ஜெ.குரு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜெ.குரு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கடலூர் தெற்கு மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு ரூ.5 லட்சம் நிதி அறிவிப்பு

சிதம்பரம்:

            கடலூர் தெற்கு மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கான நிதியளிப்பு விழா சிதம்பரத்தை அடுத்த சிலம்பிமங்கலம் சிவகோபாலன் திருமண மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.

             பாமக மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் வேணு.புவனேஸ்வரன் தலைமை வகித்தார். வன்னியர் சங்க மாவட்டச் செயலாளர் செல்வ.மகேஷ் வரவேற்றார். சிதம்பரம் நகரச் செயலர் முத்து.குமார் முன்னிலை வகித்தார். விழாவில் மாநில வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு எம்எல்ஏ சிறப்புரையாற்றினார். வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு ரூ.5 லட்சம் நிதி, மாநிலத் தலைவர் ஜெ.குருவிடம் வழங்கப்பட்டது.

            இந்த நிகழ்ச்சியில் மாநில துணைப் பொதுச்செயலாளர் பா.சண்முகம், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் கி.தேவதாஸ் படையாண்டவர், மாநில துணைத்தலைவர் ரா.செல்வகுமார், இ.கே.பி.மணிகண்டன், செ.வெற்றிவேல், எஸ்.ஆர்.நாகவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மயிலம் பகுதியில் வன்னியர் சங்க கொடியேற்று விழா : எம்.எல்.ஏ. ஜெ.குரு சிறப்புரை

மயிலம்:

           மயிலம் பகுதியில் வன்னியர் சங்க கொடியேற்று விழா நடந்தது.

           மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டு, கொடிமா கிராமங்களில் நடந்த விழாவிற்கு ஒன்றிய பா.ம.க., செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய வன்னியர் சங்க துணை செயலாளர் ஜானகிராமன், துணைத்தலைவர் குமார், இளைஞரணி சந்தோஷ்குமார் முன்னிலை வகித்தனர். வன்னியர் சங்க செயலாளர் அருணகிரி வரவேற்றார். மாநில வன்னியர் சங்க தலைவர் குரு எம்.எல்.ஏ., கொடியேற்றி வைத்து பேசினார். மாவட்ட கொள்கைபரப்பு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, இளைஞரணி தன்ராஜ், கோபி மற்றும் நிர்வாகிகள் நந்தகோபால், சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சேலம் கிழக்கு மாவட்ட வன்னியர் சங்கத்தின் சார்பில் இலவச கணினி பயிற்சி மையம்: எம்.எல்.ஏ., ஜெ.குரு திறந்து வைத்தார்

வாழப்பாடி:

           வாழப்பாடி அருகிலுள்ள சிங்கிபுரம் கிராமத்தில், சேலம் கிழக்கு மாவட்ட வன்னியர் சங்கத்தின் சார்பில், இலவச கணினி பயிற்சி மையம் திறப்பு விழா, வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு நிதிவழங்குதல் மற்றும் மாணவ-மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கல் ஆகிய முப்பெரும் விழா நடந்தது.

          அந்த விழாவிற்கு மாவட்ட வன்னியர் சங்க தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் டாக்டர் சக்திவேல் வரவேற்றார். மாநில வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு, வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு சேலம் மாவட்டத்தின் சார்பில் நிதியை பெற்றுகொண்டு, இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தை திறந்து வைத்தார்.
 
அப்போது வன்னியர் சங்க தலைவர் எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு  பேசுகையில், 
 
          “வன்னியர்களின் மேம்பாட்டிற்கு தனி இடஒதுக்கீடு மிக முக்கியமாகும். தனி இடஒதுக்கீடு பெறுவதற்கு வழிவகுக்கும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை, மத்திய அரசு துவக்கியுள்ளது. தமிழகம் முழுவதும் அதிகளவில் வாழ்ந்து வரும் வன்னியர் சமூக மக்கள் கவுண்டர், நாய்க்கர்,படையாச்சி, கண்டர், ரெட்டியார் உள்ளிட்ட பல்வேறு பட்ட பெயர்களில் அழைக்கபடுகின்றனர். 
 
            மத்திய அரசின் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஒட்டுமொத்த வன்னியரும் "வன்னியர் குல சத்திரியர்” என குறிப்பிட வேண்டும் என்றார். அந்த கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் சண்முகம், பா.ம.க., மாநில துணைத்தலைவர் குணசேகரன், மாவட்ட செயலாளர் ராஜா, தலைவர் ஜெயவேல் மற்றும் நிர்வாகிகள் நாராயணன், பழனிசாமி, ராமநாதன், முருகன்,வெங்கடாஜலம், சிவக்குமார், ராமச்சந்திரன், சகாதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: பா.ம.க எம்.எல்.ஏ. காடுவெட்டி ஜெ.குரு

              தமிழக சட்டசபையில் நேற்று   பள்ளிகல்வித்துறை, உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பாமக எம்.எல்.ஏ.   காடுவெட்டி ஜெ.குரு பேசினார்.

பா.ம.க எம்.எல்.ஏ.  காடுவெட்டி ஜெ.குரு பேசியது 

            தமிழ்நாட்டில் தற்போது பொதுப்பாடத்திட்ட முறை மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது.   முழுமையான சமச்சீர் கல்வியை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.   கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.  இதுதான் எங்கள் கட்சியின் கொள்கை என்று பேசினார். இதற்கு முதல்வர் ஜெயலலிதா எழுந்து நின்று விளக்கம் அளித்தார்.


ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் புதுப்பிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலக கட்டிடம்: காடுவெட்டி ஜெ.குரு திறந்து வைத்தார்




http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/newsphotos/pmk/kurupmk.jpg


              அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலக கட்டிடம் புதுப்பிக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட இக்கட்டிடத்தை ஜெயங்கொண்டம் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காடுவெட்டி ஜெ.குரு திறந்து வைத்தார்.

பின்னர் பேசிய
ஜெயங்கொண்டம் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெ.குரு, 

          ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு தேவையான கோரிக்கைகளை சட்டமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஜெயங்கொண்டத்தில் பாதாள சாக்கடை திட்டம், புறவழிச்சாலை அமைத்தல், ஏரிகளை தூர்வாரி அசுத்த நீர் கலக்காமல் தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க கோருதல், பொன்னாற்றை ஆழப்படுத்தி பொன்னாற்றில் இருந்து பொன்னேரிக்கு தண்ணீர் வர ஏற்பாடு செய்து தொடர்ந்து பாசனத்திற்கு வழிவகை செய்யப்படும் அணைக்கரையில் புதிய பாலம் கட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                மதனத்தூர் பாலத்தை விரைந்து முடிக்க வேண்டும். கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அவர்களுக்காக சிறந்த சுற்றுலா விடுதி மற்றும் பூங்கா வசதிகள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோருதல் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தில் பேசியுள்ளேன். இதனை முதல்வர் ஜெயலலிதா செய்து தருவார் என்று நம்புகிறோம். இவ்வாறு ஜெ.குரு கூறினார்.


வேளாண்மைக்கு தனி பட்ஜெட் கொண்டு வர வேண்டும்: ஜெ.குரு கோரிக்கை


 நிதிநிலை அறிக்கை மீது ஜெ.குரு ஜெயங்கொண்டம் (பாமக) பேரவையில் பேசியது: 

             வேளாண்மைக்கு தனி பட்ஜெட் கொண்டு வர வேண்டும். நில வங்கி அமைப்பதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். 69 சதவீத இடஒதுக்கீடு பாதிக்காமல்  கிடைக்க சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும். பசுமை வீடுகளுக்கு 1.50 லட்சமும் மத்திய அரசு வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படுகிறது.


பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் மின்னஞ்சல் முகவரிகள்

பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் மின்னஞ்சல் முகவரிகள் 

Jayankondam mlajayankondam mlajayankondam@tn.gov.in
Anaicut
mlaanaicut
Gingee
mlagingee
 

Jayankondam MLA - GURU @ GURUNATHAN J


http://www.tamilnadumlas.com/admin/mlaimage/Jayankondam%20-%20J.jpg

Anaikattu MLA - KALAIARASU.M



http://www.tamilnadumlas.com/admin/mlaimage/Anaikattu%20-%20M.jpg 


Gingee MLA - GANESH KUMAR.A



சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம்: பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.குரு பங்கேற்பு



தமிழக சட்டப்பேரவையின் அலுவலக அறையில், தமிழக சட்டப்பேரவைத் தலைவர் டி.ஜெயக்குமார் தலைமையில், அலுவல் ஆய்வுக் குழுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதா, சட்டப்பேரவை திமுக துணைத் தலைவர் துரைமுருகன், தேமுதிக சட்டப்பேரவைத் தலைவர் விஜயகாந்த், பாமக சட்டமன்ற உறுப்பினர் மாவீரன் ஜெ.குரு உள்பட கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
 

சட்டப்பேரவை பேரவைத் தலைவர் டி. ஜெயகுமாருக்கு பாமக குழுத் தலைவர் ஜெ.குரு வாழ்த்து

  
          14-வது சட்டப் பேரவையின் புதிய தலைவராக அதிமுகவைச் சேர்ந்த டி.ஜெயகுமார் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பை தாற்காலிக பேரவைத் தலைவராக இருந்த செ.கு. தமிழரசன் வெளியிட்டார். இதேபோன்று, பேரவையின் துணைத் தலைவராக ப. தனபாலும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

          பேரவைத் தலைவர், துணைத் தலைவருக்கு பேரவையில் உள்ள கட்சித் தலைவர்கள் பாராட்டுரை வழங்கினர். அவை முன்னவர் பன்னீர்செல்வம் முதலில் பாராட்டிப் பேசினார். இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த், பேரவை திமுக குழுத் தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் குழுத் தலைவர் ஏ.சௌந்தரராஜன், இந்திய கம்யூனிஸ்ட் பேரவைக் குழுத் தலைவர் ஆறுமுகம், பாமக குழுத் தலைவர் குரு, ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), கதிரவன் (பார்வர்டு பிளாக்), சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி) ஆகியோர் பாராட்டுரை வழங்கினர்.

           அவர்களைத் தொடர்ந்து, முதல்வர் ஜெயலலிதா இருவரையும் பாராட்டிப் பேசினார். இந்த பாராட்டுகளை ஏற்றுக் கொண்ட இருவரும் ஏற்புரை நிகழ்த்தினர். முதலில் பேரவை துணைத் தலைவர் தனபாலும், அடுத்ததாக பேரவைத் தலைவர் டி.ஜெயகுமாரும் ஏற்புரை ஆற்றினர்.

பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு


              ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை 16-ந் தேதி பதவி ஏற்றுக் கொண்டது. இதனைத் தொடர்ந்து 14-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டமும், எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு விழாவும் நேற்று பகல் 12.30 மணிக்கு புனித ஜார்ஜ் கோட்டையில் கோலாகலமாக நடந்தது. இதற்காக புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்த சட்டமன்ற வளாகம் புதுப்பொலிவுடன் தயார்ப்படுத்தப்பட்டிருந்தது. வளாகம் மலர்களாலும், மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

             நண்பகல்  12.13-க்கு பா.ம.க. எம்.எல்.ஏ.க்களும், 12.15-க்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் வந்தனர்.  முதலாவதாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா 12.38 மணிக்கு `கடவுளறிய' என்று கூறி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். முதல்-அமைச்சரைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.அமைச்சர்களைத் தொடர்ந்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள், முன்னாள் துணை முதல்-அமைச்சர், முன்னாள் அமைச்சர்கள், அரசு தலைமைக் கொறடா அதன்பின்னர் தமிழ் அகர வரிசைப்படி உறுப்பினர்களும் பதவி ஏற்றனர். விழா சரியாக 3.55 மணிக்கு முடிவடைந்தது.  
 
            ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்ற பாமக வேட்பாளர் ஜெ.குரு, அணைக்கட்டு சட்டமன்றத்  தொகுதியில் வெற்றி பெற்ற பாமக வேட்பாளர் எம்.கலையரசு மற்றும் செஞ்சி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற பாமக வேட்பாளர் அ.கணேஷ் குமார் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர்.



ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் பாமக வேட்பாளர் ஜெ.குரு பெற்ற வாக்கு விபரம்

2011  சட்டமன்றத் தேர்தலில் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் பாமக வேட்பாளர் ஜெ.குரு பெற்ற வாக்கு விபரம்
ஜெ.குரு - வெற்றி 
Tamil Nadu - Jayankondam
Result Declared
Candidate PartyVotes
GURU @ GURUNATHAN JPattali Makkal Katchi92739
ELAVAZHAGAN PAll India Anna Dravida Munnetra Kazhagam77601
KRISHNAMOORTHY SBharatiya Janata Party1775
RAMACHANDRAN GIndiya Jananayaka Katchi1771
VADIVEL VIndependent1698
GNANASEKARAN NBahujan Samaj Party1255
GANESAN PIndependent989
CHAKKARAVARTHI CIndependent948
MALLIKA TIndependent916
ASAITHAMBI PRashtriya Janata Dal289

நிதானம் தவறிவிட்டார் விஜயகாந்த்: வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு

           நடிகர் விஜயகாந்திற்கு தேர்தல் ஜுரம் அதிகரித்து, நிதானம் தவறிவிட்டார். என்ன பேசுகிறோம்? வரலாறு என்ன? என்று அறியாமலும், புரியாமலும் மேடைக்கு மேடை உளறிக் கொண்டிருக்கிறார் என, வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு கூறியுள்ளார்.

வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

               நடிகர் விஜயகாந்திற்கு தேர்தல் ஜுரம் அதிகரித்து, நிதானம் தவறிவிட்டார். என்ன பேசுகிறோம்? வரலாறு என்ன? என்று அறியாமலும், புரியாமலும் மேடைக்கு மேடை உளறிக் கொண்டிருக்கிறார்.

              மரங்களையெல்லாம் வெட்டி விட்டு இப்போது பசுமை தாயகம் என்ற பெயரில் மரங்களை நடச் சொல்லுகிறார்கள் என்று விபரம் தெரியாமல் விஜயகாந்த் பேசியிருக்கிறார். தமிழகத்தில் மிகப்பெரிய பின் தங்கிய சமுதாயம் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், பொருளாதார சூழ்நிலையிலும் தொடர்ந்து பின்தங்கி கிடந்த நிலையில், 1987ஆம் ஆண்டு இச்சமுதாயம் மருத்துவர் அய்யா அவர்களின் தலைமையில் இடஒதுக்கீட்டுப் போராட்டத்தை நடத்தியது.

                 சமூக நீதிக்காக நடைபெற்ற இப்புனித போராட்டம் நடந்த காலத்திலே, தன்னுடைய பிழைப்பிற்காக கோடம்பாக்கம் தெருக்களிலே சுற்றி திரிந்த ஒரு நபர் இப்போராட்டத்தை கொச்சைப்படுத்துவது இந்த புனிதப் போராட்டத்தில் பங்கு கொண்ட இலட்சக்கணக்கான மிகபின்தங்கிய மக்களையும், தன் இன்னுயிரை ஈந்த 21 தியாகிகளின் தியாகத்தையும் இழிவுப்படுத்துவதாக உள்ளது.

                 அதிமுக ஆட்சியில் இந்தப் போராட்டம் நடந்தாலும், அதன்பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞரின் ஆட்சியில்தான் மிகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டின் விளைவாக இவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த மருத்துவம், பொறியியல் போன்ற தொழில் கல்விகள் இப்போது ஓரளவு கிடைத்து வருகிறது. இதைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாமல், பொறாமை உணர்வுடன் நடிகர் விஜயகாந்த் இந்த மக்கள் மீது, மரத்தை வெட்டியவர்கள் என்று பழிசுமத்தி பேசுகிறார்.

                    அவர் சார்ந்த திரைப்படத் துறையினராலேயே தள்ளாட்டம் போடுகின்ற தண்ணீர் மனிதன் என்று விமர்சிக்கப்படுகின்ற ஒரு நபர் வெகு மக்களின் போராட்டத்தை, இழிவுப்படுத்தி பேசுவதை தமிழ் சமுதாயம் இனியும் மன்னிக்காது. விலைமதிப்பற்ற 21 மனித உயிர்களை பலி கொடுத்த நேரத்திலே நடந்த சில சம்பவங்களை பெரிதுபடுத்தும் நிதானம் இல்லாத அந்த நபர் என்றாவது மக்களின் பிரச்சனைகளுக்காக போராடியதுண்டா? ஆண்டுடாண்டு காலமாக உழவுத் தொழிலை நம் குலத் தொழிலாக கொண்டு அனைவருக்கும் உணவு அளிக்கும் இம்மக்கள் மரங்களை நடுவதும், பசுமை தாயகம் அமைப்பதும் புதுமையான செய்தியல்ல. இவ்வாறு ஜெ.குரு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் ஜெ. குரு அறிமுகக் கூட்டம்

உடையார்பாளையம்:

         தமிழக அரசியலில் முதல்வர் கருணாநிதி தீர்க்கதரிசியாகத் திகழ்கிறார் என்றார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ச. ராமதாஸ்.  அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் தொகுதி பாமக வேட்பாளர் ஜெ. குரு அறிமுகக் கூட்டம், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளின் செயல்வீரர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 

 இந்தக் கூட்டத்தில் வேட்பாளர் ஜெ. குருவை அறிமுகம் செய்துவைத்து அவர் மேலும் பேசியது:  

                 தமிழக அரசியலில் முதல்வர் கருணாநிதி தீர்க்கதரிசியாகத் திகழ்கிறார். அரசியலில் எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பாராதவர் கருணாநிதி.  திமுக கூட்டணியில் பிற்படுத்தப்பட்டோரின் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், பெருந்தலைவர் காமராஜர் கட்சி உள்ளிட்ட அனைத்துச் சமூகங்களைச் சேர்ந்த கட்சிகளும் உள்ளன.  

               இந்தக் கட்சிகள் அனைத்தும் சமூக நீதிக்காகத்தான் போராடி வருகின்றன. இவற்றை ஒருங்கிணைத்து, சமூக நீதிக் கூட்டணியாக திமுக கூட்டணி அமைந்துள்ளது. இந்தக் கூட்டணி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.  திமுகவிலிருந்து பாமகவை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய போதுகூட, திமுகவை, பாமக தொடர்ந்து ஆதரித்து வந்தது.  இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. மீண்டும் அமையும் திமுக அரசுக்கு பாமக நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன் என்றார் ராமதாஸ்.  

              கூட்டத்துக்கு அரியலூர் மாவட்ட திமுக செயலர் எஸ்.எஸ். சிவசங்கர் தலைமை வகித்தார்.  திமுக இளைஞரணி மாநிலத் துணைப் பொதுச் செயலர் சுபா. சந்திரசேகர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் பெ. திருமாவளவன், ஜயங்கொண்டம் ஒன்றிய திமுக செயலர் தனசேகர், நகரச் செயலர் வெ.கொ. கருணாநிதி, பாமக மாநிலத் துணைப் பொதுச் செயலர் இரா. பாலு, மாவட்டச் செயலர் க. வைத்தி, மாவட்டத் துணைச் செயலர் தர்ம. பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கலைஞரிடம் ஜெ.குரு, ஜி.கே.மணி வாழ்த்து

             சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாமக தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு ஆகியோர் இன்று முதல் அமைச்சர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

              பாமக தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு ஆகியோர் பாமக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதியை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர். இச்சந்திப்பின்போது, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

பாமக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு

    திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 30 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.   30 தொகுதிகளில் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாமக அறிவித்துள்ளது.



அதன் விபரம்:
 
1. மேட்டூர் -கோ.க.மணி, 

2. ஜெயங்கொண்டம் -ஜெ.குரு, 


 3. நெய்வேலி- தி.வேல்முருகன்

வன்னியர் சமுதாயத்தினர் பா.ம.க.வுக்கு வாக்களித்தால் தமிழகத்தில் அன்புமணி முதல் அமைச்சராக வருவார்: வன்னியர் சங்க தலைவர் குரு

புதுவை:

             புதுவை மாநில வன்னியர் சங்கம் சார்பில் கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் சங்க கொடியேற்று விழா அரியாங்குப்பத்தில் நடந்தது. 

கூட்டத்தில் வன்னியர் சங்க தலைவர் குரு பேசியது:

             புதுவை மாநிலத்தில் வன்னியர்கள் 60 முதல் 70 சதவீதம் வரை வாழ்கின்றனர். நமது சமுதாயத்தை சேர்ந்தவர்களை தேர்ந்தெடுத்தால் நாம் இன்னும் வளரலாம். பிறருக்கு கொடி பிடித்து, கோஷம் போடும் நிலையை மாற்றி நாம் நாட்டை ஆளவேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் சொல்கிறார். வன்னியர் சமுதாயம் மற்ற சமுதாயத்துக்கு எதிரானது அல்ல. இந்த சமுதாய மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்க வில்லை. வன்னியர் சமுதாய மக்கள் உலகெங்கும் வாழ்கின்றனர். சுதந்திரத்திற்கு பின் காங்கிரஸ் கட்சி வன்னியர்களின் ஆதரவுடனேயே ஆட்சிக்கு வந்தது.

               இதனால் நாம் அடிமைப்பட்டோம். அதன்பின்பு டாக்டர் ராமதாஸ் வந்தார். நமக்கு தனி இடஒதுக்கீடு கேட்டு 1980ல் போராட்டம் அறிவித்தார். இதற்காக 21 பேர் தங்கள் இன்னுயிரை இழந்தனர். அதன் பின்புதான் இடஒதுக்கீடு கிடைத்தது. இருந்த போதிலும் புதுவையில் இந்த இடஒதுக்கீடு இல்லாமல் இருந்தது. அதையும் போராடி பெற்றுத்தந்தார். எத்தனையோ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் முதல் அமைச்சராகி உள்ளனர். 


             ஆனால் பெரும்பான்மையாக உள்ள வன்னியர், தாழ்த்தப்பட்டவர் இன்னும் முதல் அமைச்சர் ஆகவில்லை. இதற்காக டாக்டர் ராமதாஸ் போராடுகிறார். வடதமிழ்நாட்டில் 120 தொகுதிகளில் நாம் பெரும்பான்மையாக உள்ளோம். நமது சமுதாயத்தினரின் ஒட்டுமொத்த ஓட்டும் மாம்பழ சின்னத்திற்குதான் என்று முடிவு செய்தால் யார் தயவும் இன்றி நாம் ஆட்சியை பிடிக்க முடியும். புதிய கட்சிகள் தொடங்கும்போது அதற்காக உயிர் தியாகம் செய்பவர்கள் வன்னியர்கள்தான். ஜெயலலிதா கைதான போது பஸ் எரிப்பு வழக்கில் சிக்கி தற்போது தூக்கு தண்டனை கைதிகளாக இருப்பதும் வன்னியர்கள்தான். பல கட்சிகளை நாம் வாழவைத்தோம். நம்மை யாரும் வாழ வைக்கவில்லை.

                தமிழகம்  புதுவையில் நமது தயவு இல்லாமல் யாரும் ஆட்சிக்கு வரமுடியாது. வன்னிய சமுதாயத்துக்காக டாக்டர் ராமதாஸ் வன்னியர் கல்வி அறக்கட்டளையை உருவாக்கியுள்ளார். வன்னியர் சமுதாயத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து பா.ம.க.வுக்கு வாக்களித்தால் தமிழகத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் முதல் அமைச்சராக வருவார் என்றார்.

ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதியில் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு போட்டி: ராமதாஸ்

அரியலூர்: 

          அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்டு பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,

             வரும் சட்டசபை தேர்தலில் காடுவெட்டி குரு, ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதியில் போட்டியிட உள்ளார். மாநிலம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளதால், இந்த தொகுதி பிரச்சாரத்துக்கு அவர் வரமாட்டார். அவரை வெற்றி பெறச்செய்வது உங்கள் கடமை. சட்டசபை தேர்தலுக்குப் பிறகு பெண்களை கொண்டு, டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டமும், அதை தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கும் போராட்டமும் நடத்தப்படும். இப்போராட்டத்தை நானே முன்னின்று நடத்துவேன். அதற்காக சிறை செல்லவும் தயாராக உள்ளேன்.

               கிராமத்துக்கு வேண்டிய அடிப்படை தேவை கிடைக்க பாடுபட்டால் கட்சி வலுவாக இருக்கும். ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டத்தை செயல்படுத்தி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, வரும் சட்டசபை தேர்தலுக்கு பிறகு நடக்கும் மிகப்பெரிய போராட்டத்தை நானே முன்னின்று காடுவெட்டி குரு தலைமையில் நடத்துவேன் என்றார்.

அதிமுக பிரமுகரை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கு: ஜெ.குரு உள்ளிட்ட4 பேர் விடுதலை

  அரியலூர் :

         அதிமுக பிரமுகரை மிரட்டியதாக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.குரு மீது தொடரப்பட்ட வழக்கு பொய்யானது எனக் கூறி அரியலூர் நீதிமன்றம் அந்த வழக்கை ரத்து செய்துள்ளது.
 
             கடந்த 2008ஆம் ஆண்டு அதிமுக பிரமுகர் குணசேகர் என்பவரை மிரட்டியதாக கூறி, ஜெ.குரு உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் குரு மீது எந்த புகாரும் கொடுக்கவில்லை என குணசேகர் தெரிவித்தார். அரியலூர் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.  அப்போது ஜெ.குரு உள்ளிட்டோர் மீதான வழக்கில் குற்றச்சாட்டுகள் எதுவும் நிருபிக்கப்படவில்லை என கூறி, வழக்கை ரத்து செய்தததோடு, 4 பேரையும் விடுதலை செய்து நீதிபதி சிவக்குமார் ஆணையிட்டார்.