அரக்சன் திரைப்படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரக்சன் திரைப்படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சட்டமன்றத்தில் இருந்து பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு

       சட்ட  மன்றத்தில் இருந்து பாமக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர். 

இதுகுறித்து, 

சட்டமன்ற உறுப்பினர்செஞ்சி கணேஷ் குமார் கூறியது: 

           கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டதால் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தண்டனையை தடுக்க தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்று பேரவையில் பேச முயன்றோம். இதற்கு அனுமதிக்கவில்லை. இதேபோல இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக அமிதாப்பச்சன் நடிப்பில் அரக்சன்  என்ற படம் வெளிவந்துள்ளது. 

            ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை திரையிடலாம் என்று வலியுறுத்தினோம். அது தொடர்பாக தொடர்ந்து பேச அனுமதி தரவில்லை. ஆனால், வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டதற்கு முதல்வருக்கு பாராட்டு தெரிவித்தோம். அதை மட்டும் பதிவு செய்தனர். எங்களது கோரிக்கை குறித்து பேச அனுமதி இல்லை. எனவே, வெளிநடப்பு செய்தோம். இவ்வாறு கணேஷ் குமார் கூறினார். 

அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் கலையரசன் கூறுகையில், 

              ‘‘வேலூர் அருகே சோழவரம் கோயிலில் பழமையான 5 ஐம்பொன் நிலைகள் திருட்டு போய் உள்ளது. சிலை திருடர்களை போலீஸார் கைது செய்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்’’ என்றார்.

இடஒதுக்கீட்டை கொச்சைப்படுத்தும் அரக்சன் திரைப்படத்திற்கு எதிராக பாமக ஆர்ப்பாட்டம்



http://mmimages.mmnews.in/Articles/2011/Aug/24668bfc-c792-42c1-a9b9-347e7e4c1fde_S_secvpf.gif
 
           மத்திய அரசின் இட ஒதுக்கீடு கொள்கையை எதிர்க்கும் காட்சிகளும், வச னங்களும் படத்தில் இடம் பெற்றிருப்பதாகவும், அவை களை நீக்கவேண்டும் என்றும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. 
 
             “அரக்சன்” படத்தை திரையிட்டால், சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட லாம் என்று கருதியதால் உ.பி., பஞ்சாப், ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களில் அந்த படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டது.
 
              இந்த 3 மாநிலங்களை தவிர்த்து இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங் களிலும் ஆராக்ஷன் படம் வெளியிடப்பட்டது. சென்னையில் சத்யம், எஸ்கேப், ஐநாக்ஸ், ஈகா, பி.வி.ஆர். மெலோடி, மாயாஜால், ஏ.ஜி.எஸ்., பேம் நேஷனல் ஆகிய தியேட்டர் களில் ஆராக்ஷன் படம் திரையிடப்பட்டுள்ளது.
 
              இந்த படத்தை தடை செய்யக்கோரி சத்யம் தியேட்டர் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு சென்னை மாவட்ட அமைப் புச் செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். கவுன் சிலர்கள் வெங்கடேசன், ஏழுமலை, ஜமுனா கேசவன், செயலாளர் சிற்றரசு உள்பட 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 
                   “ தடை செய், தடை செய் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான ஆராக்ஷன் படத்தை தடை செய்” என்று கோஷம் எழுப்பினர்.   இந்த போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி கிடையாது என்பதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.