டும். வாக்காளர்களுக்கு ஆம்புலன்ஸ் மூலம் மதுபாட்டில்கள் விநியோகிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிக்கும் சாதகமாக இல்லாமல், நேர்மையாக நடக்க வேண்டும் என்றார்.

ஆம்பூரில் பா.ம.க. சார்பில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

ஆம்பூர்:

          தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரியும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் தண்டனையை குறைக்க வலியுறுத்தியும் ஆம்பூர் பஸ் நிலையம் அருகில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

             வேலூர் வடமேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலர் ஆர்.டி. சாமுவேல் செல்லபாண்டியன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர்கள் ரவி, குமரவேல், ஜெயசீலன், ஆம்பூர் நகரச் செயலர் நசீர், மாவட்டத் தொழிற்சங்கச் செயலர் எஸ்.எஸ். மனோகரன், இளைஞர் அணி பாவேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி போட்டி

 http://mmimages.mmnews.in/Articles/2011/Aug/5e913b94-fffb-4c80-9e12-bc68ee7b87f8_S_secvpf.gif


வேலூர்:
              வேலூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஆம்பூரில் நடந்தது.

கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியது:

              திருப்பத்தூரை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் ஏற்படுத்த வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் தமிழகத்தில் ஒரு தொகுதி, 1 1/2 தொகுதி உள்ள இடங்களெல்லாம் மாவட்ட தலைநகரமாக உள்ளது. ஆனால் வேலூர் மாவட்டத்தில் 13 தொகுதிகள் உள்ளது. எனவே இதனை 3 மாவட்டமாக கூட பிரிக்கலாம். திருப்பத்தூரை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். ஆனால் அதற்கு இன்னும் 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். ஆனால் நாம் திருப்பத்தூர் மாவட்டம் என்றே அழைப்போம்.
 
             தமிழகத்தில் மக்கள் பிரச்சினைக்காக போராடுகின்ற கட்சி பா.ம.க.தான். 100க்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்திவிட்டோம். தமிழகத்தில் திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் இனிமேல் கூட்டணி கிடையாது. உள்ளாட்சி தேர்தலில் எல்லா இடங்களிலும் பா.ம.க. போட்டியிடும் மிகப்பெரிய வெற்றிபெற அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.

வேலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம்: எம்.எல்.ஏ. கலையரசு வரவேற்புரை


 http://mmimages.mmnews.in/Articles/2011/Aug/d46e35af-6c0a-422c-801f-e1a41b37d7c6_S_secvpf.gif

வேலூர்:

         வேலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் சத்துவாச்சாரியில் உள்ள திருமண மண்டபத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்தது.
           கலையரசு எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார்.   மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி வேலு, என்.டி. சண்முகம், இளவழகன், பொன்னுசாமி, மாவட்ட செயலாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பா.ம.க.நிறுவனர்
டாக்டர் ராமதாஸ் பேசியது:-

              மாநில பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை வரவேற்பதற்காக இந்த மாவட்ட கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. பா.ம.க. திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கமாட்டோம் என்கிற நிலைபாட்டை நடுநிலையாளர்கள் வரவேற்றுள்ளனர்.  இந்த முடிவில் இருந்து எப்போதும் பின்வாங்க மாட்டோம். கடல், மேகம் அழியாத வரை இந்த முடிவில் உறுதியாக இருப்போம்.   1967-ல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தது. அப்போது காங்கிரஸ் கட்சியை ஒழிக்க வேண்டும் என்பதற்காக திராவிட கட்சிகள் ஏற்படுத்தப்பட்டது.

             அடைந்தால் திராவிட நாடு இல்லாவிட்டால் சுடுகாடு என்ற முழக்கத் துடன் ஆரம்பிக்கப்பட்ட கட்சிகள் தங்களது கொள் கைகளை சுடுகாட்டுக்கு அனுப்பி விட்டது. 48 ஆண்டுகளாக தமிழகத்தை சீரழித்த திராவிட கட்சிகளை ஒழிப்பதே நமது வேலை அ.தி.மு.க.-தி.மு.க.வில் உள்ளவர்கள் பா.ம.க.வில் சேர தயாராக உள்ளனர்.  திராவிட கட்சிகள் இலவசங்களை தந்து பொது மக்களை ஏமாற்றினர், நிலங்கள் மனைகளாக மாற்றப்பட்டது. இதனால் விவசாயம் அழிந்தது. இதற்கெல்லாம் மாறி மாறி ஆட்சி செய்த திராவிட கட்சிகள் தான் காரணம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த தவறுகளை செய்யமாட்டோம் எந்த விதமான சமரசத்துக்கும் உடன்பட மாட்டோம்.  

              சமச்சீர் கல்விக்காக பா.ம.க. தொடர்ந்து போராடியது. முழுமையாக செயல்படுத்தாததால் அறைகுறையாக உள்ளது. திராவிட கட்சிகள் ஆட்சிக்காலத்தில் கல்வி கொள்ளையர்கள் அதிகரித்து விட்டனர். இந்த கூட்ட தொடரில் தமிழக அரசு மெட்ரிக் பள்ளிகளில் தமிழில் பாடம் நடத்த வேண்டும். தவறினால் பள்ளி அரசுடமையாக்கப்படும் என்ற புதிய சட்டத்தை இயற்ற வேண்டும்.   மெட்ரிக்பள்ளிகள் சமச்சீர் கல்வியை ஏற்காமல் சி.பி.எஸ்.சி. தேர்வு முறை அல்லது வேறு கல்வி முறைக்கு மாறினால் பா.ம.க. சார்பில் தீவிர போராட்டம் நடத்தப்படும். பாலாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

வேலூர் மாவட்டத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரி பாமக ஆர்பாட்டம்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Aug/68103d96-ee40-4a4a-91ce-96e717d27bc0_S_secvpf.gif
வேலூர்:
              
            தமிழக பள்ளிகளில் சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த கோரி மாநிலம் முழுவதும் செவ்வாய் கிழமை பா.ம.க.வினர்  ஆர்பாட்டம் செய்தனர். வேலூர் மாவட்டதில் வேலூர் காட்பாடி, அரக்கோணம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், ஆம்பூர், குடியாத்தம், ஆகிய ஊர்களில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

               அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ. கலையரசு தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி சண்முகம், வரலட்சுமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். முனனாள் மத்திய மந்திரி வேலு, மத்திய மாவட்ட செயலாளர் வெங்கடேசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்த போது கலையரசு எம்.எல்.ஏக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கலையரசு எம்.எல்.ஏ. உள்பட 121 பேரை போலீசார் கைது செய்தனர். காட்பாடியில் தாலுகா அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர் பஞ்சாட்ராம் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

             மாவட்டம் தலைவர் ரமேஷ், மகளிர் அணியை சேர்ந்த மஞ்சுளா மணி, சுப்பிரமணி, வேலு உள்பட 34 பேரை போலீசார் கைது செய்தனர். மாவட்டம் முழுவதும் 589 பேர் கைது செய்யப்பட்டனர். பா.ம.க.வினர் ஆர்பாட்டத்தையொட்டி போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

வேலூர் மாவட்டத்தில் பசுமைத் தாயகம் சார்பில் சாலை விபத்து தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி

வேலூர்:

              வேலூர் மாவட்டத்தில் பசுமை தாயகம் அமைப்பு சார்பில் சாலை விபத்துகளைத் தடுக்க வலியுறுத்தி மனிதச் சங்கிலிப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 

             வேலூரில் காந்தி சிலை அருகே நடைபெற்ற இந்த மனிதச் சங்கிலியில் பாமக மத்திய மாவட்டச் செயலர் வெங்கடேசன், முன்னாள் மத்திய அமைச்சர் என்.டி. சண்முகம், பாமக மகளிர் அணி வரலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர் .சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பசுமை தாயகம் அமைப்பினர் பொதுமக்களுக்கு வழங்கினர். 

அரக்கோணம்

           அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் நடைபெற்ற மனித சங்கிலி நிகழ்ச்சிக்கு வேலூர் கிழக்கு மாவட்ட பாமக தலைவர் அ.ம.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் க.சரவணன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து சாலையில் சென்ற அனைத்து வாகனங்களுக்கும் முகப்பு விளக்கில் கறுப்பு வர்ணங்களை பூசினர். இரு சக்கர வாகனங்களில் செல்வோரிடம் துண்டு பிரசுரங்கள் அளித்து, தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள், செல்பேசியில் பேசிக்கொண்டு செல்லாதீர்கள் என்பது போன்ற அறிவுரைகளை வழங்கினர். 

               மாநில வன்னியர் சங்க துணை பொதுச் செயலர் ந.ரமணி, பாமக மாவட்ட துணைச் செயலர் அ.மு.வேணுகோபால், மாவட்ட இளைஞர் அணி தலைவர் பொன்.வேலு, மாவட்ட மாணவர் அணி செயலர் கோ.ஏழுமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வாலாஜாபேட்டை: 

              வாலாஜாபேட்டையில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் இருந்து இந்தியன் வங்கி வரையிலும் பசுமை தாயக நிர்வாகிகள் விழிப்புணர்வு மனித சங்கலி நடத்தினர். நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலர் நந்தகுமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏ கே.எல். இளவழகன் தொடங்கி வைத்தார். நிர்வாகிகள் எம்.கே.முரளி, கதிர், எம்.தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் குடும்பத்தினருடன் ஏலகிரிமலைக்கு கோடை சுற்றுலா

             பாமக நிறுவனர் ராமதாஸ்  மற்றும்  முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் ஆகியோர் குடும்பத்தினருடன் ஓய்வெடுப்பதற்காக வேலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான ஏலகிரிமலைக்கு வந்தனர். பாமக மாநில தலைவர் ஜி.கே.மணியும் அவர்களுடன் வந்தார். பாமக நிறுவனர் ராமதாஸ் தங்கியிருக்கும் விடுதியை சுற்றிலும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

             இந்நிலையில் நேற்று பாமக வேட்பாளர்களான ஆற்காடு இளவழகன், ஜோலார்பேட்டை பொன்னுசாமி, பர்கூர் டி.கே.ராஜா ஆகியோர் ராமதாசை சந்தித்தனர். அவர்களுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அணைக்கட்டு பாமக வேட்பாளர் கலையரசு உட்பட பிற வேட்பாளர்களும் ராமதாசை சந்திக்க உள்ளனர்.

             கட்சி நிர்வாகிகள் திரண்டு  சென்று  மருத்துவர்  அய்யாவை சந்திக்க  திரண்டனர். மருத்துவர்  அய்யா குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க வந்துள்ளதால் கட்சியினர் யாரும் சந்திக்க இது தக்க சமயம் இல்லை .என்று  ராமதாஸ் கூறினார். ஆனாலும் நிர்வாகிகள் பலர் ஏலகிரி மலையிலேயே வேறு விடுதிகளில் தங்கி அய்யாவை சந்திக்க உள்ளனர். ராமதாஸ் மற்றும் குடும்பத்தினர் வருகிற 7ம் தேதி வரை ஏலகிரியில் தங்கி இருப்பார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

தேர்தல் நேரத்தில் டாஸ்மாக் மூட வேண்டும் ; பாமக மாணவர் சங்கம்

வேலூர்:
 
              வேலூர் மாவட்டம், அரக்கோணம் வடக்கு ஒன்றிய பாமக நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டம் மூதூரில் நடந்தது.  இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில மாணவர் சங்க செயலாளர் சரவணன் கலந்து கொண்டு பேசினார்.

               தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி அடுத்த மாதம் தேர்தல் தேதியை தேர்தல் கமிஷனர் அறிவித்த நாள் முதல் தேர்தல் முடியும் வரை அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். டாஸ்மாக் திறந்திருந்தால் தேர்தலின் போது பல தகராறுகள் ஏற்படும்.  இதனால் சட்டம் ஒழுங்கு கெடும். மக்கள் அதிகமான துன்பத்திற்கு ஆளாவர். தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் ஓசியில் மதுபானங்களை தரும்.

              இதனால் குடிக்காதவர்கள் கூட அப்பழக்கத்திற்கு ஆளாவார்கள். அதனால் தேர்தல் நேரத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்றார். அதனை தீர்மானமாகவும் நிறைவேற்றியுள்ளனர்.