தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலக கட்டிடம் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படும் என்று முதல்- அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். அவரது அறிவிப்பை இன்று சட்டசபைக்கு வந்து இருந்த அனைத்து கட்சியினரும் வரவேற்றனர். இதனை அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் எம்.கலையரசும் வரவேற்று பேசினார்.
எம்.கலையரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எம்.கலையரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதிய தலைமை செயலகத்தில் மருத்துவமனை: பாமக சட்டமன்ற உறுப்பினர் எம்.கலையரசு வரவேற்பு
இடுகையிட்டது
கடலூர் ரா.கார்த்திகேயன்
|
வெள்ளி, ஆகஸ்ட் 19, 2011
| நேரம் வெள்ளி, ஆகஸ்ட் 19, 2011 0 கருத்துகள்
லேபிள்கள்:
அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி,
எம்.கலையரசு,
பாட்டாளி மக்கள் கட்சி
சட்டமன்றத்தில் இருந்து பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு
சட்ட மன்றத்தில் இருந்து பாமக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து,
சட்டமன்ற உறுப்பினர்செஞ்சி கணேஷ் குமார் கூறியது:
கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டதால் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தண்டனையை தடுக்க தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்று பேரவையில் பேச முயன்றோம். இதற்கு அனுமதிக்கவில்லை. இதேபோல இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக அமிதாப்பச்சன் நடிப்பில் அரக்சன் என்ற படம் வெளிவந்துள்ளது.
ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை திரையிடலாம் என்று வலியுறுத்தினோம். அது தொடர்பாக தொடர்ந்து பேச அனுமதி தரவில்லை. ஆனால், வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டதற்கு முதல்வருக்கு பாராட்டு தெரிவித்தோம். அதை மட்டும் பதிவு செய்தனர். எங்களது கோரிக்கை குறித்து பேச அனுமதி இல்லை. எனவே, வெளிநடப்பு செய்தோம். இவ்வாறு கணேஷ் குமார் கூறினார்.
அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் கலையரசன் கூறுகையில்,
‘‘வேலூர் அருகே சோழவரம் கோயிலில் பழமையான 5 ஐம்பொன் நிலைகள் திருட்டு போய் உள்ளது. சிலை திருடர்களை போலீஸார் கைது செய்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்’’ என்றார்.
இடுகையிட்டது
கடலூர் ரா.கார்த்திகேயன்
|
வியாழன், ஆகஸ்ட் 18, 2011
| நேரம் வியாழன், ஆகஸ்ட் 18, 2011 0 கருத்துகள்
லேபிள்கள்:
அ.கணேஷ்குமார்,
அரக்சன் திரைப்படம்,
எம்.கலையரசு
வேலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம்: எம்.எல்.ஏ. கலையரசு வரவேற்புரை
வேலூர்:
வேலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் சத்துவாச்சாரியில் உள்ள திருமண மண்டபத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்தது.
கலையரசு எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார். மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி வேலு, என்.டி. சண்முகம், இளவழகன், பொன்னுசாமி, மாவட்ட செயலாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியது:-
மாநில பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை வரவேற்பதற்காக இந்த மாவட்ட கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. பா.ம.க. திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கமாட்டோம் என்கிற நிலைபாட்டை நடுநிலையாளர்கள் வரவேற்றுள்ளனர். இந்த முடிவில் இருந்து எப்போதும் பின்வாங்க மாட்டோம். கடல், மேகம் அழியாத வரை இந்த முடிவில் உறுதியாக இருப்போம். 1967-ல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தது. அப்போது காங்கிரஸ் கட்சியை ஒழிக்க வேண்டும் என்பதற்காக திராவிட கட்சிகள் ஏற்படுத்தப்பட்டது.
அடைந்தால் திராவிட நாடு இல்லாவிட்டால் சுடுகாடு என்ற முழக்கத் துடன் ஆரம்பிக்கப்பட்ட கட்சிகள் தங்களது கொள் கைகளை சுடுகாட்டுக்கு அனுப்பி விட்டது. 48 ஆண்டுகளாக தமிழகத்தை சீரழித்த திராவிட கட்சிகளை ஒழிப்பதே நமது வேலை அ.தி.மு.க.-தி.மு.க.வில் உள்ளவர்கள் பா.ம.க.வில் சேர தயாராக உள்ளனர். திராவிட கட்சிகள் இலவசங்களை தந்து பொது மக்களை ஏமாற்றினர், நிலங்கள் மனைகளாக மாற்றப்பட்டது. இதனால் விவசாயம் அழிந்தது. இதற்கெல்லாம் மாறி மாறி ஆட்சி செய்த திராவிட கட்சிகள் தான் காரணம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த தவறுகளை செய்யமாட்டோம் எந்த விதமான சமரசத்துக்கும் உடன்பட மாட்டோம்.
சமச்சீர் கல்விக்காக பா.ம.க. தொடர்ந்து போராடியது. முழுமையாக செயல்படுத்தாததால் அறைகுறையாக உள்ளது. திராவிட கட்சிகள் ஆட்சிக்காலத்தில் கல்வி கொள்ளையர்கள் அதிகரித்து விட்டனர். இந்த கூட்ட தொடரில் தமிழக அரசு மெட்ரிக் பள்ளிகளில் தமிழில் பாடம் நடத்த வேண்டும். தவறினால் பள்ளி அரசுடமையாக்கப்படும் என்ற புதிய சட்டத்தை இயற்ற வேண்டும். மெட்ரிக்பள்ளிகள் சமச்சீர் கல்வியை ஏற்காமல் சி.பி.எஸ்.சி. தேர்வு முறை அல்லது வேறு கல்வி முறைக்கு மாறினால் பா.ம.க. சார்பில் தீவிர போராட்டம் நடத்தப்படும். பாலாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இடுகையிட்டது
கடலூர் ரா.கார்த்திகேயன்
|
வெள்ளி, ஆகஸ்ட் 12, 2011
| நேரம் வெள்ளி, ஆகஸ்ட் 12, 2011 0 கருத்துகள்
லேபிள்கள்:
எம்.கலையரசு,
சமச்சீர் கல்வி,
பொதுக்குழு கூட்டம்,
வேலூர் மாவட்டம்
வேலூர் மாவட்டத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரி பாமக ஆர்பாட்டம்
வேலூர்:
தமிழக பள்ளிகளில் சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த கோரி மாநிலம் முழுவதும் செவ்வாய் கிழமை பா.ம.க.வினர் ஆர்பாட்டம் செய்தனர். வேலூர் மாவட்டதில் வேலூர் காட்பாடி, அரக்கோணம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், ஆம்பூர், குடியாத்தம், ஆகிய ஊர்களில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ. கலையரசு தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி சண்முகம், வரலட்சுமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். முனனாள் மத்திய மந்திரி வேலு, மத்திய மாவட்ட செயலாளர் வெங்கடேசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்த போது கலையரசு எம்.எல்.ஏக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கலையரசு எம்.எல்.ஏ. உள்பட 121 பேரை போலீசார் கைது செய்தனர். காட்பாடியில் தாலுகா அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர் பஞ்சாட்ராம் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாவட்டம் தலைவர் ரமேஷ், மகளிர் அணியை சேர்ந்த மஞ்சுளா மணி, சுப்பிரமணி, வேலு உள்பட 34 பேரை போலீசார் கைது செய்தனர். மாவட்டம் முழுவதும் 589 பேர் கைது செய்யப்பட்டனர். பா.ம.க.வினர் ஆர்பாட்டத்தையொட்டி போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இடுகையிட்டது
கடலூர் ரா.கார்த்திகேயன்
|
புதன், ஆகஸ்ட் 03, 2011
| நேரம் புதன், ஆகஸ்ட் 03, 2011 0 கருத்துகள்
லேபிள்கள்:
ஆர்ப்பாட்டம்,
எம்.கலையரசு,
சமச்சீர் கல்வி,
வேலூர் மாவட்டம்
அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் ம.கலையரசுக்கு பாராட்டு விழா

அணைக்கட்டு:
ஆரணியை அடுத்த அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ம.கலையரசு, சட்டப்பேரவைத் தேர்தலில் அணைக்கட்டு தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையொட்டி, கலையரசுவின் நண்பர்கள் கண்ணமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழாவை நடத்தினர். இதில் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
விழாவில் கண்ணமங்கலம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற எஸ்.நித்யா, எஸ்.வினிதா ஆகியோருக்கு தலா ரூ.5 ஆயிரம் பரிசை அணைக்கட்டு எம்எல்ஏ கலையரசு வழங்கினார். முன்னாள் மத்திய இணை அமைச்சர் அரங்க.வேலு, மேற்கு ஆரணி ஒன்றியக் குழு துணைத் தலைவர் வெள்ளை கணேசன், மாவட்ட கவுன்சிலர் ஆ.வேலாயுதம், பாமக முன்னாள் மாவட்டச் செயலர் சி.கைலாசம், பேராசிரியர் கு.சிவா, எல்ஐசி முகவர் தரணி, பேரூராட்சித் துணைத் தலைவர் கோவர்தனன், காட்டுகாநல்லூர் ஊராட்சித் தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இடுகையிட்டது
கடலூர் ரா.கார்த்திகேயன்
|
புதன், ஜூலை 06, 2011
| நேரம் புதன், ஜூலை 06, 2011 0 கருத்துகள்
லேபிள்கள்:
அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி,
எம்.கலையரசு,
பாராட்டு விழா
அணைக்கட்டு பகுதியில் அரசுக் கல்லூரி: அணைக்கட்டு பாமக உறுப்பினர் எம்.கலையரசு கோரிக்கை
அணைக்கட்டு பாமக உறுப்பினர் எம்.கலையரசு பேசியது
பசுமை வீடு திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இந்த வீட்டை கழிப்பறையுடன் கட்ட வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் எவ்வளவு வீடுகள் கட்டப்படும், எவ்வளவு காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். புதிய காப்பீடு திட்டத்தை செயல்படுத்தும் வரை, நோயாளிகள் பயன் பெரும் வகையில் ஏற்கனவே உள்ள கலைஞர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அணைக்கட்டு பகுதியில் அரசுக் கல்லூரி ஒன்றை அமைக்க வேண்டும். அணைக்கட்டு & வேலூர் பகுதியல் போக்குவரத்து நெரிசலை தீர்க்க சுற்று சாலை அமைக்கவேண்டும். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை அணைக்கட்டு பகுதிக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று பேசினார்.
லேபிள்கள்:
அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி,
எம்.கலையரசு
பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு
ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை 16-ந் தேதி பதவி ஏற்றுக் கொண்டது. இதனைத் தொடர்ந்து 14-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டமும், எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு விழாவும் நேற்று பகல் 12.30 மணிக்கு புனித ஜார்ஜ் கோட்டையில் கோலாகலமாக நடந்தது. இதற்காக புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்த சட்டமன்ற வளாகம் புதுப்பொலிவுடன் தயார்ப்படுத்தப்பட்டிருந்தது. வளாகம் மலர்களாலும், மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
நண்பகல் 12.13-க்கு பா.ம.க. எம்.எல்.ஏ.க்களும், 12.15-க்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் வந்தனர். முதலாவதாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா 12.38 மணிக்கு `கடவுளறிய' என்று கூறி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். முதல்-அமைச்சரைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.அமைச்சர்களைத் தொடர்ந்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள், முன்னாள் துணை முதல்-அமைச்சர், முன்னாள் அமைச்சர்கள், அரசு தலைமைக் கொறடா அதன்பின்னர் தமிழ் அகர வரிசைப்படி உறுப்பினர்களும் பதவி ஏற்றனர். விழா சரியாக 3.55 மணிக்கு முடிவடைந்தது.
ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்ற பாமக வேட்பாளர் ஜெ.குரு, அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற பாமக வேட்பாளர் எம்.கலையரசு மற்றும் செஞ்சி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற பாமக வேட்பாளர் அ.கணேஷ் குமார் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர்.
இடுகையிட்டது
கடலூர் ரா.கார்த்திகேயன்
|
செவ்வாய், மே 24, 2011
| நேரம் செவ்வாய், மே 24, 2011 0 கருத்துகள்
லேபிள்கள்:
அ.கணேஷ்குமார்,
எம்.கலையரசு,
பாட்டாளி மக்கள் கட்சி,
ஜெ.குரு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)